பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 12, 2007

ஆனந்த விகடனில் இட்லிவடை பற்றி...

இந்த வார விகடனில் விகடன் வரவேற்பறை பகுதியில் இட்லிவடை பற்றி வந்திருக்கிறது. ஆனந்த விகடனுக்கும், இட்லிவடைக்கு தொடர்து ஆதரவு(?) தரும் ரசிகர்/ரசிகைகளுக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை சொல்லிக்கொள்கிறேன்.
அன்புடன்,
இட்லிவடை


இட்லி வடை - www.idlyvadai.blogspot.com

அரசியல், கிரிக்கெட், சினிமா, சுற்றுச்சூழல், மருத்துவம், விஞ்ஞானம் என சகல விஷயங்களையும் ஜாலியாக அலசும் வலைப்பூ இது.

‘பாயும் வேகம் ஜெட் லீதான்டா, பன்ச் வெச்சா இட்லிதான்டா’ எனப் பன்ச் டயலாக்குடன் முதல் வரியில் தொடங்கும் சுவாரஸ்யம், ஒவ்வொரு ‘அப்டேட்’டிலும் குறையாமல் இருப்பது விசேஷம். 2003-ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை, தொடர்ந்து ‘அப்டேட்’ செய்கிறார்கள். பத்திரிகைகளில் படித்து, பிடித்த முக்கிய மான பகுதிகளை வெளியிட்டுள்ளார்கள். சேது சமுத்திரத் திட்டம் - பந்த் - உச்ச நீதிமன்றத் தடை - கலைஞர் உண்ணா விரதம் பற்றி அதற்குள் அவ்வளவு விஷயங்கள் உள்ளன. அன்றாடச் செய்திகளை கமென்ட் அடிக்கும் ஜோக்ஸ் ஜோதிகா, தத்துவப்பித்து லார்டுலபக்குதாஸ் என ஜாலியாக நிறைய விஷயங்கள். ‘ஆஸியிடம் அடி வாங்கி, இந்திய அணி பழைய ஃபார்முக்கு இப்பதான் வந்திருக் கிறது. வயசானவங்களை வீட்டுக்கு அனுப்பச்சொல்லி ஞாநியிடம் ஒரு கட்டுரை எழுதச் சொல்லணும்’ என்கிறார் லார்டு லபக்குதாஸ்.

ஒரு இணையம் அளவுக்கு நிறைவான வலைப்பூ!

27 Comments:

cgs said...

well done idlyvadai.

anadavikatan will be very happy given the fact that you have published a jollu padam in the last email to bodyguardmuneeswaran,. coz their idea of relaxation is half clad women.chek out 'relax please album'

Anonymous said...

Kudos to IV.
Continue your good work.

Best Wishes.

Anonymous said...

Other than local politics, Idlyvadi should also concentrate international affairs matters:
Recently, in one blog page published:
According to India today magazine 15th oct, 2007,

chinese intrusions started towards indian border-the areas are

1. western sector-

a. Jammu and Kashmir-air as well boat intrusion

b. Uttarkand- through land

2. Middle sector-

a. Sikkim-through land10000 troops are mobilised and waiting for across the border

3. Eastern sector-

a. Arunchal pradesh-through land

They are planning for a massive exercise along the border.

jeevan said...

வாழ்த்துக்கள் இ.வ

ஜீவண்.

ஹரன்பிரசன்னா said...

ஆவி, கள் கள் என முடித்துள்ளதே. ஆவிக்கு எப்படி தெரியும் இட்லிவடை பல பேர் என்று?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாழ்த்துக்கள் இட்லிவடையாரே.. இன்னமும் மென்மேலும் உயர்வு பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்..

IdlyVadai said...

//ஆவி, கள் கள் என முடித்துள்ளதே. ஆவிக்கு எப்படி தெரியும் இட்லிவடை பல பேர் என்று?//

மிக நல்ல கேள்வி.
எனக்கு தெரிஞ்சு நான் சொல்லலை.எனக்கு க்ருபா, பாஸ்டன் பாலா, தேசிகன், ஐகாரஸ் பிரகாஷ் மேல தான் சந்தேகமா இருக்கு :-)


( இப்ப எல்லாம் கேள்வி கேட்டு தான் பின்னூட்டம் போடறீங்க போல பேஷ் பேஷ் )

நாகை சிவா said...

வாழ்த்துக்"கள்" :)

IdlyVadai said...

@cgs, அனானி நன்றி

அனானி - மற்ற செய்திகளை போடலாம் ஆனால் நம்ம ஊர் செய்திகளுக்கே எனக்கு டைம் பத்தலை. தமிழ் ரோபோ திரும்பவும் உயிர் பெற்றிருக்கு பார்க்கலாம்.

ஜீவன், உண்மைத்தமிழன் நன்றி
நாகை சிவா நன்றி. ரசித்தேன்.

ஹரன்பிரசன்னா said...

//( இப்ப எல்லாம் கேள்வி கேட்டு தான் பின்னூட்டம் போடறீங்க போல பேஷ் பேஷ் )//

ஆனால் என்னோட எந்தக் கேள்விக்கும் நேரடியாவே பதில் கிடைப்பதில்லை. இதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க? :D

Sambar Vadai said...

Congrats. Keep it up.

what happens if IV does not publish anything for 10 days (just for fun)

IdlyVadai said...

சாம்பார் வடை வாழ்த்துக்கு நன்றி.

//what happens if IV does not publish anything for 10 days (just for fun)//

எல்லோரும் சாம்பார் வடையை பார்க்க ஆரம்பிப்பார்கள் :-)

Ram Vibhakar said...

கலக்குரீங்க இட்லி வடையாரே !!!! இட்லி வடையின் வாசகர் என்பதில் எனக்கும் பெருமையாக உள்ளது !!!
வாழ்த்துக்கள் !!!

இலவசக்கொத்தனார் said...

அதான் ஆ.வி. பாப்பார பத்திரிகைன்னு கட்டம் கட்டியாச்சே. அவங்க உங்களைப் பத்தி எழுதாம வேற யாரைப் பத்தி எழுதுவாங்க.

இந்த மாதிரி இன்னும் ஒரு கமெண்ட் கூடவா வரலை? சம்திங் ராங் வித் அவர் தமிழ் பிளாக்கர்ஸ்!!

நல்லா இருங்கப்பா!! :))

(த)தள said...

Idlyvadai,

Naama yen oru website aarambikka koodaathu?

Yosichu sollunga.

Ippadikku
thala... tharu thala.

Anonymous said...

congrats keep it up

IdlyVadai said...

(த)தள என்ன வெச்சு காமடி கீமடி செய்யலையே :-).
நன்றி அனானி

கணேசன் செந்தில்குமரன் said...

வாழ்த்துக்கள் இட்லி வடை..
என்னிடம் ஒரு கேள்வி.. ஆவி பாராட்டு கொஞ்சம் அதிகம் என்றே தோன்றுகிறது.. ரொம்ப பாராட்டி உள்ளார்கள்.. மறுபடியும் வாழ்த்துகள்...

Tharuthalai said...

//இலவசக்கொத்தனார் said...
அதான் ஆ.வி. பாப்பார பத்திரிகைன்னு கட்டம் கட்டியாச்சே. அவங்க உங்களைப் பத்தி எழுதாம வேற யாரைப் பத்தி எழுதுவாங்க.

இந்த மாதிரி இன்னும் ஒரு கமெண்ட் கூடவா வரலை? சம்திங் ராங் வித் அவர் தமிழ் பிளாக்கர்ஸ்!!//


இப்படியெல்லாம் ஒரே பக்க கில்லி அடிச்சா புண்ணூட்டம் போடாம போயிடுவோமா?

சோமாறிகள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் முதுகில் சொறிந்து கொள்வது, வயர்கள் (கம்பி வடங்கள்?) ஒன்றோடு ஒன்று பின்னி பினைந்துகொள்வது போல் இயல்பானது. வியப்படைய ஒன்றுமில்லை.

-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

रा. वसन्त कुमार्. said...

great sir(s)...

Sunny said...

Great Job "Idlyvadi", I sure this honour is to right person on right time. Wishes to continue the best for ever.

Every morning I start with "Idlyvadi" to know the latest news with some fun comments.

Good work. keep going.

வாசகர் (ஆ.வி ?இ.வ ?) said...

முன்பு தினமலரில் வந்ததை ஆளாளுக்கு சொல்லி 'பத்துநிமிட' பெருமை பெற்றார்கள். இனி வாராவாரம் ஆ.வியில் வந்ததை சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள்.

உங்கள் பதிவில் ஆ.வி, ஜூவி வருவதுதான் மேட்டர் :)

Anonymous said...

Dear cgs,
Congrats. What u have said is 100% correct. You see any A.Vikatan More than 50 % of its content covers cinema matters and of course uncovers top and not so top (Pun not intended)cine actresses. Without cinema matter and scantily clad damesels even one vikatan can not sustain. What to do? it is their weekness. Jollu is a decent euphemism for AVs character.

ரசிகன் said...

எத்தனை விபரங்ககள் ஒரு பதிவில்... நல்லாயிருந்தது.எப்படி நேரம் கிடைக்கிறது.
நான் எனது முதல் புது பதிவு போட்டிருகேன்.வாங்க வந்து சூடா படிச்சு உங்க கருத்த சொல்லுங்க....

அன்புடன் ரசிகன்

IdlyVadai said...

கணேசன் செந்தில்குமரன் நன்றி. எனக்கும் இந்த பாராட்டு ரொம்ப அதிகம் என்றே தோன்றுகிறது :-)

रा. वसन्त कुमार्. நன்றி

sunny - நன்றி. இதே போல நிறைபேர் எனக்கு மெயில் அனுப்பியுள்ளார்கள்.
வாசகர் - :-)

ரசிகன் - நான் தினமும் படிப்பதை இங்கே தொகுத்து போடுகிறேன் அவ்வளவு தான். உங்க புது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

செந்தழல் ரவி said...

வாழ்த்துக்கள் இட்லிவடை...!!!!!

(த)தள said...

(த)தள என்ன வெச்சு காமடி கீமடி செய்யலையே :-).
நன்றி அனானி

Shappaaa... unmaya sonna comedy'nnu solreenga... Naan ready website aarambikka... neenga readya? tamizhla type panna mudiyaamaikku mannikkaavum.

Yosichu illa.. nithaanama yosichu sollunga. naan serious'a thaanpa solren.