பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 06, 2007

எலாஸ்டிக் இல்லாத ஜட்டி

சன் டிவி இல்லாத திமுக எப்படி இருக்கிறது என்றால் எலாஸ்டிக் இல்லாத ஜட்டி போல என்பேன். டிவிக்களில் வரும் சீரியல்களை விட இவர்கள் நடத்தும் யுத்ததில் நடக்கும் திருப்பங்கள் சூப்பர்....

ரவுடி கும்பல்
ரவுடிகள் என்றால் கையில் உருட்டுக் கட்டையுடன், முரட்டு மீசையுடன் தான் இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்குத் தெரியும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இதில் சேர்ந்தவர்கள் தான் என்று. இவர்கள் சொல்லுவது தான் கட்டணம், இவர்கள் பார்க்க சொல்லும் சேனலைத் தான் நாம் பார்க்க வேண்டும். இவர்கள் கொடுக்கும் பாக்கேஜைத் தான் நாம் பார்க்க வேண்டும்.

சுமங்கலி கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் ஏதாவது பிரச்சினை செய்தால், நீங்கள் சுமங்கலியாகவே போய்ச் சேர வேண்டியது தான். இவர்கள் இப்படி என்றால் சன் டிவி ஒரு மாஃபியா கும்பல்.

சன் மியூசிக்கில் "சார், டிவி வால்யூமை கொஞ்சம் கம்மி செய்யுங்க... என்ன பாட்டு வேணும் " என்று கேட்டுக் கொண்டிருந்தவர் தீடீர் என்று பாலசந்தர் சிரீயலில் ஹீரோவானார். கொஞ்ச நாளில் அவருக்கு பதில் இவர் தான் ஹீரோ என்று வேறு ஒருவர் நடிக்க வந்தார்.

ஒரு கல்யாண ரிசப்ஷனில் இந்த ஹீரோவைப் பார்க்க நேர்ந்தது. "என்ன சார் இப்படிக் கழண்டுக்கிட்டீங்க என்று கேட்டேன்.

"நீங்க வேற, சன் டிவிக் காரர்கள் ரொம்ப மிரட்டினாங்க. உயிருடன் இருக்கணுமா வேண்டாமா, எங்க அடியாட்களை வுட்டு செல்லமா தட்டனுமான்னாங்க. வீட்டுக்கு ஃபோன் செஞ்சி ஆபாசமா திட்டினாங்க. பிறகு வேறு எதேலேயும் நடிக்க மாட்டேன்னு டேட் இல்லாம கையெழுத்து வாங்கினாங்க" என்றார். கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கும் சன் டிவிக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம், சன் டிவி காரர்கள் கோட் போட்டவர்கள், ஆபரேட்டர்கள் கோட் போட மாட்டார்கள்.


மக்கள் மீது அக்கறை

முதலில் சன் `டிவி'யைத் தொடங்கி, படிப்படியாக ஐந்து மாநிலங்களிலும் தன் அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் செலுத்திய சன் `குழுமம்' ஒளிபரப்பிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பிக்கப் பட்டது தான், சுமங்கலி கேபிள் விஷன் (எஸ்.சி.வி.,). ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த கேபிள் `டிவி' ஆபரேட்டர்களின் கட்டுப்பாட்டு அறைகளைக் கைப்பற்றி, அங்கே தனது பினாமிகளை வைத்து ஒளிபரப்பையும் சன் குழுமமே செய்தது. ஒளிபரப்பு சேவையைத் துவங்கிய பல தனியார் நிறுவனங்கள் விரட்டியடிக்கப்பட்டன. (தயாநிதி டாட்டாவை மிரட்டியதற்கு இன்னும் மத்திய அரசு பதில் சொல்லவில்லை ). அந்தளவுக்கு ஆதிக்கப் பிடியில் ஆபரேட்டர்கள் சிறைபட்டுக் கிடந்தனர். அதன் காரணமாகவே ( மற்றும் ஜெயா பள்ஸ் டிவி சேனலுக்கு எழுத்தடித்ததாலும் )கடந்த ஜெயலலிதா ஆட்சியில் கேபிள் ஒளிபரப்பை அரசே ஏற்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. உடனே தாத்தாவும் பேரனும் ஆளுனர் மாளிகைக்கு காந்தி வழியில் பாத யாத்திரை சென்றார்கள். பறக்கும் யாத்திரை என்று கூடச் சொல்லலாம். கலைஞர் அதை மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார். முக்கியமான மக்கள் பிரச்சினைக்கு கலைஞர் எவ்வளவு உழைக்கிறார் என்று 83 வயசிலும் அவரின் சுறுசுறுப்பைப் பார்த்து வியக்காமல் பொறாமைப் படும் ஞாநியை என்ன செய்யலாம் ?

அட, ராஜ் டிவி தெளிவாத் தெரியுதப்பு!

கலைஞரின் பொன்விழா நிகழ்ச்சிகளைப் படம் எடுக்க வந்த சன் டிவியை விரட்டியடித்தார்கள் பத்திரிகை ஊடகங்களுக்கு முழுச் சுதந்திரம் அளிப்பதைத் தன் முதல் அஜண்டாவாகக் கொண்டுள்ளதாகச் சொல்லிக் கொள்ளும் திமுகவினர். எதிரிக்கு எதிரி நண்பன் என்பதனால், கலைஞர், ராஜ் டிவி பக்கம் சென்றார். வீபூதி பூசிக் கொண்டு ராஜ் டிவி நிறுவனத்தினர், நாங்க பிறந்தப்பவே திமுக என்று காமெடி செய்து, கலைஞர் காலில் விழுந்தார்கள். சோர்ந்து சொங்கியாய் இருக்கையில் திடீரென ஜாதகக் கட்டங்கள் கலைந்து குருபார்வை பட்ட மாதிரி ராஜ் டிவிக்கு 'ராஜ' உபச்சாரம் நடந்தது தடைகள் எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல விலகின. கலைஞர் டிவி வேலைகள் சுறுசுறுப்பாக நடந்தன. சன் டிவியில் இருப்பவர்களுக்கு 50% சம்பள உயர்வு கொடுத்து விலைக்கு வாங்கினார்கள். கலைஞர், கலைஞர் டிவியை 'பிரசவத்திற்கு' ஒப்பிட்டார். செப் 15 கலைஞர் டிவி உதயமானது. மங்கிய நிலையில் இருந்த ராஜ் டிவியும் அதன் எதிர்காலமும் சூரியனின் ஒளியால் பிரகாசமாகத் தெரிகிறது.


சன் டிவியின் அடுத்த மூவ்

கடந்த மே மாதம் தினகரன் கருத்துக் கணிப்பில் நல்லது ஒன்று நடந்தது என்றால் அது தாத்தாவுக்கும் பேரனுக்கும் நடந்த சண்டையில் சன் டிவியின் வால் அறுக்கபட்டது தான். இந்த மோதலையடுத்து தமிழக அரசே கேபிள் டிவி நிறுவனத்தை நடத்த முடிவு செய்து அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. ஒரு வகையில் யார் அடுத்த வாரிசு என்று நடந்த கேவலமான குடும்பச் சண்டை. உச்ச நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை வேலை செய்ததை விமர்சிக்கும் இவர்கள், இந்த மாதிரி அசால்டாக GO போடுவார்கள். மக்களுக்காக போட்ட GO என்றார் கலைஞர். மக்களுக்காக அன்பாக செய்ததைப் புரிந்துகொள்ளாமல் பிதற்றுகிறார்கள்.

அரசு கேபிள் டிவி துவங்கும் போது சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தின் ஏகபோக ஆதிக்கம் தடைப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு சன் நெட் ஒர்க் நிறுவனம் புதிய டிடிஎச் சேவையைத் தொடங்க முடிவு செய்தது. (இதற்கான அனுமதியை தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோதே, சன் குழுமம் பெற்றிருந்தது, இன்னும் என்ன என்ன பெற்றார்களோ!)

திமுக மற்றும் முதல்வர் கருணாநிதியின் அன்பையும், ஆதரவையும் இழந்த சன் குழுமம் அதிரடியான இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஏன் ? தமிழக அரசு சார்பில் கேபிள் டிவி கழகம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தாங்கள் நடத்தி வரும் எஸ்.சி.வி. நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும், தங்களது சானல்களை முழுமையாகக் காட்ட மாட்டார்கள் என்ற அச்சம் சன் குழுமத்தாரிடம் எழுந்துள்ளது. சன் டி.டி.எச்., சேவையைப் பெற முதலீடு ஏதும் தேவையில்லை; எல்லாமே இலவசம் என்ற அறிவிப்பதற்கு என்ன காரணம்? இனி எவரும் கேபிளை நம்பி இருக்க வேண்டாம்; டி.டி.எச்., சேவை மூலம் சன் `டிவி' நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம் என்பது தான். பொது மக்கள் மீது இருக்கும் அக்கறை என்று கூட சிலர் சொல்லுகிறார்கள். குங்குமம் ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் பெஸ்ட் கண்ணா பெஸ்ட்.

ஏற்கனவே, டிடிஎச் சேவையை நடத்தி வரும் பொதுத் துறை நிறுவனமான தூர்தர்ஷன், தனியார் நிறுவனமான டிஷ் டிவி, டாடா ஸ்கை ஆகியவை ஒரு குறிப்பிட்ட தொகையின் அடிப்படையில் டிஷ் ஆண்டனா மற்றும் செட்டாப் பாக்ஸ் ஆகியவற்றை அளித்து வருகின்றன. இதில், தூர்தர்ஷன் ஒளிபரப்பை இலவசமாகவே அளித்து வருகிறது. மற்ற நிறுவனங்கள் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்து வருகின்றன. இந்நிலையில், சன் நெட் ஒர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள திடீர் விளம்பரத்தில் டிஷ் மற்றும் செட்டாப் பாக்ஸ் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதாகவும், மாதம் ஒன்றுக்கு ரூ.75 கட்டினால் போதும் என்றும், செப்டம்பர் மாதம் 30ந் தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு 2 மாத சந்தாத் தொகை இலவசம் என குங்குமம் ஸ்டைலில் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான முதல் நாளே ஏராளமானோர் இந்த டிடிஎச் சேவைக்காகப் பதிவு செய்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதென்ன அதிசயம், குங்குமத்துடன் இலவசம் என்றவுடன் க்யூவில் நம் மக்கள் நிற்கவில்லையா ?

சன் குழுமத்தின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட சன் டைரக்ட் என்ற டிடிஎச் ஒளிபரப்புக்கு தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். அல்லது தூண்டபட்டார்கள். பல இடங்களில் சன் குழு சானல்கள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. மேலும் சன் டைரக்ட் டிடிஎச் ஆண்டெனாகள் விற்பனை செய்யும் கடைகளும் சூறையாடப்பட்டன. இதைத் தவறு என்று சொல்ல முடியாது, அது அவர்களின் பண்பாடு. டாடா ஸ்கை நிறுவனத்தின் டிடிஎச் சேவைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள், சன் டிவி நடத்தவுள்ள டிடிஎச் சேவைக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் ? என்று யாரும் கேள்வி கேட்கக் கூடாது. அது தான் அவர்கள் பகுத்தறிவு.

சென்னை நகரில் ரூ. 75 ரூபாய்க்கு 75 சானல்களைக் காட்டத் தயாராக இருப்பதாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இப்போது அறிவித்துள்ளனர். இவ்வளவு நாள் ஏன் அப்படிச் செய்யவில்லை? என்கிறார் அப்பாவி கோயிந்து. அட ராமா!

சென்னையில் சன் டிவி அலுவலகம் அமைந்துள்ள அண்ணா அறிவாலயம் முன்பு பெரும் திரளான கேபிள் டிவி ஆபரேட்டர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது அங்கு தயாநிதி மாறன் வந்தார். இதையடுத்து அவரை முற்றுகையிட்டு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வாக்குவாதம் செய்தனர். அவர், அவர்களிடம் சன் டைரக்ட் டிடிஎச் குறித்து விளக்கினார். ஆனால் அவர்கள் அதைக் கேட்பதாக இல்லை. பின்னர் பாதுகாவலர்கள் வந்து தயாநிதி மாறனை பத்திரமாக உள்ளே கூட்டிச் சென்றனர். நல்ல வேளை ஒத்தைக்கு ஒத்தை வாரீயா என்று கேட்கவில்லை. தப்பித்தார்.
( சன் டிவி புதிய இடத்துக்கு மாற்றம். அண்ணா அறிவாலயத்திலிருத்து சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு போகிறார்கள். மாத வடகை 18 லட்சம். பிரைம் டைம் என்று இதை தான் சொல்லுவார்கள் )

சன் டைரக்டர் டிடிஎச்சின் டிஷ் ஆண்டெனாக்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது போலீஸார் திடீர் நடவடிக்கை எடுத்து அந்தக் கடைகளை மூடுமாறு கட்டாயப்படுத்தினர். மதுரையில் விற்பனைக்காக அறிவிக்கப்பட்டிருந்த நான்கு கடைகளையும் போலீஸார் கட்டாயப்படுத்தி மூடி விட்டனர்.

மதுரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 50 கடைகள் மூடபட்டன. சிலர் கைது செய்யப் பட்டார்கள். இவர்களைக் கைது செய்ததற்கான காரணம் வழக்கம் போல் தெரிவிக்கப் படவில்லை. ஆனால் மு.க.அழகிரியின் உத்தரவின் பேரில்தான் இவர்கள் கைது செய்யபட்டுள்ளார்கள். இவர் யாருடைய மகன் என்பதை நிரூபிக்க வேண்டாமா ? தமிழ பண்பாடு என்றால் சும்மாவா ?


குடும்பச் சண்டை வலுக்கிறது.

ஆளும் கட்சி ஆதரவோடு வந்த தடங்கல்களை சன் குழுமம் ஓரளவு சிறப்பாகவே கையாண்டது. "ட்ராய்' முகவரி, தொலைபேசி, ஃபேக்ஸ் நம்பர்களை தினகரனில் வெளியிட்டு, கேபிள் தொடர்பான புகார்களை பொதுமக்களே நேரடியாகத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டது. "கந்தசாமி" படத் துவக்க விழாவை "லைவ்'ஆக ஒளிபரப்பி, ""சன் டி.வி. தெரியாவிட்டால், கேபிள் ஆபரேட்டரை தொடர்பு கொண்டு கேட்டு வாங்குங்கள்'' என்று தினகரனில் விளம்பரம் வெளியிட்டது.

"சன் டி.வி. தெரியாவிட்டால், இம்மாத சந்தா வழங்க மாட்டோம்!'' என்று பொதுமக்கள் கொந்தளிப்பதாக தினகரனில் செய்தி வெளியிட்டு, மக்களுக்கு "இப்படி மிரட்டுங்கள்" என்று மறைமுக ஆலோசனை வழங்கியது. மதுரையில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் எஸ்.சி.வி. கேபிள் வயர்களைக் கையகப் படுத்தி, சன் டி.வி. தவிர்த்து, பிற சேனல்களைக் காட்டி வரவே, சன் டி.வி. நிர்வாகம் உயர் நீதிமன்றக் கிளைக்கு பிரச்சினையைக் கொண்டு போனது.

ஆனால், எஸ்.சி.வி. ஒயர்களில் வேறொருவர் ஒளிபரப்பு நடத்துவது குறித்தும் உயர் நீதிமன்றம் வினா எழுப்பும் என்பது தெரிவிக்கப்பட்டதும், ஆளும் தரப்பு பின்வாங்கியது. கடந்த வியாழக்கிழமை போலீஸாரே எஸ்.சி.வி. அலுவலகத்திற்குச் சென்று, ""வெட்டப்பட்ட உங்கள் கேபிள்களைச் சரி செய்து ஒளிபரப்பைத் துவக்குங்கள். நாங்கள் பாதுகாப்புத் தருகிறோம்'' என்று இன்ப அதிர்ச்சி அளித்தனர்.

ஆக, குடும்பத் தகராறு, தொழில் தகராறாக மாறி, அது பல ரவுண்டுகள் கொண்ட குஸ்திப் போட்டியாக உருவெடுத்துள்ளது. இந்தச் சண்டையில் யார் அடிவாங்கினாலும் நமக்கு சந்தோஷம் தான். கைத்தட்டி உற்சாக படுத்தனும். ஒவ்வொரு அடிக்கும் பிள்ளையாருக்கு ஒரு தேங்காய்(thank காய்?) உடைக்க வேண்டும்.

பிகு செய்திகள்

பிகு 1: தற்போது, சன் டிவியில் BSNL விளம்பரங்கள் வருவதில்லை.

பிகு 2: வசந்த்குமாரும், தங்கபாலுவும் டிவி ஆரம்பித்து... ஐயோ

பிகு 2: கலைஞர் டிவிக்கும் சன் டிவிக்கும் என்ன வித்தியாசம் ? பாதிச் சூரியன் லோகோவில் உள்ள டிவி கொஞ்சம் மங்கலாகத் தெரியும், முழுச் சூரியன் லோகோ உள்ள டிவி கொஞ்சம் பளிச்சென்று தெரியும். இரண்டின் பகுத்தறிவு யோக்யதையும் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தால் கண்ணுக்குக் கெடுதல் என்பதால் சட்டைக்குள்ளே நெளியும் வயரைக் கழட்டிவிட்டுப் பார்க்கவும். உள்ளபடியே இரண்டும் ஒன்று தான்!!13 Comments:

Srikanth said...

Wow! Sema thrilling!

Prakash said...

கலக்கல் பதிவு :-)

Ram Vibhakar said...

இந்த பதிவிற்காக தான் வெகு நாட்களாக காத்திருந்தேன் ... மிக்க நன்றி ...

இலவசக்கொத்தனார் said...

அக்மார்க் இட்லிவடை பதிவு!!

Anonymous said...

//சுமங்கலி கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் ஏதாவது பிரச்சினை செய்தால், நீங்கள் சுமங்கலியாகவே போய்ச் சேர வேண்டியது தான்.//

நீங்கள் பெண்ணோ அல்லது உங்களில் ஒருவர் பெண்ணோ என்ற சந்தேகத்தை உறுதி செய்யும் வரிகள்.. :) தீர்க்க சுமங்கலி பவ! :))

cgs said...

idlyvadai,
idhaippadikkavum...erkkanavE padikkavittal

http://savithrikannan.blogspot.com

IdlyVadai said...

//நீங்கள் பெண்ணோ அல்லது உங்களில் ஒருவர் பெண்ணோ என்ற சந்தேகத்தை உறுதி செய்யும் வரிகள்.. :) தீர்க்க சுமங்கலி பவ! :))//

பெண்கள் என் பதிவை எவ்வளவாக படிப்பதில்லை. ஆனால் இந்த விஷயம் உங்கள் கண்ணில் பட்டதால் நீங்க ஒரு பெண்ணா ?

IdlyVadai said...

cgs சுட்டிக்கு மிக்க நன்றி.

IdlyVadai said...

ஸ்ரீகாந்த், பிரகாஷ், ராம், இலவசம் நன்றி.

Anonymous said...

http://www.vikatan.com/jv/2007/oct/10102007/jv0501.asp

Please post this article also.

சத்ரியன் said...

நடுநிலையோடு எழுதப்பட்ட நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

vijay said...

sema rousu !

Raja said...

நல்ல பதிவு. தொடரட்டும் உங்கள் பணி. இதை படித்துவிட்டு வேறு யாராவது மாறனை, கலைஞர் ஆட்சியை விட யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்று, குறை சொல்லி ஒரு பதிவு வரும் .