பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 25, 2007

ராமர் பாலத்தைக் காப்பதே பகுத்தறிவு!

ராமர் பாலத்தைக் காப்பதே பகுத்தறிவு! என்ற தலைப்பில் கல்கி தலையங்கம்

கண்ணகி என்கிற சிலப்பதிகாரக் கதாபாத்திரத்தை ஏற்கவும்,
மதிக்கவும், போற்றவும் தயாராக இருக்கிற கருணாநிதி, ராமாய ணத்தை ஆராய்ச்சிக் கூடத்தில் வைத்துக் கூறுபோடுவதில் மகிழ்ச்சி கொள்கிறார். இந்த முரண்பாட்டை மக்கள் கவனிக்காமல் இருந்து
விடப் போவதில்லை.

தி.மு.க.வினர், அவர்களுடைய தனிப்பட்ட கட்சிக் கொள்கை யைச் சார்ந்து நின்று திருப்தி கொள்ளட்டும். ஆனால், ராமர் நிஜ மாகவே வாழ்ந்தாரா என்கிற ஆராய்ச்சியும் நிரூபணமும் இந்தி யாவுக்கும், இறையுணர்வுள்ள கோடிக்கணக்கான இந்திய மக்களுக் கும் அவசியம்
இல்லை.

உணர்வுபூர்வமாகவும், அதையும் தாண்டிய ஆன்ம தேடலின் முடிவாகவும் விளங்கும் ராம பக்தியையும், நம்பிக்கையையும் எப்பேர்ப்பட்ட
சக்தியாலும் அசைக்க முடியாது. எனவே, ராமர் பாலத்தைத் தகர்க்காமலிருப்பதே அறிவுடைமை; பகுத்தறிவும் பட்டறிவும் கூட.

‘ராமர் சேதுவைத் தகர்க்கக் கூடாது என்கிற எதிர்ப்பு, சேது சமுத்தி ரத் திட்டம் தொடங்கி நீண்ட காலத்துக்குப் பிறகு திடீரென எழுந்துள்ளது; பணியைப் பாதியில் நிறுத்துவது பண விரயத்துக்கே வழி வகுக்கும்’ என்கிற தி.மு.க. தரப்பு வாதமும் தவறானது.

ராமர் சேது குறித்த ஆட்சேபணை, அந்தத் திட்டம் அறிவிக்கப் பட்ட
நிலையிலேயே எழுந்தது. அப்போது அதனைப் புறங்கையால்
தள்ளிவிட்டுத் திட்டத்தைத் தொடர்வதில் பிடிவாதம் காட்டியது தி.மு.க. அரசு, மத்திய தி.மு.க. அமைச்சா¢ன் துணையுடன்.

உணர்வுபூர்வமான காரணங்கள் மட்டுமின்றி, இயற்கை
சமச்சீர்நிலையின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவை பாதிக்கப்படும் என்பதாலும் ராமர் பாலத்தைத் தகர்க்க வேண்டாம் என்று வல்லுநர்கள் குரல் கொடுத்தார்கள். சுனாமி தாக்கியபோது, ராமர் பால அமைப்பு பாதுகாப்பு அரணாக விளங்கி பெருமளவுக்குச் சேதத்தைக் குறைத்தது என்பதைச் சுட்டிக் காட்டினார்கள். பகுத்தறிவுக்கு உட்பட்ட இந்தக் காரணத்தைக்கூட ஏற்க தி.மு.க. அரசு தயாராகயில்லை.

ஆக, இந்த விஷயத்தில் மக்கள் நலனைக் காட்டிலும் அரசியல் சுயநலமே ஆதாரமாக இருந்திருக்கிறது. இந்நிலையில், “பா.ஜ.க.
வினர் இவ்விஷயத்தை அரசியலாக்கிப் பொ¢து படுத்துகிறார்கள்” என்று குற்றம் சாட்டுவது வேடிக்கை! ராமர் பால விஷயத்தில் பிடிவாதம் காட்டுவது பா.ஜ.க.வுக்கு அரசியல் ஆதாயமாக முடியும் என்கிற அனுபவ அறிவு ஆரம்பக் கட்டத்திலேயே கலைஞருக்கு இல்லாமல் போய்விட்டது ஆச்சர்யமே!

மேலும், இந்திய அகழ்வாராய்ச்சிக் கழகம், உச்சநீதிமன்றத்தில்
சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தை வரைவதில் தி.மு.க. தரப்பில் டி.ஆர்.பாலுவின் அரசியல் தலையீடு, பின்னர் அதனை அமைச்சர் பரத்வாஜ் வாபஸ் பெற்றதில் அரசியல், அம்பிகா சோனி பதவி விலக வேண்டுமென மற்றொரு காங்கிரஸ் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் குரல் கொடுத்து, பின்னர் அதற்கு மன்னிப்பும் கேட்டதில் அரசியல் என்று
இவ்விவகாரத்தை ஆளும் கூட்டணியும் எவ்வளவு அரசியல் பண்ண முடியுமோ பண்ணிவிட்டது!

வோட்டுக் கேட்க வந்தபோது, ஸ்டாலின் கோயில் பா¢வட்டத்தை மா¢யாதையுடன் ஏற்றுக் கொண்ட அரசியல் ஸ்டன்ட்டைத் தமிழகம் மறந்து விடவில்லை. ஆட்சியில் அமர்ந்த பிறகு, அதிகார பலம் தி.மு.க.வின் கண்ணை மறைக்கிறது.

சிறுபான்மையினர் உண்மைகளை மட்டுமின்றி, உணர்வுகளையும்
மதிக்கத் தயாராயிருக்கும் பகுத்தறிவு அரசியல்வாதிகள், ஹிந்துக்களின் உணர்வுகளை மட்டும் உதாசீனப் படுத்துவதுடன் கீறிப் புண்படுத்துவது, பி¡¢வினை உணர்வுகளையே வலுப்படுத்தும்.

மக்களுடைய உணர்வுகளை மதியாத பகுத்தறிவு வாதம் எடுபடாது.

பாபர் மசூதி தகர்ப்பின் பின்விளைவுகளிலிருந்தே நாம் இன்னும்
மீளவில்லை. ராமர் பால விவகாரத்தை, அதை விடவும் பொ¢யதொரு
பிரச்னையாக்கிவிடாதீர்கள்!

10 Comments:

Anonymous said...

good editorial by kalki..........even this will be criticised by anti brahmins movement...............i can say that only..........

வடுவூர் குமார் said...

நாடு/மக்கள் பெறப்போகும் நல்வாழ்கையை ராமர் கெடுத்துவிட்டார் என்ற அவச்சொல் வரக்கூடாது, அதனால் இந்த பாலம் மேட்டரை தூக்கிக்கடாசிவிட்டு உருப்படியான யோஜனை இருந்தால் சொல்லலாம்.
கல்கி தலையங்கத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

Anonymous said...

என்னப்பா இது?
சுனாமியைத் தடுத்ததில் இராமர் பாலத்துக்கு என்ன தொடர்பு?
கொஞ்சமும் புவியியல் பற்றி அறிவில்லாதவர்களால்தான் இப்படிச் சொல்ல முடியும்.
பூமியதிர்வு ஏற்பட்ட இடத்திலிருந்து பார்த்தால் இராமர் அணையெனச் சொல்லப்படும் இடம் சுனாமி அலையைத் தடுக்க வாய்ப்பேயில்லை. தடுத்தது இலங்கைத் தீவுதான். இலங்கைத் தீவை மேவிய அலைகள்தாம் தமிழகத்தின் சிலவிடங்களைத் தாக்கின. இராமர் பாலம் தடுத்திருக்க வேண்டுமானால் இலங்கையின் வடபாகத்தில் மன்னார்ப்பக்கமாக உள்ள கரையோரங்கள் தாக்குதலுக்கு உள்ளாவியிருக்க வேண்டும்.

சிலவேளை சுனாமி அலை இலங்கை வடக்குக்கு மேலாகப் பறந்துவந்து இராமர் அணையில் முட்டிமோதி நின்றதோ என்னவோ?

அருண்மொழி said...

//ராமர் சேது குறித்த ஆட்சேபணை, அந்தத் திட்டம் அறிவிக்கப் பட்ட
நிலையிலேயே எழுந்தது. அப்போது அதனைப் புறங்கையால்
தள்ளிவிட்டுத் திட்டத்தைத் தொடர்வதில் பிடிவாதம் காட்டியது தி.மு.க. அரசு, மத்திய தி.மு.க. அமைச்சா¢ன் துணையுடன்.
//

இப்படித்தான் நடுநிலையான தலையங்கம் எழுதவேண்டும். எல்லோரும் ஜோரா ஒரு முறை கைதட்டுங்கள்.

Thamizhan said...

அய்யோ பாவம்!கல்கியும்,துக்ளக்கும்,தினமணியும்
பொய்மல்ரும் அழுது மூக்கு சிந்தி,
காஞ்சி சுப்புணிக்கப்புறம் இந்த மாதிரி ஒரு இழவு நடந்ததில் கலங்கியுள்ளனர்.

வால்மீகியை வரிக்கு வரி தமிழில் மொழி பெயர்த்து எழுதப் போகிறார்களாம் தமிழறிஞர்கள்.அதையும் மேதை உ.வே.சி.சிறீனிவாச அய்யங்கார் பி.ஏ. அவர்களின் மொழி பெயர்ப்பையே சின்னக் குத்தூசியாரின்
கருத்துக்களுடன் முரசொலியில் வந்திருப்பது போல எழுதப் போகிறார்களாம்.

K.R.அதியமான். 13230870032840655763 said...

150-year dream for 150-year old ships
By Swaminathan S. Anklesaria Aiyar

Religion and history do not mix well. I shrug my shoulders at those opposing the Sethusamunda-ram canal because it will damage the remains of the bridge that Ram’s army used in the Ramayana.

Now, i too oppose the canal, but on economic and environmental grounds. Its rationale is more political than economic. It will become one more public sector white elephant.

The Palk Straits, between Tamil Nadu and Sri Lanka, are so shallow that only small boats can pass through. So, east-west coastal ships have to go around Sri Lanka. So do ships from Europe and Africa to the east coast.

Sethusamundaram will be a furrow dredged in the sea-bed of the Straits, deep enough to accommodate ships of 20,000 DWT. The canal will save ships both distance (saving fuel) and time (saving daily charges for chartering ships). So, it should be able to charge ships for passage, like the Suez and Panama Canals. This revenue is supposed to make the project economic.

The project is a political gift for Tamil Nadu. It will hugely help Tuticorin port, which today can receive ships only from the west, and not the east. It will improve the viability of existing and planned minor ports in the state. Hence, Tamils call the canal a 150-year dream about to come true (it was first proposed around 1850).

Dreams are costless, but canals are not. Project documents claim that the canal will save ships 36 hours of time and 570 nautical miles of distance. But a recent study by Jacob John in Economic and Political Weekly exposes these claims as highly exaggerated. Up to 70% of the traffic through the canal is projected to come from Europe and Africa. And John estimates that the time saving from Europe to Kolkata will be only eight hours, and the distance saving 215 nautical miles. From Africa to Kolkata, the time taken will actually increase by 3.5 hours (being piloted through the canal is a slow process), and distance reduced will be only 70 nautical miles.

John calculates that ships could lose up to $4,992 per passage if they are charged the tariff laid down in project documents. In which case ships will find it cheaper to go round Sri Lanka. If the government cuts the proposed tariff to attract traffic, John estimates that the project’s rate of return could fall to an uneconomic 2.5%. I expect that the project will also suffer cost overruns in capital and maintenance dredging, and hence be in the red.

The canal is supposed to be ready by November 2008, not far off. So why has the project not been able to sign up potential users? The finance minister has appealed to private shipping companies to participate in a project that will benefit them, yet no shipping company has come forward. The economics of the canal look much too dicey.

The Suez and Panama Canals save ships thousands of miles, and that makes them profitable. Sethusamundaram is not remotely comparable. It is designed for small ships (the project documents talk of 20,000 DWT), whereas the Panama Canal takes ships of up to 65,000 DWT and Suez takes ships up to 150,000 DWT.

The Suez and Panama canals were dug through land corridors, and once dug stayed dug - they did not face sand inundation from the sea. However, Sethusamundaram will be a furrow in the sea-bed, at the constant mercy of currents bearing sand.

The government’s environmental assessment has cleared the project on ecological grounds. Yet, much of that assessment was not about sand incursion, but about fears of possible damage to coral reefs, coastal erosion, oil spills, and changes in ocean salinity and temperature. Besides, the ecological studies were done from the Indian side of the Palk Straits, and not the Sri Lankan side, and so are technically incomplete.

My own major fear is not so much that the project will ruin the environment, but that the environment will ruin the project. I fear that ocean currents will keep dumping fresh sand in the furrow of the canal. The Palk Straits are shallow not by accident but because sand-bearing currents have made them so. Combating the full force of nature is perilous, expensive and sometimes impossible.

The project envisages maintenance dredging of two million cubic metres per year, infinitely more than required by the Suez and Panama canals. Jacob suspects (and so do i) that actual maintenance dredging will far exceed project projections, rendering the canal uneconomic. An extreme event (like the 2005 tsunami) could dump enough sand to close down the canal.

Finally, global shipping is shifting to ever-larger vessels. Bulk carriers and tankers often exceed 200,000 DWT, and those under 60,000 DWT are being phased out as uneconomic. Old general cargo vessels have been replaced by container ships, which started small but now exceed 35,000 DWT, and may soon touch 75,000 DWT. Such vessels cannot use the canal.

So, Sethusamundaram will be unsuitable for the large vessels of the 21st century. It is a 150-year old idea for 150-year old ships. That may be its epitaph.

http://www.swaminomics.org/

vivek.dgl said...

ramarra irundhadaka yaravathu adayalam kattinal nalladhu..

ramarea illai idhilea ramar palam verru......

ramar pallathai kapathaal yarruku yenna lapam........

roomba thamasumpa neengaaaaaaaa......

-----vivek

Anonymous said...

//தி.மு.க.வினர், அவர்களுடைய தனிப்பட்ட கட்சிக் கொள்கை யைச் சார்ந்து நின்று திருப்தி கொள்ளட்டும். ஆனால், ராமர் நிஜ மாகவே வாழ்ந்தாரா என்கிற ஆராய்ச்சியும் நிரூபணமும் இந்தி யாவுக்கும், இறையுணர்வுள்ள கோடிக்கணக்கான இந்திய மக்களுக் கும் அவசியம்
இல்லை.//

உண்மைதான்....கருணாநிதிக்கு ஆட்சிய முழுசா நடத்தினா பிடிக்காது....நடுவுல கவுக்க என்ன செய்யணுமோ அதை கரீக்ட்டா செய்துடுவாரு....இது அந்தமாதிரி ஒண்ணா ஆச்சுன்னா நல்லா இருக்கும்....எவனாவது ஒருத்தன் கேஸ் போடட்டும், அப்ப தெரியும்.

Subramanian said...

//Thamizhan said...
அய்யோ பாவம்!கல்கியும்,துக்ளக்கும்,தினமணியும்
பொய்மல்ரும் அழுது மூக்கு சிந்தி,
காஞ்சி சுப்புணிக்கப்புறம் இந்த மாதிரி ஒரு இழவு நடந்ததில் கலங்கியுள்ளனர்.
//
Dont be Novice!!!

Why you ppl dont HEAR one thing clearly...These papers stress to implement the project in other ways (there are 6 ways already proposed)

But TR Balu only stressing to destruct the pallam (Note, there is huge money involved from the sand of the destructed palam sand, also huge commision involved in the destruction of the pallam)

As TR Balu owns shipping corporarion and his close contractions only grapped this project.

Also TR Balu says, all other six ways are affects environment, only this way (considered) does not affects environment!!! Its a real commedy !! He never explain how this considered way does not affect environment and how it is different from other ways?

Can any body explain ??????

Why naturally formed pallam to be destryoyed ?? Still there are other ways to implement the project.

Subramanian said...

//K.R.அதியமான். 13230870032840655763 said...
150-year dream for 150-year old ships
By Swaminathan S. Anklesaria Aiyar
//

Idly vadai, can you please translate it to tamil so that other fellow readers can clearly understand what he says...

Please do this, because ppl with less knowledge in this commenting here as a geo ppl like
//Anonymous said...
என்னப்பா இது?
சுனாமியைத் தடுத்ததில் இராமர்
Thamizhan said...
அய்யோ பாவம்!கல்கியும்,துக்ளக்கும்,தினமணியும்
பொய்மல்ரும் அழுது மூக்கு சிந்தி,
காஞ்சி சுப்புணிக்கப்புறம் இந்த மாதிரி ஒரு இழவு நடந்ததில் கலங்கியுள்ளனர்


//