பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 27, 2007

குமாரசாமி = குழப்பசாமி

கர்நாடகாவில் பா. ஜ., ஆட்சி அமைக்க ஜனதாதளம் ஆதரவு வழங்க முடிவு
கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக எடியூரப்பா தலைமையில் பிஜேபி அரசு அமைய ஆதரவளிக்க தயார் என்று மதச் சார்பற்ற ஜனதா தள கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக ஆதரவு கடிதத்தை இன்று மாலை குமாரசாமி கவர்னரிடம் அளிக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

திடீர் திருப்பமாக (அடிக்கடி) எடியூரப்பா தலைமையில் பிஜேபி அரசு அமைக்க ஆதரவு கொடுப்பது என மதச்சார்பற்ற ஜனதா தளம் முடிவெடுத்துள்ளது.

இதற்கான ஆதரவு கடிதத்தை கவர்னர் ராமேஸ்வர் தாக்கூரிடம் குமாரசாமி இன்று மாலை 4 மணியளவில் அனுப்பவிருப்பதாகவும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பிஜேபி இதை ஏற்றுக்கொள்ள கூடாது. பார்க்கலாம்


குமாராசாமி அறிவிப்பை தொடர்ந்து பிரகாஷ் உடனடியாக டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று அவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து பேசுகிறார். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களும் பிரகாசுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் பிரகாஷ் தலைமையில் புதிய ஆட்சி அமையும் சூழ்நிலை உருவானது.

கடைசி அப்டேட்:

மதசார்பற்ற ஜனதாதள கட்சி தலைவர் தேவகவுடா , பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங்கிடம் போனில் பேசினார். மேலும் பா. ஜ., வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என்று பா. ஜ., வலியுறுத்தியுள்ளது. சட்டசபை பா.ஜ.க. தலைவர் பி.எஸ்.எடியூரப்பா புதிய முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்பார் என்று தெரிகிறது.

தீபாவளி டைம் பட்டாசு வெடிக்கதான் செய்யும்.

6 Comments:

cgs said...

உங்களை பாராட்ட வேண்டும். பிஜேபி மேல் இத்தனை நம்பிக்கயா?

குமராசாமிக்கு இப்போமட்டும் கர்னாடகாவை 'மத வெறியர்களிடம் 'ஒப்படைக்க பிரச்சினை ஒன்றும் இல்லயாமா?

எங்கும் நீக்கமர பரவியிருக்கும் சாதி அரசியல் தான் அங்கேயும் நடக்கிறது.

கடவுளே வந்தாலும் நாம் சாதியை விடப்போவதில்லை.

IdlyVadai said...

cgs பிகேபி மேலிடம் அதை விரும்பாது என்பது என் எண்ணம். இவர்களுக்கு இருக்கும் அனுதாப அலையை இழக்க மாட்டார்கள்.

IdlyVadai said...

cgs நீங்க சொன்னது சரிதான். கடைசி அப்டேட் பாருங்க :-)

Anonymous said...

இட்லிவடை சார்,

திராவிட குஞ்சுகள் ஏதோ தெஹல்கா, குஜராத், மோடி, வீடியோன்னு சொல்றாங்களே? அதைப் பத்தி பதிவு எழுத மறந்துட்டீங்களா?

cgs said...

இட்லிவடை,

எனக்கென்னவோ, பிஜேபி சொ.செ.சூ, பெரிய அளவில் வைத்துக்கொள்வது மாரி தெரியுது.`ஹிந்து பாருங்க.......

Jahe said...

கொரங்கே தேவலாம்... கொமார சாமி...பண்ணுற கூத்துக்கு....