பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 25, 2007

தலைமுடி அலங்காரத்தை மாற்றினார், டோனி

செய்தி கீழே...

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனியை பார்த்தவர்கள் அவரது தலைமுடியை நிச்சயம் மறக்க முடியாது. சிங்கத்தின் பிடரியில் நீளமாக முடி இருப்பது போல் டோனியின் கழுத்தில் நீண்ட சிகை தொங்குவதை காண முடியும்.

மிக குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி சிம்மாசனம் அமைத்து கொண்ட டோனியின் முடி அலங்காரம் பாகிஸ்தான் அதிபர் முஷரப்பை கூட கவர்ந்ததாகும். கடந்த ஆண்டில் பாகிஸ்தான் பயணத்தின் போது ஜொலித்த டோனியை பாராட்டிய முஷரப், அவரது தலை முடியையும் வர்ணிக்க தவறவில்லை. டோனியின் தலைமுடி அலங்காரம் நாடு முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பிரபல ஸ்டைலாக விளங்கி வருகிறது.

டோனி நேற்று தனது சொந்த மாநிலமான ஜார்கண்டில் உள்ள ராஞ்சிக்கு திரும்பினார். அப்போது அவர் தலைமுடியை தாரை வார்த்து இருப்பதை அறிந்த புகைப்படக்காரர்கள் அவரை வளைத்து படம் எடுத்து தள்ளினார்கள்.

ஜார்கண்ட் மாநில அரசு சார்பில் டோனிக்கு இன்று (வியாழக்கிழமை) பாராட்டு விழா நடக்கிறது. இதில் முதல்-மந்திரி மதுகோடா கலந்து கொண்டு டோனியை பாராட்டி பரிசு வழங்குகிறார். என்ன பரிசு வழங்கப்படும் என்பதை அவர் ரகசியமாக வைத்துள்ளார்.இந்நிலையில் இவர் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான 3 டெஸ்ட், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் ஆக 10 டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.ஆஸ்திரேலியா அணி இதனால் பதட்டம் அடைந்துள்ளது. எங்க ஊரில் நடக்கும் போட்டியில் நாங்க வெட்டலாம் என்று இருந்தோம், ஆனால் அதற்குள் டோனி முந்திக்கொண்டுவிட்டார் என்று வருத்தபட்டதாக விவரம் அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள் :-)

6 Comments:

IdlyVadai said...

டெஸ்ட் போட்டிக்கும் டோனி கேப்டன்!

Subramanian said...

//ஆஸ்திரேலியா அணி இதனால் பதட்டம் அடைந்துள்ளது. எங்க ஊரில் நடக்கும் போட்டியில் நாங்க வெட்டலாம் என்று இருந்தோம், ஆனால் அதற்குள் டோனி முந்திக்கொண்டுவிட்டார் என்று வருத்தபட்டதாக விவரம் அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள் //

Super PUNCH !!!

நாகு (Nagu) said...

இந்திய அணியின் அரசியலும், செலக்டர்களின் அட்டகாசத்திலும் தோனி மண்டையைப் பிய்த்துக்கொள்ளவில்லை என்று நம்புவோமாக!

IdlyVadai said...

பாலிவுட் நடிகைகளுடன் தொடர்புபடுத்தி பத்திரிகைகள் தவறாக வெளியிடுகிறது என இந்தியா கிரிக்கெட் அணி கேப்டன் தோனி கூறியுள்ளார். ராஞ்சிக்கு வந்த அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு தற்போது ஜார்கண்ட் முதல்வரை சந்திக்க வந்த காரணத்தினால் தனது ஹேர் ஸ்டைலை மாற்றி கொண்டேன். பத்திரிகைகள் கூறுவது தவறானது.

மின்னல்ப்ரியன் said...

இதனால ரொம்ப அதிர்ச்சியானது பாகிஸ்தான் அதிபர் முஷ்ரப்ன்னு தினகரன்ல நியூஸ் பார்த்தன் , தலைய வெட்றவனுங்க முடிய வெட்டுனதுக்கு அதிர்ச்சியா? கலிகாலம்டா ,,,,

Jahe said...

டோனி மயிர் வெட்டினது ஒரு முக்கியமான பிரச்சினை ஆக போயிட்டுது... டோனி மயிர் வெட்டினா என்ன.. மண் வெட்டினா என்ன...போய் வேலைய பாருங்கையா... சும்மா கிடந்த நாசுவன் பூனைக்கு சிரய்ச்சி விட்டாபோலே..