பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 08, 2007

வைகோ சவால் - கலைஞர் அறிவுரை

அரசியலுக்கே முழுக்கு போட தயார்! - கருணாநிதிக்கு வைகோ சவால்
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரி பிரதமருக்கு 2 கடிதங்கள் எழுதியுள்ளேன் வைகோ சவாலுக்கு கருணாநிதி பதில்....

வைகோ சவால்
முன்னாள் முதல்வர் அண்ணா துரை வலியுறுத்தி வந்த சேது சமுத்திர திட்டத்திற்காக கருணாநிதி ஒருபோதும் குரல் கொடுத்ததில்லை. தி.மு.க., மாநாடுகளில் பெயரளவுக்கு வலியுறுத்தி வந்தனர். கருணாநிதி ஆதரவில் பலமுறை மத்திய அரசு இருந்துள்ளது. கருணாநிதி சொன்னால் கேட்கக் கூடிய பிரதமர்கள் இருந்தனர். ஆனால், யாரிடமும் சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை.வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, சேது சமுத்திர திட்டம் பற்றி ஆறு மாதம் அவருக்கு விளக்கிக் கூறினேன். அதன்பிறகு ம.தி.மு.க., சார்பில் சென்னையில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா கூட்டத்தில் சேதுசமுத்திர திட்டத்தை வாஜ்பாய் அறிவித்தார். சேது சமுத்திர திட்டத்திற்காக கருணாநிதி இதுவரை எந்த பிரதமரிடமாவது எழுத்து மூலமாக கோரிக்கை வைத்ததை நிரூபித்தால், நான் அரசியலை விட்டே விலகிக்கொள்கிறேன்.சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக செயல்படுத்தாவிட்டால், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று கருணாநிதி அறிவித்திருக்க வேண்டும்.

கலைஞர் அறிவுரை:

"சேது சமுத்திர திட்டத்துக்காக கருணாநிதி இதுவரை எந்தப் பிரதமரிடமாவது எழுத்து மூலமாக கோரிக்கை வைத்ததை நிரூபித்தால், நான் அரசியலை விட்டே விலகிக் கொள்கிறேன்' என்று வைகோ பேசியதாக செய்தி வந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக இதே செய்தியை இவர் பேசி, அது தொடர்ந்து ஏடுகளில் இடம்பெற்றே வந்துள்ளது. முதல் நாள் அந்தச் செய்தி வந்த போதே அதை மறுக்க நினைத்து, பின்னர் அவர் அரசியலை விட்டுப் போய்விட்டால் என்ன செய்வதென எண்ணி, மறுக்காமல் இருந்தேன்.தொடர்ந்து அந்த சவால் படலம் தொடருவதால், சேது சமுத்திரத் திட்டத்துக்காக பிரதமருக்கு எழுதிய ஒரு கடிதத்தை மட்டுமல்ல, இரண்டு கடிதங்களை ஆதாரத்துடன் வெளியிடுகிறேன். ஆனால் அவர் அரசியலை விட்டு விலக வேண்டும் என்ற எண்ணத்துடன் அல்ல. இதன் பின்னராவது அதைத் திருத்திக் கொண்டு, இத்திட்டம் எப்படியாவது நடைமுறைப்படுத்த ஒத்துழைக்க வேண்டுமே தவிர, நுனிப் புல் மேய்வதைப் போல எதற்கெடுத்தாலும் சவால் விடுவதை நிறுத்திக் கொள்ள முன் வர வேண்டும்.

ஆதாரம்:சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி 2002 மே 8ம் தேதி அன்றைய பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு நான் எழுதிய கடிதத்தின் நகலை வெளியிட்டுள்ளேன். (ஆங்கிலத்தில் ஐந்து பக்கங்களில் எழுதிய கடிதங்களின் நகல்களை முதல்வர் கருணாநிதி ஆதாரமாக வெளியிட்டுள்ளார்). அந்த கடிதத்தில், "தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்றக் கோரி இக்கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன். தி.மு.க., இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக வலியுறுத்தி வருகிறது. நான் பல சமயங்களில் பொறுப்பில் இருந்த பல பிரதமர்களிடம் இது குறித்து வலியுறுத்தி உள்ளேன். இத்திட்டம் உலகளவில் உள்ள சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் போன்று சிறப்பைப் பெறும் என்பதை அறிந்து இத்திட்டத்தை ஆராய பல குழுக்கள் அமைக்கப்பட்டும், நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டது கவலைக்குரியது. சேது கால்வாய் பற்றிய விவரங்களையும், அதனால் இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு ஏற்படும் பயன்களையும் இக்கடிதத்தில் தங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்' என்று விவரித்து கடிதம் எழுதியுள்ளேன்.இந்த ஒரு கடிதம் மாத்திரமல்ல, 2002 அக்டோபர் 15ம் தேதி மீண்டும் பிரதமருக்கு நினைவூட்டி, சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த முன்வர வேண்டுமென கேட்டுக் கொண்டு ஒரு கடிதமும் எழுதியிருக்கிறேன். அதன் நகலும் இத்துடன் வெளியிடப்படுகிறது.இதன் பின்னராவது உண்மை என்ன, பொய் என்ன என்பதை சவால் விட்ட நண்பரும், அவருக்கு ஆதரவு தெரிவிப்போரும் நடுநிலையாளர்களும் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். இத்திட்டம் பற்றியும், அதில் எழுந்துள்ள பிரச்னைகள் குறித்தும் தொடர்ந்து எழுத இருக்கிறேன்.

2 Comments:

கார்த்திக் பிரபு said...

i saw a news abt ur blog in vikatan , congrats pa

IdlyVadai said...

ரொம்ப நன்றிபா