பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 06, 2007

ராமர் பாலம் - நக்கீரன் கட்டுரை

ராமர் பாலம் நக்கிரன் கட்டுரை.

ஆதாம் பாலத்தை ராமன் பாலம் என்று கூறி, அதை இடிப்பதா எனச் சல்லடம் கட்டும் பா.ஜ. கட்சியும், வி.எச்.பி.,யும் மறைத்துவரும், மறுத்துவரும் உண்மையைப் போட்டுடைக்கிறார் கப்பல் மற்றும் தரைவழிப் போக்கு வரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு அவர்கள்.
வாஜ்பேயி தலைமையிலான ஜனநாயகக் கூட்டணி அரசால் தீர்மானிக்கப்பட்ட வழித்தடம் எண் 6-அய் அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட் டதுதான் தற்போது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அர சால் 19.5.2005 அன்று ஒப்புதல் கொடுக்கப்பட்டு நிறைவேற் றப்பட்டு வரும் சேது சமுத்திரத் திட்டமாகும். இந்த வழித்தடம் பா.ஜ.க., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி காலத்தில்தான் நிர்ண யிக்கப்பட்டது என்பதற்கு சான்றுகள் நிறைய உள்ளன.
நீரி எனப்படும் தேசிய சுற் றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம், சேது சமுத்திரத் திட் டம் தொடர்பான பூர்வாங்கச் சுற்றுச்சூழல் ஆய்வினை மேற் கொண்டு தன்னுடைய அறிக் கையை 1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சமர்ப்பித் தது. இந்த அமைப்பு 5 மாற்று வழித்தடங்களை பரிசீலித்து அவற்றில் கடல்சார் உயிரினங் கள் நிறைந்த மரைன் பயோஸ் பியர் பகுதிகள் வழியாகச் செல்லும் 3 வழித்தடங்களை நிராகரித்து விட்டு 4 மற்றும் 5 ஆவது வழித்தடங்களை மட் டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. இதில் 4 ஆவது வழித்தடம் என்பது இராமேஸ் வரம் தீவில் உள்ள கோதண்ட ராமர் கோயிலுக்கும், தனுஷ் கோடிக்கும் இடைப்பட்ட இடத்தில் கால்வாய் தோண்டு வதாகும். 5 ஆவது வழித்தடம் என்பது தனுஷ்கோடியை சுற் றிச் சென்றபடி கடலில் அமை யும் நீர் வழிப்பாதை.
இந்த இரண்டு வழித்தடங் களையும் கப்பல் அமைச்சகத் தின் வழி நடத்தும் குழு பரி சீலித்தது. இதன்பின், 4 ஆவது வழித்தடம்தான் சிறந்த வழித் தடம் என நீரி அமைப்பு ஆலோசனை கூறியது. அதன் ஆய்வு அறிக்கையிலும், `ஆதம் பாலத்தின் வழியே தனுஷ் கோடியைச் சுற்றிச் செல்லும் 5 ஆவது வழித்தடத்தை அமைக்க வேண்டுமானால், அங்குள்ள பவளப் பாறைகளுக்கு பெருத்த சுற்றுச்சூழல் அழிவு ஏற்படுவ தற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும், கப்பல் பாதை கூரான வளைவுகளைக் கொண்டிருப் பதால், கப்பல்கள் பயணிப்ப தற்கு இந்த வழித்தடம் ஏற்ற தல்ல. எனவே, சுற்றுச்சூழல் உள்பட அனைத்து கருத்து களையும் கருத்தில் கொண்டு மூன்றிருப்புச் சத்திரம் அருகில் உள்ள நிலப்பகுதியில் கோதண்ட ராமர் கோயிலுக்கு அப்பால் செல்லும் 4 ஆவது வழித் தடமே சிறந்தது என நீரி குழு பரிந்துரைத்தது.
பா.ஜ.க., தலைமையிலான அமைச்சரவையில் சிவசேனா கட்சியின் சுரேஷ் பிரபு சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தார். அப்போது 8.4.1999 அன்று இத்திட்டத்தால், தேசிய கடல் சார் பூங்கா மற்றும் கடல்சார் உயிரினப் பகுதிகள் ஆகியவற் றின் மீது ஏற்படும் தாக்கங் களைக் கருத்திற்கொண்டு, 4 ஆவது வழித்தடத்தின் அடிப் படையில் அமைந்த திட் டத்தை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்ச கம் நிராகரித்தது. அப்போது கப்பல் துறை அமைச்சராக இருந்தவர் அ.தி.மு.க.,வின் தம்பிதுரைதான்.
இப்போது பா.ஜ.க.,வினர் வலியுறுத்தும் பழைய வழித் தடத்தை அப்போது நிராகரித் ததில் பா.ஜ.க.,வுக்கு மட்டுமன்றி, அ.தி.மு.க.,வுக்கும் பங்கு உண்டு என்பதற்குத்தான் இந்த ஆதா ரம். இதுன்பிறகு தரை வழிப் போக்குவரத்து அமைச்சராக பா.ஜ.க.,வின் அருண்ஜெட்லி இருந்தார். புதிய ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு 2001 அக்டோபரில் நீரிக்கு ஆணை பிறப்பித்தார். அதன்பிறகு கப்பல் துறை அமைச்சரான பா.ஜ.க.,வின் வி.பி. கோயல், ஆய்வுப் பணிகளில் முன்னேற் றம் குறித்து விவாதிக்க எம்.பி.,க் களுடனும், அமைச்சக அதி காரிகளுடனும் தூத்துக்குடி துறைமுகம் சென்றார். அன்று நடந்த கூட்டத்தில் தனுஷ் கோடிக்கும், இந்திய - இலங்கை கடல் எல்லைக்கும் இடையில் அமைந்துள்ள ஆதம் பாலம் வழியாகச் செல்லும் பாதை தான் ஏற்றது என்று அமைச் சரிடம் நீரி நிறுவனம் எடுத்துச் சொன்னது. இந்த வழித் தடத் தைத்தான் வரைபடமாகவும் காண்பித்து விளக்கியது.
மத்திய அமைச்சராக இருந்த பா.ஜ.க.,வின் வி.பி. கோயல் இந்த வழித் தடத்திற்கு எந்த எதிர்ப்பும் சொல்ல வில்லை. இந்த வழித் தடம்தான் தற்போது ஆதம் பாலம் வழி யாகச் செயல்படுத்தப்பட்டு வரும் 6 ஆவது வழித்தடம் என் பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: `நக்கீரன், 6.10.2007
( அனுப்பியவர்: அருண்மொழி, நன்றி )

8 Comments:

Anonymous said...

Nakeeran standard is
calling smuggler with respect as'Veerapar'

அருண்மொழி said...

இட்லிவடையாரே,

நன்றி. உங்களின் punch comments எதுவும் சேர்க்கவில்லையே :-(

Anonymous said...

nakeeran ellam periya pathirikkainu pottu irukeengale IV,
dont reduce your standars by posting such things

Thamizhan said...

அய்யய்ய்யோஒ!

இதெல்லாம் போட்டா ஜாதியிலேருந்து
ஒதுக்கீடுவா!

நக்கீரன் தான் சங்கரமடத்தையே வெளியே கொண்டு வ்ந்தா.அவாளப் பத்திப் போட்டுட்டேளே.என்ன பிகிஷ்காரம் தெரியுமோன்னா!

Anonymous said...

I am very much surprised after seeing Nakeeran article here. Have somebody de-promoted you I V?

IdlyVadai said...

//I am very much surprised after seeing Nakeeran article here. Have somebody de-promoted you I V?//

நோ கமெண்ட்ஸ் :-)

A(anti) DMK said...

6 ஆவது வழித்தடம் - அ.தி.மு.க. நிராகரித்த வழித்தடம் oye

செந்தழல் ரவி said...

:))))