பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, August 07, 2007

திருமணம் செய்துகொண்ட வலைப்பதிவர்களுக்கு ஒர் எச்சரிக்கை !

கணவர் தன் மீதும் குழந்தைகள் மீதம் அக்கறை செலுத்தாமல் கம்ப்யூட்டரில் முழு நேரத்தையும் செலவிட்டதால் மனமுடைந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். `மன உளைச்சலால் சாகிறேன்' என்று அவர் உருக்கமாக கடிதம் எழுதி வைத்துள்ளார்.


கம்ப்யூட்டர், இணையதள வளர்ச்சி இன்றைய நாளில் இளைஞர்களையும், அனைத்து தரப்பினரையும் கட்டிப்போட்டு உள்ளது. கம்ப்யூட்டரே கதி என்று பலரும் கிடப்பதால் அவர்களின் குடும்பங்கள் பாழ்பட்டு போய் விடும் நிலையும் உள்ளது. தன் மீதும், குழந்தைகள் மீதும் அக்கறை செலுத்தாமல் முழு நேரத்தையும் கம்ப்யூட்டரில் கணவர் செலவிட்டதால், அந்த ஏக்கத்தில் இளம் பெண் ஒருவர் சென்னையில் தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து வருமாறு:-

திருச்சியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி புவனேஷ்வரி (வயது 25). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ரமேஷ் குடும்பத்துடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தின் விடுதியில் தங்கியிருக்கிறார்.

வானிலை பற்றி அறிவதும், அதன் பல்வேறு பரிணாமங்களை தெரிந்து கொள்வதும் ரமேஷூக்கு பிடித்தமான ஒன்றாக விளங்கி வந்தது. இதனால் அவர் எப்போதும் கம்ப்யூட்டரில் பல்வேறு இணையதளங்களுக்கு சென்று, பல தகவல்களை தேடி வருவார்.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்தாலும், வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் ஏதாவது தேடிக்கொண்டு இருப்பார். இது அவருடைய மனைவி புவனேஷ்வரிக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. அலுவலகத்திலே இந்த பணிகளை செய்ய கூடாதா? வீட்டிலும் இதை தான் செய்ய வேண்டுமா? என்று கூறி வந்துள்ளார். அதற்கு ரமேஷ் எந்த பதிலும் சொல்லாமல் கம்ப்யூட்டரிலே தன் கவனத்தை செலுத்தி வந்திருக்கிறார்.

வேலை முடிந்து வரும் கணவர் தன்னையும், குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கோவில், சினிமா, பீச் என்று எங்கேயாவது அழைத்து செல்வார் என்று ஒவ்வொரு நாளும் அவர் ஏங்கி தவித்தார். அவரின் ஏக்கத்தை, கம்ப்யூட்டரில் மனதை பறி கொடுத்த ரமேஷால் புரிந்து கொள்ள முடியவில்லை. விடுமுறை நாட்களிலும் கணவர் கம்ப்யூட்டர் பக்கமே கவனத்தை திருப்பி வந்தது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில், கணவர் மற்றும் குழந்தைகள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த நேரத்தில் தன்னுடைய அறையில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சில நிமிடங்களுக்கு பிறகு கண் விழித்த ரமேஷ் மற்றும் குழந்தைகள், புவனேஷ்வரியின் உயிரற்ற உடலை கண்டு அலறி துடித்தனர். குழந்தைகள் தாயின் கால்களை பிடித்து கதறி அழுதனர்.

இந்த சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் புவனேஷ்வரியின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

புவனேஷ்வரியின் அறையில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் புவனேஷ்வரி, "என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நானாகவே தற்கொலை செய்து கொள்கிறேன். வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்து விட்டேன். கடந்த சில மாதங்களாக சொல்ல முடியாத மன குழப்பத்தில் தவித்து வருகிறேன். இந்த மன குழப்பத்தினால் என்னால் வாழ முடியாது. அதனால் நான் என் வாழ்வை முடித்துக்கொள்கிறேன். குழந்தைகளை பார்த்துக்கொள்ளவும்'' என்று கடிதத்தில் புவேனேஷ்வரி கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
(நன்றி: தினத்தந்தி )

6 Comments:

Anonymous said...

செய்திக்கு நன்றி தேசிகன்.

We The People said...

:(

Prasad said...

source pls?

IdlyVadai said...

பிரசாத் தினத்தந்தியில் வந்த செய்தி. அப்டேட் செய்துவிட்டேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிந்திக்க வைத்த செய்தி.
அனுதாபங்கள்.

Rambaa said...

Any good news? Atleast ஒரு நல்ல செய்தி சொல்லும்யா.

பாவம் கண்மணி, இட்லிவடை வலைப்பதிவு படிக்கவில்லை போலும்.