பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 05, 2007

திமுக, பாமக மோதல் நாடகம் - கேப்டன் பேட்டி

திமுகவும், பாமகவும் மோதிக் கொள்வது போல நாடகமாடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் சமயத்தில் சில முக்கிய ரகசியங்களை வெளியிடவிருப்பதாகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.



கே: மாநகராட்சி குப்பை விவகாரம் பற்றி...

ப: நான் வெறும் அரசியல் ஸ்டன்ட் அடிக்கறதுக்காக அப்படிச் சொல்லலை. என் வீட்டுக்குப் பக்கத்தில் மலைபோல குப்பை தேங்கியிருந்தது. சென்னை மாநகராட்சியில் இருக்கிற எங்க கட்சி கவுன்சிலர்களை வரவழைச்சுப் பேசினேன். அதுக்குப் பிறகுதான் "குப்பையை நானே அள்ளுவேன்னு அறிக்கை விட்டேன். என்னோட அறிக்கைக்குப் பிறகு ரெண்டு கழகங்களும் இந்த விஷயத்தில் சுறுசுறுப்பு ஆகியிருக்கு.

விஜயகாந்த் ரோட்டுக்கு வந்து குப்பையை அள்ளி பொலிட்டிக்கல் மைலேஜ் எடுத்துடக் கூடாதுங்கிற பயமேகூட, இந்த வேகத்துக்கும் சுறுசுறுப்புக்கும் காரணமா இருக்கலாம்னு நினைக்கிறேன்' ஏற்கனவே இருந்த ஒனிக்ஸ் கம்பெனிக்காரங்களோட டெண்டர் காலம் முடிஞ்சதும், அவங்களே தொடர்ந்து குப்பை அள்ளுறதா சொல்லியிருக்காங்க. ஆனா, என்ன காரணத்தாலோ அரசாங்கம் ஒப்பந்தத்தை நீட்டிக்கலை. ஏன்னு கேட்டா, டெண்டர்ல அவங்க அதிகரேட்டு சொல்லியிருந்தாங்க. அதைவிட கம்மியா குப்பை அள்ள சம்மதிச்சவங்களுக்கு டெண்டர் விட்டுட்டோம்னாங்க.

ஏழு வருஷமா குப்பையை அள்ளுனவங்களை மு.க. ஸ்டாலின் மேயரா இருந்தப்போ வெளிநாட்டுல இருந்து குப்பை அள்ள வந்தவங்களை இப்போ கழட்டிவிட்டது எதுக்காக? சரி, கம்மியான ரேட்டுக்குக் குப்பை அள்ளுறோம்னு சொன்னவங்களால ஏன் குப்பையை அள்ள முடியலை? இது ரெண்டுக்கும் ஒரே பதிலைத்தான் மக்கள் பேசிக்குறாங்க. ஏற்கனவே இருந்தவங்ககிட்டே கமிஷன் பேசியிருப்பாங்க... படியலைன்னதும் கட் பண்ணி யிருப்பாங்க. புதுசா வந்தவங்களை வேறு ஏதோ நிர்ப்பந்தங்களால கண்டிப்போடு தட்டிக் கேட்டு வேலை வாங்க முடியாம மாநகராட்சித் தவிக்குதுனு மக்கள் பேசிக்கறாங்க.

இதுக்கு வலுசேர்க்கிற மாதிரி கம்யூனிஸ்ட் கட்சியும், குப்பை அள்ள விடப்பட்ட டெண்டர்ல முறைகேடு நடந்திருக்கலாம்னு சொல்லியிருக்கு. நான் ஜெயிச்ச விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியையும் இந்த அரசு புறக்கணிக்குது. விருத்தாசலம் தமிழ்நாட்டுலதான் இருக்கான்னு எனக்கே சந்தேகம் வருது. தொகுதியோட வளர்ச்சிக்குன்னு சில திட்டங்களைப் போட்டு, அதை அரசுகிட்டே கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை.

விருத்தாசலம், ரொம்ப பின்தங்கிய தொகுதி. அதுக்குக் கல்லூரியும், மருத்துவ வசதியும், சாலை வசதியும் கேட்டு முதலமைச்சரை சந்திச்சேன். பார்க்கலாம்னு சொன்னார். அடுத்து உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினைப் பார்த்தேன். கண்டிப்பா செஞ்சு கொடுக்கறேன். இந்த ஆட்சி யில அரசியலுக்கு அப்பாற் பட்டுத் தான் மக்கள் பணிகள் நடக்குதுனு பெருமையாச் சொன்னாரு. அப்புறம் நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் வெள்ள கோவில் சாமிநாதன், சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ஆர். பொன்முடின்னு எல்லாரையும் பார்த்தேன்.

இதுல பொன்முடி, தான் ஒரு அமைச்சர்ங்கிறதையே மறந்துட்டுப் பேசினார். என்னை எடுத்தெறிஞ்சு பேசினார். அந்தப் பொன்முடிக்கு நான் இப்ப சில கேள்விகளை உங்க மூலமாக கேட்கறேன். நலத்திட்ட உதவி வழங்குறதுக்காக கடலூருக்கு முதலமைச்சர் போன இடத்துல கூட்டணிக் கட்சியோட எம்எல்ஏவான வேல்முருகன் கோரிக்கை வச்சாருனு சொல்லி, திண்டிவனம்பண்ருட்டி விழுப்புரத்துல மூணு பொறியியல் கல்லூரிகளுக்கு மேடையிலேயே அனுமதி கொடுத்திருக்காரு முதலமைச்சர். அதே பகுதியில் இருக்கிற விருத்தாசலம் என்கிற பாவப்பட்ட ஊருக்கும் ஏதாச்சும் செய்ய வேண்டியதுதானே? நான் இவங்ககூட கூட்டணிக்கு வர்றேன்னு சொல்லியிருந்தா, மூணு கல்லூரியையும் விருத்தாசலத்துக்கே கூட கொடுத்திருப்பாங்க. அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் பணி நடந்துகிட்டிருக்குன்னு முதலமைச்சரும், மு.க. ஸ்டாலினும் சொல்றதெல்லாம் சுத்தப் பொய்.

கே: இதுவரைக்கும் நீங்கள் கையில எடுத்த பிரச்சனைகள் தீர்ந்திருக்கா?

ப: எல்லாக் கட்சிகளும் ரெண்டு வாரத்துக்கு முன்னால தென் தமிழ்நாட்டை நோக்கிப் படை யெடுத்தாங்க. டைட்டானியம் தொழிற் சாலை வரக்கூடாதுன்னு குரலை உயர்த்தினாங்க. ஆளுங்கட்சியோட கூட்டணி போட்டவங்களே திமுகவை கடுமையா விமர்சிச்சாங்க. அதோட சரி. நான் அந்த விஷயத்தை விடாம பார்த்துட்டிருக்கேன். அந்தப் பகுதிக்குப் பெரிய தொழிற் சாலை வர்றதை நான் எதிர்க்கலை. டாடா பேக்டரி கட்டட்டும். ஆனா நிலம் கொடுத்தவர்களுக்கு லாபத்துல பங்கு கொடுக்கணும். எல்லாருக்கும் வேலை வாய்ப்புக்கான உறுதியைக் கொடுக்கணும். இல்லேன்னா, நானே களத்துல இறங்கிப் போராடுவேன்.

கே: நீங்க இந்த அரசாங்கத்தை எதிர்க்கிற அளவுக்கு பாமகவும் நல்ல எதிர்க்கட்சியா இருந்து அரசாங்கத்தோட நிறைகுறை களைச் சொல்லிட்டிருக்கே?

ப: எங்கே எதிர்த்தாங்க..? மணல், துணை நகரம், விமான நிலைய விரிவாக்கம்னு எதிர்த்துட் டிருந்தவங்க, தடாலடியா பல்டி அடிக்கறாங்க. முதலமைச்சருக்கு நன்றி சொல்லி செயற்குழுவுல பாமக தீர்மானம் போடுது, எதுக்கும் ஒரு எல்லை உண்டு. சும்மா மிரட்டிப் பார்க்காதீங்க. முடிவு எடுக்கும் காலம் வந்துடுச்சுனு திமுகவும், பாமகவுக்கு சாவல் விட்டுச்சு. கடைசியில என்னாச்சு? நாங்க சொன்ன தெல்லாம் தோழமை கொண்டவங் களுக்கு இல்லை.

துரோகிகளுக்குனு முதலமைச்சர் விளக்கம் கொடுக்கறாரு. இவங்க ரெண்டு பேரும் ஊரை ஏமாத்த தங்களுக்குள் எதிர்த்துக்கிடறாங் களான்னு மக்களே குழம்பிப்போய் நிற்கிறாங்க. நான் மக்களுக்காகத்தான் இந்த ஆட்சியைக் கேள்விகள் கேட்கறேன். "எல்லோரும் நான் புலம்புறதா நினைச்சுட்டிருக்காங்க. தேர்தல் வரட்டும். என்கிட்ட இருக்குற சில விவரங்களை வெளியிடுறேன். அப்போ எல்லாரும் மூக்கு மேல விரல் வைப்பாங்க.

0 Comments: