பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 06, 2007

கேள்வி கருணாநிதி, பதில் கலைஞர்

ராமதாஸ் என்னை திட்டவில்லை, ஆலோசனை வழங்குகிறார்..

கேள்வி:- எதிர்க்கட்சிகள் ஆட்சியினரைத் தாக்குவதை விட அதிகமாக உங்களுடைய தோழமைக் கட்சியான பா.ம.க. தலைவர் தொடர்ந்து உங்களைத் தாக்கிக்கொண்டே இருக்கிறாரே?

பதில்:- அவர் தாக்குவதாக யார் சொன்னதுப ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைத் தான் வழங்குகிறார். தி.மு.கழகத் தினர் அவர் பேசுவதை எப்படி எடுத்துக் கொண்டாலும், என்னைப் பொறுத்தவரையில் நான் அப்படித்தான் எடுத்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் அவர் எழுப்பிய பிரச்சினை களுக்கு விளக்கம் அளிக்கவும் தயாராக உள்ளேன்.

அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் ஒரே பாடத் திட்டத்தின் கீழ் சம்ச்சீர் கல்வி வழங்குவதற்கான முத்துக்குமரன் குழுவினரின் அறிக்கையை உடனடியாக வெளியிட்டு, அதுபற்றி விவாதிக்கவும், முடிவு எடுக் கவும் சட்டப்பேரவையின் தனிக்கூட்டத்தை கூட்ட வேண்டுமென்றும் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

2006 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே தி.மு.க. சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி முறையை தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கிட வழியமைப்போம் என்று கூறப்பட்டது. எனவே சமச்சீர் கல்வி முறையில் தி.மு.க.விற்கு உடன்பாடு இல்லை என்று டாக்டர் ராமதாஸ் கூற மாட்டார்.

இவ்வாறு தேர்தல் அறிக்கை வெளியிட்டதோடு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், அதைப் பின்பற்றாமல் விட்டு விட்டதா என்றால் அதுவும் கிடையாது. ஆட்சிக்கு வந்ததும் சமச்சீர் கல்வி வழங்குவதற்காக முத்துக்குமரன் குழுவினரை யும் உடனடியாக அரசின் சார்பில் அமைக்கப்பட்டு, அந்தக் குழுவினர் உரிய காலத்தில் கூடி, பல ஆய்வு களை செய்து அதற்கான அறிக்கையினை அரசுக்கு 4.7.2007 அன்று தாக்கல் செய் துள்ளார்கள்.

எனவே இதிலும் அரசாங்கம் ஏதோ சுணக்கம் செய்து விட்ட தாகவும் கூற முடியாது. அந்த அறிக்கையினை உடனடியாக வெளியிட வேண்டுமென்று டாக்டர் ராமதாஸ் கூறியுள் ளார். பொதுவாக இது போன்ற முக்கியமான அறிக்கைகளை முதலில் சட்ட மன்றத்தில் வைப்பது தான் வாடிக்கை. ஜுலை மாதத்தில் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட தால், அடுத்து இன்னும் ஓரிரு மாதங்களில் கூடவிருக்கும் சட்டப்பேரவையிலே தான் அறிக்கை வைக்கப்பட வேண்டும். உடனடியாக சட்ட மன்றத்தை இதற்காகக் கூட்டி அறிக்கை மீது விவாதம் நடத் தப்பட வேண்டுமென்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு டைட்டானியம் தொழிற்சாலை பற்றிய பிரச்சினை வந்த போதும், சட்டமன்றத்தை இதற்காகக் கூட்டி விவாதிக்க வேண்டுமென்று அப்போது ஓர் அறிக்கை விடுத்தார் டாக்டர் ராமதாஸ். ஒவ்வொரு நாளும் எழும் ஒவ்வொரு பிரச்சினைக்காக அவ்வப் போது சட்டமன்றத்தைக் கூட்டி விவாதம் நடத்துவ தென்பது இயலக்கூடிய காரியமா என்பதை தமிழ்நாட்டிலே உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் தான் எண்ணிப் பார்க்க வேண்டும். முறைப்படி சட்டமன்றம் செப்டம்பர், அக்டோபர் திங்களில் கூடத் தான் இருக்கிறது. அப்போது இதுபற்றியெல்லாம் விவாதிக் கத்தான் இருக்கிறோம். அதற்குள் சட்டமன்றத்தைக் கூட்டு என்பதும், அதிலே இதைப்பற்றி விவாதம் நடத்து என்பதும் மேடைகளில் பேசுவதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்குமே தவிர, அரசை நடத்துவோருக்கு நடைமுறைச் சாத்தியமா என்பதையும் எண்ணிப் பார்ப் பது நல்லது.

மேலும் சட்டமன்றத்திலே இதைப்பற்றி விவாதம் நடத்தி, அதை உடனடியாக அமல் படுத்த முடியுமா என்பதையும் சிந்திக்க வேண்டும். ஏனென்றால் பள்ளிகள் எல்லாம் இந்தக் கல்வி ஆண்டில் ஏற்கனவே தொடங்கி பாதி ஆண்டைக் கடந்து விட்ட நிலையில், அடுத்த கல்வி ஆண்டில் தான் அதனை நடைமுறைப்படுத் தவே முடியும்.

டாக்டர் முத்துக்குமரன் அளித்த அறிக்கையினை மாநில திட்டக்குழு மற்றும் கல்வித்துறையைச் சார்ந்த உயர் அலுவலர்கள் குழுவிடம் கொடுத்து அவர்களின் பரிந் துரைகளும் கோரப்பட்டுள் ளது. தமிழக அரசின் சார்பில் நேற்றைய தினம் இதைப்பற்றி விவரமாக அறிக்கையும் ஏடு கள் வாயிலாக வெளியிடப் பட்டுள்ளது. மேலும் இந்தப் பிரச்சினை என்பது இந்த நாட்டின் வருங்கால தலை முறைகளான மாணவர்களின் படிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும். இதனை நடைமுறைப்படுத்த முன்வரும் போது அதற்கு எவ்வளவோ முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் எல்லாம் தேவைப் படும். அதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல் அவசரப்பட்டுப் பயனில்லை.

இன்னும் சொல்லப் போனால், சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத் திட தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையைப் போல இந்தியாவில் வேறு எந்த மாநில அரசும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் தமிழை ஒரு பாடமொழியாக்குவதற்கே இத்தனை ஆண்டுகாலமாகப் போராட வேண்டியிருந்தது.டாக்டர் ராமதாஸ் அவருடைய அறிக்கையில், "முதல்வரின் குடும்பக் குழந்தைகளும், உயர் அதிகாரிகளின் குடும்பக் குழந்தைகளும், தொழிலாளி யின் குழந்தைகளும் ஒரே பள்ளியில் அருகருகே அமர்ந்து படிக்க வேண்டும்'' என்றும் சொல்லியிருக்கிறார். என்னுடைய குடும்பக் குழந்தைகள் மீது டாக்டர் ராமதாசுக்கு எப்போதும் அக்கறை உண்டு என்பதை நான் அறிவேன். என்னைப் பொறுத்தவரையில் எங்கோ உட்கார்ந்து கொண்டிருப்ப வனாக என்னைக் கருதி கொள் பவன் அல்ல. அன்றாடம் உழைக்கும் தொழிலாளர்களில் ஒருவனாகத் தான் என்னைக் கருதிக் கொண்டிருப்பவன். என் வீட்டுப் பிள்ளைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்பது கூட எனக்குத் தெரி யாது. ஆனால் டாக்டர் ராமதாஸ் உள்ளத்தைப் புரிந்து கொள்ளாமல் இன்றைய நாளேடு ஒன்று "டாக்டர் ராமதாஸ் பேரக் குழந்தைகளை டெல்லியில் மேல் தட்டு வர்க்க பள்ளியில் படிக்க வைக்காமல் தமிழக அரசு ஆரம்ப பள்ளிகளில் படிக்க வச்சிருக்கலாம்ல...'' என்று விமர்சனம் செய்திருப்பதைப் போல நான் பதில் அளிக்க விரும்பவில்லை.

கே:- பினாமிக் கட்சி தலைவி ஜெயலலிதா திண்டிவனம் குறித்தும், திருமுட்டம் குறித்தும் தஞ்சை விவசாயிகள் பிரச்சினை குறித்தும் விடுத்த அறிக்கைகளுக்கு தெளிவான பதில்களை நீங்கள் தந்த பிறகு, அதற்கு எந்த விளக்கமும் அளிக்க முன் வராமல் தாம்பரத்தில் தண்ணீர் இல்லை என்றும் நெல்லையில் தெரு விளக்குகள் எரியவில்லை என்றும் அறிக்கை விடுத்துள்ளாரே?

ப:- ஜெயலலிதா அன்றாம் விடுக்கின்ற அறிக்கைகள் மூலம் அவருடைய கட்சிக்கு ஏதாவது பயன் கிடைக்கிறதோ இல்லையோ, அதற்கான விளக்கங்களைப் பெற்று நாம் மக்களுக்கு அளிக்கவும், அசூயை உணர்வோடு தான் ஜெயலலிதா அறிக்கைகளை அன்றாடம் வெளியிடுகிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள செய்யவும் அந்த அறிக்கைகள் பெரிதும் பயன்படுத்துகின்றன என்ற முறையில் அவருக்கு நன்றி செலுத்தலாம்.

தாம்பரம் குடிநீர் பிரச்சினை பற்றி அந்த நகராட்சியின் ஆணையர் அரசுக்கு அளித்து அறிக்கையின் சுருக்கம் வருமாறு:-

"தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட மேற்கு தாம்பரம் பகுதியில் வார்டு எண்.2ல் உள்ள எம்.ஈ.எஸ். சாலையில் திரு.வி.க. நகர் பூங்காவில் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்தேக்கத் தொட்டியும், அதன் அருகில் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டியும் அதன் அருகே பம்ப் ரூம் கட்டப்பட்டு பகிர்மான குழாய்கள் மற்றும் துணை பகிர்மான குழாய் 4 கி.மீ. தூரத்திற்கு பதிக்கப்பட்டு ஆங்காங்கே வால்வுகள் பொருத்தி பணி முடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பணி முடிக்கப்பட்டு 26-7-07 மற்றும் 27-7-07 ஆகிய தேதிகளில் குடிநீர் வடிகால் வாரியத்தினருடன் குடிநீர் விநியோக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. அப்போது சில இடங்களில் பகிர்மான குழாய்களில் கசிவுகள் ஏறபட்டதை ஒப்பந்தக்காரர் மூலம் கசிவுகள் சரி செய்யப் பட்டு குடிநீர் வழங்க நடவ டிக்கை

எடுக்கப்பட்டது.அந் நிலையில் அப் பகுதி 2-வது வார்டு அ.தி.மு.க. நகர மன்ற உறுப்பினர் சிலருடன் சேர்ந்து சட்ட விரோதமாக நகர மன்றத்தின் அனுமதியின்றி சிமெண்ட் சாலைகளை வெட்டி இருபது பொது குழாய்கள் அமைத் துள்ளனர். இதனால் இப் பகுதிக்கு நகராட்சி மூலம் குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. எனினும் பொது மக்களுக்குத் தேவையான குடிநீர் லாரிகள் மூலம் தொடர்ந்து விநியோகம் செய் யப்பட்டு வருகிறது.

மேலும் 6-6-2006ல் ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் காஞ்சீபுரத்தில் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட் டத்தில் தாம்பரம் நகர மகக்கள் தொகையைக் கணக்கிட்டு 2025 வருடம் வரை திட்டம் தீட்டி நாள் ஒன்றுக்கு நபர் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்க ஏதுவாக சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கையினை ஏற்று நகராட்சி பகுதிக்கு புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டம் மேற்கொள்ள உத்தர விடப்பட்டுமத்திய அரசு நிதியுடன் ரூ.35.85 கோடி செலவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பணி துவங்கி ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த தகவல்களில் இருந்து தாம்பரத்தில் குடிநீர் பிரச் சினைக்கு யார் காரணம் என்பதையும், தமிழக அரசு எந்த அளவிற்கு செயல்பட்டு வருகிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

திருநெல்வேலி மேலப் பாளையம் பகுதியில் தெரு விளக்குகள் எரியவில்லை என்ற பிரச்சினை குறித்து, அந்த மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வரப்பெற்றுள்ள பதிலின் சுருக்கம்

வருமாறு:-மேலப்பாளையம் பகுதியில் மொத்தம் 5963 தெரு விளக்கு கள் பராமரிக்கப்பட்டு வருகின் றன. சென்ற வருடம் 305 தெரு விளக்குகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வருடம் இதுவரை 255 தெரு விளக்குகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன. தெரு விளக்குகள் பராமரிப்பு தனியார் மூலம் பராமரிக்கப் பட்டு 99 விழுக்காடு தெரு விளக்கும், தினசரி எரிய வைக் கப்பட்டு வருகிறது.

எனவே ஜெயலலிதா அன் றாடம் வெளியிடும் அறிக் கைகளும் உண்மைக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. கறுப்புப் பூனையை இருட்டில் தேடும் கதைதான்.

1 Comment:

ஹரன்பிரசன்னா said...

எதற்கும் ஒரு எல்லை உண்டு என்று சொன்னது ராமதாஸ் சொன்ன அறிவுரைக்குத்தானா?