முஸ்லிம்களுக்கு கருத்தடை சாதனம்: மத்திய அரசு முடிவு.
நல்ல வேளை இந்த அறிவிப்பை பா.ஜ.காவை சேர்ந்தவர் யாரும் சொல்லவில்லை.
நாடு முழுவதும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் கருத்தடை சாதனத்தை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
மேலும், கருத்தடை சாதனங்கள் முஸ்லிம் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். குடும்ப நல்வாழ்வு திட்டங்கள் தொடர்பான அரசு திட்டங்களை முஸ்லிம் மக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என சிறும்பான்மை மக்கள் விவகாரத் துறை அமைச்சர் அந்துலே மாநிலங்களவையில் திங்கள்கிழமை எழுத்து மூலம் தெரிவித்தார்.
"சச்சார் கமிட்டி பரிந்துரையின் படி பொதுமக்கள் உரிமை மையங்கள் பல்கலைக்கழகங்களில் அமைக்கப்படும். முதல்கட்டமாக இவை மத்திய பல்கலைக்கழகங்களில் தொடங்கப்படவுள்ளன.
தொகுதி மறுசீரமைப்பு சட்டம் குறித்தும், முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் குறித்தும் சச்சார் கமிட்டி அளித்த பரிந்துரையை பரிசீலிக்க உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 13, 2007
முஸ்லிம்களுக்கு கருத்தடை சாதனம்
Posted by IdlyVadai at 8/13/2007 06:49:00 PM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
//நல்ல வேளை இந்த அறிவிப்பை பா.ஜ.காவை சேர்ந்தவர் யாரும் சொல்லவில்லை.//
நல்லவேளையோ, கெட்டவேளையோ (பா ஜ க) நரிகள் நாட்டாமைத்தனம் செய்யும்போது சந்தேகம் வருவது இயல்பு தான். ஏன் என்றால் நரிகளின் குணம் மக்களுக்கு அத்துபடி.
கருத்தடை சாதனத்தை இலவசமாக மடங்களுக்கும் கொடுக்க வேண்டும்.
-தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது
Post a Comment