பட்டறையில் இருந்து நேரடி அப்டேட் - தொகுப்பு
பட்டறையில் இருந்து நேரடி அப்டேட்
பட்டறையில் இருந்து நாளை நேரடி ஒலிபரப்பு பதிவுப்பரப்பு இங்கு நிகழும்.
காணத்தவறாதீர்கள் படிக்கத் தவறாதீர்கள்.
பி.கு.: என்னைக் காண விரும்புபவர்கள் கேண்டீணுக்கு வரவும்.
August 4, 2007 - 10:16 pm
இட்லிவடை entry..
நான் பட்டறை வளாகத்துள் நுழைந்தும் முதலில் கண்ணில் பட்டவர் லக்கிலுக்.
விக்கி அறிமுக உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். “இது நம்ப வீட்டுக் கல்யாணம் மாதிரி..” என்று சொல்லிக் கொண்டிருக்க ஒருவர் “அப்ப மொய்ப் பணம் நமக்கு வருமா?” என்று அமுக்கமாக கமெண்டிக் கொண்டிருந்தார்.
விக்கி பாதி உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போதே செல்பேசி அழைப்பு வர ம.சிவக்குமார் தொடர்ந்தார்…
August 5, 2007 - 11:12 am
விருந்தினர்..
பட்டறையை இரண்டு தளத்திற்கு பிரித்திருக்கிறார்கள். பழம் தின்று கொட்டை போட்டவர்கள் கீழே. புதிதானவர்கள் மேலே. இரண்டுக்குமில்லாமல் மூன்றாவது அணியும் அமைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்க, சிலர், “அவர்கள் எல்லாம் மாடிப்படியில் அமரவேண்டுமா!?” என்று கலாய்த்தனர்.
ஒவ்வொருவராக தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளும் போது ஒருவர், “டோண்டு வலைப்பதிவர்களின் ஹீரோ!” என்று சொல்ல ஒரே ஆரவாரம்.
ஒருவர் பதிவுகளில் கதை, கவிதை, சினிமா மட்டுமே எழுதாமல் பலதரப்பட்டவைகளையும் எழுதவேண்டும் என்று சொன்னார். யாருக்கோ பயந்து மொக்கையைச் சொல்லவில்லல. (அவர் நம்பிக்கைக்கு ஒரு ஜே!)
August 5, 2007 - 11:25 am
ஸ்பெஷல் விருந்தினர்..
மாலன், ‘ஒரு மாரல் சப்போர்டுக்காகத்தான் வந்தேன்!’ என்று ஏற்கனவே தான் முன்மொழிந்திருந்ததை மீண்டும் இங்கே வழிமொழிந்தார்.
நல்லபெருமாள் என்கிற 71 வயது தாத்தா 1,2,3 ஐ வைத்து அழகான பாடல் ஒன்று பாடினார். இன்னும் 10 வருடங்களுக்குள் இவற்றை எல்லாம் இணையத்தில் ஏற்றிவிட வேண்டும் என்று பேசும்போது கூட்டம் உணர்ச்சிமயமாக இருந்தது. முக்கியமாக அவர் பாட்டியையும் அழைத்துவந்திருந்தார். ஆனால் வலைபதிவுக்கு பாடுபடும் பலரில் எத்தனை பேருக்கு தன் துணையையும் அழைத்துவரும் அந்த எண்ணம் இருந்தது?
கண்பார்வை அற்ற ஒருவர் வந்திருக்கிறார்…
August 5, 2007 - 11:34 am
மஞ்சளுக்கு மாறிய பத்ரி…
பத்ரி, அப்பாடி…வழக்கமாக வரும் வெள்ளைக் கலர் “கிழக்கு” டீ ஷர்ட் இல்லாமல், மஞ்சள் சட்டையில் மங்களமாக வந்து உரை நிகழ்த்தினார். தொடர்ந்து அமெரிக்க நாராயாணனும் மாலனும் சைட் உரை(!). பத்ரியிடம் தமிழ் இ*ணை*யத்தில் பழைய கொம்பு போட்ட ணை ஏன் என்று அப்புறம் கேட்க வேண்டும்.
தற்சமயம் முகுந்த் தமிழ்நெட்டிலிருந்து இகலப்பை, யுனிகோடு வரை பிரித்து மேய்ந்துகொண்டிருக்கிறார்…
August 5, 2007 - 11:39 am
காசி…
காசி, தமிழ் வலைப்பதிவுகள் குறித்துப் பேசினார். விகடன் குமுதம் போன்ற அச்சுப் பத்திரிகைகளில் இருக்கும் ஒரு பக்கக் கதை, 3 பக்கக் கதை என்ற கட்டுப் பாடுகள் இல்லாமல் எப்படி பதிவுகள் எந்தப் படைப்புக்கும் இடப் பிரச்சினை, ‘பக்க’ப் பிரச்சினை இல்லாதது என்று சிலாகித்தார். அதனால் வரும் பக்கப் பிரச்சினைகளை(side effects) சொல்லாவிட்டாலும் நாமாகவே வரிகளுக்கிடையில் படித்துக் கொள்ளவேண்டியதுதான். :( கூட்டத்தின் நாடியறிந்து ‘மொக்கை’ என்ற வார்த்தையை அடிக்கடி சொல்லி கூட்டத்தைக் குதூகலிக்க வைத்தார்.
August 5, 2007 - 12:48 pm
பெனாத்தலார்..
‘விக்கி’யில் கூட அரசியல் நுழைந்துவிட்டதாக ஒரு ஆதங்கம் முன்வைக்கப் பட்டது. தமிழ் பதிவர்கள் எழுத்தில் discipline வைத்து எழுதவேண்டும் என்று நடவாத ஒன்றைச் சொல்ல, பெனாத்தாலர், “அது தனிநபர் ஒழுக்கம் சம்பந்தப் பட்டது. ரூல் எல்லாம் போடமுடியாது” என்றார் சிரத்தையாக. என் பக்கத்து நபர், ‘யோவ், மீட்டிங்ல இதெல்லாம் அனுபவிக்கனும். ஆராயக் கூடாது’என்று அவருக்குப் பிரியமான வசனத்தை ஆனால் சத்தமில்லாமல் சொன்னார்.
August 5, 2007 - 12:55 pm
இட்லிவடைக்கே தேநீர்..
நமக்குத் தேநீர் மிகவும் பிடித்திருந்தது. தொடர்ந்து இன்னும் இதுபோல் பல நல்ல விஷயங்களை எதிர்பார்க்கிறோம்…
என்னை சந்திக்க விரும்புபவர்கள் ஏற்கனவே சொன்னபடி பட்டறையில் கேண்டீனில் சந்திக்கலாம். இணையத்தில் மேய்பவர்கள், ஓசை செல்லா சத்தமில்லாமல் நிகழ்வுகளைப் படம்பிடித்து தொடர்ந்து வலையேற்றி வருகிறார்- http://chellaonline.blogspot.com/ அங்கே சந்திக்கலாம்.
August 5, 2007 - 12:58 pm
இணைய நன்னடத்தை - மாலன் உரை
இதுவரை நிகழ்ந்ததில் இணையத்தில் நன்னடைத்தை குறித்த மாலனின் உரை அபாரம். “சராசரியாக 25லிருந்து 30 வயதிற்குள்ளான கணினி தொழில்நுட்பம் தெரிந்த இளைஞர்கள் பதிவுகள் ஆரம்பிக்கிறார்கள். ஆரம்பத்தில் இணையம் கொடுக்கும் சுதந்திரம் அல்லது இணையம் கொடுக்கும் கைத்தட்டல் காரணமாக சமூகம் நிராகரிக்கும் கருத்துகளைச் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். தொடர்ந்து இருப்பைச் சொல்ல எல்லா இடங்களிலும் பின்னூட்டங்கள். ஒரு நேரத்தில் சட்டென காணாமலும் போய்விடுகிறார்கள்..” தொடரும்…
August 5, 2007 - 2:16 pm
மாலன் உரை தொடர்ச்சி..
…. தனிப்பதிவாக இருப்பதை விட இவர்களின் பதிவுகள் பின்னூட்டங்கள் திரட்டிகளில் வரும்போது பிரச்னை ஆரம்பிக்கிறது. நாம் வீட்டில் தனியாக இருக்கும்போது அம்மணமாகக் கூட இருக்கலாம். குடும்பத்தினர் மனைவி தங்கை என்று இருக்கும்போது பெர்முடாவாவது அனிய வேண்டியிருக்கிறது. வெளியே தெருவில் அப்படியே இறங்கினால் நாய் துரத்தும், கல்லடி கிடைக்கும்..” என்றெல்லாம் தொடர்ந்தார். நமக்கான பொறுப்பை நாம் தான் உணரவேண்டும் என்று பியூன், CEO என்றெல்லாம் உதாரணம் கொடுத்து நிதானமாக தெளிவாகப் பேசினார்.
August 5, 2007 - 2:21 pm
இணையத்தில் செக்யூரிட்டி- லக்கிலுக் :)
இணையத்தில் பாதுகாப்பாக எழுதுவது குறித்து லக்கிலுக் பேசினார். எதிர்மறையாக தான் ஒரு மொக்கை, கும்மிப் பதிவாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஆரம்பித்தவர், இணையம் இன்று இருக்கும் அபாயகரமான சூழ்நிலையில் யாரும் தன் சொந்த விபரங்கள், குடும்பப் புகைப்படங்கள் தகவல்களை வெளியிடக் கூடாது. வந்ததும் வராததுமாக ஆர்வக் கோளாறில் எல்லாருக்கும் பின்னூட்டம் இட ஆர்மபிக்காமல் வலையுலக அரசியலை அவதானித்து, பின் தான் இட வேண்டும் என்று பேசினார்.
August 5, 2007 - 2:27 pm
லன்ச்..
லக்கிலுக்கைத் தொடர்ந்து நாகூர் இஸ்மாயில் செக்யூரிட்டி, spyware என்றெல்லாம் கொஞ்சம் டெக்னிகலாகப் பேச ஆரம்பிக்க, கூட்டம் மெதுவாக மதிய உணவுக்குக் களையத் தொடங்கியது. பத்ரி, லக்கிலுக் என்று ஒரு குழுமம், பொன்ஸ், பாலபாரதி என்று ஒரு குழுமம் என்று தனித் தனியாக உள்ளே, வெளியே, வாசல் கதவருகில் என்று கூட்டமாக சாப்பிட மரத்தடியில் இருந்த பெண்கள் ஜோதியில் கலந்தோம். வவாச, சங்க டீஷர்ட் அணிந்திருப்பதைப் பற்றி பேசினர். வழக்கம்போல் முதல் சாதத்தைவிட தயிர்சாதமே :) எனக்குப் பிடித்தது. தூக்கம் வந்தாலும் கடமையுணர்வு தட்டி எழுப்புகிறது…
August 5, 2007 - 2:34 pm
வலைப்பதிவின் மூலம் துட்டு- க்ருபா ஷங்கர்…
க்ருபா ஷங்கர், வலைப்பதிவில் துட்டு பார்ப்பது பற்றிப் பேசினார். நானும் ஆவலில், சம்பாதித்து, இட்லிவடைக் கடையை அப்படியே விஸ்தரித்து 5 ஸ்டார் ஹோட்டல் ஆக்கிவிடலாம் என்று கனவு கண்டு கேட்டால், google ad ல் தமிழ்ப் பதிவுகளில் சம்பாதிக்க முடியாது என்ற எல்லாருக்கும் ஏற்கனவே தெரிந்த வியாபார ரகசியத்தையும் :(, அவரவர் தனிப்பட்ட தொழிலுக்கு மட்டுமே வேண்டுமானால் விளம்பரம் கொடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்… பூக்கடைக்கும் இட்லிவடைக்கும் விளம்பரம் எதுக்கு?
August 5, 2007 - 3:33 pm
வலைப்பதிவினர் சமூக சேவை - ரஜினி ராம்கி
வலைப்பதிவினர் இணையத் தொடர்பின் மூலமாக செய்த செய்யும் சமூக சேவை குறித்து ரஜினி ராம்கி பேசினார். சுனாமி, கௌசல்யா படிப்பு உதவி, மருத்துவ உதவிகள் குறித்து அழகாக எடுத்துச் சொன்னார். படிப்புக்கும் மருத்துவத்துக்குமே இதுவரை தனித் தனியாக ஒரு லட்சம் ரூபாய்க்குமேல் செய்திருப்பதைச் சுட்டிக் காட்டினார். எ.அன்புடன் பாலா ஏனோ மிஸ்ஸிங்.
August 5, 2007 - 3:38 pm
அருள்செல்வன் கந்தசாமி…
அருள்செல்வன் கந்தசாமி எப்படி இணையமும் பதிவுலகமும், பெரியவர் சிறியவர், எழுத்தாளர் வாசகன் போன்ற பீடங்களை ஆசிரியர், மாணவருக்கிடையில் இருப்பதுபோல் இல்லாமல் தகர்த்து யாரையும் யாரும் கேள்வி எழுப்பக் கூடிய சாத்தியங்கள் ஏற்படுத்திவிட்டன என்பது குறித்துப் பேசினார். தொடர்ந்து இனி வரப் போகும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்தும் பேசினார். பலர் இதற்குள் பெனாத்தலாரின் ஃப்ளாஷ் டெமோவிற்குப் போய்விட்டனர்….
August 5, 2007 - 5:31 pm
பெனாத்தலார் ஃப்ளாஷ் டியூஷன்..
பெனாத்தல் சுரேஷ் ஒரு நீல வட்டத்தை வைத்துக் கொண்டு எப்படி பெரிதாக்குவது சிறிதாக்குவது என்று சொல்லிக் கொண்டிருந்தார். க்ருபா, பொன்ஸ், எஸ்.பாலபாரதி, கோபி எல்லாரும் தரையமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். இனி நிறைய பதிவுகளில் ஃப்ளாஷ் அடிக்கலாம்…..
August 5, 2007 - 5:34 pm
ஹை கோபி- அதியன் என்கோடிங்!
ஹை கோபி, என்கோடிங் பற்றி பேசினார். ஆணி பிடுங்கும் நேரத்தில் அவரவர் இங்கே மொக்கை போட்டுக் கொண்டிருக்க, இவர் அதியன் என்கிற Firefox என்கோடிங் வேலையை உருப்படியாய்ச் செய்திருக்கிறார். இனி தமிழின் நம்பர் ஒன் பத்திரிகை தினகரனை சும்மா ரைட் க்ளிக்கி அதியனுக்கு மாறியே தமிழன் சுலபமாகப் படிக்கலாம். வாழ்த்துக்கள் கோபி!. கடைசி வரை எந்த நிறுவனத்திற்கு வேலை செய்கிறார் என்று சொல்லவே இல்லை.
August 5, 2007 - 5:39 pm
என்னை மறந்ததேன்.. பொன்ஸ்
பொன்ஸ் தமிழ்ப் பதிவுலத்தில் செய்திருக்கும் சமீபத்திய புதிய முயற்சிகளைப் பட்டியலிட்டார். சற்றுமுன், வலைச்சரம், விக்சனரி பற்றி எல்லாம் எடுத்துச் சொன்னார், இட்லிவடையின் சாதனைகளை அடுத்த முறை பட்டியலில் சேர்த்துக் கொள்வார் என நம்பலாம். தமிழூற்று பற்றி மாஹிர் பேசினார். ஒருவர்(பெயர் தெரியவில்லை) ebooks பற்றிப் பேசினார்…
August 5, 2007 - 5:42 pm
நன்றி நவிலல்..
நன்றி நவில வந்த தல எஸ்.பாலபாரதிக்குக் காது கிழியும் கைத்தட்டல்.. Vicky, பொன்ஸ், இகாரஸ் பிரகாஷ், லக்கிலுக், நந்தா, We the people ஜெய், வினனயூக்கி, ஓகை நடராஜன், மா.சிவகுமார் ஆகியோருக்கு ஸ்பெஷல் நன்றி நவிலப் பட்டது……
August 5, 2007 - 5:50 pm
நன்றி நவிலல் தொடர்ச்சி..
சிந்தாநதி கன்யாகுமரியிலிருந்து வராவிட்டாலும் கையேட்டுப் பிரதி எழுதி அளித்தமைக்கு நன்றி நவின்றபோது மீண்டும் காது கிழிந்தது. Netherlands ரவிசங்கர் பெருமளவில் பொருள் உதவியதற்கும் நினைவுகூரப் பட்டு நன்றிகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்குமுன் இதன் ஒருங்கிணைப்பாளர்களுக்குள் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதப் பரிமாற்றம் நடைபெற்றது என்பது குறிப்பிடப் பட்டது.
August 5, 2007 - 5:53 pm
நிகழ்ச்சி நிறைவுற்றது..
நிகழ்ச்சி நிறைவுற்றது. டோண்டூ, ஆசிப், மாலன் போன்ற சிலர் நிகழ்ச்சி முடியுமுன்னரே கிளம்பிவிட்டனர். வந்திருந்தவர்கள் எல்லோரும் விதவிதமாகக் கலைந்து விதவிதமாகக் கூடிக் கூடி பேசிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள்….
August 5, 2007 - 6:04 pm
நன்றி நவிலல் - இட்லிவடை
Hello FM இலவசமாகக் கொடுத்த அந்த Key Bunch க்கு நன்றி. இணைய உதவி அளித்ததுடன், இந்த நிகழ்ச்சியை உடனுக்குடன் வலையேற்றவும் உதவிய Sify Broadband நிறுவனத்தினருக்கும் நன்றிகள். வாசித்த அனைவருக்கும் நன்றிகள். _/\_
August 5, 2007 - 6:12 pm
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, August 06, 2007
பட்டறையில் இருந்து நேரடி அப்டேட் - தொகுப்பு
Posted by IdlyVadai at 8/06/2007 08:48:00 AM
Labels: இட்லிவடை ஸ்பெஷல்
Subscribe to:
Post Comments (Atom)











5 Comments:
//இட்லிவடைக்கே தேநீர்..
நமக்குத் தேநீர் மிகவும் பிடித்திருந்தது.//
இதெல்லாம் ஓவரு! டீயை கொடுத்த என்னை பற்றி சொல்லவே இல்லை!
அடப்பாவி மக்கா !!!
மேலுக்கும் இல்லாம கீழுக்கும் இல்லாம நடுவாந்திரமா இருந்த ஒரு அறையில் ப்ராட்பேண்ட் கணினியோடு அமர்ந்திருந்த உம்மை கைது செய்ய மறந்தேனே !!!!!!!!
//என் பக்கத்து நபர், ‘யோவ், மீட்டிங்ல இதெல்லாம் அனுபவிக்கனும். ஆராயக் கூடாது’என்று அவருக்குப் பிரியமான வசனத்தை ஆனால் சத்தமில்லாமல் சொன்னார்.//
அன்புள்ள பக்கத்து நபர்,
நீங்களாவது உங்கள் பக்கத்து நபர் யாரென்று எழுதுங்களேன்.
:-)
ஒரே வார்த்தையில சொல்லனும்னா... அசத்திட்டீங்க. ரசித்து படித்தேன்.
உங்கள் தன்னம்பிக்கை மற்றும் செயலாற்றும் திறன் பாராட்டப்பட வேண்டியவை... பட்டறையில் மறந்துவிட்டாலும் :-)
//என்று கூட்டமாக சாப்பிட மரத்தடியில் இருந்த பெண்கள் ஜோதியில் கலந்தோம். வவாச, சங்க டீஷர்ட் அணிந்திருப்பதைப் பற்றி பேசினர்//
இட்லி வடை ஒரு பெண் என்று ... பாஸ்டன் பாலா சந்தேகபட்டதை உறுதி படுத்தி விட்டீர்களே! நுணல் தன் வாயால் கெடும்! :-))
Post a Comment