பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 16, 2007

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 16-10-07

இந்த வாரம் இட்லிவடை முனிக்கு எழுதும் கடிதம்.
எச்சரிக்கை: அரசியல் நெடி கொஞ்சம் தூக்கலாக இருக்கும் :-)

மைடியர் முனிஸ் சவுக்கியமா ?
நவராத்திரி ஆரபிச்சாச்சு அதனால பிஸியாயிட்டேன், வீட்டில ஏகபட்ட வேலை. பரண் மேலே இருக்கிற கொலு பொம்மைய எடுக்கனும், ஒத்தபடையில கொலு படி செட் பண்ணனும், வீட்டுக்கு வரும் பெண்களுக்கு சுண்டல் கொடுக்கனும் இப்படி ஏகபட்ட வேலை. இதில கஷ்டமான வேலை வீட்டுக்கு வரும் பெண்களுக்கு வெத்தல பாக்குடன் பிளவுஸ் பிட் தரது தான். இந்த பிளவுஸ் பிட் வெச்சி தர நிறைய ஞாபக சக்தி வேணும். ஏன்னா எல்லா பிளவுஸ் பிட்டும் எப்பவுமே ரொட்டேஷனில தான் இருக்கும், பக்கதுவிட்டுல கொடுத்ததை எதிர்த்த வீட்டுக்கு கொடுத்தால் திரும்ப அது நம்ம வீட்டுக்கே வரும் தெரியுமா ?

இந்த பிளவுஸ் பிட் பிரச்சனைக்கு நான் ஒரு சூப்பர் ஐடியா வைச்சிருக்கேன் சொல்லட்டுமா ? பிளவுஸ் பிட்டுக்கு பதில் கிழக்கு பதிப்பகத்தின் வரம் பக்தி புத்தகங்களை கொடுக்கலாம். கலர் கலராக பிளவுஸ் பிட் மாதிரியே இருக்கு.

"மைலாப்பூர் எம்.எல்.ஏ" டைட்டில் எப்படி இருக்கு? இது சினிமா பட டைட்டில் இல்ல. நம்ம எஸ்.வி.சேகரோட வலைப்பதிவு. சமிபத்திய பேட்டியில் "ஜெயலலிதா ஜெயேந்திரரை கைது செஞ்சாங்க, உங்களுக்கோ சங்கரமடத்தின் மீது நிறைய பக்தி எப்படி அம்மா கட்சியில இருக்கீங்க?" என்ற கேள்விக்கு இவரின் பதில் என்ன தெரியுமா ? "ஜெயேந்திரை கைது பண்ணியது போலிஸ்தான் அம்மா கிடையாது". எஸ்.வி.சேகர்ன்னு சொல்லாலே காமெடி தான் நினைவுக்கு வருது உனக்கு ?

பட்டைய பார்த்தாலே தமிழ் வலைப்பதிவு மக்களுக்கு ரொம்ப டென்ஷன தான். அதுவும் அந்த பட்டை உபயோகபடுத்தும் கேபிளை பார்த்தால் இன்னும் டென்ஷன் ஆகிறாங்க. தோண்டி தோண்டி புதைக்கிறாங்க. புதைக்க புதைக்க வளருது. எவ்வளவு எதிர்ப்பு தெரிவிச்சாலும், பட்டைகளின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரிச்சுகிட்டுதான் இருக்கு. இந்த பட்டையில்லையினா தமிழ் வலைப்பதிவு இவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்குமா ? சொல்லுங்க ? போன ஆண்டை காட்டிலும் இந்த பட்டையின் வளர்ச்சி இந்த ஆண்டு எவ்வளவு தெரியுமா 93%. அப்புறம் இந்த பட்டை இருப்பதால் தான் இந்தியா எல்லா துறையிலும் கொடிகட்டி பறக்குது. அட நான் சொன்னது அகலப்பட்டை நீங்க வேற பட்டையினு நினைச்சா நான் என்ன பண்ண முடியும் ?

கோடம்பாக்கத்தில் இரண்டு பேருக்கு அடி விழுந்திருக்கு தெரியுமா ? ஒண்ணு நடிகை பத்மபிரியாவை டைரக்டர் சாமி கன்னத்தில் அடித்தது, இன்னொரு அடி என்ன தெரியுமா ? 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படத்தில் வடிவேல் ஜோடியாக ஸ்ரேயா நடனமாம். அதிர்ஷ்டம் அடிக்கிறதுன்னு சொல்லமாட்டாங்க அது தான் இது. சரி யார் அதிர்ஷ்டசாலி ?

ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி பத்தி போன கடிதத்தில எழுதியிருந்தே? போன வாரம் பார்த்தா சிம்பு திரும்ப வந்துட்டார். வரத்துக்கு முன்னாடி சிம்பு ரசிகர்கள் பிருத்திவிராஜை திட்டுவது, சிம்புவின் சித்தப்பா புலம்புவதும் விஜய் டிவி சின்ன அரசியலையே அறங்கேற்றினார்கள். இதே மாதிரி டான்ஸ் நிகழ்ச்சி இப்ப மத்த செனல்களிலும் ஆரம்பித்துவிட்டார்கள். என்னுடைய மார்க்
விஜய் டிவி - ஜோடி நம்பர் 1 - சீசன் 2 - 60/100
மானாட மயிலாட - கலைஞர் டிவி - 70/100
மஸ்தானா மஸ்தானா - சன் டிவி - 80/100

கலைஞர் டிவியில் மேலும் இரண்டு சேனல் வர போகுதாம். சன் மியூசிக் மாதிரி 'இசை அருவி'யினு ஒரு சேனல் அப்புறம் சன் நியூஸ் மாதிரி 'கலைஞர் நியூஸ்'ன்னு ஒரு சேனல். மியூசிக் சேனல் நவம்பர் மாசமாம், 24 மணிநேர நியூஸ் சேனல் டிசம்பர் மாசம் வர போகுதாம். தமிழ் மக்களை அந்த ஆண்டவனே வந்தாலும்... . அப்புறம் கலைஞர் டிவியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒருவருடன் பேசிக்கிட்டுயிருந்தேன் "என்ன சார் சன் டிவியுடன் சமாதானமாமே?" ஜூவியில் படித்தேன் என்றேன். அவர் சொன்ன பதில் .. சரி அரசியல் வேண்டாம்.

சரி இப்ப ஒரு ஜோக்-புதிர் - ஒரு நாள் நல்ல வெயில் பிரகாஷ் காரத்தும், சீத்தாராம் யெச்சூரியும் குடை பிடிச்சுகிட்டு ரேட்டில நடந்து போனார்கள். சரி வெயில் அதனால குடைபிடிக்கிறார்கள் என்று பார்த்தால், ரெயின் கோட்டும் மாட்டிகிட்டு போறாங்க ஏன் ? விடை கடைசியில்

இப்ப எங்கு பார்த்தாலும் சுய சேவை அதிகமாயிட்டுது. ஹோட்டல், வங்கி, விமான நிலையம், ரயில்வே... இப்படி பல இடங்களில் ATM இயந்திரம் போல ஓண்ணு வெச்சிருப்பாங்க, பணமோ, டிக்கோட்டோ உங்களுக்கு வேண்டியதை டச் ஸ்கிரினில் அழுத்தி பெற்றுக்கொள்ளலாம். இந்த இயந்திரத்துக்கு பேர் கியோஸ்க்(Kiosk). இப்ப நம்ம "கிரி டிரேடிங் ஏஜென்ஸி" 'ADD (Anytime Digital Downloads)' என்ற கியோஸ்கை அறிமுகம் செஞ்சிருக்காங்க. இந்த கியோஸ்கில் நிறைய கர்நாடக சங்கித பாடல்கள் வெச்சிருக்காங்க உங்களுக்கு வேண்டியதை நீங்கள் தேடலாம், தேர்ந்தடுக்கலாம். தேர்ந்தடுத்த பின் ஒரு சிடியை போட்டால், அதில் பதிவு செஞ்சு தரும். கூடவே நீங்க செலக்ட் செஞ்ச பாடல்களை பெயர்களை பிரிண்ட் எடுத்து சீடி டப்பாவில் போட்டு தருகிறார்கள். பாடல்களின் விலை 3 ருபாயிலிருந்து 30 ரூபாய் வரை.

முன்பு பேராசிரியர் பெரியார்தாசன் என்று ஒருவர் இருந்தார், ஒரு நாள் ராத்திரி பார்த்தால் டிவியில அதிர்ஷ்ட கல் விளம்பர நிகழ்ச்சியில உட்கார்ந்து தலையாட்டுகிறார். அடுத்து இந்த இரண்டு பேரையும் இந்த லிஸ்டில் சேர்க்கனும். T.R.Balu என்ற பெயரை T.R.Baaluன்னு கெசட்டில் பேரை மாத்திகினாரு. அப்பால நம்ம மின்சார அமைச்சர் ஆர்காடு வீராசாமி(Arcot Veraswami) டெல்லியில இருக்கும் எண் ஜோதிடர் சொன்னாருனு தன்னுடய பேரை ஆற்காடு வீராஸ்வாமின்னு(Veeraswamy) கெசட்டில் மாத்திகிட்டாராம். என்ன ஷாக் அடிக்கல ? முன்பு ராஜாஜியை இராசாசி அப்புறம் காமராஜரை காமராசர் என்றும் விடாமல் எழுதியும், பேசியும் வந்தார்கள் இந்த திராவிட குஞ்சுக்கள்.

கெசட்டில் இன்னும் ஒரேஒரு பேர மாத்த சிபாரிசு செய்யனும். திராவிட முன்னேற்ற கழகம் என்பதை "தி'ருந்தாத "மு'ரண்பாட்டுக் "க'ழகம் ! ன்னு. நான் சொல்லுவது சரி தானே ? இந்த பெயரை மாத்தும் ஆபிஸருக்கு மஞ்சள் துண்டு போத்தலாம் நான் ரெடி நீங்க ?

இரண்டு கேள்விகளுக்கு முடிந்தால் பதில் சொல்லு:

சாமியே இல்லை என்று சொல்லும் திரவிட கட்சிகாரர்கள். சாமி என்ற தமிழ்ப் பெயரை "ஸ்வாமி' என்ற வடமொழிப் பெயராக மாற்றுவது (தி.மு.க. கொள்கைப்படி) சரிதானா?

இது நியூமராலஜிக்காக மாற்றபட்டது என்பது வெளிப்படை. இந்த 'மூடநம்பிக்கை' பற்றித் தி.க. தலைவர் கி. வீரமணி என்ன கூறுகிறார்? இதை கண்டித்து பிட் நோட்டீஸ் தருவர்களா ?

விடை: அன்னிக்கு மாஸ்கோவில் நல்ல மழையாம் !

48 Comments:

Prakash said...

//அன்னிக்கு மாஸ்கோவில் நல்ல மழையாம் !

:-) நானும் கேள்வியை படிச்சிட்டு கொஞ்சம் யோசிச்சேன் :-)

Anonymous said...

//இப்ப நம்ம "கிரி டிரேடிங் ஏஜென்ஸி" 'ADD (Anytime Digital Downloads)' //

இப்ப இல்ல தலைவா....எனக்குத் தெரிந்து 6 மாதமாக இருக்கு இது.

IdlyVadai said...

//இப்ப இல்ல தலைவா....எனக்குத் தெரிந்து 6 மாதமாக இருக்கு இது.//

நீங்க வேற இது 2006லிருந்து இருக்கு :-)

Anonymous said...

// இந்த 'மூடநம்பிக்கை' பற்றித் தி.க. தலைவர் கி. வீரமணி என்ன கூறுகிறார்? இதை கண்டித்து பிட் நோட்டீஸ் தருவர்களா ? //

வீரமணி வெட்டி மணின்னுக்கிட்டு, நம்ம மஞ்சத்துண்டு என்ன சொல்லப் போறாரு?....இராமன் பொறியாளரான்னு கேட்ட புத்திசாலி, வீராசாமி வீராஸ்வாமியானதுக்கு என்ன காரணம் சொல்லப் போறாரு?.

7-8 வருடம் முன்னால முல்லைவேந்தன்னு ஒரு அமைச்சர் (தருமபுரி) தீ மிதித்ததால் கருணாநிதியால அமைச்சர் பதவி இழந்தாரே?, இப்போ மின்சாரம் பதவியிழக்குமா?.....இல்லை கருணாநிதி தன் கைத்தடியினை தூக்கி எறிவாரா?...

Anonymous said...

//நீங்க வேற இது 2006லிருந்து இருக்கு :-)//

அடப்பாவி மனுஷா....இப்படியா எழுதறது?

IdlyVadai said...

//அடப்பாவி மனுஷா....இப்படியா எழுதறது?//

நிறைய பேருக்கு இது இன்னும் தெரியல. இப்ப தான் பிரபல படுத்தறாங்க.

Anonymous said...

After reading this post, It looks, IdlyVadai group have some dominance of female(s)!!..
Keep going...

Anonymous said...

Thanks for accepting that those books are like blouse bits, only to be exchanged and recycled, not to be used by one. But anyday a blouse bit is better than these books because blouse bit can be put to other uses also.

Tharuthalai said...

//முன்பு பேராசிரியர் பெரியார்தாசன் என்று ஒருவர் இருந்தார், ஒரு நாள் ராத்திரி பார்த்தால் டிவியில அதிர்ஷ்ட கல் விளம்பர நிகழ்ச்சியில உட்கார்ந்து தலையாட்டுகிறார். அடுத்து இந்த இரண்டு பேரையும் இந்த லிஸ்டில் சேர்க்கனும். T.R.Balu என்ற பெயரை T.R.Baaluன்னு கெசட்டில் பேரை மாத்திகினாரு. அப்பால நம்ம மின்சார அமைச்சர் ஆர்காடு வீராசாமி(Arcot Veraswami) டெல்லியில இருக்கும் எண் ஜோதிடர் சொன்னாருனு தன்னுடய பேரை ஆற்காடு வீராஸ்வாமின்னு(Veeraswamy) கெசட்டில் மாத்திகிட்டாராம். என்ன ஷாக் அடிக்கல ? முன்பு ராஜாஜியை இராசாசி அப்புறம் காமராஜரை காமராசர் என்றும் விடாமல் எழுதியும், பேசியும் வந்தார்கள் இந்த திராவிட குஞ்சுக்கள்.//

பெரியார்தாசன் அதிஷ்ட்டக்கல் விளம்பரத்துல என்ன செஞ்சாரு? ஆதரவா தலையாட்டினாரா இல்ல எதிர்த்து பேசினாரா?

மேலே சொல்லியிருக்குற ரெண்டு பேரும் உண்மையிலேயே பேரை மாத்தி இருந்தங்கன்னா, அவனுங்கள கட்டி வச்சு செருப்பாலயே அடிக்கனும். இது உண்மைன்னா, ராஸ்கல் ராமன் இருந்தானா, செத்தானாங்கறத பத்தி பேச கருணாநிதிக்கு எந்தத் தகுதியும் இல்ல. முதலில் இதெல்லாம் உண்மைதானங்றதுக்கு ஏதாவது சுட்டி கொடுங்க. ஏன்னா சோமறிகள் எப்பவுமே திரிக்கிறதுல கில்லாடிகள்.

---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

IdlyVadai said...

//பெரியார்தாசன் அதிஷ்ட்டக்கல் விளம்பரத்துல என்ன செஞ்சாரு? ஆதரவா தலையாட்டினாரா இல்ல எதிர்த்து பேசினாரா?//

ஆமாங்க என் கண்ணால பார்த்தேன் !

பாலு, ஆர்காட் நியூஸ் பத்தி http://indiainteracts.com/columnist/2007/10/05/Corridor-Whispers--Oct-05-Part--2/ இங்கே இருக்கு அப்பறம் இரண்டு வாரம் முன் துக்ளகில் வந்தது. போனவாரம் ஜெயா டிவி நேர்முகம் நிகழ்ச்சியில் வைகோ இதை சொன்னார்.

பின்ன இது மாதிரி விஷயம் முரசொலியிலா வரும் :-)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

என் இனிய பாடிகார்ட் முனீஸ்வரா,

எனதருமை தம்பிமார்கள், அண்ணன்மார்களான இட்லி வடை 'குடும்பத்திற்கு' இதே போல் 'நெஞ்செரினும் முடி தொழா' வீரத்தை இப்படியே தொடர்ந்து அளித்து அருள் பாலித்து வரும்படி இட்லி வடை ரசிகர் மன்றம் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்..

Tharuthalai said...

//M. Karunanidhi may love to badmouth gods and flaunt his rationalism but his ministers seem to be hit by superstitions and belief in numerology. Union shipping minister T.R. Balu changed his name to "Baalu" in government communications and gazette. Now Tamil Nadu's electricity minister Arcot Veraswami has become Veeraswamy at the advise of a numerologist. In Delhi, BJP leaders wonder why Karunanidhi wraps yellow shawl around if he is such a profound rationalist?//

நீங்க கொடுத்த தொடுப்புல இதுதான் இருக்கிறது. இதிலிருந்து பாலு பெயர் மாற்றத்தில் எந்த முடிவுக்கும் வர முடிஅயவில்லை.

வீராசாமி பெயர் மாற்றத்திலும் எதுவும் ஆதாரமாக இல்லை.

இவர்கள் நியூமராஜிக்காக மாற்றியிருந்தால் நிச்சயம் செருப்படிதான். கருணாநிதிக்கும் சேர்த்தேதான் அந்த அடி. ஆனால் நீங்கள் கொடுக்கும் தொடுப்புகள் சோமாறி வகையறாக்களே.

கைப்புள்ள கோபால் ஸ்வாமியை நம்புறதுன்னா, நீங்க சொன்னதையே நம்பியிருப்பேனே. இன்னமும் இது சோமாறிகளின் திரிப்பாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.

பெரியார்தாசன் எந்த தொ.கா.யில் வந்தார் என்ற விவரத்தையாவது கொடுங்கள்.

---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

IdlyVadai said...

Tharuthalai நான் படித்தது, கேட்டதை வைத்து தான் சொல்ல முடியும்.

//சோமாறி வகையறாக்களே.// பின்ன முரசொலியிலும், கலைஞர் டிவியிலுமா வரும் ? சரி உங்களுக்காக எனக்கு தெரிந்த திமுக நண்பரிடம் கேட்டு சொல்லுகிறேன். சரியா ?

பெரியார்தாசன் ரொம்ப நாள் முன்னாடியே கல் விளம்பரத்துக்கு வந்துட்டார். ( ராஜ் அல்லது விஜய் டிவியினு நினைக்கிறேன் ) நானே நிறைய தடவை பார்த்திருக்கிறேன். ராத்திரி சேனல் மாத்தும் போது பார்த்து.

cgs said...

சைனாவில் முக்கியமா நம்ம காமீஸுக்கு மழை வந்திருக்கும் இட்லிவடை?

Boston Bala said...

பதிவு ச்சும்மா அதிருது :)

ரொம்ப நாளைக்கப்புறம் முனி ஹிட்ஸ் bulls eye

ramachandranusha(உஷா) said...

அப்படியே, மூனிஸ் ரிப்ளை போட்டா அதையும் இங்க போடுங்க

Anonymous said...

A thought on the fly....

Why dont you (Idlivadai group) guys start publishing "podcasts" on interesting subjects?
So that you could reach people more closely...

Aravind

Tharuthalai said...

கட்சிப் பத்திரிகையிலோ, சாதிப் பத்திரிகையிலோ வருவதை எல்லாம் உண்மை என்றும் நம்பும் அளவிற்கு கேணை இல்லை.

இன்று போய் நாளை வா என்று உங்களுக்கு இன்னும் அவகாசம் தருகிறேன். சேற்றை இறைத்தது நீங்கள். அதற்கான ஆதரங்களை கொடுக்க வேண்டியது உங்கள் கடமை. இல்லையெனில் சோமாறிகளின் அனுகுமுறைக்கு இது இன்னும் ஒரு உதாரணம்.

சும்மா அதிருதுல்ல என்ற அன்பர்க்கு.... என்ன எங்கன அதிருதுன்னு சொன்னீங்கன்னா எல்லாரும் தெரிஞ்சிக்கலாம்.

இன்னொரு துனுக்கு. ரஜினி 90 வயசுல பஞ்ச் பேசுனா எப்படி இருக்கும்?

'பேர சொன்னாலே சும்மா நடுங்குதுல்ல'

-----------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

IdlyVadai said...

அனானி உங்க ஐடியாவிற்கு நன்றி.

Tharuthalai
//அதற்கான ஆதரங்களை கொடுக்க வேண்டியது உங்கள் கடமை.//

இப்படி எல்லாம் காமெடி செய்ய கூடாது.

//இன்று போய் நாளை வா என்று உங்களுக்கு இன்னும் அவகாசம் தருகிறேன். //

நாளை வேண்டாம் இன்றே சொல்லுகிறேன். எனக்கு தெரிந்த திமுக அன்பரிடம் கேட்டுவிட்டேன் உண்மை கெசட்டில் பெயர் மாற்றம் உண்மை என்கிறார்...

இலவசக்கொத்தனார் said...

கிரி ட்ரேடிங் பழைய விஷயம்தான்.
பெரியார்தாசன் பழைய விஷயம்தான்.
பாலு பேர் மாத்திக்கிட்டும் ரொம்ப நாள் ஆவுது.
கம்யூனிஸ்ட் ஜோக்கும் பழசு!
என்ன ஆச்சு? சுடா புது மேட்டர் எதுவும் கிடைக்கலையா? :))

(ஒண்ணுமில்லைங்க. எல்லாம் நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்க, எதாவது வித்தியாசமா சொல்லலாமேன்னுதான். ஹிஹி)

IdlyVadai said...

//அப்படியே, மூனிஸ் ரிப்ளை போட்டா அதையும் இங்க போடுங்க//

உஷா இதில உள் குத்து இல்லையே :-)

IdlyVadai said...

//(ஒண்ணுமில்லைங்க. எல்லாம் நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்க, எதாவது வித்தியாசமா சொல்லலாமேன்னுதான். ஹிஹி)//

உங்க உண்மையான விமர்சனத்துக்கு நன்றி.

Anonymous said...

தறுதலைன்னு பேரைச் சரியாத்தான் வச்சிருக்காரு. தலையில் ஒண்ணும் இல்லை. பாலு தரும் விளம்பரங்களில் அதிகாரபூர்வ விளம்பரங்களைத் தறுதலை அடுத்த முறை உற்றுப் பார்க்கட்டும் அதில் பெயர் எப்படி ஸ்பெல் செய்யப் பட்டிருக்கிறது என்று. வீராஸ்வாமி பெயர் மாற்றியது எல்லாப் பத்திரிகைகளிலும் வந்த செய்தி. துக்ளக்கில் கேள்வியே கேட்டிருக்கிறார் சோ, ஏன் வீராஸ்வாமி துக்ளக்கின் மீது இது நாள் வரை கேஸ் போடவில்லை. அப்படி பெயர் மாற்றவில்லையென்றால் வீராஸ்வாமியோ அல்லது அவர் சார்பாக இந்தத் தறுதலையோ கேஸ் போட வேண்டியதுதானே? ஏனைய்யா போடவில்லை? அதிகாரபூர்வமாக கெஜட்டில் போய் இந்த ரெண்டு தறுதலைங்களும் பெயர் மாற்றியிருக்கிறார்கள் இதை இவர்கள் செயலாளர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். இதற்கும் மேலே ஆதாரம் வேண்டும் என்றால் தறுதலையே நேரில் போய் தெரிந்து கொள்ளலாம் அப்படி அதை உண்மை என்று அவர் கண்டு கொண்டால் தறுதலை தூக்கு மாட்டிக் கொள்வாரா அல்லது அவரது இஷ்ட தேவதைகளை செருப்பால் அடிப்பாரா? பொய் என்று நிரூபிக்கப் பட்டால் இட்லி வடை தன் கடையை மூடி விடுவார் தறுதலை சவாலை ஏற்கத் தயாரா? எங்க ஐயா ஆளைக் காணும் துண்டு துணி ஒண்ணியும் காணும்?

கருணாநிதி கைத்தடி said...

சோம்பேறி தறுதலை இந்தா ஆப்பூ - http://trbaalu.nic.in/

Disclaimer: Web site content owned, maintained and updated by the Office of the Union Minister of Shipping, Road Transport and Highways and they may be contacted for further information & suggestions at the Office of the Union Minister of Shipping, Road Transport and Highways, Transport Bhawan (apsmin@nic.in).

நான் சொல்லல இதை - வால்மிகி... தப்பு.. தறுதலை, சிப்பிங் மினிஸ்த்தர் சொல்லுது.

Boston Bala said...

T. R. Baalu - Minister of Shipping, Road Transport and Highways, India: "Vedio Clip"

வீடியோ கூட நியுமராலஜி பார்க்கும் கலிகாலமாகிப் போச்சு :(

;)

Anonymous said...

http://www.tn.gov.in/tamilarasu/jun2006/Tami_Nadu_Cabinet.pdf
(Tamilarasu is official TN govt magazine) - see the spelling for Arcot N Veeraswamy

Official govt press release (24Sep2007)
http://www.tn.gov.in/pressrelease/pr240907/pr240907_23.htm

Tharuthalai said...

சோமாறிகளுக்கு,
சேற்றை வாரி இறைப்பது நீங்கள். ஆதாரம் கேட்டால் அலப்பற பண்றீங்க.

நான் ஏற்கனவே சொன்னது போல், நியூமராலஜிக்காக பெயர் மாற்றம் உண்மை என்றால் நிச்சயம் செருப்படிதான். அது கருணநிதிக்கும் சேர்த்தேதான். நான் தி.மு.க. தொண்டனும் இல்லை, கருணநிதியின் கைத்தடியும் இல்லை. யாரையும், எந்த கொள்கையையும் கண்மூடித்தனமாக ஆத்ரிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆகவே, துள்ளிக் குதிக்கும் சோமாறிகளே ஆதாரத்தை கொடுங்கள்.

சோமாறிகள் ஒற்றை வரியில் உளறிவிட்டு போவதை எல்லாம் பொய்/உண்மை என்று நிரூபிக்க மற்றவர்கள் ஏன் மெனக்கெட வேண்டும். அது உளறும் சோமாறிகளின் கடமை. அது அச்சு பிச்சி, கிச்சுமுச்சு என்றால் சோமாறிகளின் வழக்கமான தந்திரங்களுல் இதுவும் ஒன்று அவ்வளவே.

பெரியார்தாசன் எந்த தொ.கா வந்தார் என்ற விபரம்கூடவா தரமுடியாது?

ரஜினி 90 வயசுல சொல்ற பஞ்ச் இப்படி இருக்கும்.
"பேர சொல்றதுக்கே சும்மா நடுங்குதுல்ல" . நேற்று கொஞ்சம் மாறிப்பொஅச்சு.

--------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவது கழிந்து கிடக்கிறது.

Tharuthalai said...

//Meeting of the Ministers on power sector was held under the Chairmanship of Hon’ble Union Minister for Power, Thiru.Sushil Kumar Shinde at New Delhi on 24.09.07 to discuss about the 11th plan capacity Addition Programme. Thiru.Arcot.N.Veeraswamy, Hon’ble Minister for Electricity, Government of Tamil Nadu attended the meeting.//

இதுல எங்க நியூமராலஜிக்காக பேர மாத்துன செய்தி இருக்கு?

--------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவது கழிந்து கிடக்கிறது.

Tharuthalai said...

பாஸ்டன் பாலா,
நீங்க கொடுத்த தொடுப்பல நியூமரலாஜிக்காக பேர் மாத்துனக்கானதுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

--------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவது கழிந்து கிடக்கிறது.

Anonymous said...

அண்ணே, தண்டக்கருமாந்தரம்....சாரி, சாரி, தருதல...எங்க போனீங்க...ஆளயே காணோம்....இவ்வளவு பேர் லிங்க் கொடுத்தவுடன் எஸ்கேப்பா?....உடன்பிறப்புக்கள் இப்படித்தான்னு இன்னுமொருதரம் நிருபிச்சுட்டாங்கப்பா...

IdlyVadai said...

//பெரியார்தாசன் எந்த தொ.கா வந்தார் என்ற விபரம்கூடவா தரமுடியாது?//

தறுதலை இலவசம் சொன்னது போல இது பெரியார்தாசன் மேட்டர் ரொம்ப பழைய நியூஸ். நான் நிறைய தடவை பார்த்திருக்கிறேன். ராஜ் மற்றும் விஜய் டிவியில். இதுக்கு மேல உங்களுக்கு என்ன ஃபுருப் வேண்டும் ?

Tharuthalai said...

//ராஜ் மற்றும் விஜய் டிவியில். இதுக்கு மேல உங்களுக்கு என்ன ஃபுருப் வேண்டும் ?//


ராஜ், விஜய் தொ.கா யில் தற்போதிலிருந்து ஆறு மாதம் முன் வரை வந்த விளம்பரங்களை மற்ற நண்பர்கள் மூலம் உண்மைதானா என்று சரி பார்க்கிறேன். அதனால்தான் குறிப்பாக எந்த நேரம், எந்த விளம்பரம் போன்ற விபரங்களை கொடுங்கள் என்கிறேன்.

உண்மைதான் என்றால் நான் மதிக்கும் நபர்களுள் ஒருவர் காலி. வருத்தமாகத்தான் இருக்கும். கோபால் ஸ்வாமி கைப்புள்ளை ஆனதைப் போல் இந்த சோகத்தையும் நையாண்டியாக மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். நீங்கள் திரித்தோ, பொய்யோ சொல்லியிருந்தால் உஙளுக்கு சுண்ணம்புதான்.

--------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவது கழிந்து கிடக்கிறது.

Anonymous said...

idlivadai I have also seen periyardasan in the late night gems advt a year before. This is not news to me :-)

IdlyVadai said...

//குறிப்பாக எந்த நேரம், எந்த விளம்பரம் போன்ற விபரங்களை கொடுங்கள் என்கிறேன்.//

மொட்டை தலையுடன் எனர்ஜி டிரிட்மெண்ட் செய்யும் ஒருவரை பார்த்திருப்பீர்கள். அவர் எந்த சமயம் வருவார் என்று சொல்ல முடியுமா ? அதே போல தான் இதுவும்.

//நீங்கள் திரித்தோ, பொய்யோ சொல்லியிருந்தால் உஙளுக்கு சுண்ணம்புதான்.//

வெத்தல போடும் போது சொல்றேன் அப்ப கொடுங்க :-)

எனக்கு திரித்தோ, பொய்யோ சொல்ல அவசியம் இல்லை. நான் பத்திரிக்கை, மற்றும் தொலைக்காட்சியில் பார்த்து கேட்டவற்றை எழுதுகிறேன். நான் கேட்ட திமுக பிரமுகரின் பெயரை சொன்னால் ரொம்ப எல்லோருக்கும் நடுக்கம் வந்துடும்.

அனானி, ஆமாம் நீங்க சொல்லுவது சரி 1-1.5 வருஷத்துக்கு முன்னாடி நானும் பார்த்திருக்கிறேன். ஆனா இன்னும் நிறைய பேருக்கு இது தெரியலை நான் என்ன செய்ய முடியும் :-)

Tharuthalai said...

//மொட்டை தலையுடன் எனர்ஜி டிரிட்மெண்ட் செய்யும் ஒருவரை பார்த்திருப்பீர்கள். அவர் எந்த சமயம் வருவார் என்று சொல்ல முடியுமா ? அதே போல தான் இதுவும்//

அவர் மீது சேற்றை நான் இறைத்தால் கண்டிப்பாக சொல்வேன். நீங்க வெற்றிலை போடலன்னாலும் சுண்ணாம்புதான்.

கெசட்ல இருக்கனும். பத்திரிகையில விளம்பரம் கொடுத்திருக்கனுமே.... பேர் மாத்துனதுக்கு. எப்போ மாத்துனாங்கன்னு தெரிஞ்சா அதன் பின்னனி பற்றி முழுசா தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு யாரை செருப்பால் அடிப்பது என்கிற முடிவுக்கு வரலாம்.

அதுவரை இது சோமாறிகளின் திரித்தல் வேலை என்றே நம்ப வேண்டி இருக்கிறது.

--------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவது கழிந்து கிடக்கிறது.

Anonymous said...

//உண்மைதான் என்றால் நான் மதிக்கும் நபர்களுள் ஒருவர் காலி. //

இதுலருந்தே தெரியுதே தருதலையோட லெவல்....பெரியார்தாசனல்லாம் ஒரு ஆளுன்னு மதிக்கிறாராரம்...இவரு வைகோவ பத்தி பேசராரு...தூஊஊஉ

Tharuthalai said...

////உண்மைதான் என்றால் நான் மதிக்கும் நபர்களுள் ஒருவர் காலி. //

இதுலருந்தே தெரியுதே தருதலையோட லெவல்....பெரியார்தாசனல்லாம் ஒரு ஆளுன்னு மதிக்கிறாராரம்...இவரு வைகோவ பத்தி பேசராரு...தூஊஊஉ //

என் தரம் இருக்கட்டும். முதல்ல சொன்னதுக்கு ஆதாரத்தக் காட்டு.

இந்த கல் விளம்பரம் உண்மை என்றால் நான் என் நிலையை மாற்றிக்கொள்வேன். எனக்கு அதில் வெட்கம் ஒன்றும் இல்லை. அதைத் தவிர்த்து, என்னைக் காறித்துப்பும் அளவிற்கு பெரியார்தாசனிடம் என்ன குறை என்று சொன்னால் தெரிந்துகொள்வேன்.

சோமாறிகளே வெட்கம் இல்லாமல் கருத்து சொல்லும்போது எனக்கு என்ன. நான் சோமாறிகளிடம் கேட்பதெல்லாம் நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம்தான்.

---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

Anonymous said...

Mr. Tharuthalai,

Proof for T.R. Balu became T.R. Baalu

http://164.100.24.209/newls/Biography.aspx?mpsno=26

and

Proof for Arcot Veraswami's name change into Arcot Veeraswami

http://www.tn.gov.in/tnassembly/ministers.htm

I hope you will accept these official websites of Indian Govt. and TN Secretariat.

Tharuthalai said...

[[http://164.100.24.209/newls/Biography.aspx?mpsno=26

Baalu,Thiru Thalikkottai Rajuthevar

http://www.tn.gov.in/tnassembly/ministers.htm
Thiru Arcot N. Veerasamy,
Minister for Electricity ]]

நீங்கள் கொடுத்திருக்கும் தொடுப்புகளில் இருந்து இவைதான் என் கண்ணுக்கு எட்டின. இதிலிருந்து நியூமராலஜிக்காக பெயர் மற்றினார்கள் என்று எப்படி முடிவு செய்யமுடியும் என்பதை விளக்கவும்.

இங்கு நான் மீண்டும் வலியுறுத்திக்கூறுவது, எனக்கு இவர்களை புனிதர்களாகக் கருதி காக்க வேண்டிய கட்டாயம் இல்லை. எதிர் முகாமில் இருப்பவராகக் கருதிக்கொணடு அவர்கள் மேல் சேற்றை இறைக்குமுன் தேவையான ஆதாரங்களை வைத்துக்கொண்டுதான் சொல்ல வேண்டும்.

உங்கள் குற்றச்சாட்டுகள் உண்மையாகவும் இருக்கலாம் அல்லது வழக்கமான சோமாறி திரிப்புகளாகவும் இருக்கலாம். ஆனால் இந்த இரண்டு நாட்களில் நீங்கள் கொடுத்த தொடுப்புகள் எதுவும் உங்கள் குற்ற்ச்சாட்டுக்கு வலு சேர்க்கவில்லை.

பெயர் மாற்றத்திற்கு சரியான ஆதாரம் என்னவென்றால், இந்திய கெசட்டில் இன்னார் என்று அழைக்கப்பட்டவர் இன்றிலிருந்து இப்படியாக அழைக்கப்படுவார். அது உள்ளூர்(?) பத்திரிகையில் வரி விளம்பரம் செய்யப்பட வேண்டும். அப்படி ஒரு ஆதாரம் உங்களிடம் இருந்தால் கொடுங்கள். பெயர் மாற்றம் நடந்திருப்பது உண்மை என்று ஏற்றுக்கொள்கிறேன். அதன் பிறகே அது எந்த கால கட்டத்தில் நடந்தது போன்ற விபரங்களை வைத்து யாரை செருப்பால் அடிப்பது என்ற முடிவுக்கு வர முடியும்.

பெரியார்தாசன் விளம்பரமும் அப்படித்தான். நள்ளிரவில் கல் விளம்பரத்தில் வந்தார் என்றால் எந்த கல் நிறுவனம் போன்ற விபரங்களையாவது கொடுக்க வேண்டும். சும்மா போகிற போக்கில் அள்ளிவிட்டுப் பொவதென்றால் யார் மீது வேண்டுமானாலும் எதையும் சுமத்திவிட்டு ஓடிவிடலாம்.

-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

Tharuthalai said...

//...தூஊஊஉ //

நான் யாரை மதிக்கிறேன் என்பதற்காக என் மேல் துப்பும் உரிமை உனக்கிருந்தால் நீ யாரை வெறுக்கிறாய் என்பதற்காக உன் முகத்தில் மூத்திரம் அடிக்கும் உரிமையை நான் எடுத்துக்கொள்வேன்.

-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

Anonymous said...

//நான் ஏற்கனவே சொன்னது போல், நியூமராலஜிக்காக பெயர் மாற்றம் உண்மை என்பது உண்மையானால்//

நீங்க முத்திரமடிப்பதும், அனானி மூஞ்சில துப்புவதும் இருக்கட்டும்....

நியூமராலஜி தவிர வேறு எதற்காகவாவது இந்த பிரபலங்கள் தங்களது இத்துணைநாள் பெயரை மாற்றிக்கொள்வார்களா?... அப்படியான காரணம் இருப்பின் தெரிந்து கொள்ள ஆசை.

Tharuthalai said...

பாலு - குறில், நெடில் குழப்பத்திற்காக மாற்றியிருக்க வாய்ப்பு உண்டு. அதற்காகத்தான் எந்த காலத்தில் மாற்றம் நடந்ததது என்பது தெரியவேண்டும். பாலு கல்லூரி படிக்கும் காலத்தில் மாற்றி இருந்தால் அதை நியூமராலாஜியுடன் முடிச்சு போடுவதை உடனடியாக ஏற்க முடியாது.

வீராசாமி வீராஸ்வாமியாக மாறியிருந்தால் அது நியூமராலஜிக்காத்தான் இருக்க வேண்டும்.

இப்பொழுது நீங்கள் போய் பெயர் மாற்றத்திற்கான ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள். மீண்டும் சோமாறித்தனமான செய்தியுடன் வந்தால் இனிமேல் பதில் இல்லை.

-----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

Subramanian said...

I was little wondered why "Idly Vadai" and it readers were trying to prove that "TR Baalu" and "Verasamy" name change to "TharuThalai". The fact is very clear from the links provided by the readers that they change the name to meet numeralogy.

So, no need to prove to someone in the opposite side. They never accept and act they are true. But in real it is not so.

I have a question to "TharuThalai" for the comment you made below.
//
மேலே சொல்லியிருக்குற ரெண்டு பேரும் உண்மையிலேயே பேரை மாத்தி இருந்தங்கன்னா, அவனுங்கள கட்டி வச்சு செருப்பாலயே அடிக்கனும். இது உண்மைன்னா, ராஸ்கல் ராமன் இருந்தானா, செத்தானாங்கறத பத்தி பேச கருணாநிதிக்கு எந்தத் தகுதியும் இல்ல. முதலில் இதெல்லாம் உண்மைதானங்றதுக்கு ஏதாவது சுட்டி கொடுங்க. ஏன்னா சோமறிகள் எப்பவுமே திரிக்கிறதுல கில்லாடிகள்.
//
Who gave you right to punish some one who dont follow the thought you beleive?

Have you ever think alone that you have that qualification to Judge something?

Dont think you self as a Big Brother!

-Jai Hind!!!

Tharuthalai said...

I've the right to judge what is right and wrong and act upon accordingly. If I go out to preach everyone to follow my moral standard then you have the right question me.

Subramanian said...

//
I've the right to judge what is right and wrong and act upon accordingly. If I go out to preach everyone to follow my moral standard then you have the right question me
//

I totally accept what you said. You have that right, but you should keep it your self and should not post it in this public media.
Meanwhile, the comment you put does not meet it!!

//மேலே சொல்லியிருக்குற ரெண்டு பேரும் உண்மையிலேயே பேரை மாத்தி இருந்தங்கன்னா, அவனுங்கள கட்டி வச்சு செருப்பாலயே அடிக்கனும்.
//

Anonymous said...

Enakku oru doubt. Rascal raman aa ooh nu gudichaangale ivanga. Ippo Kalaignar, 'Ennai porutha varaikkum Ramar, Allah, Jesus ellam onnu dhaan. Ore deivam. Anna sonaar' aah ooh nu nethu assembly la pesi irukaare. Ippo Ramar innum Rascal raaman aa?

பல்சர்-ரவி said...

யொவ் இட்லி .......நியுமராலஜிய வச்சு நீர் காமெடி கீமெடி எதுவும் பண்ணலயே?

velumani1 said...

என்ன நடக்குது இங்க?
எதை வேணா, எப்படி வேணா எழுதலாமா?

எதயும் கொஞ்சம் யோசிச்சு பதில் எழுதுன்கடா சாமிகளா!

கமெண்ட் பண்ணும் முன்னால்,தயவு செஞ்சு யொசிச்சுட்டு அப்புறம் கீ போர்டுல கைய வைங்க!


என்ன மாதிரியான வார்த்தைப் பிரயோகங்கள்! சே...கூசுகிரது....

செருப்படி ! சோமறிகள்....!திரிக்கிறது.....! சோமாறிகளின் திரிப்பாகவே ...!

"THINK BEFORE YOU INK"