பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 17, 2007

எனக்கு எதிராக சதி - ஜெயலலிதா

ஜெ அறிக்கை, பேட்டி...

என் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய செயல் நேற்று நடந்துள்ளது; அதிலிருந்து நான் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். முதல்வர் கருணாநிதி, அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நடத்திய ஆலோசனை இதன் பின்னணியில் இருக்குமோ என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு விட்டதாகவும் இந்த திட்டத்தால் இந்தியாவுக்கோ, தமிழகத்துக்கோ எந்தவித பயனும் இல்லை என்றும் அவர் கூறினார்.
மாநில கல்லூரி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு கண்டனம் தெரிவித்த ஜெயலலிதா, இது பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.


சென்னையில் அதிமுகவின் 36ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

நேற்று முன்தினம் மாநில கல்லூரி வளாகத்தில் காவல் துறையினர் அத்துமீறி கல்லூரிக்குள் புகுந்து கடுமையாக மாணவர்களை தாக்கியுள்ளனர். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாணவர்களை தாக்கிய காவல் துறையினரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இது தொடர்பாக நீதி விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.

பாதுகாப்பு குறைபாடு காரணமாக நேற்று அடையாளம் தெரியாத ஒருவர் என் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்துள்ளார். இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. என் வீட்டுக்குள் வந்த நபருக்கு மாடிக்கு வருவதற்கு வழி எப்படித் தெரியும்? மாடியில் உள்ள லைப்ரரி வரை செல்வதற்கு அவரால் எப்படி முடிந்தது?

நான் 10 ஆண்டுகள் முதல்வராக இருந்து இசட்பிளஸ் பாதுகாப்பில் இருக்கிறேன்.
விடுதலைப்புலிகளை தமிழகத்தில் இருந்து அகற்றி உள்ளேன். அந்த இயக்கத்தை தடை செய்ய வலியுறுத்தி இருக்கிறேன். தமிழ்நாடு விடுதலைப்படை, தமிழ்நாடு மீட்பு படை மற்றும் நக்சல்கள் போன்ற தீவிரவாத, பயங்கரவாத இயக்கங் களை தடை செய்திருந்தேன்.

இந்த இயக்கங்களால் என் உயிருக்கு ஆபத்து வரும் என்று அறிந்த மத்திய உளவுத்துறை எனக்கு கருப்பு பூனை பாதுகாப்பு கொண்ட இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பை அளித்திருந்தது.
இந்த பிரிவு பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு மாநில காவல் துறை உரிய காவலர்களுடன் கூடிய பாதுகாப்பை எனக்கு வழங்கவில்லை.

நடந்து முடிந்த தேர்தலில் திமுக ஆட்சி அமைந்த மறுநாளே என் வீட்டு பகுதிக்கு கருணாநிதியின் உறவினர் ஒருவர் பென்ஸ் காரில் வலம் வந்திருக்கிறார். அப்போது இங்கிருந்த போலீஸ் பாதுகாப்பை பார்த்து விட்டு நேராக கருணாநிதியிடம் அவர் சென்று, ""இந்த பொம்பளைக்கு ஏன் இன்னும் இவ்வளவு போலீஸ் பாதுகாப்பு'' என்று சொல்லியிருக்கிறார். அடுத்த நிமிடமே அங்கிருந்த போலீஸ்காரர்கள் திரும்ப பெறப்பட்டு 3 போலீஸ்காரர்கள் மட்டுமே இப்போது பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

இந்த பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டி போதிய அளவு போலீசாரை நியமித்து உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று என்னுடைய கட்சியின் தலைவர்களும், பிரமுகர்களும், என் நலம் விரும்பிகளும் பலமுறை கேட்டும் அவர்கள் உரிய பாதுகாப்பை வழங்கவில்லை.

இது குறித்து முதலமைச்சரிடம் கேட்டால் அவர் சொல்லியபடி டிஜிபி தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது என்று கூறுகிறார். என்னைப் போலவே இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் வீட்டிற்கு அந்த மாநில காங்கிரஸ் அரசாங்கம் பாதுகாப்பு பணிக்கு 65 காவலர்களை நியமித்துள்ளது. இதை ஐதராபாத் சென்றபோது நானே நேரில் பார்த்தேன்.

ஆனால் என்னுடைய வீட்டிற்கு முன்புறம் ஒருவர், பின்புறம் ஒருவர், பக்கவாட்டில் ஒருவர் என்று 3 போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று அடையாளம் தெரியாத ஒருவர் என்னு டைய வீட்டிற்குள் புகுந்து மேல்மாடிக்கு வந்து அலுவலக அறையை தாண்டி நூலகம் வரையிலும் வந்து இருக்கிறார்.

அங்கிருந்த என்னுடைய சகோதரி சசிகலாவும், அவருடைய உறவினர் இளவரசியும் பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த அறையின் கதவை உட்புறமாக தாளிட்டு விட்டு இப்படியொரு நபர் வந்து இருப்பதை இன்டர்காம் மூலமாக என் வீட்டு அலுவல்களை கவனிப்பவரிடம் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் வந்திருந்த நபரை பிடித்து போலீசார்வசம் ஒப்படைத்து இருக்கிறார்கள்.

இதை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. அவர் மிடுக்கான உடை அணிந்து பார்ப்பதற்கு போலீசோ அல்லது ராணுவ அதிகாரியோ என்று நினைக்கும் அளவுக்கு தோற்றம் கொண்டவராக இருக்கிறார்.

வந்த நபருக்கு என் வீட்டில் உள்ள அறைகளின் வழி எப்படி தெரியும்? மாடிக்கு எப்படி அவரால் வர முடிந்தது. அவர் நூலக அறைக்கு வந்தபோது யாரும் இல்லை என்றால் அதற்கு அடுத்த அறையான என்னுடைய அறைக்குள் நுழைந்து இருப்பார். நான் அப்போது என் அறையில்தான் இருந்தேன். அப்படி அந்த நபர் என் அறைக்குள் வந்திருந்தால், என்ன நடந்திருக்கும் என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

நடைபெற்ற சம்பவங்களை நினைக்கும் போது நான் தெய்வாதீனமாகத்தான் உயிர் தப்பியிருக்கிறேன். இது தொடர்பாக எனக்கு கிடைத்த தகவலை நான் பகிர்ந்துகொள்கிறேன்.
இதுகுறித்து பேச வேண்டிய தருணம் வந்து விட்டதால்தான் இதை கூறுகிறேன்.

எல்லா இடங்களிலும் என் நலன் விரும்பிகள் இருக்கிறார்கள். நான் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் சில நாட்களுக்கு முன்பு என்னிடம் தெரிவித்த கருத்தைத்தான் நான் இப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

சமீபத்தில் முதலமைச்சர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலினுக்கு ஒரு அறிவுரை வழங்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் அடுத்த சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும்போது நான் உயிரோடு இருக்க மாட்டேன். எனவே இப்போது நம்மோடு உள்ள கூட்டணிக்கட்சிகளை நீ விட்டு விடாமல் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நீ பெரும் துன்பங்களையும், துயரங்களை யும் எதிர்கொள்ள வேண்டி வரும் என்று சொல்லியிருக்கிறார். இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், அடுத்த தேர்தல் வரும்போது ஜெயலலிதா உயிரோடு இருந்தால்தானே என்று பேசியதாக எனக்கு தகவல் கிடைத்திருக் கிறது. நேற்று என் வீட்டில் இத்தகைய சம்பவம் நடைபெற்றதால், இதனை சொல்கிறேன்.

மத்திய அரசு உத்தரவுப்படி இசட் பிளஸ் பாதுகாப்பு என் வீட்டுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறது. ஆனால் முதலமைச்சர் சார்பாக பேசிய அமைச்சர் ஆற்காடு வீராசாமி, நான் (ஜெயலலிதா) முதலமைச்சராக இருந்தபோது, முன்னாள் முதலமைச்சருக்கு என்ன பாதுகாப்பு வழங்கப்பட்டதோ அதே பாதுகாப்புதான் இப்போது எனக்கு அவர் வழங்கியிருப்பதாக கூறுகிறார்.

நான் முதலமைச்சராக இருந்தபோது, கருணாநிதிக்கு எந்த அச்சுறுத்தலோ, உயிருக்கு மிரட்டலோ ஏற்படவில்லை. கருணாநிதியைப் பொறுத்தவரை 1991ம் ஆண்டு அரசின் ரகசியங்களை விடுதலைப் புலிகளுக்கு திருட்டுத்தனமாக அனுப்பிய தற்காக அவரது ஆட்சிக்கலைக்கப்பட்டது.

தமிழ்நாடு விடுதலைப்படை, தமிழ்நாடு மீட்சிப்படை உள்ளிட்ட தீவிரவாத கும்பல்கள் சந்தனக்கடத்தல் வீரப்பனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தன.
அவர்களுடன் கருணாநிதிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததால், அவருக்கு எந்த வித ஆபத்தும் இல்லை என்பதால்தான், அப்போது அவருக்கு சாதாரண பாதுகாப்பு வழங்கப்பட்டது.

நான் 1991ம் ஆண்டு முதல் இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கிறேன். இந்த பாதுகாப்பில் தனிப்பட்ட விறுப்பு வெறுப்புகளை பார்க்கலாமா? இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுக இருக்கிறோம் என்றார் ஜெயலலிதா.

அதன்பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:
நேற்று என் வீட்டுக்குள் நுழைந்த நபர் வேலை கேட்டு வந்ததாக சொல்கிறார்கள். நடந்திருப்பது மிகப்பெரிய தவறு. இதன் தீவிரத்தை குறைக்கவும், மக்களை திசை திருப்பவும் ஆற்காடு வீராசாமி தெரிந்தே பொய்சொல்கிறார்.

மாநில அரசும், முதலமைச்சரும் தவறு செய்திருக்கிறார்கள். நான் நேற்று உயிருடன் தப்பியதே தெய்வாதீனமானது. வேலை கேட்கும் ஒருவன்தான் பூட்ஸ் காலோடு நேராக மாடிக்கு வருவானா? இவனைப் போலீசார் உள்ளே அனுப்பியது எப்படி? இதன் பின்னணியில் கருணாநிதி ஸ்டாலின் நடத்தியஆலோசனை என் நினைவுக்கு வருகிறது. இதனை உங்கள் (நிருபர்கள்) முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

எனக்கு பாதுகாப்பு வேண்டுமென நானே கேட்க வேண்டிய தேவையில்லை. ஏற்கனவே உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, மாநில அரசு செயல்பட வேண்டும். நேற்றைய சம்பவத்துக்கு பிறகு இது தொடர்பாக உள்துறை செயலாளர், டிஜிபி, கமிஷனருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் ஜனாதிபதி, பிரதமருக்கும் புகார் அனுப்பவுள்ளோம். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தையும் அணுகவிருக்கிறோம்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

ரஜினி தயவை முதல்வர் நாடியது வெட்கக்கேடு
சேது சமுத்திர பிரச்சனை தீர்வதற்கு ரஜினியிடம் ஒத்துழைப்பை முதல்வர் கேட்டது வெட்கக்கேடானது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா நிருபர்களை சந்தித்தார்.

நேற்று நடைபெற்ற அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய முதல்வர், நடிகர் ரஜினிகாந்த் வடநாட்டு சாமியார்களை அணுகி சேது சமுத்திர திட்டப் பிரச்சனைகளின் சிக்கல்களை எடுத்துக் கூறி திட்டம் நிறைவேற ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளாரே என்று நிருபர்கள் கேட்டுள்ளனர்.

அதற்கு பதில் அளித்து பேசிய ஜெயலலிதா, இது பரிதாபமாக உள்ளது. இவ்வளவு வயதான ஒருவர், இத்தனை முறை முதல்வராக இருந்த ஒருவர் இந்த பிரச்சனைக்கு வேறு ஒருவரிடம் போய் சிபாரிசு கேட்பது வெட்கக்கேடானது. என்னை பொருத்தவரை இந்த திட்டம் கைவிடப்பட்டது என்று கருத இடம் உண்டு என்றார்.

அதிமுக கூட்டணியில் உள்ள மதிமுக சேது சமுத்திரத் திட்டத்திற்கு ஆதரவு அளிப்பது குறித்து அதன் பொதுச்செயலாளர் வைகோவிடம் தான் கேட்க வேண்டும் என்று ஜெயலலிதா தெரிவித்தார்.

வைகோவிடம் கேளுங்கள்:
சென்னையில் இன்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது சேது சமுத்திரத் திட்டத்தை இடதுசாரி கட்சிகள் ஆதரிப்பதற்கு அரசியல் தான் காரணம் என்று தெரிவித்தார்.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்து வலியுறுத்தி வருகிறாரே என்று அப்போது ஜெயலலிதாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த ஜெயலலிதா, "நான் சொன்ன காரணங்களை எல்லாம் அவரிடம் (வைகோவிடம்) சொல்லி பின்னர் அவரையே கேளுங்கள்' என்று கூறினார்.
(செய்தி: மாலைசுடர் )

5 Comments:

நாகை சிவா said...

நடந்தவைகள் தவறாகவே இருக்கட்டும்...

பாதுகாப்பு சரியாக தரப்படாததும் தவறாகவே இருக்கட்டும்..

அதுக்காக கலைஞர், ஸ்டாலின் பேசி கொண்டதாக கூறுவத எல்லாம் ரொம்பவே அதிகம்.... ஆதாரம் இல்லாமல் இது போல் பேசுவது அபத்தமா இருக்கு....

Indian Voter said...

Jaya had a good opportunity to take the government head on, but she is likely to end up being a laughing stock with her comments abt MK-Stalin conversation.

hmm.. Arcot V.Swamy would be busy filing a defamation case against JJ and MK would already got a 'kavidhai' for Murasoli.

Anonymous said...

எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. ஆனானப் பட்ட ஜெயலலிதாவின் பங்களாவுக்கு வெறும் .303 தாங்கிய புல் தடுக்கி தமிழ் நாடு போலீசார் மட்டும்தானா காவல்? அம்மையார் ஏதும் ப்ரைவேட் காவல் செக்யுரிட்டி இல்லாமலா இருக்கிறார்? அவர் வீட்டுக்குள் எப்படி திறந்த வீட்டில் நாய் நுழைவது போல யார் வேண்டுமானாலும் செல்ல முடிகிறது? ஆனானப் பட்ட மத்திய மந்திரிகளாய் இருந்த ஜார்ஜ் பெர்ணாண்டஸ், ஜஸ்வந்த் சிங் போன்றோரே அரை மணி காக்க வைக்கப் பட்டுத்தானே உள்ளே அனுப்பப் படுகிறார்கள்? இந்த நபர் எப்படி முதலில் முதல் கோட்டைக் கதவைத் தாண்டி வீட்டுக்குள் நுழைந்தார்? நார்மலாக வீட்டுக்குள் நுழைய நிறைய துவாரபாலகர்கள் இருப்பார்களே அவர்களை மீறி இவர் எப்படி நுழைந்தார். கண்டவனும் எளிதாக உள்ளே நுழைய இது என்ன சாமன்ய, நடுத்தர வர்க்கத்தினர் வீடா? ஆக அன்று யாரும் இல்லாத ஒரு தருணமாகப் பார்த்து காவலுக்கு இருந்த போலீசார் ஒருவனை வேண்டுமென்றே உள்ளே அனுப்பியுள்ளனர். அது போன்ற தருணம் எப்பொழுது அமையும் என்று காத்திருந்து அந்த சமயத்தில் ஒரு கொலையாளியை உள்ளே அனுப்பியுள்ளார்கள். கருணாநிதியும் ஸ்டாலினும் எவ்வித பஞ்சமா பாதகங்களையும் செய்யத் தயங்காதவர்கள், ராஜீவ் கொலையிலெ கருணாநிதிக்குக் கூட்டு உண்டு என்று ஜெயின் கமிஷம் மிகத் தெளிவாகச் சொல்லியுள்ளது. ஜெயலலிதா மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தன் கட்சி தா.கிருஷ்ணனையே கண்டம் துண்டமாக வெட்டிய பாவிகள் இன்று ஆட்ச்சியில் உள்ளனர்.

Anonymous said...

நாகை சிவா

என்ன ஆதாரம் வேண்டும் உங்களுக்கு? இதே கருணாநிதி 'வை கோபாலசாமி விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து கொண்டு என்னைக் கொல்ல முயல்கிறார்' என்று வை கோபாலசாமி மீது குற்றம் சாட்டிய பொழுது அதற்கு கருணாநிதி என்ன ஆதாரத்தை பொது மக்களிடமும் நீதி மன்றத்திடமும் கொடுத்தாரோ அதே ஆதாரத்தை ஜெயலலிதாவும் தருவார் போதுமா? கருணாநிதி யார் மீது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கொலைப் பழி போடலாம் அதற்கெல்லாம் ஆதாரம் கேட்க்க மாட்டீர்கள், அபத்தம் என்று சொல்ல மாட்டீர்கள் ஜெயலலிதா சொன்னால் மட்டும் அது அபத்தமாகி விடுமா என்ன? முதலில் வை கோபாலசாமி மீது கருணாநிதி வீசிய கொலைப் பழிக்கு ஆதாரம் கேட்டு விட்டு அப்புறமா ஜெயலலிதாவிடம் கேட்க்கலாம் என்ன? இதற்கு ஆதாரம் கேட்க்க கருணாநிதிக்கும் அருகதை கிடையாது. தன்னைக் கோபாலசாமி கொல்ல முயல்கிறார் என்று சொன்னதற்கு முதலில் கருணாநிதி ஆதாரம் கொடுத்தால்தான் ஜெயலலிதாவிடம் ஆதாரம் கேட்க்கும் அருகதை அவருக்கும் வரும். ஐயோ என்னைக் கொல்றாங்களே என்று சொல்லி டிராமா போட்ட கருணாநிதியை விடவா ஜெயலலிதா சொல்வது அபத்தமாக இருக்கிறது. இங்கு அவரைக் கொல்ல ஒரு ஆள் வீட்டுக்குள் வரை நுழைந்து விட்டான் அதுவே போதும் அவருக்கு தன் சந்தேகத்தை கருணாநிதியின் மீது வீச. கருணாநிதி அன்று வை கோபாலசாமி மீது வீசிய அதே அஸ்திரத்தைத்தான் ஜெயலலிதா இன்று கருணாநிதி மீது வீசுகிறார் இதில் என்னத்த அபத்தத்தைக் கண்டீர்களோ?

அன்று அன்பில் தர்மலிங்கம் என்னும் தி மு க ரவுடி யின் வைப்பாட்டியை திருச்சி கல்லூரி மாணவர்கள் கிண்டல் அடித்தார்கள் என்பதற்காக க்ளைவ் ஹாஸ்டலுக்குள் நுழைந்து மாணவர்களின் எலும்பை முறித்த அதே கருணாநிதியின் போலீஸ் இன்று அதே வெறியாட்டத்தைப் போடுகிறது. ஜெயா அதைத்தான் கண்டித்திருக்கிறார் பாவம் அவருக்கு க்ளைவ் ஹாஸ்டல் விஷயம் நினைவுக்கு வராமல் போய் விட்டது அல்லது என்னைப் போல பழுத்த ஆசாமிகள் அவருக்கு எழுதிக் கொடுக்கவில்லை. போகட்டும் இதைப் படித்து விட்டாவது அவர் அடுத்த கண்டனத்தில் பேசட்டும். க்ளைவ் ஹாஸ்டல் அண்ணாமலைப் பல்கலைக் கழக உதய குமாரன் போன்றோரை ஜெயலலிதா மறக்கலாகாது அடிக்கடிச் சொல்லிக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும், அப்பொழுதுதான் மக்களுக்கு மறக்காமல் கருணாநிதி எப்படிப் பட்ட ஒரு அரக்கன், ஒரு கொடியவன், ஒரு வில்லன் என்பது நினைவில் இருந்து கொண்டே இருக்கும்.

இட்லி வடை மேற்படி எனது பதிலை அம்மாவின் பார்வைக்கும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யவும். நான் சொன்ன வை கோபாலசாமி மாட்டர் மிகவும் முக்கியம்.

cgs said...

she has money enuf to employ private security. she can lookafter herself.