பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 29, 2007

கலைஞருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

உச்சநீதிமன்ற உத்தரவை மீறியதாக முதலமைச்சர் கருணாநிதி மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைவர் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேது சமுத்திர திட்டத்தை விரைவில் நிறைவேற்றக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி அக்டோபர் 1ந் தேதி அன்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் தமிழகத்தில் பந்த் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்தன. இதனை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பந்த் போராட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

இதனை எதிர்த்து அதிமுக சார்பில் அதன் அவைத் தலைவர் மதுசூதனன் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் பந்த் போராட்டத்திற்கு தடை விதித்தது. ஆனால் உச்சநீதிமன்ற தடையை மீறி தமிழகத்தில் பந்த் போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் அரசு பேருந்துகள் ஓடவில்லை. அரசு அலுவலகங் களுக்கு ஊழியர்கள் வரவில்லை. இதனை தொடர்ந்து அதிமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.என்.அகர்வால், பி.பி. நவ்லாக்கர் ஆகியோரை கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணை நடைபெற்றது. பந்த் போராட்டத்திற்கு ஆதரவாக ஆளும் கட்சி செயல்பட்டதை நிரூபிக்கும் வகையில் புகைப்படங்கள், பல்வேறு பத்திரிகை செய்திகள் ஆகியவற்றை அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகளை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மிகவும் கடுமையாக விமர்சித்ததையும் அவர் எடுத்துரைத்தார்.

இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் கருணாநிதி, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, தமிழக அரசு தலைமை செயலாளர் திரிபாதி, தமிழக காவல் துறை தலைவர் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் முக்கிய பிரமுகர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து நீதிபதிகள் விலக்களித்தனர்.

"ஹிந்தித் திணிப்பை எதிர்த்து, அரசியல் சட்டத்தின் 17ஆவது பிரிவை எரிக்கப் போகிறோம்' – என்று தமிழ்நாடு முழுவதும் மேடைபோட்டு ஆறுமாதங்களாக முழங்கிவிட்டு, வழக்கு வந்தபோது, "வெறும் காகிதத்தைத்தான் எரித்தோம்' என்று நீதிமன்றத்தில் சொன்னவர்கள். அதனால் பயபட வேண்டாம் தோழர்களே

5 Comments:

SINGAM said...

No use in issue a notice nothing will change

Anonymous said...

சேது சமுத்திர திட்டமா முக்கியம்? ஐந்து ஆண்டு பதவியில் இருப்பது தான் முக்கியம்! ஆகவே, நாங்கள் நடத்திய முழு அடைப்பை மறந்து, மன்னித்து எந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கணம் கோர்ட்டார் அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன், இப்படிக்கு , தினம் ஒன்று பேசும் கலைஞர்.
This is typed in the http://www.google.com/transliterate/indic/Tamil#. Let me know @ my gmail id, if it is not readable. Thanks, Sriram

cgs said...

இட்லிவடை இண்டியன் எக்ச்ப்ரஸ் பாருங்கள். திரு மு க யாரோ குப்தாவோ யாருக்கோ வாக் த டாக் ந்னுட்டு என்னமோ ஒரு ப்ரோக்ராம்.இதெல்லாம் பேசியிருக்கிரார் .ஆன அப்பொ இண்த ஆர்டர் வரல்ல போல.

கலைஞர் கைத்தடி said...

ஆக மொத்தம் பந்த் வெற்றி என்று உச்சநீதிமன்றம் கருதுகிறது. இது தமிழ் நாட்டு மக்களுக்கு கிடைத்த பரிசு. இதற்காக ஒரு பாராட்டு விழா நடத்தி அதில் ஒரு கும்மி ஆட்டம் போட்டு, கலைஞர் டிவியில் காட்டி, தமிழ் மக்களை மகிழ்வித்து கட்டுவதில் நமது தலைவருக்கு நிகர் உலகத்தில் யாரும் இல்லை.

ஆமாம்.. இந்த நீதிபதிகள் யாராவது.. தமிழர்களா?

Keyven said...

இவுங்க பதவில இருந்தா அவுங்க சூ வை நோண்டுவாங்க. Vice Versa..... ஆனாக்க போக வேண்டிய காசு மட்டும் கரீட்டா பிரிச்சிகிடுவாங்க.. ஓட்டு போட்ட நாம புறங் கைய்ய நக்கி கிட்டே இருக்க வேண்டியது தான்.