பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 05, 2007

மணிரத்னம் படத்தில் நடிக்கவில்லை: புதிய படம் பற்றி விரைவில் முடிவு- ரஜினிகாந்த் பேட்டி

மணிரத்னம் படத்தில் நடிக்கவில்லை: புதிய படம் பற்றி விரைவில் முடிவு- ரஜினிகாந்த் பேட்டி....

சிவாஜி படம் வெற்றியை தொடர்ந்து மணிரத்னம் டைரக்டு செய்யும் படத்தில் கமலஹாசனுடன் இணைந்து ரஜினிகாந்த் நடிப்பார் என்று செய்திகள் வெளியானது. இதை ரஜினிகாந்த் மறுத்து உள்ளார். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரன் தேஜா நடித்த சிறுதா என்ற படத்தை நுங்கம்பாக்கம் போர்பிரேம் தியேட்டரில் பார்த்தார்.

பின்னர் தெலுங்கு டெலிவிஷனுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மணிரத்னம் -கமல் கூட்டணியில் நான் நடிப்பதாக கூறுவது தவறு. நான் நல்ல கதையை தேடிக்கொண்டு இருக்கிறேன். அப்படி ஒரு கதை அமைந்தால் புதிய படத்தில் நடிப்பது பற்றி முடிவு செய்வேன். நான் மணிரத்னம் படத்தில் நடிக்கப்போவதாக வந்த செய்தியைப் பார்த்து சிரித்தேன்.

இவ்வாறு ரஜினி கூறினார்.

பேட்டியின்போது ரஜினி அருமையான தெலுங்கு மொழியில் பேசி அசத்தினார்.

ரஜினிக்கு தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடா, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் சரளமாக பேசும் திறமை உள்ளது. மலையாள மொழியும் நன்கு தெரியும்.
(நன்றி: மாலை மலர் )

0 Comments: