பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 24, 2007

கோவை குண்டு வெடிப்பு வழக்கு தீர்ப்பு - பாஷாவிற்கு ஆயுள் - அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பாஷாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. இத்தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பல்வேறு கட்டங்களாக தண்டனை அறிவிக்கப்பட்டு வருகிறது. முக்கிய குற்றவாளிகளான அல்-உம்மா நிறுவனர் பாஷா, பொதுச்செயலாளர் அன்சாரி உள்ளிட்ட 70 பேருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படும் என்று தனிக்கோர்ட் நீதிபதி உத்ரபதி ‌அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் அல்-உம்மா தலைவர் பாஷாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. முகமது அன்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

5 Comments:

We The People said...

ஏங்க ஆயுள் தண்டனை என்றால் எவ்வளவு ஆண்டு ??

IdlyVadai said...

இந்தியாவில் ஆயூள் தண்டனை என்றால் அது 14லிருந்து 20 வருடம் வரை தான் என்று நினைத்தார்கள்.
ஆனால் உச்ச நீதிமன்றம் அயூள் முழுக்க அவர் சிறையில் இருக்க வேண்டும் என்று சொல்லியுள்ளது.

முடிஞ்சா இதையும் ஒரு தபா படியுங்க
http://www.hindu.com/op/2005/10/09/stories/2005100901211400.htm

IdlyVadai said...

இதையும் படியுங்க http://www.expressindia.com/news/fullstory.php?newsid=54882

We The People said...

இவர்களுக்கு மரண தண்டனை கொடுத்தாலும் தகும்.. சிலர் வருவார்கள் தப்பு கண்டுபிடிக்க இவர்களுக்கு பொது மக்களை நூற்றுக்கணக்கில் கொல்ல உரிமையுள்ளது போல இவர்களுக்கு மரண தண்டனை விதிக்க அரசுக்கும், நீதிமன்றத்துக்கு உரிமை உண்டு.

கோவை குண்டு வெடிப்பின் போது நேரில் பார்த்தவன் என்ற முறையிலும், நூற்றுக்கணக்கான பிணங்கள் அன்று அரசு மருத்துவமணை வாயிலில் பார்த்து கண்ணீர் விட்டவன் என்ற முறையிலும் என் ஆதங்கத்தை இங்கே பதிகிறேன் :(

Subramanian said...

What is the Mohamadian law says? TIT FOR TAT - tooth for toOth - EYE FOR EYE - ATLEAST THIS FORMULA MIGHT HAVE BEEN FOLLOWED IN PROOUNNCING THE JUDGEMENT - THIS IS THE WISHES OF SUPPAMANI ( but who is he to sya this)