பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 24, 2007

அடுத்த சட்டசபை தேர்தலில் பா.ம.க. தலைமையில் புதிய கூட்டணி

தற்போது நாங்கள் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆன கூட்டணியில் இருந்து வருகி றோம். அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரை இந்த கூட்டணி நீடிக்கும். - ராமதாஸ் பேட்டி

அடுத்த சட்டசபை தேர்தலில் நாங்கள் புதிய கூட்டணி அமைப்போம். தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத புதிய கூட்டணியை அமைத்து சட்டசபை தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம்.கேள்வி:- தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் மாறி மாறி கூட்டு வைத்து பா.ம.க. போட்டியிட்டு வந் துள்ளதே?

பதில்:- 1967-ம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல்களில் கூட்டணியை மாற்றி மாற்றி அமைத்துள்ளன. இதில் பா.ம.க.வை மட்டும் குறை கூறுவதில் நியாயம் இல்லை.

கே:- சென்னை அருகே துணை நகரம் அமைப்பது, சென்னை விமான நிலைய விரிவாக்கம் போன்ற திட் டங்களுக்கு முட்டுக் கட்டை போடுவதாக கூறப்படு கிறதே?

ப:- ஒரு ஆண்டுக்கு முன்பு துணை நகரம் அமைப்பது தொடர்பாக அப்போதைய மத்திய மந்திரி தயாநிதி மாறன், அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆகியோர் என்னை சந்தித்து இந்த திட்டம் பற்றி பேசினார்கள். 5000 குடும்பங்களை வெளி யேற்றும் திட்டம் இது. இது பற்றி எனது கருத்துக்களை தெரிவித்தேன். மறு நாள் முதல்-அமைச்சர் கருணாநிதி இந்த திட்டத்தை எடுத்துக் கொள்வது பற்றி அறிவித்தார்.

அதன் பிறகு நான் பாதிப்புக்கு உள்ளாக இருந்த மக்களை சந்தித்தேன். இதனை அடுத்து இந்த திட்டம் கை விடப்படுவதாக இந்த திட்டத்தை தொடரப்போவது இல்லை என்று முதல்- அமைச்சர் சட்டசபையில் அறிவித்தார். மக்களை பாதிக்கும் எந்த வளர்ச்சி திட்டங்களும் தேவை இல்லை. இது ஒரு மைனாரிட்டி அரசு, குறைந்த பட்ச பொதுத்திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை. நிலம் கையகப்படுத்தும் விஷயத்தை பொறுத்த மட்டில் ஒரு திட்டத்துக்கு மக்களாக விரும்பி தங்கள் நிலத்தை கொடுக்க முன் வந்தால் எங்கள் கட்சிக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் போன்றவை அமைக்க உபயோகப்படுத்தாத நிலங்களை பயன்படுத்தலாம், விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. ஒரு திட்டத்தை நிறைவேற் றும் போது அந்த பகுதி யில் பாதிக்கப்படுபவர்களுக்கு வேலை, அதிக இழப்பீடு போன் றவை வழங்க வேண்டும்.

பெரிய நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் நுழை வதால் சிறு வணிகர்கள் பாதிக்கும் நிலை வரக்கூடாது. அந்த பெரிய நிறுவனங்களின் மிகப் பெரிய அளவிலோ அல்லது நடுத்தர அளவிலான வர்த்தகத்திலோ ஈடுபடலாம்.

சேது சமுத்திர திட்டம் நிறை வேற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் விருப்பம். ஆனால் குறிப்பிட்ட எந்த ஒரு மதத்தினரின் உணர்வுகளுக்கும் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மக்களின் உணர்வுகளுக்கு எங்கள் கட்சி மதிப்பு கொடுக்கிறது.

செய்தி: The Hindu

4 Comments:

We The People said...

என்னப்பா இது இவரும் ஜெயலலிதாவை தொடர்ந்து //இது ஒரு மைனாரிட்டி அரசு// என்று சொல்லத்தொடங்கியிருக்காரோ!

Kumaran said...

kadaisi varaikkum idhu yaar petti sollavae illayae idlyvadai..

IdlyVadai said...

//kadaisi varaikkum idhu yaar petti sollavae illayae idlyvadai..//
இது உங்களுக்கே நல்லா இருக்கா ? ராமதாஸ் கோச்சிக்க போறார்.

RATHNESH said...

// நிலம் கையகப்படுத்தும் விஷயத்தை பொறுத்த மட்டில் ஒரு திட்டத்துக்கு மக்களாக விரும்பி தங்கள் நிலத்தை கொடுக்க முன் வந்தால் எங்கள் கட்சிக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.//

இவருடைய தைலாபுரம் தோட்டத்துக்குக் கீழே எண்ணெய் இருக்கிறது என்றால் இவர் நிலத்தை அப்படியே அரசாங்கத்துக்குக் கொடுத்து விடுவாரா?

பொறுப்பு என்றால் உளுத்தம் பொறுப்பா கடலைப் பொறுப்பா என்று கேட்கிற திண்ணைப் பேச்சு வெட்டி வீரரரான இவருடைய குறைந்தபட்சத் திட்டம் (மகன், மருமகள், பேரப் பிள்ளைகளின் முன்னேற்றம், தனக்கு ஒரு வசதியான வெட்டிப் பேச்சு திண்ணை) நிறைவேறியாகி விட்டது. அவற்றை இனி வாழ்நாள் முழுதும் தக்க வைக்க என்ன வேண்டுமானாலும் உளறிக் கொண்டிருப்பார்.