பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, September 09, 2007

ஈவனிங் டைஜஸ்ட் - 09-09-07

மூன்றாவது அணி பிளவு படும் என்று தெரிகிறது - நடந்தால் நல்லதுதானே
சரத்குமார் டெல்லி சென்றுள்ளார் - காலாமை சந்தித்து அட்வைஸ் கேட்க போகிறார்!
விஜயகாந்த் பேட்டி - ஊழலற்ற கட்சிகளுடன் கூட்டு - யாருடனும் கூட்டணி இல்லை என்று சொல்லியிருக்கலாம்.
கூட்டணியில் மாற்றம் வரும் ( கட்சி மேலிடம் சொன்னால் ). எல்லா கட்சிகளிலும் கோஷ்டி சண்டை இருக்கு - இளங்கோவன்.
சத்ய சாய்பாபாவை சந்திப்பதற்காக அமைச்சர்கள் ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் தனி விமானம் மூலம் புட்டபர்த்தி புறப்பட்டுச் சென்றனர் - திரும்பிவரும் போது இரண்டு மோதிரம் நிச்சயம் உண்டு.


இளங்கோவன் பேட்டி
திராவிட கட்சிகளுக்கு இருப்பது போல் தமிழக காங்கிரசுக்கும் ஒரு பலமான தலைமை இல்லாமல் போனது எங்களுக்கு பலவீனம்தான் அதுவே எங்களுக்கு பலமாக வும் இருக்கிறது.

கோஷ்டி பூசல் காங்கிரசில் மட்டும் அல்ல. எல்லா கட்சிகளிலும் இருக்கிறது. 4 எம்.பி.க்கள் இருக்கும் ம.தி. மு.க.விலும் பிளவு இருக்கிறது. கோஷ்டி பூசலால் எத்தனை கொலைகள் நடந்தனப வேறு சில கட்சிகளைப் பற்றி நான் ஏதாவது சொன்னால் தோழமை கட்சிகளின் உள் விவகாரங்களில் தலை யிடுவதாக சொல்லி விடுவார் கள்.

பெருந்தலைவர் காம ராஜருக்கு மக்கள் செல்வாக்கு இருந்தது. கட்சி மேலிடத்துக்கு அவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் இருந்தது. அவருக்கு பிறகு வந்த மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, உள்பட யாருக்கும் இந்த இரண்டு அம்சங்களும் ஒரு சேர அமையவில்லை.

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். கடந்த சட்டசபை தேர்தலிலும் சரி. சமீபத்தில் நடந்த மதுரை இடைத் தேர்தலிலும் சரி தேர்தல் முடிவுகள் இதைத்தான் தெளிவுபடுத்துகிறது. பண பலமோ, ஊடக பலமோ இல்லாத நிலையிலும் தி.மு.க., அ.தி.மு.க.வை சார்ந்து இருக் காமல் தனித்து போட்டியிட்ட கட்சி கணிசமான வாக்குகளை பெற்றது திராவிட கட்சிகளின் செல்வாக்கு சரிவைத்தான் காட்டுகிறது.

காமராஜ் ஆட்சி அமைவது என்பது காலத்தின் கட்டாயம் 1967-க்கு முன்னால் இருந்த அரசியல் சூழ்நிலையும், ஆட்சியும் வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். வேறு யாரும் முறையாக, நன்றாக ஆட்சி செய்யவில்லை என்பதால் காமராஜ் ஆட்சியை பற்றி திராவிட கட்சிகளே பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மூலைக்கு மூலை வைக்கப் படும் டிஜிட்டல் பேனர்களும், தெருவுக்கு தெரு பறக்கும் கொடிகளும் மட்டுமே ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு அளவு கோலாகிவிடாது. கட்சியின் வலிமை என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரியும். தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக காங்கிரஸ் இருப்பதை மறந்து விட கூடாது.

காங்கிரஸ் துணையில் லாமல் போட்டியிட்டால் தோற்று விடுவோம் என்பது தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் நன்றாகத் தெரியும். அதனால்தான் சாதுர் யமாக எங்கள் தோளில் ஏறி ஆட்சியில் அமர்ந்து விடு கிறார்கள்.

மூன்றாவது மாற்றாக ஒரு கட்சி தமிழகத்தில் கணிசமான செல்வாக்குடன் ஆட்சிக்கு வர முடியும் என்றால் அது காங்கிரசாகத்தான் இருக்க முடியும்.

தேர்தலுக்கு தேர்தல் அணி கள் மாறுவது என்பது தமிழக அரசியலில் தொடரும் சரித் திரம் சில மாற்றங்கள் வரத்தான் செய்யும் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. அப்போதுதான் கட்சி மேலிடம் எந்தவித நிலைப்பாட்டை எடுக்க இருக்கிறது என்பது தெரியும். காங்கிரஸ் தலைமையில் ஒருகூட்டணி அமையுமானால் அந்த அணி மிகப் பெரிய வெற்றி பெறும் என்பது என் கருத்து. இதுதான் தொண்டர்களின் எண்ணமும்.

காங்கிரசுக்கு இருக்கும் பெரிய மனது மற்ற கட்சி களுக்கு இல்லை. தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறுவது பற்றி காங்கிரஸ் தலைமை என்ன விரும்பியதுப என்ன சொல்லியது என்பதை யாரும் உறுதியாக எடுத்து சொல்ல முடியவில்லை. தோழமை கட்சிகளுக்கு உரிய மரியாதையை மத்திய அமைச்சரவையில் வழங்கி இருக்கிறோம். அந்த அணுகு முறை மாநிலத்தில் இல்லை.

நான் இப்போது பதுங்கி இருப்பது மீண்டும் பாய் வதற்காக அதற்கான நேரத் துக்காக காத்திருக்கிறேன்.

சரத்குமார் டெல்லி பயணம்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் கட்சியின் பொதுச் செய லாளர் கரு.நாகராஜனும் சென்றிருந்தார். டெல்லியில் மிக முக்கியமான தலைவர்களை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் அவர் பல முக்கிய தலைவர்களை சந்தித்து பேச இருப்பதாக அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த தலைவர்கள் சந்திக்கும் ஒரு கட்டமாக, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சரத்குமார் சந்தித்து பேசுகிறார். அப்துல் கலாமின் கொள்கைகள் மற்றும் ஆலோசனைகளை தனது கட்சி ஏற்று செயல்படுத்தும் என்று அண்மையில் சரத்குமார் கூறியிருந் தார்.

அதன்படி இளைஞர்களின் கனவை நனவாக்கும் வகையில் அப்துல் கலாமின் ஆலோசனைகளை பெற்று கட்சியின் எதிர்கால திட்டங்களை வகுத்து செயல்படுத்த இருப்பதாக சரத்குமார் கூறியுள்ளார். அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை முறைப்படி தேர்தல் கமிஷனில் பதிவு செய்வது தொடர்பாகவும் அவர் டெல்லி சென்றுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெ அறிக்கை + பேட்டி

அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சிக்கு எதிராக கம்ïனிஸ்டு மற்றும் 3-வது அணி கட்சிகள் கூட்டாக போராடி வருகின்றனர். ஆனால் 3-வது அணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதுபற்றி ஜெயலலிதாவிடம் கேட்டபோது, "இடது சாரி கட்சிகள் எங்களை போராட் டத்துக்கு அழைக்கவில்லை. எனவே நாங்கள் அதில் பங் கேற்கவில்லை. எங்கள் அணியில் இடம் பெற்றிருந்த சமாஜ்வாடி, தெலுங்கு தேசம் கட்சிகளை அவர்கள் அழைத்ததால் சேர்ந்து இருக் கிறார்கள். அதே நேரத்தில் நாங்கள் 3-வது அணியில் தான் இருக்கிறோம். அவர்கள் ஏன் எங்களை அழைக்கவில்லை என்பதும் எனக்கு தெரியாது'' என்றார்.

பாரதீய ஜனதா அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைக்க நெருங்கி வருகிறது என்று வெளியான செய்தி குறித்து கேட்டதற்கு "அனுமானமாக வரும் தகவல்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது"

அறிக்கை

இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் தொடர் பாகவும், பாராளுமன்ற கூட்டு குழு தொடர்பாகவும் அ.தி. மு.க.வின் நிலை குறித்து சமீபத்தில் சில பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன.

சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளர் அமர்சிங் அறிக்கையில் "பாராளுமன்ற கூட்டு குழு அமைப்பது சாத்தியம் இல்லை என்றால் அரசியல் கட்சிகளின் கருத்தை கேட்க வேறு வழிமுறைகளை பின்பற்றலாம்'' என்று கூறியிருக்கிறார்.

ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி அப்படிப்பட்ட நிலை எதையும் எடுத்ததாக எனக்கு தெரியவில்லை. அமர்சிங் தெரிவித்த கருத்து அவரது சொந்த தனிப்பட்ட கருத்து அல்லது சமாஜ்வாடி கட்சியின் கருத்தாகக்கூட இருக்கலாம். ஆனால் இது நிச்சயமாக அ.தி.மு.க.வின் கருத்து

அல்ல.ஐக்கிய முற்போக்கு கூட் டணி-இடதுசாரி கட்சிகள் சேர்ந்து ஒரு குழுவை அமைக்கும் முடிவு தொடர்பாக ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் அமர்சிங் கூறியிருக்கிறார்.

ஆளும் கூட்டணி தனது ஆதரவு கட்சிகளின் கருத்தை கேட்க தனி வழியை பின் பற்றலாம். ஆனால் இதர கட்சி களின் கருத்தை அறிய வேறு முறையை கடைபிடிக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.

இதுவும் அ.தி.மு.க.வின் கருத்து அல்ல. அமர்சிங் தெரிவித்த கருத்து ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி யின் ஒட்டுமொத்த கருத்தும் அல்ல. இந்த கருத்து தொடர் பாக ஐக்கிய தேசிய முற் போக்கு கூட்டணியில் ஆலோ சிக்கப்படவில்லை. குறிப்பாக அ.தி.மு.க.வுடன் கலந்து பேசவில்லை.

அ.தி.மு.க.வை பொறுத்த வரை இது ஒரு முக்கிய மான தேசிய பிரச்சினை. இதில் அனைவரும் ஒருமித்த கருத்துடன் ஒரே கொள்கை யைத்தான் கடைபிடிக்க வேண்டும்.

இதுபோன்ற தேசிய பிரச்சினையில் ஆளும் கூட் டணி கட்சிகள் என்றோ, எதிர்க்கட்சிகள் என்றோ பாகு பாடு கூடாது.

இந்தியா இதர நாடுகளுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சிக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி அ.தி.மு.க.வுக்கு இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடவில்லை.

இதை பத்திரிகை ஒன்றுக்கு அனுப்பிய கடிதத்தில் நான் விளக்கி கூறியிருந்தேன். ஐக்கிய முற்போக்கு கூட்டணியை (3-வது அணியில்) இடம் பெற்றுள்ள கட்சிகளில் சமாஜ் வாடி, தெலுங்குதேசம் ஆகிய 2 கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து இருந்தார்கள்.

அந்த 2 கட்சிகளும் கூட இந்த போராட்டம் பற்றி அ.தி.மு.க.வுடன் கலந்து பேசவில்லை. எங்களிடம் கலந்து பேச வேண்டும் என்ற அக்கறையும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வது பற்றியும் எங்களிடம் தெரிவிக்கவில்லை.

வெளிவரும் செய்திகளை பார்க்கும் போது ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி யில் தான் அ.தி.மு.க. இன்ன மும் இருக்கிறதா என்று என்னை வியக்க வைக்கிறது. ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் ஒருசில தலைவர் களின் கருத்துக்கள் அவர்களது சொந்த கருத்துக்களாகவே கருதப்பட வேண்டும். அது நிச்சயமாக அ.தி.மு.க.வின் கருத்து அல்ல.

விஜயகாந்த் பேச்சு

நீங்கள் அனைவரும் தேமுதிகவில் இணைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பணத்தை மதிப்பவன் கிடையாது. உங்களைப் போன்றவர்களைத்தான் மதிக்கி றேன். நான் ஆயிரம் கோடிக்கு மேல் இழந்தவன். எனவே, பணத்தைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. வெளிநாட்டுக் கம்பெனிகளில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை தருவதாக அறிக்கை விடுகிறார்கள். ஆனால், அறிக்கையோடு சரி. யாருக்கும் வேலை கிடைப்பது இல்லை. அப்படியே வேலை கிடைத் தாலும் ஒப்பந்த அடிப்படையில் தருவதால் வேலையும் நிரந்தரம் கிடையாது.

கவர்ச்சித் திட்டங்களைத்தான் அறிவிக்கிறார்களே தவிர, வளர்ச்சித் திட்டங்களை அறிவிப்பதில்லை. டைட்டானியம் ஆலைப் பிரச்சனை யில் ஒவ்வொரு கட்சியும் ஆலை அமையும் பகுதிக்குச் சென்று அரசியல் ஆக்கினார்கள்.அங்கு தாதா என்று சொல்லப்பட்டவர்கள் இன்று ஆளுங்கட்சிக்கு நல்லவர்கள் ஆகி விட்டார்கள்.

கடந்த ஆட்சியில் ஊழல் நடை பெற்றது என்றார்கள். ஆனால், இந்த ஆட்சியில் அதைவிட ஊழல் அதிகமாக நடக்கிறது. சிமெண்ட் விலை அதிகமாக இருப்பதால் ஏராளமான கட்டிடத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வெளி நாட்டில் இருந்து சிமெண்டை இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று சொல்கிறார்கள்.

ஆனால், இதுவரை சிமெண்டை இறக்குமதி செய்தபாடில்லை. ரேஷன் பொருட்கள் வீடு தேடி வர வேண்டும் என்று சொன்னேன். இப்போதும் அதை சொல்கிறேன். தேமுதிக ஆட்சிக்கு வந்தால் சமச்சீர் கல்வி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, வீடுதேடி சென்று ரேஷன் பொருட்களை வழங்குவது ஆகிய திட்டங்கள் கண்டிப்பாக செயல் படுத்தப்படும்.

ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சென்று வழங்குவது முடியாத காரியம் என்று கூறுகிறார்கள். இதில் ஊழல் செய்ய முடியாது என்பதால் தான் இப்படி சொல்கிறார்கள். இலவச டிவி கொடுத்து வரு கிறார்கள். இதில் சிலர் அந்த டிவிக்களை வெளியில் விற்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதற்கு பெயர்தான் வளர்ச்சித் திட்டமா?இந்த ஆட்சியில் எதிலும் ஊழல் மலிந்து விட்டது. இன்றைக்கு கட்சியில் சேர்ந்த நீங்கள் அனைவரும் தேதிமுகவின் பிரச்சார பீரங்கிகளாக செயல்பட வேண்டும் என்றார் விஜயகாந்த். அதன் பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:

டாக்டர்கள் பிரச்சனையில் அவர்களின் 5 வருட படிப்பு காலத்திலேயே கிராமப்புற சேவை செய்யும்படி சட்டம் கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால் தான் கிராமப்புற மருத்துவ சேவைக்கும் பாதிப்பு வராது. மருத்துவ மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாது. மூப்பனார் நினைவிடத்திற்கு நான் இதற்கு முன்பும் சென்றிருக்கிறேன். அதற்காக இப்போது காங்கிரசுடன் கூட்டணி வைக்கும் நோக்கத்தில் தான் மூப்பனார் நினைவிடம் சென்றதாக கூறுவது தவறானது.

ஜாதி, மத கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி கிடையாது. ஊழலற்ற கட்சி களுடன் தான் கூட்டணி. இதில் இருந்து கூட்டணி குறித்த எங்கள் நிலைப்பாட்டை அனைவரும் புரிந்து கொள்ளலாம். காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் அளித்த பேட்டியில் அவர் கூறியிருக்கும் தலைவர் நானாக இருந்தால் அதனை நான் வரவேற்கிறேன்.

3வது அணி என்பது தேர்தல் வரும் போது தான் வரும். அப்போது தான் அது பற்றி தெரியும். மக்களை சந்திப்பது என்பது வேறு; கூட்டணி என்பது வேறு. எதையும் நான் நிதானமாக முடிவு செய்பவன். அரசியல் மாற்றங்கள் தேர்தல் நேரத்தில் எவ்வளவோ ஏற்படலாம். அதனால் பூடகமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு இப்போது பதில் சொல்ல முடியாது. திமுகவும், பாமகவும் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது போல பாசாங்கு செய்கின்றனர். இது பற்றி தேர்தல் வரும் போது கூறுவேன்.

தென்மாவட்டங்களில் மட்டுமல்ல அனைத்து மாவட்டங்களிலும் தேமுதிக வளர்ந்து வருகிறது. எங்கள் கட்சிக்கு வருபவர்களை அவர்களுக்கு பாதகம் இல்லாமல் இணைந்து கொள்வோம். மாநகராட்சியில் குப்பை அள்ளுவதால் பிரச்சனை ஏற்பட்டபோது 10 நாட்களில் நிலைமை சீராகி விடும் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். அது வரை குப்பை நாற்றத்தை யார் பொருத்துக் கொள்வது. குப்பைகளின் பாதிப்பால் நோய் ஏற்பட்டால் யார் பொறுப்பு? என்று ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.

சேலம் கோட்டத்திற்காக போராட்டம் நடத்திய வீரபாண்டி ஆறுமுகம், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியிருக்கிறார். பதவி பிரமாணத்திற்கு எதிராக அவர் மறியல் போராட்டத்தை நடத்தி இருக்கிறார். உண்மையில் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு போராட்டம் நடத்தி இருக்க வேண்டும்.

கேரளா முல்லை பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்த அனுமதிக்க மறுக்கிறது. இப்போது சேலம் கோட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இது நியாயம் அல்ல. சேலம் கோட்டம் அமைந்தே தீர வேண்டும். அது மட்டுமல்லாமல் மதுரை கோட்டத்தில் நாகர்கோயில் மற்றும் கன்னியாகுமரி ரெயில் நிலையங்கள் இணைக்கப்பட வேண்டும்.

அரசு நடத்த உள்ள கேபிள் டிவியின் லைசன்ஸ் திமுகவினருக்கே வழங்கப்படும். இதனால் பல சேனல்கள் இருட்டடிப்பு செய்யப்படலாம். மக்கள் தேமுதிகவை, திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக கருதுகின்றனர். அதில் நான் உறுதியாக இருக்கிறேன். யாரையும் நான் இணைத்துக் கொள்ள மாட்டேன். தனியாக வருவேன். பொருத்திருந்து பாருங்கள்.

சாய்பாபாவை சந்திக்க ஸ்டாலின் புட்டபர்த்தி பயணம்

சத்ய சாய்பாபாவை சந்திப்பதற்காக அமைச்சர்கள் ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் தனி விமானம் மூலம் புட்டபர்த்தி புறப்பட்டுச் சென்றனர். சில மாதங்களுக்கு முன் சென்னை திருவான்மியூரில், உலக நன்மைக்காக நடந்த அதிருத்ர மகா யாகத்தில் பங்கேற்க சத்ய சாய்பாபா சென்னை வந்தார். சில நாட்கள் சென்னையில் தங்கிய அவர், முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். பின்னர் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில், கிருஷ்ணா நீர் கால்வாயை சீர் செய்தமைக்கு சாய்பாபாவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட முதல்வர் கருணாநிதி, கூவம் நதியை சீரமைக்கும் திட்டத்திற்கும் உதவ வேண்டும் என்றும் ஒரு கோரிக்கையை வைத்தார். இந்நிலையில்,பகல் 1.30 மணியளவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட ஐந்து பேர், தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான விமானம் மூலம் புட்டபர்த்தி புறப்பட்டுச் சென்றனர்.


0 Comments: