பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 07, 2007

பூச்சாண்டி காட்டும் ஜெ, கருணாநிதி

ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுகாவுக்கு உரிமை உள்ளது. கிரிமினல் வழக்கு என்று பூச்சாண்டி காட்ட வேண்டாம் - ஜெ.

போராட்டம் பற்றி பேச ஜெயலலிதாவுக்கு தகுதி இல்லை - கலைஞர்

முழு அறிக்கை கீழே...


ஜெ அறிக்கை:

பல்வேறு வகையான கண்டனங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள் மூலம் ஜனநாயக கோட்பாட்டுக்கு உட்பட்டு ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராகவும் ஒரு மாபெரும் கட்சியை வழி நடத்துகின்ற சூழ்நிலையிலும் ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறேன். என்னைப் பார்த்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதற்காக கிரிமினல் பிரிவுகளில் வழக்கை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று கருணாநிதி பூச்சாண்டி காட்டுகிறார்.

தன்னைவிட அதிகமாகத் தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசை நடத்தும் கருணாநிதி எனக்கு மிரட்டல் விடுப்பதன் மூலம் எவ்வளவு பரிதாப நிலையில் இருக்கிறார் என்பது தெரிகிறது.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய விடுதலைக்காக மக்கள் நடத்திய போராட்டங்களைப் பற்றியோ அதனை அடக்குவதற்காக ஆள்தூக்கி வாய்ப்பூட்டுச் சட்டமாகிய "ரெüலட்' சட்டம் பற்றியோ அந்த சட்டம் அடைந்த அதோகதியைப் பற்றியோ தெரிந்து கொள்ளாமல் இவ்வாறு மிரட்டி இருக்கிறார் கருணாநிதி.

அரசியல் அமைப்புச் சட்டம் இந்திய மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட போது அதில் முற்பகுதி என்று ஒன்று சேர்க்கப்பட்டது. அதில் அரசியல் நீதியும் சுய சிந்தனை உரிமையும் அவ்வாறு சிந்திப்பதை ஜனநாயக கோட்பாட்டின்படி வெளிப்படுத்தும் உரிமையையும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிக்கல் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

அதோடு நல்ல நோக்கத்துக்காக ஓர் இடத்தில் மக்கள் கூடுவது, போராட்டங்களை மேற்கொள்வது ஆகியவை எல்லாம் ஜீவாதார உரிமைகளாக, அடிப்படை உரிமைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பது கூட கருணாநிதிக்கு தெரியவில்லை. மக்களுடைய தேவைக்காக போராடுவது மக்களின் தேவைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சியினர், சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுவது எந்த விதத்திலும் கிரிமினல் குற்றம் ஆகாது.

தமிழ்நாடு முழுவதும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களின் அன்றாடப் பிரச்னைகள் குறித்து அதிமுக நிர்வாகிகள் எனக்கு கொடுக்கின்ற தகவல்களின் அடிப்படையில் தான் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி அதிமுக செயல்பட்டு வருகிறது. இந்திய நாட்டில் உள்ள சட்டங்களுக்கு உட்பட்டுத்தான் அதிமுக பொதுச் செயலாளர் பணியாற்றி வருகிறார்.

மக்களுடையே பிரச்னைகளை வலியுறுத்தி ஜனநாயக ரீதியில் சட்டத்துக்கு உட்பட்டு போராடுவது என்பது கிரிமினல் குற்றம் என்று சொல்கின்ற விநோத மனிதர் கருணாநிதி.

மக்களைப் பற்றி சிந்திக்கவும் அவர்கள் நன்மைக்காக போராடுவதற்கும் எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் எனக்கு முழு உரிமை உள்ளது. மக்கள் குறைகளை அரசுக்கு எடுத்துச் சொல்வது எனது கடமை. ஜனநாயக முறையில் மக்கள் கடமையாற்றும் என்னை, கடமையாற்ற விடாமல் தடுப்பது ஜனநாயகத்தின் குரல் வளையை மிதிப்பதற்குச் சமம்.

இடிப்பாரை இல்லாத ஏமார மன்னன்
கெடுப்பாரிலானுங் கெடும்

என்றார் திருவள்ளுவர். தப்பு செய்தால் கண்டித்து அறிவுரை சொல்லப் பெரியோர் அருகில் இல்லாத அரசன் எதிரி இல்லாமலேயே அழிவான் என்ற குறளினை குறளுக்கு உரை எழுதியதாக சொல்லிக் கொள்ளும் கருணாநிதி வரும் காலங்களிலாவது பின்பற்றுவது நல்லது.

கலைஞர் பதில் அறிக்கை:

கேள்வி:- சட்டத்திற்கு விரோதமாக ஜெயலலிதா விடுகின்ற அறிக்கைகளுக்கு ஆதாரங்களோடும், புள்ளி விவரங்களோடும் நீங்கள் தருகின்ற பதில் பற்றி ஜெயலலிதா "பூச்சாண்டி காட்டு கிறாரா கருணாநிதி'' என்று கேட்டிருக்கிறாரே?

பதில்:- "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்'' என்பார்கள் தனது ஆட்சிக் காலத்தில் நள்ளரவில் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து கருணாநிதியை கைது செய்தோமே, அதற்குப்பதிலான தன்னை எப்போது கைது செய்வார்களோ என்ற அச்சத்தில் தினம் தினம் நடுங்கிக் கொண்டு, தொண்டர்களைத்தூண்டி விட்டு அதிலே குளிர் காய்ந்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவிற்கு, நாம் நியாயமாக எழுதும் வார்த் தைகள் கூட பூச்சாண்டி காட்டுவதாகத் தெரியும்.

4-9-07 தேதி நாளேடுகளில் வெளிவந்த ஜெயலலிதா அறிக்கையில், `உளவுப் பிரிவு, உண்மையிலேயே செயல்பட்டு, அந்த தகவல் அறிக்கைகளாக வெளிவரும் போது அதனை முதல்வருக்கு அளிக்கத் தேவையில்லை என்று உள்ளாட்சியும், உயர்கல்வியும் மற்றும் சில காகஸ் கும்பலும் மறித்து பிடுங்கி கிடப்பில் போட்டு விடுவதாக எனக்கு தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன என்று கூறி இருந்தார்.

உளவுப் பிரிவிலிருந்து தகவல்கள் அவரது ஆட் சிக்காலத்தில் முதல்- அமைச்சரைப்பார்க்க இயலாத நிலையில் தட்டச்சு செய்து ஆட்கள் மூலமாக அனுப்பப்படுவதைப் போல தற்போது வருவது இல்லை என்ற உண்மையையே அவர் தெரிந்து கொள்ளாத நிலையில் இருக்கிறார்.

உளவு துறை சார்பில் அன்றாடம் அந்தத் துறையின் அதிகாரி காலையில் என்னைச்சந்தித்து அவ்வளவு விவரங்களையும் நேரடியாக என்னிடம் தெரிவிப்பாரே, தவிர அவர் தகவல்களை அனுப்புகிறார் என்பதும் அதனை இடையில் அமைச்சர்களும் காகஸ் குழுவினரும் மறித்து பிடுங்கி கிடப்பில் போட்டு விடுவதாகவும் ஜெயலலிதா எழுதியதில் எந்தவிதமான உண்மையும் கிடையாது.

எல்லாவற்றிலும் தவறான தகவல்களின் அடிப்படையில் அறிக்கை விடும் ஜெயலலிதா, இந்த பிரச்சினையிலும் முற்றிலும் தவறான தகவலைத் தான் எழுதியிருந்தார்.

இது மாத்திரமல்ல, அவர் இவ்வாறு அன்றாடம் உண்மைக்கு மாறான செய்திகளை எல்லாம் வெளியிட்டு தொண்டர்களை உசுப்பி விட்டு போராட்டங்களைத் தூண்டி விட்டு கொண்டிருப்பதை குறிப்பிட்டுத் தான் இப்படிப்பட்ட செய்திகளைப்பரப்புவதும், அவற்றை வெளியிடுவதும் சட்டத்தை மீறுகின்ற செயல் என்றும் நான் சொல்லி இருக்கிறேன். இது எப்படித் தவறாகும்ப

அவசரக் குடுக்கை போல எந்த காரணமும் இல்லாமல் முன்னாள் முதல்-அமைச்சரை அர்த்த ராத்திரியில் கைது செய்யச் சொல்வதும் பிறகு வழக்கு போட எந்த விதமாக முகாந்திரமும் இல்லாமல் முகத்தில் கரியைப் பூசிக் கொண்டு நகைப்புக்கு ஆளாவதும் அவருக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.

இந்த அரசை பொறுத்த வரையில் நியாயமான முறை யில் நேர்மையான வழி யில் எல்லா விதமான ஆதா ரங்களையும் கையிலே வைத்துக் கொண்டு தான் செயல்படும். தவறு செய்யாதவர்களை தண்டிக்கவும் முடியாது. தவறு செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ள வும் முடியாது. இதைப் புரிந்து கொள்ளாமல், அரசு நடத்துவோரை உருட்டி மிரட்டிப்பார்ப்பதும், ஜனநா யகத்திற்கு இலக்கணம் கூறிட முன் வந்து முந்திரிக்கொட்டை போல ஒவ்வொன்றிலும் தலை காட்டுவதும், ஏதோ அவர் தான் ஜனநாயகச் செல்வி'' என்று சில ஏடுகள் தலைப்புச் செய்தி வெளியிடுவதும் நகைப்புக்கு இடமளிக்கும் காரியங்கள் என்பதையும் காவல் துறை உளவுத் துறை சட்டத் துறை இவற்றை சட்டத்திற்குப் புறம்பாக குற்றம் சாட்டவதும் சட்டத்தை மீறிய நடவடிக்கைகள் என்பதை அம்மையார் அறிந்து கொள் வது நல்லது.

கே:-ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் இந்திய விடு தலைக்காக போராடிய தலை வர்களைப் பற்றியோ அதனை அடக்குவதற்காக பிறப் பிக்கப்பட்ட ரவுலட்சட்டம் பற்றியோ நீங்கள் தெரிந்து கொள்ள வில்லை என்று சொல்லியிருக்கிறாரே?

ப:- ஆமாம் வாய் பூட்டுசட்டம் அடக்குமுறை அராஜகம் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை கைது சிறை, தொழிலாளர்கள் மீது எஸ்மா, டெஸ்மா சட்டங்கள் மத மாற்றத் தடைச்சட்டம் இவையெல்லாம் தமிழ்ëநாட்டில் கொண்டு வந்தது யார் என்று சிறு பிள்ளைகளைக் கேட்டாலே சொல்லுமே, ஜெயலலிதா என்று தமிழகத்திலே இந்தி ஆதிக்க எதிர்ப்புப்போராட்டம் நடந்து தமிழக மாணவர்கள் தெருவிலே பிணமாக வீழ்ந்த போது கார்வார் கோவா கடற்கரைகளில் டூயட் பாட்டுக்கு நடனமாடிக் கொண்டிருந்தவருக்கு போராட்ட ம் பற்றி பேசுவதற்கு தகுதி ஏதாவது இருக்கிறதா?

கே:- ஜெயலலிதாவின் அறிக்கையில் பல்வேறு வகையான கண்டனங்கள், போராட்டங்கள், ஆர்ப் பாட்டங்கள் அறிக்கை கள் மூலம் ஜனநாயகக்கோட் பாட்டுக்கு உட்பட்டு ஒரு பொறுப்புள்ள எதிர்கட்சித் தலைவராகவும் ஒரு மாபெ ரும் கட்சியை வழி நடத்துபவராகவும் என்றெல் லாம் தன்னைப் பற்றியே ஒரே புகழாரங்கள் அவரே சூட்டிக் கொண்டுள்ளாரே?

ப:-இந்த ஒரு வாக்கியத்தி லிருந்து அந்த அறிக்கையை அவர் எழுதவில்லை என்பதைப்புரிந்து கொள்ள முடிகிறதல் லவா?

கே:-ஜெயலலிதா அறிவித்து அ.தி.மு.க. நடத்திய குப்பை அள்ளும் போராட்டம் எப்படி?

ப:- அதைப்பற்றி ஆளுங் கட்சிக்கு சொந்தமான அல்லது ஆதரவான ஏடு அல்ல ஒரு நாளேட்டில் வெளிவந்த செய்தியைத் தரு கிறேன். நீங்களே புரிந்து கொள்ளுங்கள்அ.தி.மு.க. நடத்திய குப்பை அள்ளும் போராட்டம் பற்றி.

"அ.தி.மு.க. சார்பாக திடீர்னு சென்னையில் குப்பை அள்ளும் போராட்டம் நடத்தினாங்களே வே...அப்ப, தி.நகர் எம்.எல்.ஏ. தலைமையில் ஒரு டீம் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதிகள்ல குப்பை அள்ளினது... ஒரு தெருவில் குப்பையை அள்ளி போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு பக்கத்து தெருமுனையில் அந்தக் குப்பையை போட்டுட்டு கிளம்பினாங்க வே..ரெண்டு பகுதிலேயும் இப்படித்தான் செஞ்சாங்க.. இதைப் பார்த்த அந்தப்பகுதி மக் கள், குப்பையை போட்ட கட்சிக்காரங்களோடு சண் டைக்கு போயிட்டாங்க...

"குப்பையை அள்ளி குப்பை இல்லாத இடத்துல போட்டுட்டு போறீங்களே ன்னு சத்தம் போட்டாங்க... குப்பையை ரொம்பதூரத்துக்கு கொண்டு போணுமேன்னு அந்த டீம் கண்டுக்காம கிளம்பி போயிட்டு....குப்பை எடுக்கிறதை போட்டோ எடுக்க வந்தவங்களே இதை பார்த்து சிரிச்சாங்க...''

போதுமா அ.தி.மு.க. நடத்திய போராட்டத்தின் லட்சணமும் ஊரை ஏமாற்றுகின்ற நாடகமும்!

கே:- தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்களே?

ப:- கிராம மக்களுக்குப் பணி புரிகின்ற ஆர்வமும் அக்கறையும் மருத்துவத் துறை மாணவர்களுக்கு வரவேண்டுமென்பதில் இரு கருத்துக்களுக்கு இடமில்லை. அதற்காக அவர்கள் ஓராண்டு காலம் மேலும் அதிகமாகப் படிக்க வேண்டும் என்ற கால நீடிப்பு ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை. இந்தப் பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கட்சி, இந்தியக் கம்ïனிஸ்டு கட்சி தலைவர்கள் கூறியுள்ள கருத்துக்களை மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அன்புமணி ஏற்று செயல்பட வேண்டும் என்பது என்னு டைய விருப்பமாகும்.

கே:- ஜவ்வரிசி, ஸ்டார்ச் தொழிற்சாலைகள் வேலை நிறுத்தம் பற்றியும், மரவள்ளி பயிர் அழியும் அபாயம் உள்ள தாகவும் முதல்-அமைச்சர் தலையிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்ட் கட்சித் தலைவர் அறிக்கை விடுத்துள்ளாரே?

ப:- இதைப்பற்றி விவர அறிக்கை அரசின் சார்பில் ஏற்கனவே ஏடுகளுக்குத் தரப்பட்டுள்ளது. அந்த சங்கத்தின் சார்பிலும் எனக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை உயர்நீதி மன்றத்தில் உள்ளது. எனவே வழக்கின் முடிவு தெரிவதற்குள்ளாக அரசின் சார்பில் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலைமை உள்ளது. விரைவில் நீதிமன்றத்தில் முறையிட்டு இதற்கொரு நல்ல தீர்வு காண்பதற்கு அரசு எல்லாவிதமான முயற்சி களிலும் ஈடுபடும்.

1 Comment:

Magesh said...

கருணாநிதி பேட்டியில் என்ன கேள்வியும் அவரே பதிலும் அவரேவா?