பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 23, 2007

தீபாவளி ரிலீஸ் படங்கள்

இந்த வருட தீபாவளி விருந்தாக 6 புதிய படங்கள் திரைக்கு வருகின்றன. விஜய், சூர்யா, தனுஷ் ஆகிய மூன்று பேரின் படங்களும் வெளிவருவதால், அவர்களின் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். விக்ரம் நடித்த `பீமா,' அஜீத் நடித்த `பில்லா' ஆகிய இரண்டு படங்களும் தீபாவளியை தாண்டி `ரிலீஸ்' ஆகின்றன.

தீபாவளி வெளியீடாக திரைக்கு வர இருக்கும் அந்த 6 படங்களை பற்றிய விவரம் ...
1. அழகிய தமிழ் மகன்: விஜய் இரட்டை வேடங்களில் நடித்த முதல் படம். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா, நமீதா ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். பரதன் டைரக்டு செய்துள்ளார்.

ஒரே மாதிரியான தோற்றம் உள்ள இரண்டு இளைஞர்களை மையமாக கொண்ட கதை இது. மிகப்பெரிய `பட்ஜெட்'டில் படம் தயாராகி இருக்கிறது.


2. வேல்: சூர்யா இரண்டு வேடங்களில் நடித்த படம் இது. அவருக்கு ஜோடியாக அசின் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஹரி டைரக்டு செய்துள்ளார்.

ஆயிரம் அரிவாள்களால் சாதிக்க முடியாததை, ஆறு அறிவால் சாதிக்கலாம் என்ற கருவை கொண்ட படம் இது. இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான பாசத்தையும், பகையையும் கதை சித்தரிக்கிறது.

3. பொல்லாதவன்: தனுஷ் நடித்த படம். அவருக்கு ஜோடியாக திவ்யா நடித்துள்ளார். வெற்றி மாறன் டைரக்டு செய்து இருக்கிறார்.

அப்பா மீது மிகுந்த பாசம் உள்ள ஒரு மகனின் கதை. அவனுடைய கனவு நிறைவேறுவதற்காக போராடுகிறான். இதற்காக, மூன்று மணி நேரம் மட்டும் பொல்லாதவனாக மாறுகிறான்.

4.கண்ணாமூச்சி ஏனடா: சத்யராஜ், ராதிகா, பிருதிவிராஜ், சந்தியா நடித்து, ப்ரியா வி. டைரக்டு செய்துள்ள படம்.

இளைஞர்களுக்கு ஏற்படும் காதல் பிரச்சினை, நடுத்தர வயதுள்ள ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்பட்டால், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதே இந்த படத்தின் கதை. பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலகலப்பாக கதை சொல்லப்பட்டு இருக்கிறது.

5. மச்சக்காரன்: ஜீவன்-காம்னா ஜோடியாக நடித்த படம். தமிழ்வாணன் டைரக்டு செய்து இருக்கிறார்.

வாழ்க்கையில் எதுவுமே கிடைக்காத ஒரு இளைஞனும், எல்லாமே கிடைத்த ஒரு பெண்ணும் சந்தித்துக்கொள்ளும்போது ஏற்படும் பிரச்சினைகளே கதை.

6. பழனியப்பா கல்லூரி: கல்லூரி மாணவர்-மாணவிகளின் மூன்று வருட வாழ்க்கையை சித்தரிக்கும் படம் இது.

இந்த படத்தில் புதுமுகங்கள் பிரதீப், மது சாலினி, அர்ஜுமன் மொகல், அட்சயா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். ஆர்.பவன் டைரக்டு செய்துள்ளார்.


விக்ரம் நடித்து, லிங்குசாமி டைரக்ஷனில், ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ள `பீமா' படம் முடிவடைந்து விட்டதால், இந்த வருட தீபாவளிக்காவது திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் உள்ள சில பிரச்சினைகள் காரணமாக, `பீமா' தீபாவளிக்கு வெளிவரவில்லை. தீபாவளிக்குப்பின், இரண்டு வாரங்கள் கழித்து திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

அஜீத் இரட்டை வேடங்களில் நடித்து, விஷ்ணுவர்தன் டைரக்டு செய்து வரும் `பில்லா' படம், தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் படம் இன்னும் முடிவடையாத காரணத்தால், அந்த படத்தின் `ரிலீஸ்' தேதியும் தள்ளிப்போகிறது.

1 Comment:

Anonymous said...

அழகிய தமிழ் மகன் - எந்த படத்தோட remake?