பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, September 08, 2007

ஈவனிங் டைஜஸ்ட்

இன்றைய மாலை செய்திகள் சில...



சிமெண்ட் இறக்குமதி குறித்து ராமதாஸ்...

சிமெண்டு இறக்குமதி செய்வதாக அமைச்சர் பொன் முடி அறிவித்து உள்ளார். இது வரவேற்கத்தக்கது என்றாலும் இது காலம் கடந்த முயற்சி. எத்தனையோ முறை சிமெண்டு ஆலை அதிபர்களை சந்தித்து பேசினார்கள் ஆனால் விலையை குறைக்கும் வகையில் அரசு அவர்களுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்க வில்லை. மத்திய மந்திரி சிதம்பரம் சிமெண்ட் வரியை குறைத்தார். ஆனாலும் சிமெண்டு அதிபர்கள் விலையை குறைக்கவில்லை. முன்னதாகவே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் நல்ல பயன் கிடைத்திருக்கும். - ராமதாஸ்

சேலம் கோட்டம் பற்றி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் .....

பாலக்காடு கோட்டத்தில் உள்ள தமிழக பகுதிகளை பிரித்து சேலம் ரெயில்வே கோட்டம் தொடங்கப்படுகிறது. மக்களின் நன்மைக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் நாடாளுமன்றத்தில் அறி வித்தபடி சேலம் கோட்டம் தொடங்கப்படும். முதற் கட்டமாக ரூ.20 கோடி ஒதுக் கப்பட்டு ரூ.3 கோடி செலவில் தற்காலிக கோட்ட அலுவலகம் கட்டப்பட்டு பணிகள் நிறை வடைந்து விட்டன.

சேலத்தில் கோட்டம் தொடங்குவதற்கு கேரள அரசு தடையாக இருந்து வருகிறது. இதனை கண்டித்து எனது தலைமையில் கடந்த மாதம் சேலத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. அதன் எதிரொலியாக மத்திய ரெயில்வே மந்திரி லல்லு பிரசாத் யாதவ் தமிழக முதல்-அமைச்சர் கருணா நிதியை தொடர்பு கொண்டு பேசி சேலம் கோட்டம் நிச்சயம் அமையும் என்று உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து தற்காலிகமாக ரெயில் மறியல் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

மேலும் நான் சென்னை சென்று முதல் - அமைச்சர் கருணாநிதி, மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, ராசா, வேலு ஆகியோரை சந்தித்து சேலம் ரெயில்வே கோட்டம் தொடர்பாக பேசினேன். அவர்கள் மூலம் சேலம் ரெயில்வே கோட்டம் அமைவதின் அவசியத்தை பிரதமரிடம் எடுத்துக்கூறும்படி வலி யுறுத்தினேன்.

இதற்கு பிரதமரும் நல்ல முடிவு உடனடியாக எடுக்கப்படும் என்று தெரி வித்தார். சேலம் ரெயில்வே கோட்டம் தொடங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய ரெயில்வே மந்திரி லல்லு பிரசாத் யாதவ் அறி வித்தார். அதன்பிறகு ஏற்பட்ட பிரச்சினைகளை தொடர்ந்து தமிழக - கேரள முதல் - அமைச்சர்களை சந்தித்து பேசுமாறு கூறி இருப்பது வேடிக்கையானது.

கேரளாவில் இருப்பவர்கள் அண்டை மாநிலமான தமி ழகத்துடன் நட்பாக இருக்க விரும்பாமல் ரெயில்வேயில் இருக்கும் கேரள அதிகாரிகளை தூண்டிவிட்டு சேலம் கோட் டத்துக்கு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

பாலக்காடு கோட்டம் அப்படியேதான் இருக்கிறது. தமிழக பகுதிகளை மட்டுமே ஒன்றிணைத்து சேலம் கோட்டம் அமைக்கப்படுகிறது. இதனால் கேரளாவுக்கு எந்த வருத்தமும் தேவை இல்லை. கேரளாவின் இந்த நடவடிக்கையை வைத்தே அதன் ஆதிக்க தன்மையை புரிந்து கொள்ளலாம்.

சேலம் கோட்டம் அமைய வேண்டும் என்றால் மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளை இணைத்து கேரளாவில் ரெயில்வே மண்டலம் அமைக்க வேண்டும் என்று கேரள அரசு கூறி வரு கிறது. இது அந்த அரசின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது.

சேலம் கோட்டம் அமை வதோடு பாலக்காடு ரெயில்வே பகுதிகளையும் சேர்த்து சேலத்தில் ரெயில்வே மண்டலம் அமைக்க வேண்டும் என்று நாம் கூறினால் கேரள அரசு ஒத்துக்கொள்ளுமாப தமிழக முதல்-அமைச்சர் அவர்கள் அண்டை மாநிலங்களோடு பகைமை உணர்வு இன்றி நட்புணர்வோடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

சேலம் கோட்டத்திற்காக அவர் பல வழிகளில் போராடி வருகிறார். சேலம் - பெங்களூர் இடையேயான மீட்டர் கேஜ் ரெயில் பாதை அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு தொடக்கவிழா நடந்தபோது பிரதமராக இருந்த தேவேகவுடா, ரெயில்வே அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரிடம் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி சேலம் கோட்டம் அமைவது குறித்து அப்போதே வலியுறுத்தினார்.

மேலும் தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பி.க்களையும் அழைத்து கூட்டம் நடத்தி சேலம் கோட்டம், சேலம் இரும்பாலை, ஐ.டி. பார்க் போன்ற திட்டங்களை செயல்படுத்துவது குறித்து வலியுறுத்தினார். மேலும் சேலம் கோட்டம் அமைவது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ரெயில்வே மந்திரி லல்லு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு கடிதம் எழுதினார். அத்துடன் பிரதமரை நேரில் சந்தித்தும் பேசி உள்ளார்.

ஒரு மாநில முதல்- அமைச்சர் எடுக்க வேண்டிய அத்தனை முயற்சிகளையும் முதல்வர் கருணாநிதி எடுத் துள்ளார். இதற்கு பிறகும் சேலம் ரெயில்வே கோட்டம் அமைவதற்கு கேரள அரசு தடையாக இருந்தால் அதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்.

தமிழ்நாட்டின் உரிமைக் காக எந்தவிதமான போராட் டங்களையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். `தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா' என்ற குரல் தமிழகத்தில் எப்போதும் ஓங்கி ஒலிக்கும். தமிழரின் உரிமைக்காக தமிழரின் மானத்தை காக்க கேரளாவின் அடாவடித்தனத்தை எதிர்த்து களத்தில் இறங்கி போராட்டம் நடத்துவேன்.

அதற்கு அமைச்சர் பதவி தடையாக இருந்தால் முதல் - அமைச்சரின் ஒப்புதலோடு அந்த பதவியை ராஜினாமா செய்வேன். சேலத்தில் ரெயில்வே கோட்டம் அமை வது உறுதி. இதனால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். குறிப்பாக சேலம், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைவார்கள்.


பிரதமரை சந்திக்கும் அச்சுதானந்தன்:

ரயில் கோட்ட விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் நாளை டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசவுள்ளார்.

அப்போது ரயில் கோட்டம் தொடங்கப்படக் கூடாது. தொடக்க விழா ரத்து செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தக் கூடும் எனத் தெரிகிறது. அவருடன் கேரள மாநில எம்.பிக்களும் பிரதமரை சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது.

ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவையும் அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

சேலம் ரயில் கோட்ட விவகாரத்தில் லாலு பிரசாத் யாதவ் ஒதுங்கிக் கொண்டது போலத் தெரிகிறது. அவரது நடவடிக்கைள் கேரளாவுக்கு சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே திட்டமிட்டபடி சேலம் ரயில் கோட்டம் 14ம் தேதி தொடங்கப்படுமா என்பதில் தொடர்ந்து பெரும் குழப்பம் நிலவி வருகிறது

குணமடைந்தார் சாந்தி
சாந்தி முழுமையாக குணமடைந்து விட்டதாக மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் அம்புஜம் தெரிவித்துள்ளார். இன்றைக்குள் அவர் வீடு திரும்பக் கூடும் எனவும் டாக்டர் அம்புஜம் தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரேயா ரெட்டி - நடிகர் விக்ரம் கிருஷ்ணா திருமண நிச்சயதார்த்தம்

திமிரு, பள்ளிக் கூடம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இவருக்கும் நடிகர் விஷாலின் சகோதரரும், திரைப்பட தயாரிப்பாளருமான அஜய் என்கிற விக்ரம் கிருஷ்ணா ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. விக்ரம் கிருஷ்ணா `லவ்மேரேஜ், பூப்பறிக்க வருகிறேன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் திருமணம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 9ம் தேதி நடக்கிறது. 8ம் தேதி திருமண வரவேற்பு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. திமிரு படத்தில் நடித்த போது ஸ்ரேயா ரெட்டிக்கும், அந்த படத்தை தயாரித்த நடிகர் விக்ரம் கிருஷ்ணாவிற்கும் இடையில் காதல் மலர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி
மதுரை: இரண்டு கிட்னிகளும் பழுதானதால் சினிமா நடிகர் பாண்டியன் சிகிச்சைக்காக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மஞ்சள் காமாலை நோயால் கல்லீரல் பாதிக்கப்பட்டவரை செப்., 5ம் தேதி மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவரது இரண்டு கிட்னிகளும் பழுதானது. அவருக்கு மருத்துவ குழுவினர் ரத்த சுத்திகரிப்பு செய்கின்றனர்.

சற்றுமுன் செய்து: வழக்கம் போல் இந்தியா தோல்வி :-)


0 Comments: