பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 27, 2007

தெஹல்கா ஆபரேஷன்

குஜராத் கலவரம் குறித்த பல பரபரப்புத் தகவல்களுடன் கூடிய ஸ்டிங் ஆபரேஷனை தெஹல்கா இதழ் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஸ்டிங் ஆபரேஷன்
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு `கோத்ரா' ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரம் பற்றி `தெகல்கா' இணைய தளம் கடந்த 6 மாதமாக விசாரணை நடத்தியது. விசாரணை முடிவை வெளியிட்ட அந்த இணைய தளத்தில் "குஜராத் கலவரம் திட்டமிட்ட சதி, முதல்-மந்திரி நரேந்திர மோடி கலவரத்தை தூண்டி விட்டார்.

கலவரத்துக்குபயன் படுத்தப்பட்ட ஆயுதங்கள் பஜ்ரங்தள் மற்றும் விசுவ இந்து பரிஷத் தலைவர்களுக்கு சொந்தமான தொழிற்சாலை யில் தயாரானது என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது. பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் `தெகல்கா' நடத்திய விசாரணையில் இந்த தகவல்களை தெரிவித் ததாகவும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இதை தொடர்ந்து நரேந்திர மோடி மற்றும் பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இருட்டடிப்பு
இந்த ஆபரேசனை தெஹல்காவுடன் இணைந்து நடத்திய இந்தியா டுடேவின் ஹெட்லைன்ஸ் டுடே டிவி மற்றும் அதன் இந்தி டிவியான ஆஜ் தக் ஆகியவையும் நேற்று முதல் குஜராத் முழுவதும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

அதே போல இந்த செய்திகளை வெளியிட்ட சிஎன்என்-ஐபிஎன், டிவி 18 ஆகிய டிவிக்களின் ஒளிபரப்பும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் கரண் தாப்பர் நரேந்திர மோடியை பேட்டி கண்டபோது கலவரம் குறித்து கேட்க கோபமடைந்த மோடி பாதியில் எழுந்து சென்றுவிட்டார். அந்தப் பேட்டி ஒளிபரப்பானபோதும் அந்த சேனலின் ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டது.

தேர்தலில் சீட்டு
குஜராத்தில் டிசம்பர் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது அதில்,பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்துள்ள 9 அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கும் காங்கிரஸ் சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

7 Comments:

அருண்மொழி said...

:-)))))))

cgs said...

karma is too strong. it will chase..

Abu-Ben-Adam said...

இவர்கள் மோடியோடு சேர்த்து கல்லால் அடித்து கொல்லப்பட வேண்டிய வேண்டியவர்கள்." என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
மக்கள் இவர்களுக்கான தீர்ப்பை வழங்குவார்கள்.

Jahe said...

மோடி என்ன சர்வதிகரமா நடத்தின்னு இருக்காரு ? எவனாவது அந்த ஆளை செருப்பால அடிக்கணும்... பண்ணுற ரவுசுக்கு...

குஜராத் ஜனங்க முதுகெலும்பே இல்ல போலிருக்கு... அதான் மோடிய அமெரிக்ககாரன் அவன் நாட்டுக்குள்ளேயே விடமாட்டேன்க்கிறான்....

நாற பய மோடி.... டெல்லி மேயர கொரங்கு கடிச்சிதாம்...நான் போய் மோடிய கடிக்கிறேன்...

--- இஞ்சி தின்ற குரங்கு...

ஸ்டாலின் said...

//ுஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு `கோத்ரா' ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.//கொல்ல‌ப்ப‌ட்ட‌து நூற்றுக்க‌ண‌க்கான‌வ‌ர்க‌ள் இல்லை, ஆயிர‌க்க‌ண‌க்கான‌ர் கோர‌மாக‌ ப‌டுகொலை செய்ய்ப‌ட்ட‌ன‌ர், அது கல‌வ‌ர‌ம் அல்ல, அதனை இருதரப்பாரின் மோதலாக குறிப்பிடுவதே மோசடியானது, அது முஸ்லீம்கள் மீது ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ தாக்குதல், அத‌னை திட்ட‌மிட்ட‌ தாக்குத‌ல் என்று தெக‌ல்கா அம்ப‌ல‌ப்ப‌டுத்தியிருக்கிற‌து, இந்துத்துவ‌ குண்ட‌ர்க‌ளோடு, அரசு இய‌ந்திரமும் சேர்ந்து செய‌ல்ப‌ட்ட‌து என்ப‌த‌னைத்தான் தெக‌ல்கா வீடியோ ஆதார‌ங்க‌ளோடு அம்ப‌ல‌ப்ப‌டுத்தியிருக்கிற‌து.

ஸ்டாலின்

Anonymous said...

இவனைத்தானா 'சோ' இந்திய பிரதமராக வர விருப்பப்படுகிறேன் என குமுதம்.கொம் நேர்காணலில் சொல்லியிருந்தான்?

Indian said...

டேதேல்க இணைய தளம் காங்கரஸ் கட்சியால் நடத்தப்படும் ஒரு கம்பனி . ஏன் அவர்களால் இந்த்ர காந்தி இறந்த பொது சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை ஆராய முடியுமா?