பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, October 28, 2007

`தசாவதாரம்' - ரஜினி 5 நிமிடங்கள் கைதட்டினார், 15 நிமிடங்கள் புகழ்ந்தார்

`தசாவதாரம்' பட காட்சிகளை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டினார் 15 நிமிடங்கள் கமலஹாசனை புகழ்ந்து தள்ளினார்

ரஜினிகாந்த் நடித்த `சிவாஜி' படத்தை அடுத்து, தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கும் படம், `தசாவதாரம்.' இந்த படத்தில் கமலஹாசன் 10 வேடங்களில் நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக அசின், ஜெயப்பிரதா, இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் ஆகிய மூவரும் நடித்து இருக்கிறார்கள்.

கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்து இருக்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. இப்போது `டப்பிங்' வேலைகள் நடைபெறுகின்றன.

ரூ.60 கோடியில்...

ரூ.60 கோடி செலவில் தயாரான இந்த படம், பல பிரமாண்டங்களை தாங்கி வெளிவர இருக்கிறது. படத்தில், கமலஹாசனின் சில வேடங்கள் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உள்ளன. 8 அடி உயர மனிதன், 90 வயது பாட்டி, நீக்ரோ போன்ற அடர்த்தியான கறுப்பு நிறத்தில் தொழிலாளர்களின் தலைவர், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆகிய வேடங்களில், ``இவர் கமலஹாசனா?'' என்று நம்பமுடியாத அளவுக்கு அவருடைய `மேக்கப்' அமைந்துள்ளது.

இதற்காக, ஹாலிவுட் மேக்கப் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கமலஹாசனுக்கு ஒப்பனை செய்தார்கள். அதிகாலை 3 மணிக்கு தொடங்கி, காலை 9 மணிக்கு `மேக்கப்'பை முடித்துக்கொண்டு, தினமும் ஒரு மணி நேரம் மட்டும் கமலஹாசன் நடித்தார். அந்த அரிய வகை `மேக்கப்' ஒரு மணி நேரத்துக்குத்தான் தாங்கும். அதன்பிறகு உருக ஆரம்பித்து விடும்.

ரஜினி பார்த்தார்

`தசாவதாரம்' படத்தில் கமலஹாசன் நடித்த சில அபூர்வ காட்சிகளை பார்ப்பதற்காக ரஜினிகாந்த், சென்னை அசோக் நகரில் உள்ள டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் அலுவலகத்துக்கு வந்தார்.

கே.எஸ்.ரவிகுமார், அவருடைய பிரத்யேகமான `எடிட்டிங்' அறைக்கு ரஜினிகாந்தை அழைத்து சென்றார். அங்கு `தசாவதாரம்' பட காட்சிகளை ரஜினிகாந்துக்கு, கே.எஸ்.ரவிகுமார் திரையிட்டு காண்பித்தார். கமலஹாசனின் வித்தியாசமான வேடங்களை பார்த்து வியந்துபோன ரஜினிகாந்த், ``இதெல்லாம் ஒரிஜினலாக கமலே நடித்ததா... `மாஸ்க்' போட்டு எடுத்ததா?'' என்று விசாரித்தார். ``ஒரு சீனில் கூட `மாஸ்க்' வேலை இல்லை'' என்று கே.எஸ்.ரவிகுமார் சொன்னதும், ``வொண்டர்புல்'' என்று ஆங்கிலத்தில் ரஜினி பாராட்டினார்.

கைதட்டினார்

பின்னர், `தசாவதாரம்' படத்தில் கமலஹாசன் நடித்த ``கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது...கடவுளை மட்டும் கண்டால் கல்லை தெரியாது'' என்ற பாடல் காட்சி, ரஜினிகாந்துக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

அந்த பாடல் காட்சி முடிந்ததும், ரஜினிகாந்த் எழுந்து நின்று 5 நிமிடங்கள் கைதட்டினார். பிறகு, கமலஹாசனுடன் `செல்போன்' மூலம் தொடர்புகொண்டு அவருடைய நடிப்பை பாராட்டி, 15 நிமிடங்கள் பேசி புகழ்ந்து தள்ளினார்.

ஒரு உச்ச நடிகர், இன்னொரு உலக நடிகரை மனம் திறந்து பாராட்டியதை பார்த்து, டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் மனம் நெகிழ்ந்தார்.

7 Comments:

jangiri said...

i want to tell my comments in tamil idlyvadai can u explain?

IdlyVadai said...

you can try here : http://www.google.com/transliterate/indic/Tamil

Anonymous said...

thank you very much for the link.i know tamil and not my mother tongue(!!).but this way i can write to my mother who knows tamil ,but is comfortable reading our mother tongue.you made my day.

Anonymous said...

மறுபடியும் "`தசாவதாரம் " செய்திகளுக்கு நன்றி !

தொடர்ந்து தசா updates எதிர்பார்க்கிறேன்.

Boston Bala said...

நீக்ரோ தவிர்க்கப்பட வேண்டிய பிரயோகம்.

கறுப்பினத்தவர் என்பது பரவாயில்லை.

'ஆப்பிரிக்க - அமெரிக்க இனத்தவர் / ஆப்பிரிக்க - ஆஸ்திரேலிய இனத்தவர்' போன்றவை மேலும் பொருத்தம்.

தருமி said...

//``வொண்டர்புல்'' என்று ஆங்கிலத்தில் ரஜினி பாராட்டினார்.//
என்ன சொல்ல வர்ராங்க...ரஜினி ஆங்கிலமெல்லாம் பேசுவார் என்றா? புரியலையே!

Anonymous said...

What Kamal said after watching Sivaji?!