பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 19, 2007

வழ்த்துக்கள் பாஸ்டன் பாலா

இந்த வாரம் 'விகடன் வரவேற்பறை' பகுதியில் பாஸ்டன் பாலாவின் ஈ-தமிழ் வலைப்பதிவு. வாழ்த்துக்கள்.

இ-தமிழ் - www.etamil.blogspot.com

வலைப்பூ பக்கங்களில் அதிகம் பேசப்படும் பாஸ்டன் பாலா வலைப்பூ இது. தமிழ் இணையதளங்கள், வலைப்பூக்கள், மரம், யாகூ, கல்யாணம், உஸ்தாத் பிஸ் மில்லா கான், தமிழ் சினிமா, ஸ்ரேயா, ஆனியன், எஃப்.எம்., தி.மு.க., உலகச் செய்திகள்... என நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகள். ஒவ்வொரு பகுதியிலும் ஏராளமான கட்டுரைகள் உள்ளன. படித்து ரசித்த விஷயங்களையும் தொகுத்து இருக்கிறார். அத்துடன், அவை பற்றிய அறிவுப்பூர்வமான அலசலும் ஜாலியான நக்கலும் உண்டு. இட்லி வடை கடைக்காரர் இவர்தான் என பல வலைப்பூக்காரர்களும் கேட்க, இட்லி வடைக்காரருக்கு இவர் முன்வைத்திருக்கும் கேள்விகள் சுவாரஸ்யமான சண்டை. தமிழிலேயே தேடுவதற்கான தேடுபொறி வசதியும் கச்சிதமான வடிவமைப்பும் இ-தமிழ் வலைப்பூவின் சிறப்பு!


பிகு: அடுத்த வரவேற்பறை பகுதியிலும், இட்லிவடை சம்பந்தமாக வந்தால் ஹாட்ரிக். விகடனில் உங்களுக்கு யாராவது ஆளை தெரியுமா ? முதல்ல உங்க குழு சம்பந்தமான வலைப்பதிவு, இப்ப உங்க சொந்த வலைப்பதிவு நடத்துங்க நடத்துங்க !

7 Comments:

பினாத்தல் சுரேஷ் said...

பாபாவுக்கு வாழ்த்துகள்!

//முதல்ல உங்க குழு சம்பந்தமான வலைப்பதிவு, இப்ப உங்க சொந்த வலைப்பதிவு நடத்துங்க நடத்துங்க//

இட்லிவடையின் முதல் ஒப்புதல் வாக்குமூலம் :)

Anonymous said...

இன்னும் இது மாதிரி எவ்வளவு பேர் இருக்கீங்க சொல்லுங்கப்பா

We The People said...

வாழ்த்துக்கள் பாலா :)

வாரா வாரம் உங்களுக்கே வாழ்த்து சொல்லிக்கிட்டு இருக்கேன் ;)

நாகு (Nagu) said...

பாபாவுக்கு வாழ்த்துக்கள்.

Boston Bala said...

நன்றி! :)

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துக்கள் பாபாவிற்கு. தனிப்பட்ட முறையிலும். குழுவிற்காகவும்!!

நாகை சிவா said...

வாழ்த்துக்கள் பாபா :)