பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 05, 2007

காலை செய்திகள்...

இன்று வந்த காலை செய்திகள் சில..


சன் டிவி புதிய இடத்துக்கு மாற்றம். அண்ணா அறிவாலயத்திலிருத்து சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு போகிறார்கள். மாத வடகை 18 லட்சம். பிரைம் டைம் என்று இதை தான் சொல்லுவார்கள்.
[ மாறன் குடும்பம், ப.ஜ.கவுடன் சேர போகிறதா எனக்கு வந்த கிசுகிசு உண்மையா ? ]
அ.தி.மு.க., - பா.ஜ., உறவு : இல.கணேசன் நம்பிக்கை
சேது சமுத்திர திட்டம் தொடர்பான பிரச்னை ‌தமிழகத்தில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளதாக பா.ஜ., தலைவர் இல.க‌ணேசன் கூறியுள்ளார். இந்நிலையில் அ.தி.மு.க., - பா.ஜ., உறவை மறுப்பதற்கில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், புதிய தமிழகம், தே.மு.தி.க., போன்ற கட்சிகள் பல பிரச்னைகளில் தங்களது கருத்துக்களுடன் ஒத்துப்போவதாக அவர் தெரிவித்தார்.
[ ஜூவியில் படித்தது: சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த பி.ஜே.பி. செயற்குழுவில் கலந்துகொள்ள அத்வானி வந்திருந்திருந்தார். அந்தசமயம் பார்த்துத் திடீர் பயணமாக அம்மையார் கொடநாடு கிளம்பிவிட்டார். சந்திப்பை தவிர்த்ததன் பின்னணி பற்றி இப்போது கசிகிற தகவலே புதுமையானது. அம்மையாரின் அனுதாபியான மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, போனில் பேசினாராம். ‘அவசரப்படாதீர்கள்! தி.மு.க-வின் செயல்பாடுகள் எங்களுக்குத் திருப்தியாக இல்லை. சோனியா மேடம் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்’ என்று சொன்னாராம். அதைத் தொடர்ந்தே, கொடநாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தி முடித்த கையோடு நிருபர்களைச் சந்தித்த அம்மையார், ‘பி.ஜே.பி. பக்கம் போவதாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்று சொல்லி, காங்கிரஸுக்கு சிக்னல் கொடுத்ததோடு, காவிக் கட்சிக்காரர்களையும் குழப்பியடித்தாராம்!’’]

`பாராளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் வராது' - ராமதாஸ்
பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் வர வாய்ப்பு இல்லை. பாரதீய ஜனதா மற்றும் தமிழகத்தில் தோற்ற கட்சிகள் தான் தேர்தல் வரும் என கூறுகிறார்கள்.
[ லோக்சபாவுக்கு இடைத்தேர்தல்: லாலு பிரசாத் யாதவ் தனது கட்சியினரை தேர்தலுக்கு தயாராகுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக காங்., கூட்டணி அரசுடன் மோதல் வலுத்துள்ளதை அடுத்து, வெளியில் இருந்து அளிக்கும் ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், லோக்சபாவுக்கு இடைத்தேர்தல் நடக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. லாலுவும் இதை உறுதிப்படுத்தி உள்ளார். ]

நீதிமன்றங்கள் செயல்பாடு அமைச்சர் பொன்முடி கருத்து
`தனது ஜாதியை சொல்லவே வருத்தப்பட்ட நிலை இருந்தது. அதனை தலைகீழாக மாற்றிய பெருமை ஈ.வே.ரா.,வையும், அம்பேத்காரையும் சேரும். இந்து மதத்தில் உள்ள பிரச்னைகளை எடுத்துக் கூறினால், பிற மதங்களை பற்றி பேசுவதில்லை என்கின்றனர். இந்து மதத்தில் இருக்கும் நான், எனது மதத்தில் உள்ள பிரச்னைகளை எதிர்த்து தான் போராட முடியும். கிருஸ்தவ, முஸ்லீம் மதங்களில் உள்ள பிரச்னைகளை எதிர்த்து அந்த மதத்தவர்கள் தான் போராட வேண்டும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என சட்டம் இயற்றப்பட்டது மனித உரிமைக்கு கிடைத்த வெற்றி. தங்களது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. மக்கள் மன்றம் வழங்கும் தீர்ப்பு தான் இறுதியான தீர்ப்பாக இருக்க முடியும்'
[ எவ்வளவு பெரிய விஷயம் பாருங்க. So, பொன்முடி, இந்து மக்கள் பிரச்சனையை தான் கவணிக்கிறார். மற்ற மதங்களின் பிரச்சனை என்றால் இவர்களுக்கு இட ஒதிக்கீடு தான், பலே பலே ]

அதிமுக வழக்கு, 8ஆம் தேதி விசாரணை

தமிழ்நாட்டில் முழு அடைப்புக்கு தடை விதித்து கடந்த மாதம் 30-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அதை மீறி தமிழக அரசின் ஒத்துழைப்புடன், அக்டோபர் 1-ந் தேதி தி.மு.க.வினர் முழு அடைப்பை நடத்தினர். அத்தியாவசிய சேவைகளில் ஒன்றான பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

மேலும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.என்.அகர்வாலுக்கு எதிராக முதல்-அமைச்சர் கருணாநிதியும், மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவும் கருத்து தெரிவித்துள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் அணுகுமுறைக்கு உள்நோக்கம் கற்பித்துள்ளனர்.

கருணாநிதி உள்பட 6 பேரும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறிய குற்றத்தை செய்தது மட்டுமின்றி, ராமர் பால வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளுக்கு எதிராக அவதூறான குற்றச்சாட்டுகளை கூறி, மக்களிடையே நீதித்துறையின் நற்பெயரையும், கண்ணியத்தையும் சீர்குலைத்த குற்றத்தையும் இழைத்துள்ளனர். ஆகவே அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார சாமி பேட்டி ( பல அறிய கண்டுபிடிப்புக்க்ள் இதி அடங்கும் )

பாரதீய ஜனதாவுக்கு ஆட்சி அதிகாரத்தை விட்டு கொடுக்க மாட்டேன் என்று நான் எப்போதும் சொன்னதில்லை. நான் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக தான் இருந்தேன். ஆனால் ஆட்சி மாற்ற விஷயத்தில் பாரதீய ஜனதாவினர் முறையாக நடந்து கொள்ளவில்லை.

20 மாதங்களுக்கு முன்பு இந்த கூட்டணி அரசு அமைந்தபோது செய்து கொண்ட ஒப்பந்தம் இரு கட்சிகளின் தேசிய தலைவர்களுக்கு மத்தியில் ஏற்பட்டது அல்ல. இரு கட்சியின் மாநில தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட உடன்பாடு தான். அது 4 சுவற்றுக்குள் நடந்த ரகசிய உடன்பாடு. ஆட்சி மாற்றம் தொடர்பாக பெரிதாக எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. ஒப்பந்தத்தை அவர்களே எழுதி கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ராமர் பாலம் பிரச்சினைக்காக பெங்களூரில் உள்ள, தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகள் வீடு மீது தாக்குதல் நடத்தினார்கள். தமிழக பஸ்சை எரித்ததில் 2 அப்பாவி பயணிகள் பலியானார்கள். இதில் கைது செய்யப்பட்டவர்கள் எந்த கட்சி, அமைப்பை சேர்ந்தவர்கள் என்று அனைவருக்கும் தெரியும்.

இவ்வாறு வன்முறையை தூண்டும் விதத்தில் செயல்படுபவர்களிடம் ஆட்சியை எப்படி ஒப்படைக்க முடியும். எனது கட்சியை அழிக்க நினைப்பவர்களிடம் ஆட்சியை ஒப்படைக்க முடியுமா? எனவே பாரதீய ஜனதாவிடம் ஆட்சியை ஒப்படைக்க முடியாது. மக்கள் மன்றத்துக்கு செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். இப்போது உள்ள சூழ்நிலையில் நான் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தால் அரசியல் சட்ட சிக்கல் ஏற்படும். அதனால்தான் நான் பதவி விலகவில்லை.

எனது குடும்பத்தினர் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர்களின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பாரதீய ஜனதாவினர் ஈடுபட்டு உள்ளனர். அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.சி. ஜனார்த்தன ரெட்டி என் மீது ரூ.150 கோடி குவாரி ஊழல் புகாரை சுமத்தினார். என் குடும்பத்தை ஒழிப்பதாகவும் கூறினார். அவரை பாரதீய ஜனதா தலைவர்கள் கட்டுப்படுத்த தவறிவிட்டனர். மேலும் அக்கட்சியைச் சேர்ந்த மந்திரி ஸ்ரீராமுலு என்மீது கொலைப்பழி சுமத்தினார். கூட்டணி கட்சியினர் பரஸ்பர நம்பிக்கை இல்லாமல் செயல்படும் போது எப்படி ஆட்சியை ஒப்படைக்க முடியும்.

இன்று (வெள்ளிக்கிழமை) மந்திரி சபை கூட்டத்தை கூட்டி இருக்கிறார். இதில், சட்டசபையின் அவசர கூட்டத்தை கூட்டி குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பது கோருவது பற்றி முடிவு எடுக்கக்கூடும் என்று ஜனதாதளம் (எஸ்) கட்சி வட்டாரங்கள் தெரிவித்தனர். மந்திரி சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பாரதீய ஜனதா மந்திரிகளும் கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பாரதீய ஜனதா மந்திரிகள் ஏற்கனவே தங்கள் ராஜினாமா கடிதங்களை கொடுத்து விட்டதால் அவர்கள் மந்திரி சபை கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று அக்கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.

1 Comment:

Boston Bala said...

இந்த மாதிரி பல செய்திகளை (ரொம்ப சுருக்கமாக இருந்தால் ஒழிய) மொத்தமாகக் கொடுப்பதற்கு பதில் தனித் தனி பதிவாகவே இடலாமே...