வைகோ பேட்டி
எம்.பி.க்கள் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கட்சியை விட்டு பிரிந்து சென்றபோது அவர்களின் பிரிவிற்கு காரணம் தி.மு.க.வும் முதல்-அமைச்சர் கருணாநிதியும்தான் என்று வைகோ குற்றம் சாட்டினார். இது பற்றி அவர் பேசிய கருத்துக்கள் தி.மு.க.வையும் முதல்-அமைச்சர் கருணாநிதியையும் இழிவுபடுத்தும் வகையில் இருந்ததாக கூறி அமைச்சர் ஆற்காடு வீராசாமி வைகோ மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வைகோ இன்று ஆஜர் ஆனார். நீதிபதி ராஜகோபாலன் வழக்கு விசாரணையை உடனே தொடங்க ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி தரப்பில் வாய்தா கேட்கப்பட்டது. இதை தொடர்ந்து அடுத்த மாதம் 7-ந்தேதி வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.
வழக்கில் ஆஜர் ஆகி விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்:
அரசியல் வஞ்சம் தீர்க்க ஆளும்கட்சி என் மீது போட்ட வழக்கு இது. நீதி வெல்லும் உண்மை நிலைக்கும் என்ற நம்பிக்கையோடு சட்டப்படி வழக்கை சந்திப்பேன்.
கேள்வி:- மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதைப் பற்றி விவாதிக்கப்போகிறீர்கள்?
பதில்:- தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியில் மக்கள் விரோத செயல் பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்படும்.
கே:- கேபிள் டி.வி.யை தமிழக அரசே தொடங்குவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப:- அ.தி.மு.க. ஆட்சியின் போது கேபிள் இணைப்பு வழங்குவதை அரசுடமை ஆக்க மசோதா கொண்டு வரப்பட்டது. அதை சட்டமன்றத்தில் சட்டமாக்கும் நேரத்தில் இன்றைய முதல்-அமைச்சர் பரிவாரங்களோடு சென்று கவர்னரை சந்தித்தார்.
சட்டமாகி விடக்கூடாது என்று அவர் எடுத்த நடவடிக்கைகள் எல்லோருக்கும் தெரியும். கேபிள் டி.வி.க்கான அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கிறது. எனவே இந்த மசோதாவை ஆதரிக்க முடியாது என்று கூறினார். அப்படி கூறியவர்தான் இன்று அதே சட்டத்தை கொண்டு வருகிறார்.
கே:- இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்து வருவதாக கூறப்படுகிறதே?
ப:- இந்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு பீரங்கி படகுகள், தாக்குதல் படகுகள் வான்வழி தாக்குதலுக்கான கருவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தமிழ் இனத்துக்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்தி வரும் இனவெறி தாக்குதலுக்கு ஆயுத உதவி செய்வது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகம்.
இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளும் உடந்தையாக இருக்கின்றன என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.
கே:- தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் துப்பாக்கி சூடு சம்பவத்தின் பின்னணியில் விடுதலைப்புலிகள் இருப்பதாக கூறப்படுகிறதே?
ப:- இது முற்றிலும் தவறானது. உளவு அமைப்புகள் விடுதலைப்புலிகள் மீது தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. 1000 முறைக்கு மேல் இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. ஒரு முறை கூட இந்திய கடற்படை எதிர்தாக்குதல் நடத்தியது

பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, August 14, 2007
வைகோ பேட்டி
Posted by IdlyVadai at 8/14/2007 03:14:00 PM
Labels: பேட்டி
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
அய்யா கோபால் ஸ்வாமி,
எங்க பகுதில கொசுத் தொல்லை தாங்க முடியலய்யா. சனியன் குருதி குடிச்சிட்டு போனாகூட பரவால்லீங்க. ங்ஙொய்.....ன்னு சத்தம்தாங்க தாங்க முடியல. ஒரு இரவு எங்க பகுதிக்கு வந்து நின்னு நாக்க சுழட்டி நாலு வசவு உட்டீங்கன்னா இந்த கொசு எல்லாம் ஓடிடும்ங்க. சோடா, ஒலிபெருக்கி செலவெல்லாம் நான் பாத்துக்கிறேங்க. இந்த ஏழை கோரிக்கைய மனசுல வச்சி ஒரு தபா எங்க பகுதியாண்ட வந்து குரல் கொடுத்துட்ட்டு போய்டுங்கண்ணா.....
-தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-07)
என் வாழ்க்கை இணயம் முழுவதும் கழிந்து கிடக்கிறது
Post a Comment