பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 10, 2007

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 10-10-07

மூன்று வார லீவுக்கு பிறகு முனி எழுதும் கடிதம்....


மைடியர் இட்லிவடை,

என்ன ரொம்ப நாளா கடுதாசியே காணோம் ? என்ன ஆச்சு ? முதல்ல ஒரு கேள்வி..

கூவம் சென்னையில் எங்கெல்லாம் இருக்கு ?
அடையாரையும் கூவம்னு சொல்லுவாங்க, பக்கிங்ஹாம் கால்வாயையும் கூவம்னு சொல்லுவாங்க. கழிவு நீர் எங்க எல்லாம் இருக்கோ அது ஆறோ, கால்வாய்யோ எல்லாமே கூவம் தான். ஆனால் உனக்கு உண்ம தெரியுமா ? கூவம் ஆத்து தண்ணிய அறுவது வருஷத்துக்கு முன்ன சென்னை மக்கள் குடிதண்ணியா யூஸ் பண்ணாங்களாம்!

சென்னைக்கு பக்கத்துல இருக்கும் திருவள்ளூரை ஒட்டியிருக்கிற கிராமம் பேர் தான் கூவம். இந்த கிராமத்தில உள்ள புனித ஏரி பேரு கூவம் ஏரி!. இந்த ஏரியிலிருந்து உற்பத்தியாகி சென்னைக்கு வரும் கூவம் ஆறு, இன்னிக்கு சாய்பாபா ஆசிக்கு காத்திருக்கு! இப்ப கூவமுன்னு சொன்னா இன்னொன்னு ஞாபகம் வருது அது உன் "அடிக்கடி கேட்கபடாத கேள்விகள் பதிவு". கூவம் மாதிரி ஒரே நாத்தம். இந்த மாதிரி எழுதி உன் பெண் ரசிகைகள இழக்காதே. சொல்லிபுட்டேன்

போன மாசம் வைகோ ஒரு சில நிகழ்ச்சிள்ல கலந்துக்க பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலேர்ந்து இறங்கி காருல ஏறினதும், பின் சீட்டில ஒரு பெண்ணு உக்காந்து இருக்கறத பார்த்தாரு. டிரைவரும் கூடயிருந்தவங்களும் வைகோவின் உறவுன்னு. வைகோ "யார் அந்த பொண்ணு" ன்னு கேட்டவுடனே தான் மத்தவங்களுக்கு அட அது வேற யாரோன்னு புரிஞ்சுது. அந்த பெண் வைத்திருந்த பையில் அரிவா, கத்திரிக்கோல் இருந்துச்சு. யாரு என்னன்னு கேட்டதக்கு முன்னுக்குபின் முரணாக பதில் வரவே, மனநிலை சரியில்லாதவர்ன்னு தெரியவந்துதாம். வைகோ என்ன செஞ்சாரு ? அவர் மனநிலை சரியில்லாதவருனு என்று அவர் மீது புகார் கூட தராம விஷயத்தை அத்தோடு விட்டுடுட்டாரு. கொசு கடுச்சா கூட 'எதிரிகளின் சதி'ன்னு இஸட் பிரிவு பாதுகாப்பு கேட்கிற இந்த காலத்தில இப்படி ஒருவர். சரி இந்த பாதுகாப்பு பத்தி ஒரு கட்டுரை படிச்சேன்.

இந்தியாவுல 2300 பேர் ஸ்பெஷல் பாதுகாப்பு பிரிவில இருக்கிறார்கள். 18,000 போலீஸ்காரங்க இதில் ஈடுபட்டுருக்காங்க பிரதமருக்கு ஒரு வருஷத்துக்கு ஆகிற பாதுகாப்பு செலவு 300 கோடி. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, சோனியா காந்தி குடும்பம் மற்றும் V.VIPக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா ? 1000 கோடி !
Z-Plus, Z-Plus ன்னு சொல்றாங்களே அப்படினா என்ன தெரியுமா ?
Z-Plus பிரிவு பாதுகாப்புக்கு புல்லட் ஃபுருப் கார் ஒன்னு, அப்புறம் காமாண்டோஸ், இரண்டு எஸ்கார்ட் கார், இரண்டு போலீஸ் அதிகாரிங்க, இரண்டு போலீஸ்காரங்க, வீட்டுக்கு ஒரு காவல்காரர். இவங்களை எல்லாம் கண்காணிக்க ஒரு இன்ஸ்பெக்டர். அம்புட்டுதான்
Z பிரிவு Z-Plus மாதிரிதான், ஆனா ஒரு எஸ்கார்ட் கார் மட்டும்தான்.
Y பிரிவுக்கு 24 மணி நேரம் இரண்டு போலீஸ் அதிகாரிங்க பாதுகாப்பு
X பிரிவுக்கு 24 மணி நேரம் ஒரு போலீஸ் அதிகாரி பாதுகாப்பு.

இத தவிர டெல்லியில மட்டும் தினமும் 7000 போலீஸ் நிரந்திரமா பாதுகாப்புல ஈடுபட்டிருக்காங்க.

ராஜ்நாத் சிங், முலாயம் சிங், லாலு, மாயாவதி இவங்களுக்கு Z-Plus பாதுகாப்பு. ஸ்டாலின், ஜெயலலிதாவுக்கு இப்ப தர Z-PLUS பாதுகாப்ப குறைச்சுட போகிறார்களாம். நல்ல விஷயம் தான்.


பகுதறிவு அரசியல் எழுதினா உனக்கு கூட Z-Plus தேவைபடும் ஜாக்கிரதை.ஆமாம்.

T-20 கிரிக்கெட் பார்த்தையா ? இந்திய இளம் சிட்டுங்க பின்னிபெடலெடுத்துடாங்க. அதுவும் மிஸ்பா கடைசியில பந்தை தட்டிவிட்டு, அத ஸ்ரீசாந்த் சூப்பரா புடிச்சத பாக்க ஆஹா சூப்பர். இதிலேந்து என்ன தெரியுது. உலகில் எல்லா மூலையிலும் மலையாளக்காரங்க இருப்பாங்கன்னு பாவம் மிஸ்பாக்கு தெரியல. இந்த T-20 கிரிக்கெட்டில ஒண்ணு கவனிச்சியா மாட்ச் ஃபிக்சிங் பத்தி பேச்சே வரல. ஆனா விஜய் டிவியில வரும் ஜோடி நம்பர்-1 சீசன் 2 நிகழ்ச்சியில நிச்சயம் நடக்குது. போன வாரம் மாட்ச் ஃபிக்ஸிங் வாரம். ப்ரித்திவிராஜ் உமா ரியாஸ் டான்ஸ் ஆடினபின்னால, சிம்பு ப்ரித்திவியோட டான்ஸ் பிடிக்கலன்னு சென்னரு, இதுக்கு ப்ரித்திவி கொஞ்சம் காட்டமா பேச, சிம்பு நான் ஜட்ஜா இருக்க மாட்டேன்னு வெளியே போக, கார் வரை போனவர காலில விழுத்து அழைச்சுட்டு வந்தாங்க. அப்புறம் ப்ரித்திவிராஜ் வெளியே போக நல்ல டிராமா. எப்படியோ TRB ரேட்டிங்கை ஏத்திட்டாங்கையா ஏத்திட்டாங்க.
இந்த நிகழ்ச்சியில் சிம்பு அழுதுகிட்டே அடித்த டையலாக் "எனக்கு என் அப்பா ஸ்டார்ட் கேமரா சொன்னாதான் நடிக்கணும்னு சொல்லித்தந்திருக்கிறாரு, கேமரா இல்லைன்னா எனக்கு நடிக்க தெரியாது. ரொம்ப ஃபிராங்கா பேசிடுவேன்" என்றார். இந்த பஞ்ச் டையலாக்கை கேமரா முன்னாடி தான் சொன்னாரு
( Video can be watched here... )

அது சரி T-20 பிரபலம் ஆகுமா ? எனக்கு என்னவோ டெஸ்ட் மாட்ச் - நாவல் மாதிரி; 50 ஓவர் மாட்ச் - சிறுகதை ; T-20 - ஒரு பக்க கதை தான்!

மும்பையில் ஐந்து சின்ன நாய்குட்டிங்க பத்தி படித்தாயா ? ஓமன் நாட்டிலிருந்து மும்பைக்கு சரக்கு பெட்டியில மார்பிள் வந்தது அதில் ஒரு பெட்டியில ஐந்து நாய் குட்டிகள் இருந்துச்சாம். பன்னண்டு நாள் பயணம் செய்து பாவம் வந்திருக்கு. எப்படி இது பிழைத்தது தெரியுமா தொப்புள் கொடியை சாப்பிட்டு உயிர் வாழ்த்திருக்கு. அதிசயம் ஆனால் உண்மை. அதிகாரிகளிடம் கேட்டதற்கு என்ன சொன்னார்கள் தெரியுமா ?
"இது என்ன சார் பெரிசா போன வருஷம் ஒரு மாடே வத்திருக்கு"

போனவாரம் படித்த கிசு கிசு - "சில மாதங்களுக்கு முன்பு திருமண பந்தத்திலிருந்து விலகிக்கொண்ட அந்த இசை வாரிசு காரசாரமான ரேடியோ தொகுப்பாளினியின் அன்பில் கட்டுப்பட்டுவிட்டாராம். விரைவில் டும் டும் சத்தம் கேட்குமாம்." இந்த கிசு கிசுக்கு பதில் பேரையே சொல்லியிருக்கலாம்.

அந்த படம் ஒரு டென்னிஸ் வீராங்கனையின் படம். பிள்ளையார் சுழி மாதிரி இப்ப இந்த மாதிரி படம் போட்டு பதிவு எழுதினாதான் மக்கள் படிக்கிறாங்களாமே உண்மையா ?

சரி இதுக்கு மேலே எழுதினா அரசியலுக்கு போவேன்.
அதனால் இத்துடன் முடிச்சுக்கிறேன்.

பை!
முனிஸ்

16 Comments:

நாகை சிவா said...

ஹி...ஹி....

நாகை சிவா said...

உற்சாகம் நம் உற்சாகத்தை காணாமல் போக செய்யும் படம்... அதுக்கு 6 மார்க் எல்லாம் அதிகம்... ஷெரினுக்கு மார்க் போட்டு தான் சொல்லுறேன்.. 6 எல்லாம் ரொம்பவே அதிகம்... மருதமலை க்கு 4 தான் கொடுத்து இருக்கீங்க... இதுவும் அந்த ரேஞ்ச் தான்..

IdlyVadai said...

நாகை சிவா ஏதோ போட்டுட்டே சரி ஒரு மார்க் கம்மி செய்யறேன் :-)

jeevan said...

இதை நான் அப்பவே சொன்னேன். இ.வி தான் கேட்கவில்லை. கிரிடம் சிறந்த படம். உற்சாகம் மொக்கை....

இப்படி பண்ணிட்டிங்களே....

முதலில் அதை மாத்துங்க.....

ஜீவண்.

VIJI said...

sooperr letter....

appddiyye, nagai siva maddrri ennakkum orru off topic kurai..
addhu ennagga marudhamalai padathukku evvlo kamiiyya mark ? enkitta vitta 7 pottu irrupen :(

comedy nalla dhaanna irrundaddhu :?

Srikanth said...

//
இந்த நிகழ்ச்சியில் சிம்பு அழுதுகிட்டே அடித்த டையலாக் "எனக்கு என் அப்பா ஸ்டார்ட் கேமரா சொன்னாதான் நடிக்கணும்னு சொல்லித்தந்திருக்கிறாரு, கேமரா இல்லைன்னா எனக்கு நடிக்க தெரியாது. ரொம்ப ஃபிராங்கா பேசிடுவேன்" என்றார்.
//

என்னடா... இட்லிவடை group-ல் எதுவும் இதுபற்றி சொல்லக்காணோமே என்று பார்த்தேன் - என் நம்பிக்கை வீணாகவில்லை ;)

Anonymous said...

டென்னிஸ் மாது என்ன ஆங்கிலச் சீயா? எந்த ஊரச் சீ?

Anonymous said...

சரி இதுக்கு மேலே எழுதினா அரசியலுக்கு போவேன்.
அதனால் இத்துடன் முடிச்சுக்கிறேன்.

arasiyalukkuthane unga blog'kku varadhey.. ippadi sollitteenga?

Anonymous said...

ஆவி, ஜூவி,ஏவி எல்லாம் பொம்பளங்களை போட்டு தான் பிழைப்பு.உங்களுக்குமா அந்த கதி?

சகிக்கவில்லை....இதுக்கு கேட்டகூடாத கேள்வியே தேவலை

Boston Bala said...

நாகை சிவா மார்க் என்றதும் வேறு எதற்கோ மதிப்பெண் குறித்து சொல்லியிருக்காராக்கும்னு நெனச்சேன் ;)

இலவசக்கொத்தனார் said...

என்னாச்சு பதிவுலகம் பத்தி முனி ஒண்ணுஞ் சொல்லக்காணும்?

பாபா, அதானே!!!

மஸ்கிட்டோ மணி said...

L//சிம்பு ப்ரித்திவியோட டான்ஸ் பிடிக்கலன்னு சென்னரு, இதுக்கு ப்ரித்திவி கொஞ்சம் காட்டமா பேச, சிம்பு நான் ஜட்ஜா இருக்க மாட்டேன்னு வெளியே போக, கார் வரை போனவர காலில விழுத்து அழைச்சுட்டு வந்தாங்க. அப்புறம் ப்ரித்திவிராஜ் வெளியே போக நல்ல டிராமா. எப்படியோ TRP ரேட்டிங்கை ஏத்திட்டாங்கையா ஏத்திட்டாங்க//


இந்த மாதிரி வெளியே போறேன்னு சொல்லிட்டு , உடனே திரும் வர்ற டெக்னிக் தமிழ்பதிவர்களை பொருத்த வரை பழசுதான். விஜய் டிவிக்கு புதுசு..

ramachandranusha(உஷா) said...

இ.வ பதிவுக்கு பொம்பள பிள்ளைங்க போவக்கூடாதுன்னு சொன்னாங்களே? நாராயணா நாராயணா!

Prakash said...

இட்லி வடையாரரே, இப்போது தான் ஆனந்த விகடன் - விகடன் வரவேற்பறை பகுதியில் இட்லிவடை பற்றி எழுதி இருப்பதைப்பார்த்தேன். வாழ்த்துக்கள் :-)

IdlyVadai said...

பிரகாஷ் தகவலுக்கு நன்றி. நான் இன்னும் படிக்கலை :-).
போனவாரம் "தமிழ் காமிக்ஸ் உலகம்" என்று வந்த போதே நினைத்தேன் நிச்சயம் இந்த வாரமும் காமெடி தான் என்று :-)

IdlyVadai said...

//இ.வ பதிவுக்கு பொம்பள பிள்ளைங்க போவக்கூடாதுன்னு சொன்னாங்களே? நாராயணா நாராயணா!//

உஷா அது பொம்பள புள்ளைங்க கவலைபட வேண்டியது, நீங்க லூஸுல விடுங்க ;-)