லா.ச.ரா என்று பிரபலமாக குறிப்பிடப்பட்ட முதுபெரும் எழுத்தாளரான லா.ச.ராமாமிருதம், தனது 91வது வயதில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவ்ர் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனிஇடம் பெற்று விளங்கியவர் லா.ச.ராமாமிருதம். லா.ச.ரா என்று பிரபலமாக குறிப்பிடப்பட்ட இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வருபவர்.
.
அபிதா என்ற அவர் எழுதிய நாவல் மிகவும் புகழ் பெற்றது(ஒரு நாவல் தான் எழுதியுள்ளார்). ஏராளமான சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ள இவர், உணர்ச்சி பெருக்கான நடையினால் வாசகர்களை மிகவும் கவர்ந்தவர். தன்னை சௌந்தர்ய உபாகசர் என்று அழைத்து கொண்ட லா.ச.ரா வின் தமிழ்நடை மிகவும் குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் குடும்பம் மற்றும் பெண்கள் ஆகிய விஷயங்களை மையமாக கொண்டு கதை எழுதியிருக்கும் இவர், சிந்தாநதி என்னும் நூலுக்காக 1989 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி பரிசு வென்றார்.
தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் மதிக்கப்பட்ட லா.ச.ரா, 1916 ஆம் ஆண்டு திருச்சியின் லால்குடியில் பிறந்தவர். அவருடைய தந்தை சப்தரிஷி, தாய் ஸ்ரீமதி. தந்தை மற்றும் ஊர் பெயரை இணைத்து கொண்டு லா.ச.ராமாமிருதம் என்னும் பெயரில் அவர் கதைகள் எழுதத் தொடங்கினார். அவருடைய முதல் கதை 18வது வயதில் மஞ்சரியின் சிறுகதை பத்திரிகையில் வெளியானது.
அவருடைய மனைவி ஹைமாவதி. அவருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் 91 வயதான லா.ச.ரா இன்று அதிகாலை சென்னையில் மரணமடைந்தார்.
இலக்கிய உலகைச் சேர்ந்த பல முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்கள் அவரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
குமுதம் ஜங்ஷனுக்கு அளித்த பேட்டி...
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, October 30, 2007
லா.ச.ரா காலமானார்
Posted by IdlyVadai at 10/30/2007 01:28:00 PM
Subscribe to:
Post Comments (Atom)











9 Comments:
அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்...
Lalgudi Saptharishi (La.Sa)
எழுத்தாளர் லா.சா.ரா அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
தமிழின் மிக முக்கிய இலக்கிய ஆளுமை பூமியில் இல்லை என்பதை நம்ப இயலவில்லை.
லா.ச.ராவின் "புற்று" மறக்கக்கூடிய படைப்பா அது.
"தீராநதியில்" லா.ச.ரா எழுதிய தொடர்தான் அவர் எழுதிய இறுதியன படைப்பு என்று நினைக்கிறேன்.
விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட லா.ச.ரா மறைந்தாலும் தமிழ் மொழி உள்ளவரை " தமிழ் இலக்கியத்தின் பீஷ்ம பிதாமகர் லா.ச.ரா " படைப்பு இருக்கும்.
வாழ்க லா.ச.ரா !!!
வளர்க அவர் இலக்கிய ஆளுமை !!!
மதுரை இரா.அனந்த்
அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
லா.ச.ரா அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
வருத்தமான செய்தி. இப்போதுதான் பார்க்கிறேன். அவர் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். தமிழின் புகழ்பெற்ற எழுத்தாளரும் விமர்சகருமான ஒருவர் (பெயர் கேட்காதீங்கப்பு!) லா.ச.ரா.வின் சிறந்த சிறுகதைகளைப் பற்றிப் பேசும்போது சொன்ன கதைகளின் பெயர்கள் நினைவுக்கு வருகின்றன.
அவை,
1. பாற்கடல்
2. பச்சைக்கனவு
3. ஜனனி
4. புற்று
5. ராஜகுமாரி
6. அபூர்வராகம்
லா.ச.ரா. கதைகள் என்று வானதி பதிப்பகம் முன்னர் ஒரு தொகுப்பு வெளியிட்டது. அத்தொகுப்பிலே இக்கதைகள் இருக்கின்றன (என்று நினைக்கிறேன்.)
- பி.கே. சிவகுமார்
அடடா! இப்பொழுதுதான், 'என்ன அவசரம்; போய்ப் பார்க்க வேண்டும்' என்று லா.ச.ராவை நேரில் சந்திப்பதை ஒத்திப்போட்டுக் கொண்டே வந்த, எழுத்தாளர் பா.ராகவனின் எழுத்தைப் படித்து விட்டு வந்தேன்.
தமிழ்த்தாய்க்கு தாங்கமுடியாத இழப்பு.
ஒளிப்பிழம்பான ஜ்வலிப்புடன் வார்த்தைகளுக்கு உயிர்கொடுத்து எழுதியவர்.
தமிழ் இலக்கியத்தில் 'லா.ச.ரா' என்னும் மூன்றெழுத்து என்றும் அழியாமல் ஒளிர்விடும்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
சம்பிரதாயமாகச் சொல்வதாகப் பட்டாலும் லா.ச.ரா.வின் இடத்தை யாரால் நிரப்ப இயலும்? ஆழ்ந்த அனுதாபங்கள்.
சுகா
Post a Comment