பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 01, 2007

கோவை குண்டுவெடிப்பு அப்டேட்ஸ்

கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த பயங்கர சம்பவத்தில் 58 பேர் உடல் சிதறி பலியானார்கள். 250க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இவ்வழக்கின் தீர்ப்பு 9 ஆண்டுகளுக்குப் பின் இன்று அறிவிக்கப்பட்டது. தீர்ப்பு விவரங்கள்...

* முதல் கட்டமாக அல்உம்மா தலைவர் பாஷா, பொதுச்செயலாளர் முகமது அன்சாரி, தாஜூதின், நவாப்கான், பாசிக், முகமது பாசிக், முகமது அலிகான் உள்ளிட்ட 59 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கூட்டுச்சதி, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் மீது குற்றம் நீரூபிக்கப்பட்டுள்ளது.

* கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நசீர் மதானி குற்றமற்றவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்து தனிக்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ( இதுபற்றி அறிந்ததும் கோர்ட்டுக்கு வெளியே நின்ற மதானி ஆதரவாளர்கள் உற்சாகத்தில் கோஷமிட்டனர். ஆனால் கோர்ட்டுக்குள் இருந்த மதானி தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியுடன் கடுமையான வாதத்தில் ஈடுபட்டனர். மதானி குற்றமற்றவர் என்று இப்போது உறுதியாகியுள்ளது. குற்றம் செய்யாத ஒருவரை 9 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்திருந்தது ஏன்? என்று வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினார்கள். )

1 Comment:

கோவை ராதாகிருக்ஷ்ணன் said...

கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தபோது முதலமைச்சர் கருணாநிதி முதலை கண்ணிர் வடித்தார் கோவை மருதுவமனையில்.

16 February 1998, Karunanidhi visits victims, ends up in tears. EXPRESS NEWS SERVICE

மீண்டும் இந்த கருணாநிதி ஆட்சியில் பயங்கரவாதம் தலைதுக்குகிறது.

கருணாநிதி ஆட்சி வந்தாலே சிறுபான்மையினர், திரவிட கழகம், அரசு ஊழியர்கள், ரவுடிகள், கழக உடன்பிரப்புக்க்ள், சாதிக்கட்சிக்ள், தமிழ் தமிழ் ஏன்று பேச்சளவில் செயல்லற்று இருக்கும் கருணாநிதி விசுவாசிகள், வாரிசுகள், மற்றும் சில சுயநல கூட்டணி கட்சிகள் ஆடும், பாடும், மிரட்டும், ஜால்ரா போடும், சாதனை விழா கொண்டாடும். ஆம்.

இந்த நாடகத்தின் ஒரு பகுதிதான் கோவை தொடர் குண்டுவெடிப்பு.

கோவை, மதுரை, சென்னை மக்கள் பார்த்துவிட்டார்கள் இந்த சூழ்ச்சியை. இது என்ன மன்னர் ஆட்சியா? அல்லது மக்கள் ஆட்சியா?

கோவை ராதாகிருக்ஷ்ணன்