பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 25, 2007

சிடி வடிவில், வாலியின் குரலில் கலைஞர் காவியம் !

முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு ஒலிப்பேழை வடிவில் வாலியின் குரலில் விரைவில் வெளிவர உள்ளது. தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை புதுக்கவிதை வடிவில் கலைஞர் காவியம் என்ற பெயரில் வார இதழ் ஒன்றில் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.

தற்போது அந்த கலைஞர் காவியம் ஒலிப்பேழையாக தயாரிக்கப் பட்டுள்ளது. சிவம் பவுண்டேஷன் சார்பாக கமல்ராஜ் இதனை தயாரித்துள்ளார். இந்த ஒலிப்பேழைக்கு சங்கரா இசையமைத்துள்ளார்.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால் கவிஞர் வாலி தனது சொந்தக்குரலில் அத்தனை கவிதைகளையும் பேசியிருப்பது தான். முதல்முறையாக திரைக்கதை வடிவில் ஒரு கவிதையை இசையோடு தயாரித்துள்ளார் கமல்ராஜ்.

கவிஞர் வாலி இது பற்றி கூறுகையில், "உடல் நிலை கோளாறு காரணமாக என்னால் சரியாக பேச இயலாவிட்டாலும் கூட கலைஞர் காவியம் உருவக்கத்தின் போது என்னை
அறியாமல் ஒரு தெய்வீக சக்தி
என்னை இயக்கி வைத்தது என்றார்.

இது பற்றி தயாரிப்பாளர் கமல்ராஜ் கூறுகையில், "எதிலும் புதுமையை புகுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்த நான், கலைஞர் காவியத்தை படித்த போது இதனை வாலியின் குரலில் இசையோடு கேட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்ததின் விளைவு தான் இந்த ஒலிப்பேழை' என்றார்.

ஒலிப்பேழை குறித்த அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் எஸ்.ஜே.சூர்யா, "ஒவ்வொரு தமிழரின் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒலிப்பேழை இந்த கலைஞர் காவியம் என்றார்.

இந்த ஒலிப்பேழை வெளியீட்டு விழா வரும் 28ம் தேதி மாலை 6 மணிக்கு மியூசிக் அகாடமியில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'கலைஞர் காவியம்' முன்னுடையில் சோ

வாலியும் , போலி அல்ல.மனதில் எழுந்த எண்ணங்களைத் தான் அவர் எழுத்தில் வடித்திருக்கிறார்.உயிருடன் உள்ள வேறு எந்த ஒரு அரசியல்வாதியையும்-அவர் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும்-வாலி இப்படி வியந்து பாராட்டியது இல்லை.

வாலி ஆன்மீகவாதி,கடவுள் நம்பிக்கை உடையவர்.கலைஞர் நாத்திகவாதி,கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.அப்படியிருக்க இவர்களிடையே எப்படி ஒரு அசாதரணமான நட்பு நிலவுகிறது? தமிழ் தான் காரணம்.தமிழ்ப்பற்று தான் காரணம்.தமிழால் இணைந்தவர்கள் இவர்கள்.அதன் விளைவாக இந்த நூல் பிறந்திருக்கிறது.நாளும் படிக்கிறேன்; சும்மா
நச்சுன்னு இருக்கு; உடனே -
இடத் தோன்றும் ஒரு முத்தம் -
இச்சுன்னு உனக்கு

- கவிஞர் வாலி
( கலைஞர் காவியம் )

5 Comments:

வெங்கட்ராமன் said...

வாலி தன்னைப் பற்றி சொனன ஒரு விமர்சனம் ஞாபகம் வந்தது. சிரிப்பும் வந்தது. . . . .

Subramanian said...

Mr. Venkatraman, why dont you share the Vaali's self comments with us - suppamani

Pondy-Barani said...

//என்னை
அறியாமல் ஒரு தெய்வீக சக்தி என்னை இயக்கி வைத்தது என்றார்//
வாலிய மட்டுமா...
இல்ல நத்திகவதியிமா... :-)

cgs said...

சிங்குசா சிங்குச்சா மஞ்ச கலரு சிங்குச்சா,
கருப்பு சிவப்பு சிங்குச்சா!!!!!!

Anonymous said...

Vali has turned Kalaignar adipodi long back. There wont be any surprise if Vali considers Karunanidhi as an inacrnation of his God and open a sannadhi in his Srirangam itself. After all he has to run the show to stay in limelight.