பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, October 28, 2007

இன்றைய கர்நாடகா செய்தி

கிரிக்கெட் மாதிரி Ball by Ball அப்டேட் கொடுக்க வைக்கும் கர்நாடகாவின் அரசியலில் இன்றைய செய்தி. நாளை என்ன நடக்கும் என்று தெரியலை..

மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.பி.பிரகாஷ் பிஜேபியோடு இணைந்து ஆட்சியமைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் கட்சி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில அரசியல் திடீர் திருப்பம் ஏற்பட்டு பிஜேபி ஆட்சியமைக்க மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு அளிக்கும் என்று முன்னாள்முதல்வர் குமாரசாமி நேற்று அறிவித்தார்.
.
இதனையடுத்து ஆட்சியமைப்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் மூத்த தலைவரும்,முன்னாள் உள்துறை அமைச்சருமான எம்.பி.பிரகாஷ் கட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பிஜேபியோடு இணைந்து ஆட்சியமைக்க கூடாது என்று கூறியுள்ள அவர், பிஜேபியின் கோரிக்கையை ஏற்க வேண்டாம் என்று மாநில கவர்னருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தன்னுடன் 57 எம்எல்ஏக்கள் இருப்பதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டதில்லை என்று கூறிய அவர், கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் சட்டவிரோதமாக நடைபெற்று இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ஏற்கனவே காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சியமைக்க முற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் குமாரசாமி முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் கட்சி உடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே முன்னாள் முதல்வர் குமாரசாமி தனது ஆதரவு எம்எல்ஏக்களை ஒன்றாக திரட்டி அவர்களை சுற்றுலா அழைத்துச்செல்ல திட்டமிட்டிருக்கிறார்.

1 Comment:

Jahe said...

மொத்த குமரப்பா குரூப் ப பார்த்தா புங்காத்தா கோயிலிலே சூர தேங்கா பொறுக்குற கும்பல் மாதிரி இருக்கு. இவனுங்க அரசியல் பண்ணுறது தேங்கா பொறுக்குரத விட கேவலம். --- இஞ்சி தின்ற குரங்கு....