பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, September 23, 2007

இந்திய (இளைஞர்) கிரிக்கேட் அணி

கிரிக்கேட் பற்றி அவ்வளவாக இட்லிவடையில் எழுதுவதில்லை. இந்தியா கிரிக்கேட் மாட்ச் விளையாடினால், ஒருவிதமான பயம் தொற்றிக்கொள்ளும். சில சமயம், மழைவராதா என்று அல்பமாக நினைப்போம். ஆனால் தற்போது T20 விளையாட்டில் நம்ம இளைஞர்கள் விளையாடிய விளையாட்டை பார்க்கும் போது, பழைய கிரிக்கேட்(கபில் தேவ், ஸ்ரீகாந்த் போன்றவர்கள் இருந்த காலம்) பார்ப்பது போல் இருக்கிறது. சச்சின், டிராவிட், கங்குலி போன்ற அருமையான விரார்கள் இல்லாமல் இவர்கள் கலக்குவதற்கு காரணம் "Team Work". கூடவே இந்த வயசானவர்கள் இல்லாததால் தான் இப்படி கலக்குகிறார்களோ என்ற எண்ணமும் தோன்றுகிறது. முதல் தடைவையாக ( அல்லது ரொம்ப நாள் கழித்து ) இந்திய அணியினர்கள், கடைசிவரை வெற்றிபெருவோம் என்ற மனநிலையில் விளையாடுகிறார்கள். நேற்றைய மாட்சில் கடைசி மூன்று ஓவரில் அந்த டென்ஷனிலும் தோனி சிரித்துக்கொண்டிருக்கிறார். BCCI தோனியை கேப்டன் பதவியில் நீடிக்க வைக்க வேண்டும்.

நேற்று ஆஸ்தெரிலியாவை மஞ்சா சோறு சாப்பிட வைத்த நம் இளைஞர் கிரிக்கேட் அணிக்கு வாழ்த்துக்கள்.

பிகு: கேப்டன் பதவியை ஆவலோடு எதிர்பார்த்த முன்னணி வீரர் யுவராஜ்சிங் பெருத்த ஏமாற்றம் அடைந்து இருக்கிறார் என்று அவர் தந்தை சொல்லியிருக்கிறார். யுவராஜின் அதிரடிக்கு காரணம் இதுவா ?

7 Comments:

முத்துகுமரன் said...

ரெம்ப நேரமா எங்க இட்லி வடையையே காணோமேனு நினைச்சு படிச்சிட்டே வந்தா
//பிகு: கேப்டன் பதவியை ஆவலோடு எதிர்பார்த்த முன்னணி வீரர் யுவராஜ்சிங் பெருத்த ஏமாற்றம் அடைந்து இருக்கிறார் என்று அவர் தந்தை சொல்லியிருக்கிறார். யுவராஜின் அதிரடிக்கு காரணம் இதுவா ?
//.
தோனியின் தலைமைப்பண்பு இந்த மூன்று போட்டிகளில் அசத்தல். நல்ல எதிர்காலம் இருக்கிறது அவருக்கு.

ஹரன்பிரசன்னா said...

தோனியின் தலைமை, டீம் வொர்க் என்கிற வார்த்தைகளெல்லாம் நல்ல காமெடியாக இருக்கிறது. இருபது ஓவர் விளையாட்டு என்பதே ஒரு நகைச்சுவை. கிரிக்கெட்டின் அனைத்து குணாதிசயங்களையும் சுருக்கி, அடி அடி அடிமேல் அடி என்கிற ஒற்றைப் பரிமாணத்தில் அடக்கி வைக்கிறது இவ்விளையாட்டு. இதில் எந்த அணி வெல்லும் வெல்லாது என்பதற்கான பேச்சே இல்லை. அடித்துக்கொண்டே இருக்கவேண்டும், வென்றால் சொல்வார்கள் என்ற நிலைக்குப் போய்விட்டது. திட்டமிடுதல், அதற்கேற்ப விளையாடுதல் என எதுவும் செய்வதற்கில்லை.

20 ஓவர்கள் விளையாட 10 வீரர்கள். பின் அடிக்காமல் என்ன செய்வார்கள்?

எப்படியோ தோற்றுக்கொண்டே இருக்கும் இந்தியா வெல்கிறது. சந்தோஷப்பட்டு எழுதுகிறார்கள்.

50 ஓவர் மேட்ச்சில் தோனியின் முகத்தைப் பார்க்கத்தானே போகிறோம். அப்போது, என்ன கஷ்டம் வந்தாலும் சிரிக்கானே, நாட்டுப்பற்றே இல்லியா என்று எழுதாமல் இருக்கவேண்டும்.

IdlyVadai said...

ஹரன்பிரசன்னா உங்க கருத்துக்கு நன்றி. 50 ஓவர் மாட்சில் பார்க்கத்தானே போகிறோம். ஆனால் கங்குலி, டிராவிட், டெண்டுல்கர் இருந்தால் நிச்சயம் தோல்விதான். இதே டீம் ஆடினால் தைரியமாக பெட் வைக்கலாம் :-)

ஹரன்பிரசன்னா said...

கங்கூலி, டிராவிட், டெண்டுல்கரை திட்டுவது ஃபேஷன் ஆகிவிட்டது. இன்னும் இவர்களை விட சிறந்த இந்திய வீரர்களை இந்தியா கண்டடையவில்லை என்பதே உண்மை.

50 ஓவர் மேட் இந்தியா ஆஸ்திரேலியாவுடன் விளையாடுகிறது. தோனி பாவம். சச்சின் தலைமையேற்றபோதும் இப்படித்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆஃப்ரிகா என ஆட்டங்கள் வர, சச்சின் மோசமான கேப்டனாகிவிட்டார். :)

50 ஓவர் ஆட்டங்களில் சச்சின், டிராவிட், கங்கூலி மூவரும் இல்லாமல் ஆடிப்பாருங்கள். அப்போது தெரியும் இந்தியாவின் பலம். இரண்டு அல்லது மூன்று ஆட்டங்களில், இந்த மூவரும் விளையாட வரவேண்டும் என்று இந்தியாவே ஒப்பாரி வைக்கும். :) வெற்றியின்போது யோசிக்காமல் பாராட்டுவதும், தோல்வியின்போது எப்படியெல்லாம் யோசிக்கமுடியாதோ அப்படியெல்லாம் கூட யோசிப்பதுதான் நமது வாடிக்கை. பார்க்கலாம்.

இப்போதைக்கு சச்சின், கங்கூலி, டிராவிட் மூவருமே 50 ஓவர் ஆட்டங்களுக்குத் தேவை என்றுதான் நான் நினைக்கிறேன்.

IdlyVadai said...

ஹரன்பிரச்சனா விட மாட்டீங்க போல. அடுத்து வர போகும் ஆட்டங்களை பார்க்க தான் போகிறோம்.
//இப்போதைக்கு சச்சின், கங்கூலி, டிராவிட் மூவருமே 50 ஓவர் ஆட்டங்களுக்குத் தேவை என்றுதான் நான் நினைக்கிறேன்.//

கங்குலி, டிராவிட், சச்சின் விளையாடினால், வருண தேவனை வேண்டிக்கொள்ளுவதை தவிர வேறு வழி இல்லை.

IdlyVadai said...

முத்துகுமரன் வாருங்கள். நீங்கள் சொல்லுவது சரி. மீடியா தோனியை ரொம்ப கவர் செய்யாமல் இருக்க வேண்டும் :-)

srikanth said...

எனக்கென்ன சந்தேகம் என்றால், பெட்டு கட்டுபவர்கள் ஒரு நாள் முழுக்க waste பண்ண முடியாது, இரண்டு மணி நேரத்தில் ஜெயித்தோமா, தோற்றோமா என்று 'ஐசா பைசா'வாக முடிந்தால் நல்லது என்று ப்ளான் பண்ணி பெட்டிங்காகவே இப்படி ஒரு format ஐ கொண்டு வந்திருக்கிறார்களோ என்பதுதான்.

அதிலும் சில series களில் final வரை இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் வரும்போது என் சந்தேகம் சரிதான் என்பது போல தோன்றும்.