பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 31, 2007

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 31-10-07

இந்த வாரம் இட்லிவடை முனிக்கு சின்னதாக எழுதும் கடிதம்.

ஹாய் முனி,
எப்படி இருக்க ? சவுக்கியமா ? நாட்டர் தெய்வமான முனியை அப்படியே ஆரியப்படுத்தற மாதிரி இருக்கு!! என்று இலவசமா சிலர் போன வாரம் கேட்டார்கள். எதை எழுதினாலும் இப்ப பிரச்சனை தான்.

தினத்தந்தியில் வரும் 'இன்றைய சினிமா' பகுதி போல 'இன்றைய பெயர் மாற்றம்' ன்னு ஒரு பகுதி ஆரம்பிக்கனும். பாலு, வீராஸ்வாமிக்கு போட்டியா இப்ப எதியூரப்பா!

கர்நாடக மாநில முதலமைச்சராக இருபது தினங்களுக்கு முன் பதவியேற்கும் வாய்ப்பை இழந்த பிஜேபி தலைவர் எதியூரப்பா இப்ப ஜோதிடர்களின் ஆலோசனைப்படி தனது பெயரை மாற்றிக் கொண்டதன் காரணமாக முதலமைச்சராகும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்கிறார்கள். என்னத்த சொல்ல ?

கடந்த 11ம் தேதியிலிருந்து இதை மேற்கொண்டதாகவும் எதியூரப்பாவின் தனிச் செயலர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். நம்ம திராவிட அமைச்சர்கள் போல இவர்கள் ஒளிந்துகொண்டு செய்வதில்லை அவ்வளவு தான் வித்தியாசம். கொஞ்ச நாளுக்கு முன் தான் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியும் ஜோதிடர்கள் ஆலோசனையை ஏற்று தனது பெயரில் ஒரு எழுத்தை சேர்த்துக் கொண்டார். ஆனால் எதியூரப்பாவை சேர்த்துக்கொள்ளவில்லை. இப்ப Yediyurappa, என்பதை Yeddyurappa என்று மாத்தியுள்ளார். ( I எடுத்துவிட்டு D சேக்கபட்டுள்ளது ). 'மக்கள்' என்பதை முட்டாள் என்று மாத்த்தாமல் இருந்தால் சரி.

அதே போல போன வாரம் idlyvadai என்பதை idlyvadai2007 என்று நான் மாத்தியுள்ளேன். இனிமே கடிதங்களை அதுக்கு அனுப்பவும்.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஜெயேந்திரை மீட் செய்ய போயிருக்கிறார் அப்ப என்ன நடந்தது தெரியுமா ? சங்கராச்சாரியா அவரை உள்ளே வராதீங்க என்று சொல்லி வெளியே அனுப்பிட்டார் ஏன் தெரியுமா ? போன மாசம் அவர் ஊட்டியில் ஜெக்கு (ராமர் பாலத்துக்கு எதிராக குரல் கொடுத்ததற்கு) ஒரு சால்வை கொடுத்திருக்கிறார் என்பது தான் காரணம். இப்ப பிஜேபி கட்சியினர் ஜெயுடன் கூட்டணி என்று பேசுபவர்கள் நாளை சுவாமிகளிடம் ஆசி வாங்க போனா அவர்களையும் இதே மாதிரி வெளியே போங்க என்று சொல்லுவார் என்கிறார்கள். முற்றும் துறந்தால் தான் ஞாநி. ஐயோ இது வேற ஞாநி ! எஸ்.வி.சேகர் குமுதம் ஆன்லைன் பேட்டியில் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை ஜெயிலில் போட்டது, ஜெயலலிதா இல்லை, போலிஸ் தான் என்றார். ஐயோ !

பட்டம் பறக்கும் என்று கேள்வி பட்டிருக்கேன், ஆனா படம் எடுக்குமா ? எடுக்கும்போல Nicolas Chorier என்ற ஃபிரன்சுகாரர் பட்டத்தை வைத்து படம் எடுத்திருக்கிறார். அதை பார்க்கனுமா ? லிங்க் இங்கே இருக்கு


சினிமா பத்தி அடுத்த வாரம் எழுதறேன். இப்ப நான் எஸ்கேப்

அன்புடன்,
இட்லிவடை

6 Comments:

cgs said...

அன்பும் பண்பும் இருப்பதுபோல் உள்ள பாடிகாட் முனிஸ்வரனே ,

நியாவது எங்களை இந்த போலி சாமியர்களிடமிருந்தும் அரசியல் l வாதிகளிடமிருந்தும் காப்பாத்து. ஏதோ இட்லிவடை உதவியால் உன்னை அறிய முடிகிறது. அவரும் இந்த சாமியார்கள் மாதிரி ஆகாமல் அவரைக்காப்பாத்து

அருண்மொழி said...

இட்லிவடையாரே,

அர்ஜுன் சம்பத் matter உங்க scoop newsஆ அல்லது ஏதாவது பத்திரிக்கையில் வந்ததா?

IdlyVadai said...

அருண்மொழி,
ஸ்கூப் என்றால் சொல்லிவிடுவேன்.
இங்கே பாருங்க:
http://timesofindia.indiatimes.com/India/Kanchi_seer_refuses_to_meet_Jayas_friends/articleshow/2496144.cms

நன்றி

Anonymous said...

சாதனை: திருமணம் ஆகவில்லை

I think it is high time you remove this. Otherwise there will be a scoop :).

இலவசக்கொத்தனார் said...

யாரய்யா முனியை ஆரியப்படுத்துவதாச் சொன்னது?

அந்த பட்டம் படம் நல்லா இருக்கு.

சைட்பார் கேள்விக்கு. நான் ஒரு மௌலி படம் பார்த்து இருக்கேன். பேர் ஞாபகம் இல்லை. அதுல ஒரு கதனகுதுகுலம் பாட்டு இருக்கு - ரகு வம்ச ராஜா ரகு ராமனே... எனத் தொடங்கும் பாடல். அதே ராகம்தான். கொஞ்சம் படம் பேரு தெரிஞ்சாலோ அந்த பாடலோட MP3 கிடைச்சாலோ சொல்லுங்களேன்.

இலவசக்கொத்தனார் said...

என்னங்க நம்ம பின்னூட்டத்தை பார்த்தீங்களா? எதாவது மேலதிக (மேற்கொண்டு சரி, அதிக சரி அது என்னங்க எல்லாரும் மேலதிகன்னு சொல்லறோம்?) தகவல்கள் உண்டா?