பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 26, 2007

துக்ளக் அட்டை படம் சில விளக்கங்கள்

இந்த வார துக்ளக் அட்டை படத்தில்


"ராமர் தெய்வம்தாம், எனக்கு ராமர் மீது நிறைய மரியாதை உண்டு"
முதல்வர் பேச்சு, செய்தி

என்று வந்துள்ளதே, எப்போது கலைஞர் அப்படி சொன்னார் ? என்று சிலர்(5 பேர்) என்னிடம் கேட்டார்கள்( ஏதோ நான் தான் அந்த கார்டூனுக்கு ஐடியா கொடுத்த மாதிரி ).

எனக்கு தெரிந்த வரையில் (உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டதில் சொல்லலாம்) கலைஞர் ஜெயலலிதா புகாருக்கு பதில் சொல்லும் போது இதையும் சொன்னார். அதன் விவரம் இங்கே...


New Indian Express
New Indian Express செய்தி

தினத்தந்தி செய்தி:
(அக்டோபர் 18)சட்டசபையில் கலைஞர் பேச்சின் முழு விவரம்


திட்டமிட்டே நடந்த சம்பவம்
விரும்பத் தகாத, நேரடியாக சொல்ல வேண்டுமேயானால் வெறுக்கத்தக்க ஒரு நிகழ்ச்சி அவையிலே எதிர்பாராமல் நடந்தது என்று சொல்ல மாட்டேன் - எதிர்பார்த்ததற்கிணங்க நடைபெற்று அது இன்று மாலையில், நாளை காலையில், பத்திரிக்கைகளிலே செய்தியாக வர இருக்கிறது. ஆனால், அமைச்சர் ஸ்டாலின் இங்கே பேசியதையட்டி எழுந்த தகராறு - அந்தத் தகராறின் விளைவாக கூச்சல் குழப்பம் - அதன் விளைவாக இத்தகைய நடவடிக்கை என்று பத்திரிக்கைகளிலே செய்தி வரப் போகிறது.
உண்மை என்னவென்றால், இந்த உரிமை மீறல் பிரச்சினையின் மீது அமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கே பேசி இந்தக் கருத்துக்களைச் சொல்லியிருக்கா விட்டாலுங் கூட இது நடந்திருக்கும். இந்தக் குழப்பமும், கூச்சலும், இந்தத் தகராறும், பரபரப்பும், பத்திரிக்கைகளிலே வருகின்ற அளவிற்கு நடந்திருக்கும். காரணம், திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் இது. என்றைக்கு அவையின் மழைக் காலத் தொடர் கூடும் என்று அறிவிக்கப்பட்டதோ அன்றைக்கே எப்படி இந்தச் சபையிலே நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு அதற்குத் தயாராகிவிட்டார்கள்.
பாதுகாப்பு குறைப்பா?
அதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட ஆயுதம் என்னவென்றால் - Ôபாதுகாப்பு இல்லைÕ. ஒரு முன்னாள் முதல்-அமைச்சருக்குத் தர வேண்டிய பாதுகாப்பு தரப்படவில்லை என்பது. இந்த முகாரி ராகத்தை கடந்த இரண்டாண்டு காலமாக அவர்கள் பாடி வருகிறார்கள். அது உண்மையா என்பதை நடுநிலையிலே உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும். காவல் துறையிலே உள்ளவர்கள் அறிவார்கள். அரசுத் துறையிலே உள்ளவர்களுக்கு தெளிவாகவே புரியும். இருந்தாலும், அவ்வப்பொழுது நம்முடைய மக்களுக்கு மறதி என்ற ஒன்று இருந்து விடுகிற காரணத்தால் நினைவூட்ட வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. ஆகவே, நினைவூட்ட விரும்புகிறேன்.
உள்ளபடியே, முன்னாள் முதல்-அமைச்சருக்கு - இன்றைய எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லையா என்றால், ஏற்கனவே இதே அவையில் உறுப்பினர்களுக்கெல்லாம் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில், அந்தப் பட்டியலை அறிவித்திருக்கிறேன். அவருக்குரிய எந்த பாதுகாப்பும் அவர் முன்னாள் முதல்-அமைச்சராகிவிட்ட காரணத்தாலோ இன்றைக்கு எதிர்க் கட்சித் தலைவர் என்ற நிலையினாலோ குறைக்கப்படவில்லை என்பதை நான் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெயலலிதா விருப்பப்படியே
அவர் 'இசட் பிளஸ்' மற்றும் தேசிய பாதுகாப்புப்படை (என்.எஸ்.ஜி.) பாதுகாப்புக்கு உரியவர் என்பதால், நிர்ணயிக்கப்பட்ட விதிகளின்படி, அவருக்கு போதிய பாதுகாப்பு பின்வருமாறு வழங்கப்பட்டு வருகிறது.
அவரது மெய்க்காவல் அலுவலில் 3 காவல் ஆய்வாளர்கள்- என்.பி. விஜயகுமார் (வயது 44), ஜி. முத்துமாணிக்கம் (வயது - 37) மற்றும் வி. குப்புராஜ் (வயது 48 ) முதலியோர் உள்ளனர். இதிலே வேடிக்கை என்னவென்றால் கடந்த ஆட்சியின்போது முன்னாள் முதல்வர், அம்மையார் அவர்களின் பாதுகாப்பு பணியில் இவர்கள் இருந்து வந்துள்ளனர்.
தற்போது அவர்களுடைய விருப்பப்படியே அவரது மெய்க் காவல் பணியில் தொடர்ந்து உள்ளனர். ஆட்சி மாறி, அவர்களின் பாதுகாப்புப் பணி பற்றி பரிசீலித்த போது, அதே பாதுகாவலர்கள் தான் தொடர்ந்து இருக்க வேண்டுமென்று அம்மையார் அவர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களே அந்தப் பாதுகாப்புப் பணியிலே தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் 9 எம்.எம். பிஸ்டல் வகை துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு பணி புரிகின்றார்கள்.
பாதுகாப்பு அதிகாரிதான் பொறுப்பு
இந்த மூவரில் வி.குப்புராஜ் என்பவர் தான் அன்றையதினம் வீட்டிற்குள் ஒருவர் நுழைந்ததாக பத்திரிகைகளிலே செய்தி வந்து, வந்தவர் ஊமையாக நடித்தார் என்றெல்லாம் செய்தி வந்து, பிறகு அவரைப் பார்த்தால் வேலை கேட்க வந்தார் என்றெல்லாம் செய்தி வந்து, அ.தி.மு.க. வின் அனுதாபி தான் அவர் என்றெல்லாம் செய்தி வந்ததே, அவர் அந்த வீட்டிற்குள் நுழைந்த அந்த நாளில் பாதுகாப்பு பணியிலே இருந்தவர் குப்புராஜ் என்பவர். எனவே எதிர்க்கட்சித் தலைவர் வீட்டுப் பாதுகாப்பில் அன்றையதினம் ஏதாவது குறை இருக்குமேயானால் அதற்கு இந்த அதிகாரி தான் பொறுப்பானவர்.
அந்த முழுப் பொறுப்புக்குரிய அதிகாரி எந்த முறையில் விசாரிக்கப்பட வேண்டுமோ அந்த முறையில் விசாரிக்கப்படுவார் என்பதை; ஏன் அந்தப் பாதுகாப்பிலே இந்த வழுக்கல் ஏற்பட்டது என்பது தெளிவாக்கப்படும் என்பதையும் நான் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
'இசட் பிளஸ்' பாதுகாப்பில் இருந்தவன்
இது மாத்திரமல்ல, கூடுதல் மெய்க் காவல் பணியில் இரண்டு தலைமைக் காவலர்கள் - எஸ். கிருஷ்ணம ராஜ் (வயது-46), ஆர்.அசோகன் (வயது-39) மற்றும் ஒரு காவலர் - எம். கோதண்டபாணி (வயது-33) முதலியோர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் விருப்பப்படியே தொடர்ந்து அந்தப் பணியில் உள்ளனர். இவர்கள் ஏ.கே.47 (ரைபிள்) துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு பணியில் உள்ளனர் என்பதையும் நான் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
ஐந்தாண்டு கால அ.தி.மு.க.ஆட்சியில் நான் Òஇசட் பிளஸ்ÕÕ மற்றும் தேசிய பாதுகாப்புப் படை பாதுகாப்புக்கு உரியவனாக இருந்திருக்கிறேன். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா அளித்த பேட்டியில் கருணாநிதிக்கு இசட் பிளஸ் பிரிவுக்கான பாதுகாப்பு என்றைக்குமே இருந்ததில்லை, தனக்குத் தான் அந்தப்பாதுகாப்பு என்று சொல்லியிருக்கிறார். ஒருவேளை அது என்னுடைய மதிப்புக்கு குறைவாக இருக்கட்டும் என்று அவர் நினைத்திருக்கலாம். அந்த மதிப்புக் குறைவு எனக்கு ஏற்படுவதைப் பற்றி நான் என்றைக்கும் கவலைப்பட்டதில்லை என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். தற்போது அவருக்கு அளித்திருப்பதைப் போலவேதான் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் எனக்கு மெய்க்காப்பாளர்களாக மூன்று காவல் ஆய்வாளர்களும், கூடுதல் மெய்க் காவல் பணியில் மூன்று பேரும் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
அரசியலில் பயம் கூடாது
அவர் ஆட்சி புரிந்த அந்த ஐந்தாண்டுகளில் கூட என் வீட்டிற்கு அல்லது அறிவாலயத்திற்கு அல்லது நான் பணியாற்றுகின்ற கோட்டை அலுவலகத்திற்கு எத்தனையோ முறை எத்தனையோ பேர் தங்கள் கோரிக்கைகளை முறையிடுவதற்காக தனியாகவும் வந்திருக்கிறார்கள், நான்கு பேர், ஐந்து பேர் என்று சேர்ந்தும் வந்திருக்கிறார்கள். நான் அவர்களையெல்லாம் என்னைக் கொலை செய்ய வந்திருப்பார்கள் என்று யூகித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது என்று குற்றஞ்சாட்ட என்றைக்கும் நான் முன்வரவில்லை, அதுவும் உங்களுக்குத் தெரியும்.
இப்படி வருகிறவர்கள் எல்லாம் கொலை செய்யத் தான் வருகிறார்கள் என்கின்ற இந்தப் பயம் இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட ஒரு பயம், அரசியலிலே இருப்பவர்களுக்கு இருந்தால் அதை ஏதோ ஒரு நோய் என்று சொல்வார்கள். நான் அதையெல்லாம் விவரிக்க விரும்பவில்லை.
மேலும், 12 பேர் அடங்கிய தேசிய பாதுகாப்பு படையினர் (நேஷனல் செக்யூரிட்டி கார்டு) இரண்டு வாகனங்களில், எம்.பி.5 நவீன ரக துப்பாக்கியுடன் வழிக்காவல் பணியில் உள்ளனர். இதைப் போல பல பேர் ஒரு ஷிப்டுக்கு இத்தனை பேர் என்று மூன்று ஷிப்டுக்கும் சேர்த்து சுமார் 55 பேர் அந்த அம்மையாருக்காக காவல் பணியிலே ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதற்கிடையிலே இன்னும் பாதுகாப்புத் தேவையென்றால் இப்போது கூட இந்த அவையிலே சொல்ல விரும்புகிறேன். இன்னும் பாதுகாப்பு தேவையென்றால் கொடுக்கக் கூடத்தயாராக இருக்கிறோம். பாதுகாப்பு எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளுங்கள், பாராளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள் என்று தான் நான் சொல்ல விரும்புகிறேன்.
பத்திரிகைகளிலே
இதற்கிடையே நேற்று பத்திரிகையிலே மக்கள் குரல், இந்தியன் எக்ஸ்பிரஸ், அவர்களுடைய கட்சிப் பத்திரிகை நமது எம்.ஜி.ஆர். என்று இத்தனையிலும் நானும் உள்ளாட்சித் துறை அமைச்சரும் ஏதோ பேசிக் கொண்டோம், அவருக்கு ஒரு முடிவு ஏற்படுத்துவதைப் பற்றி பேசிக் கொண்டதாக அந்த அம்மையார் பேட்டி அளித்ததாக செய்தி வந்து, அதைப் பற்றித் தான் ஸ்டாலின் உரிமைப் பிரச்சினை இங்கே கொடுத்திருக்கிறார். அவரும் இங்கே ஒரு அமைச்சராக இருக்கிறார். அமைச்சராக இருக்கிறாரோ இல்லையோ, ஒரு உறுப்பினராக இருந்தால் கூட, அவரைப் பற்றி இப்படிப்பட்ட ஒரு பயங்கரமான செய்தி வரும்போது இந்த அவை யிலே இருக்கின்ற ஒவ்வொரு உறுப்பினருக்கும் பாதுகாப்பு தேவை.
பாராளுமன்றத்தில் அவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு இழுக்கும் பழியும் ஒரு அமைச்சர் மீது சொல்லப்பட்டால் இப்படித் தான் தங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள். அவைத் தலைவராகிய தங்களுடைய அரவணைப்பும், அவையிலே உள்ள ஜனநாயகத்திலே நம்பிக்கை உள்ள மற்றக் கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையும், ஆறுதலும் இல்லாமல் எப்படி நாங்கள் இங்கே இயங்க முடியும் என்பதை தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
பொறாமையால் வீண்பழி
இங்கே இருக்கின்ற உறுப்பினர்கள் மாத்திரமல்ல, பத்திரிகையாளர்களும் இதை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களும் இந்தக் காட்சியை நேரடியாகப் பார்த்திருக்கிறார்கள். பார்த்தவர்கள் என்ன நடந்தது என்பதை அறிவார்கள். ஸ்டாலின் என்ன பேசினார்? இது உங்களுக்கு வாடிக்கையாகப் போய் விட்டது என்று ஒரு வார்த்தையைச் சொன்னார். வாடிக்கையாகப் போய் விட்டது என்றால் இதே போல கொலைக் குற்றம் சாட்டுவது, மோரிலே விஷம் கலக்கப்பட்டதா? பாலில் கலக்கப்பட்டதா? அது இன்றைக்கு நேற்றா நடக்கிறது. நீண்ட காலமாக நடக்கிறது.
எதிலே கலந்து யாரைக் கொன்றார்கள் என்பது வீட்டு வாசலிலே பிரேதம் கிடக்கும்போதே - என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர்.
அவர்கள் இறந்த போது அவருடைய சவம் எடுப்பதற்கு முன்பாகவே அவருக்கு விஷம் வைத்துக் கொன்றது யார்?
அந்த விஷத்தை மோரில் கலந்தார்களா? அல்லது பாலில் கலந்தார்களா என்ற இந்தப் பட்டிமன்றமே நடந்ததை நீங்கள் யாரும் மறந்திருக்க முடியாது. அந்தப் பழக்க தோஷம் தான் இப்போதும் எதிர்க்கட்சிகள் மீது பழி போடுவதற்காக செய்கிறார்கள். எல்லோருக்கும் பொறாமை வருவது சகஜம்தான்.
சேது சமுத்திரத் திட்டம்
திடீரென்று பெரிய பெரிய விழா நடக்கிறது, மக்கள் எல்லாம் வருகிறார்கள், சேது சமுத்திரத் திட்டத்திற்காக நாம் உண்ணா விரதம் என்று முன்கூட்டியே அறிவிக்காமல் இருக்கும்போதே செய்தி கேள்விப்பட்டு, அவர்களாக லட்சக்கணக்கிலே வந்து கூடுகிறார்கள், சென்னையிலே மாத்திரமல்லாமல் ஒவ்வொரு ஊரிலும் வந்து கூடுகிறார்கள். சேது சமுத்திரம் வேண்டுமென்று சொன்னவர்கள், இப்போது வேண்டாமென்கிறார்கள். இது என்ன வேடிக்கை என்று பார்க்கிறார்கள். வேண்டும் என்று தேர்தல் அறிக்கையிலேயே வெளியிட்டு விட்டு சேது சமுத்திரத் திட்டம் வராவிட்டால் ஒரு கை பார்ப்பேன் என்றெல்லாம் சூளுரைத்தவர்கள், வந்தால் ஒரு கை பார்ப்பேன் என்று சொல்கின்ற அளவிற்கு இன்றைக்கு மாறியிருக்கிறார்கள்.
அதற்குக் காரணம் நாம் செய்யக் கூடாது, மத்தியிலே இருக்கின்ற காங்கிரஸ் அரசும், இங்கேயிருக்கின்ற நம்முடைய அரசும் இணைந்து இந்தப் பெயரைப் பெற்று விடக் கூடாது என்பதற்காக இந்தத் திட்டத் தையே சீர்குலைக்க தேவையில்லாமல் ராமனைப் பிடித்திழுத்து - ஏதோ ராமன் என்றால் எனக்கோ, பேராசிரியருக்கோ பிடிக்காது என்பதைப் போல - ராமரைப் பிடிக்காதா என்பது வேறு விஷயம்.
ரஜினிகாந்த்
நண்பர் ரஜினிகாந்த் ஒரு விழாவிலே பேசும்போது இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்னார். ராமரை உங்களுக்குப் பிடிக்காது என்று ஊரெல்லாம் பிரசாரம் செய்கிறார்கள், வடக்கே நான் போனேன், அங்கெல்லாம் பிரசாரம் செய்கிறார்கள் என்று சொன்னார். அதற்கு நான் சொன்னேன், நீங்கள் அவர்களிடம் சொல்லுங் கள், உங்களுக்குத்தான் அந்தச் சாமியார்கள் எல்லாம் பழக்கமாயிற்றே, அவர்களிடம் சொல்லுங் கள்,
அப்படியெல்லாம் எங்களுக்கு ராமர் மீது விரோதம் கிடையாது என்று தான் நான் அவரிடம் கூடச் சொன்னேன். மேடையிலேயே சொன்னேன். எங்களுக்கு ராமர் மீது ஒன்றும் கிடையாது.

வேண்டுமானால் 'சேது ராமன்' திட்டம் என்றே கூட பெயர் வையுங்கள். எங்களுக்கு வேண்டியது திட்டம். எங்களுக்கு வேண்டியது அந்த வழி, அந்த வாய்க்கால். எங்களுக்கு வேண்டியது தமிழ்நாட்டின் வளம். எங்களுக்கு வேண்டியது தமிழன், காலத்திலே அயல்நாடுகளுக்குச் சென்று பிச்சை எடுத்தானே, வேலைத் தேடி சென்றானே அந்த நிலைமை இல்லாமல் தமிழன் இங்கேயே வாழ வேண்டும் என்ற அந்த நிலை பிறக்க வேண்டுமென்பதற்காகத் தான், அதற்காகத் தான் இந்தத் திட்டங்களை நாங்கள் இன்றைக்குச் சொல்கிறோமே தவிர,
ஏதோ வீண் பிடிவாதத்திற்காக ராமனை இழிவுபடுத்த வேண்டுமென்பதற்காக யாரும் இதைச் சொல்லவில்லை.

ராமன், ஏசு, நபி எல்லாம்ஒன்றுதான்

எங்களுக்கு ராமன் என்றாலும் ஒன்றுதான், ஏசு என்றாலும் ஒன்று தான், நபிகள் என்றாலும் ஒன்று தான், எல்லாம் ஒரே கடவுள்தான். எனவே ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அறிஞர் அண்ணா அவர்களுடைய அந்தப் பொன்மொழியை மனதிலே பதிய வைத்துக் கொண்டு நடை போடுகின்ற இந்த அரசு யாரையும் புண்படுத்த வேண்டுமென்று விரும்பு கின்ற அரசல்ல.

எதிர்க்கட்சிக்காரர்களை கொன்று தீர்த்து விட்டு, வாழ வேண்டுமென்று விரும்புகிற அரசு அல்ல. எதிர்க்கட்சியாக இருக்கிறவர்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று யாராவது விரும்பினால் அதற்கு ஆளுங்கட்சியாக இருக்கின்ற எங்கள் மீது அவர்கள் பாய்கிறார்கள் என்று சொன்னால், அதிலே எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை நீங்கள் தான் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அணு அளவும் யாருக்கும் ஒரு துன்பமும் விளைவிக்காமல், ஜனநாயகத்திற்கு ரணம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்த மாமன்றத்திலே உள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
ஜனநாயகம் காக்க சபதம்
எனவே அனைவரும் ஒத்துழைத்து இப்படிப்பட்ட உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்புகின்றவர்களை நீங்கள் தான் அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும், உங்கள் செயல்கள் மூலமாக என்று கேட்டுக் கொண்டு, இன்றையதினம் நடைபெற்ற இந்தச்சம்பவங்கள் இனிமேல் தொடராமல் இனியாவது ஜனநாயகத்தை அனைவரும் காப்பாற்ற சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இந்த விளக்கத்தை ஏன் இந்த உரிமை பிரச்சினை வந்தது, என்ன காரணத்தால் வந்தது, வரவேண்டிய அவசியம் என்ன என்பதற்கான விளக்கத்தையும், பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என்கிற ஒரு பயங்கரமான குற்றச்சாட்டு இன்றைய ஆளுங்கட்சி மீது பழி போடுவது போல போடப்படுகிறதே.
அது எவ்வளவு தவறானக் கூற்று, உண்மைக்கு மாறான கூற்று என்பதை விளக்கவும் இதைப் பயன்படுத்திக் கொண்டேன் என்பதைக் கூறி இந்த அளவில் என் உரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.

3 Comments:

கோவி.கண்ணன் said...

இட்லி வடை சார்,

கலைஞருக்கு கார்டூனில் நாமம் போட்ட 'சோ' பெரிய மனசு பண்ணி குறுக்காக ஒரு 'பூணூலும்' போட்டிருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
:)

Anonymous said...

ஞாநிக்கு மு.க.ஸ்டாலின் பதில்

Friday, 26 October , 2007, 13:06

கரூர்

அண்மையில் ஆனந்த விகடன் வார இதழில் அரசியல் விமரிசகர் ஞாநி, விருப்பப்படி இருக்க விடுங்கள் என ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் 84 வயதில் தள்ளாமையுடன், எழவும் உட்காரவும் இன்னொருவர் உதவி தேவைப்படும் நிலையில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி சிரமப்படுவது ஏன்? அவர் ஓய்வு எடுத்துக்கொண்டு அடுத்தவருக்கு அந்தப் பதவியை விட்டுக் கொடுத்து, ஆலோசகராகத் தொடரலாமே என்று கேட்டிருந்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கனிமொழியின் தோழி தமிழச்சி, சென்னையில் ஒரு கண்டனக் கூட்டத்தை நடத்தினார். அதில் அறிவுஜீவிகளும் கருணாநிதி பற்றாளர்களும் கலந்துகொண்டு பேசினார்கள். இந்நிலையில் ஞாநியின் கட்டுரைக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

கரூரில் நடைபெற்ற கரூர் மாவட்ட தி.மு.க இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.மு.க இளைஞர் அணி செயலாளரும், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர், "சமீபத்தில் கூட ஒரு வார பத்திரிகையில் கலைஞரால் துணையில்லாமல் நடக்க முடியவில்லை அவர் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டியது தானே என்று ஒருவர் எழுதி இருக்கிறார். முதல் அமைச்சரின் சிறந்த பணியால் அவர் அகில இந்திய அளவில் பேசப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாத எரிச்சலில் அப்படி எழுதி இருக்கிறார்கள். ஓய்வுக்கே ஓய்வு கொடுப்பவர் நமது தலைவர் கலைஞர். தள்ளாத வயதிலும் அவர் பாடுபடுவதற்கு காரணம் தமிழ்நாடு தள்ளாடி விடக்கூடாதே என்பதற்காக தான். அவரது பணிகளுக்கு இளைஞர் அணி துணை நிற்கும்" என்று பேசினார்.Friday, 26 October ,
2007, 13:06


மேலும் அதே உரையில் கலைஞர் கருணாநிதி, ராமருக்கு என்றுமே எதிரி இல்லை என்றும் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:

கோபாலபுரத்திலே ஒரு கிருஷ்ணன் கோவில் உண்டு. இப்போதும் அந்த கோவில் இருக்கிறது. ஒரு முறை அந்த கோவில் முன்பாக மேடை போட்டு 3 நாள் விழா நிகழ்ச்சிகளை நடத்தினோம். அந்தக் கால கட்டத்தில் பிராமண சமூகத்தினர் மட்டுமே அங்கு அதிகமாக வசித்து வந்தார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. கோவிலை மறைத்து மேடை போட்டதற்குச் சிலர் எதிர்ப்பு தெரிவித்து, பிரச்சினை செய்தார்கள். அந்தக் கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம் செருப்பை அங்கேயே கழற்றிப் போட்டுவிட்டு உள்ளே செல்வது வழக்கமாக இருந்தது.

கோவிலை மறைத்து மேடை போட்டதைச் சிலர் பிரச்சினையாக உருவாக்கிய போது தலைவர் கலைஞர், கிருஷ்ணரே ஸ்டாலின் கனவில் வந்து பேசி இருப்பார். அதனால்தான் ஸ்டாலின் அந்த இடத்தில் மேடை போட்டு இருக்கிறான் என்று பதில் அளித்தார். ஆக, தலைவர் கலைஞர் அப்போதே ராமருக்கு எதிராக அறிக்கை விடவில்லை. அன்று மட்டும் அல்ல. இப்போதும் அவர் ராமருக்கு எதிரி அல்ல என்பதைத் தெளிவு படுத்துவதற்காகத்தான் இதனைச் சொன்னேன். இன்றைக்கு மட்டும் அல்ல என்றைக்குமே அவர் யார் மனத்தையும் புண்படுத்தியது இல்லை.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

www.sify.com

Anonymous said...

நன்றி ! இட்லி வடை ! தசாவதாரம் பற்றி உம்க்கு கமென்ட் செய்த அதே அனானிதான் இப்ப சிபிலிருந்த் காபி பேஸ்ட் செய்துள்ளேன்.