பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 08, 2007

விஜயகாந்தையும் சரத்குமாரையும் ஆதரிக்க தயார் - திருமாவளவன் பேட்டி

தொல்.திருமாவளவன் பேட்டி - குமுதாம் ரிப்போட்டரில் வந்தது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் அனை-வரையும் கூண்டோடு விலக்கி-விட்டார் அதன் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன். அத்துடன், சரத்-குமாரின் அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள-வும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்’ என்றொரு தகவலும் நமக்குக் கிடைத்தது.

ஏனிந்த அதிரடி என்பது குறித்தும், புதிய கூட்டணி பற்றியும் திருமாவிடமே கேட்டோம்....‘‘மாநில நிர்வாகிகள் கட்ட-மைப்பையும், மாவட்ட நிர்வாகி-கள் கட்டமைப்பையும் கூண்டோடு கலைத்திருக்-கிறோம். இப்போதைக்கு இதற்கு இணையான ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை நியமித்துள்ளோம். இனி நியமிக்கப்படும் நிர்வாகிகளில் அனைத்து சாதியினரும் இடம்பெறும் வகையில் திட்டமிட்டு வருகிறோம். அப்படிச் செய்தால்தான் கட்சியின் அரசியல் அமைப்புச் சட்டத்தை முழுமை-யாக நடைமுறைப்படுத்தியதாக ஆகும். இப்போது எங்-கள் கட்சியை ‘தலித்’ கட்சி என்று முத்திரை குத்துவதை மாற்ற முயல்-வதற்கு, இப்போதைய நிர்வாகிகள் முழு ஆதரவு கொடுத்து விலகி இருக்-கிறார்கள். இது அதிரடி மாற்றம்தான் என்பதில் சந்தேகமில்லை.’’

ஆனால், உங்கள் கட்சியை செல்வப்பெருந்-தகை கைப்பற்றிவிட்டதாகவும், அதை கருத்தில் கொண்டே இந்த அதிரடிப் போக்கு என்றும் சொல்கிறார்களே?


‘‘இது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி. எங்கள் இயக்கத்தில் தலைமைக்கு எதிராக யாருமே செயல்படுவதில்லை. மேலும், நிர்வாகி-களை மாற்றும் யோசனைக்கு செல்வமும் முழு ஆதரவு கொடுத்திருக்கிறார். நீங்கள் கேள்விப்-பட்டது உண்மையாக இருந்தால், இந்த அதிரடி மாற்றத்-திற்குப் பெரும் எதிர்ப்பு வந்திருக்க வேண்டும். மாறாக, பலத்த வரவேற்பல்லவா வந்து கொண்டி-ருக்கிறது!’’

இதற்கிடையில் புதுக்கட்சித் தலைவரான சரத், உங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்துகிறாராமே, உண்மையா?

‘‘சரத்குமார் சில மாதங்களுக்கு முன்பு நடத்திய காமராஜர் மணிமண்டப அடிக்கல் நாட்டு விழாவுக்கு என்னையும் அழைத்திருந்தார். அதற்குப் போயிருந்த நான், விழா மேடையில் பேசும்-போது, ‘நண்பர் சரத் நடிகராக இருந்து வழி நடத்து-வதை-விட தலைவராகி வழி நடத்த வரவேண்டும்’ என்றேன். அதன்பிறகு, அவர் கட்சி ஆரம்பித்ததும் வாழ்த்-துச் செய்தி அனுப்பினேன். இதெல்லாம் அரசியலில் சகஜமான விசயம்தானே!

இதையடுத்து இந்த அக்டோபர் இரண்டாம் தேதி காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப் போயிருந்-தேன். இது வருடா வருடம் நான் செய்யும் மரியாதை. அந்த விழாவுக்கு சரத்தும் வந்திருந்தார். அப்போது சகஜமாகப் பேசிக்கொண்டிருந்த சரத், காமராஜர் அபிமானியான என்னுடன் இணைந்து செயல்பட விருப்ப-மாக இருக்கிறது என்று தெரிவித்தார். நான் அதற்குப் பதிலேதும் சொல்லவில்லை. அவருடன் கூட்டணி வைத்துக் கொள்வது பற்றியெல்லாம் எதுவுமே பேசவில்லை.’’

விஜயகாந்தின் செல்வாக்கு உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

‘‘அவருக்கு இங்குள்ள ஊடகங்கள் அளவுக்கதிகமான விளம்பரம் கொடுத்து, செல்வாக்கு உயர்ந்து வருவது போன்ற மாயையை ஏற்படுத்தி வருகின்றன. வைகோ-விற்கு ஆரம்பத்தில் இதே அளவிலான வர-வேற்பை எல்லா ஊடகங்களும் கொடுத்தன. இப்-போது அவர் நிலைமை எப்படி? மற்றபடி விஜயகாந்த் ஒரு நடிகர் என்பதால் நாள்தோறும் செய்திகளில் இடம் பிடிக்கிறாரே தவிர, மக்கள் மனதில் இடம் பிடித்ததாக நான் கருதவில்லை.’’

நடிகர்களெல்லாம் அரசியலில் குதித்துவரும் சூழ்நிலையில், அரசியலிலிருந்து நடிகரானவர் நீங்கள். இப்போது தாடி வளர்த்து வருவது கூட ஒரு படத்தில் நடிப்பதற்குத்தானே?

‘‘உண்மைதான். ஒரு விஷயத்தைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள். நான் முழுநேர நடிகனாக வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ‘அன்புத்தோழி’ என்ற படத்தில் ஒரு போராளியாக எங்கள் இயக்கத்தின் கொள்கைகளையும் கூறும் விதத்தில் ஒரு பாத்திரம் கிடைத்தது. மனமுவந்து நடித்த பிறகு சென்சாரில் சுமார் முப்பது இடங்களில் வெட்டினார்கள். அந்த முப்பதும் நான் நடித்த காட்சிகள். இதனால் என் பாத்திரம் சிதைந்து-விட்டது. இதன் பிறகு மு.களஞ்சியம் ‘கலகம்’ என்ற பெயரில் மண்ணுரிமை தொடர்பான கதையொன்றைச் சொல்ல, அது எனக்குப் பிடித்துப்போய் நடிக்கச் சம்மதித்து இருக்கிறேன். மற்றபடி நான் முழுநேர அரசியல்-வாதிதான்.’’

அதுசரி, நீங்கள் தைலாபுரம் போய் மருத்துவர் ராமதாஸுடன் நெருக்கம் காட்டுகிறீர்கள். ஆனால், பல மாவட்டங்களில் பா.ம.க. தொண்டர்களும் சிறுத்தை-களின் தொண்டர்களும் தகராறு செய்து வருகிறார்களே?

‘‘உண்மைதான். எங்கள் கட்சித் தொண்டர்களிடம் சக கட்சியினருடன் நட்பையும் நம்பிக்கையையும் உண்டாக்கும் முயற்சியாகவே தலைவர்களாகிய நாங்கள் நெருங்கிப் பழகுகிறோம். தொண்டர்கள் அடித்துக் கொண்டார்கள் என்பதற்காக, நாங்களும் முறைத்துக் கொண்டால் நிலைமை இன்னும் மோசமாக அல்லவா போய்விடும்?’’

இப்போது ஒரு பர்சனல் கேள்வி. உங்களுக்குத் திருமணம் செய்து பார்க்க விரும்பும் பெற்றோர், மூப்பனார், ராமதாஸ் மற்றும் கலைஞர் போன்-றோரை வைத்துக்கூட வற்புறுத்தி-விட்டார்கள். இன்னமும் நழுவிக் கொண்டு போகும் உங்களை, ஒரு நடிகையுடன் இணைத்து வரும் செய்திகள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

‘‘கிட்டத்தட்ட இருபது வருடங்களாக என்னைத் திருமணம் செய்து-கொள்ளச் சொல்லி என் பெற்றோர் பலவகைகளில் முயன்று வருகிறார்கள். ஆனால், நான் என் கட்சிக்கு உரிய அங்கீகாரமும் தனி சின்னமும் கிடைத்த பிறகே மணமேடை ஏறுவதென முடிவெடுத்து இருக்கிறேன். அதுவரை மணமுடிப்பது பற்றி யோசிக்கக்-கூட மாட்டேன்.

இந்நிலையில், ஒரு நடிகையுடன் என்னை இணைத்து வரும் செய்தியைப் படித்தால் சிரிப்புத்தான் வருகிறது. காரணம், அந்த நடிகை நடித்த படங்களில் ஒன்றைக்கூட பார்க்காத நான், அவரை மணமுடிக்கப் போவதாக எழுதுவது சிரிப்பைத்தானே தரும்!’’ என்றார்.

கிளம்பும் போது, ‘‘2011_ல் ஆட்சி அதிகாரத்தை நிர்மாணிக்கும் கட்சியாக எங்கள் இயக்கம் வளர்ந்துவிடும். மேலும், 2011_ல் ஒரு தாழ்த்தப்பட்ட, இதே மண்ணின் மைந்தன் முதல்வர் ஆக வேண்டும் என்பதே எங்கள் லட்சியம். எங்களின் அந்த லட்சியத்திற்கு சரத் அல்லது விஜய்காந்த் போன்ற யார் குரல் கொடுத்தாலும், அவர்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கத் தயார்’’ என்றார் சிறுத்தைகளின் பொதுச்செயலாளர் திருமா!
நன்றி: குமுதம் ரிப்போட்டர்

0 Comments: