பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 16, 2007

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 16-08-07

இந்த வாரம் முனீஸ்வரன் இட்லிவடைக்கு எழுதும் நீளமான கடிதம்.

அன்புள்ள இட்லிவடை,

நல்ல செய்தி போட ரொம்ப கஷ்டபட்ட போல. உனக்கு ஒரு அட்வைஸ் - வீனாக பாதை மாறி போகாதே. ஜோதிகாவிற்கு பெண் குழந்தை, அதற்கு என்ன பேர் வைக்க போகிறார்கள், ஸ்ரீகாந்த், வந்தனா சமரசம் என்று நியூஸ் போட்டால் தான் உன் கடைக்கு கூட்டம் வரும். நல்ல செய்தியை போட்டு தமிழ் வலைப்பதிவு உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்காதே. சரி இந்த வாரம் சில செய்திகள் படிக்க நேர்ந்தது அதை பற்றி..

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா ? ஷில்பா ஷெட்டி தான். லண்டனில் அவர் நல்ல பிரபலம் ( நன்றி: பிக் பிரதர் ). முன்பு ஐஸ்வரியா ராய் இப்ப ஷில்பா ஷெட்ட பார்க்கலாம்.

சிகரெட் பற்றி ஒரு செய்தி படித்தேன், நீ படித்தையா ?
புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்பதை தெரிவிக்கும் விதமாக புற்று நோய் தாக்கியதால் உருக் குலைந்த உடல் பாகங்கள் சிகரெட் பாக்கெட் லேபிள் களில் அச்சிட வேண்டும் என்று சிம்லா ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. வருகிற அக்டோபர் மாதம் முதல் இதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கோர்ட்டு கூறியிருந்தது.

முன்பு பீடிக்கட்டுகள் மீது மண்டை ஒடு பற்றி கலைஞர் என்ன சொன்னார் தெரியுமா ?

பீடிக்கட்டுகள் மீது மண்டை ஓடு சின்னம் அச்சிட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்திரவை கைவிட்டு, லட்சக் கணக்கான பீடிக் தொழிலாளர்கள் குடும்பங்களை பாதுகாத்து, அவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய உரிய நடாடிக்கை எடுக்குமாறு உங்களை கேட்டு கொள்கிறேன் ( பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் கலைஞர் கடிதம், முரசொலி 7.5.2006).

மூன்று நாளைக்கு பிறகு அதே கலைஞர் ( ராமதாஸ் எஃபெக்ட் காரணமாக )
நான் ஒரு கடிதம் பிரதமருக்கும் மத்தியில் இருக்கின்ற மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் அன்புமணிக்கும் எழுதினேன்.
"அதில் நான் படம் ஓட்டுகின்ற இந்த உத்திரவை நிறுத்த வேண்டும் என்று மாத்திரமல்ல, அந்த உத்திரவே கூடாது என்று நான் அதில் குறிபிடவில்லை, இந்த முயற்சியால் பீடி பிடிப்பதை தடுக்க கூடாது என்றும் குறிப்பிடவில்லை. இப்போழுது ஏற்பட்டு இருக்கின்ற இந்த சிக்கலைத் தவிர்ப்பதற்கு உத்திரவை ரத்து செய்யக் கூட வேண்டியது இல்லை ஒத்தி வையுங்கள் என்று தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

இதை சரியாக படித்து இருந்தால் பாட்டாளி மக்கள் கட்சியிலேயிருந்து கூட எனக்கு எதிர்ப்பு வந்திருக்காது. நான் ஒத்தி வையுங்கள் என்று தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ( சட்டசபையில் கலைஞர் 10.5.2007, தினந்தந்தி )

கலைஞருக்கு நிகர் கலைஞர் தான் :-)

கானடாவில் சிகரெட் பாக்கெட் மீது உள்ள படத்தை பார்க்கவும்.


"சொந்த தொகுதியை கோயிலா நினைக்க வேண்டும்...". இந்தனால் என்ன ஆகபோகிறதோ. நம்ம அரசியல்வாதிகள் சும்மா இருப்பார்களா உடனே பெரியார் சிலையை வைத்துவிடுவார்கள் இல்லையென்றால் அட்லீஸ் ஒரு உண்டியலாவது வெச்சு காசு பார்த்துவிடுவார்கள்.

மாயாவதி 'லக்னோ பல்கலைக்கழகத்துக்கு 1957ஆம் ஆண்டு பெரியார் வந்தார் என்று ஒரு வரலாற்று சிறப்பான செய்தியை சொல்லியிருக்கிறார். அப்போது அங்கே பெரியாருக்கு சிலை வைக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றினார்களாம். ஆனால் இன்று வரை அதை செயல்படுத்தவில்லையாம். இப்ப மாயாவதி அந்த அநீதியை போக்க முன்வந்துள்ளார். சூப்பர் சூப்பர். சிலைக்கு அடியில் கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று எழுதுவார்களா ?

சரி, படிக்கிறவர்களுக்கு ஒரு மெசேஜ்: இழுத்துப் பேசலாம்; இழிவுபடுத்திப் பேச யாருக்கும் உரிமையில்லை. உதாரணமாக "கடவுள் இல்லை; நான் நம்பவில்லை" என்று சொல்லலாம். ஆனால் "கடவுளை நம்புகிறவன் முட்டாள்" என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அது பிறர் சுதந்தரத்தில் தலையிடுவதாகும்; அரசியல் சாசனத்துக்கு முரணானதாகும். நம்ம அரசியல் தலைவர்களுக்கு இது எங்க தெரிய போகிறது. படித்த ... சரி வேண்டாம்.

இப்ப ஒரு ஜோக்

ஸ்கூல் பையன்1: என்னை என் வாத்தியார் முட்டாள் என்று சொன்னால், அவர் மீது வழக்கு தொடரலாம் தெரியுமா ?
ஸ்கூல் பையன்2: அப்படியா சூப்பர். ஆனால் சில மத அடிப்படைவாதிகள் 'உன் தலையை சிவிவிடுவேன்' என்று சொல்லுகிறார்கள்.
அவர்கள் மேல் நடவடிக்கை கிடையாதா ?
ஸ்கூல் பையன்1: இப்ப தெரிகிறதா நான் பெரியவனான பின் என்ன ஆக போகிறேன் என்று ?

ஜோக் என்றுதும் நினைவுக்கு வருவது இடதுசாரிகள் செய்யும் 'Step down' அரசியல். அமெரிக்காவுக்கு அடிபணியும் வகையில் நடந்து கொண்டால் ஆட்சியைக் கவிழ்ப்போம் என இடதுசாரிகளும், வேண்டுமானால் அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெறலாம் என பிரதமரும் சவால் விட்டுக் கொண்டு போன வாரம் நல்ல தமாஷ். இடதுசாரிகள், ஆதரவு வாபஸ் பற்றி ஆ.கே.லக்ஷ்மன் கார்ட்டூன் சூப்பார் அதை இங்கே தந்திருக்கிறேன்.



இட்லிவடை வாசகர்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். அறுபது ஆண்டு சுதந்திர இந்தியா பற்றி சில புள்ளி விவரம் பார்க்க நேர்ந்தது, அதை கீழே கொடுத்திருக்கிறேன்.





அதே போல் 1947 - 2007 பற்றிய சுவாரசியமான தகவல்கள்



பிகு: புள்ளிவிவரங்கள் எல்லாம் உண்மையானவை கிடையாது என்று 95% புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடிகள், பேட்ஜ்கள் விற்பனை கனஜோராக நடந்து வருகிறது. நாடு தனது 60வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், தேசியக் கொடியின் விற்பனை, இந்த ஆண்டு 30 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது தெரியுமா ? கலைஞர், மன்மோகன் சிங் நேற்று கொடியை ஏற்றினார்கள். ஆனால் கீழே இருக்கும் இவர்களை யார் ஏற்ற போகிறார்கள் ?



தேசிய கீதம் ஒலிக்கும் போது எழுந்து நிற்க வேண்டும் என்பது மரபு. ஆனால் நேற்று டிவியில் நடிகைகள் பேட்டி, பட்டிமன்றம் சினிமாவிற்கு நடுவில பிரேக்கில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் பாரத் பாலா தயாரிப்பில் 'ஜன கன மன' 15 நிமிஷத்துக்கு ஒரு முறை ஒலித்தது. இது சரியா ? ஆனால் ரொம்ப சூப்பராக இருந்தது.


புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் ஒவ வொரு ஆண்டும் திருவிழா போல கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து நகர் முழுவதும் கட்- அவுட், பேனர்களை போட்டி போட்டுக் கொண்டு வைப்பதும் வாடிக்கை. முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாள் கடந்த 4ம் தேதி கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டுகளை மிஞ்சும் வகையில் பிரமாண்டமான கட்-அவுட், பேனர்களை வைத்து ஆதரவாளர்கள் அசத்தினர். படத்தில் இருப்பது புதுச்சேரி முதல்வர் தான்.

சிவாஜி' படத்திற்கு எதிரான வழக்கு முடிவுக்கு வந்தது, இந்த செய்தி பரப்பு இல்லாததால் பத்திரிக்கைகள் கண்டுகாம விட்டுவிட்டது. "எந்த அரசியல் கட்சித் தலைவர்களையும் அவதூறு செய்யும் நோக்கம் இல்லை' என நடிகர் ரஜினி மற்றும் தயாரிப்பாளர் சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல் கூறியதைத் தொடர்ந்து, "சிவாஜி' படத்துக்கு எதிரான வழக்கு முடிக்கப்பட்டது.

அப்புறம் சிவாஜி படம் இந்தியில் டப்பிங் செய்யப்படுகிறது "சிவாஜி' ரஜினியே வசனம் பேசுகிறார். வரே வா!




கடைசியாக ஒரு பக்தி கதை - நாதருடைய கையிலே ஒரு டிவி சேனல் இருந்தது. தங்கபாலு அந்த சேனல் வேணுமென்று 'தாம் தாம்' என்று குதித்தார்; வசந்தகுமார் தனக்குத்தான் வேணுமென்று அடம் பிடித்தார். நாரதர் சொன்னார்: "யார் முதலில் டெல்லியை சுற்றி வருகிறார்களோ அவர்களுக்குத் தான் என்று சொல்லிவிட்டார்.

வசந்தகுமார் யோசிக்கவில்லை. அந்தக்கணமே மயில் வாகனத்தில் டெல்லியை வலம்பர புறப்பட்டார். தங்கபாலு 'டொங்கு, டொங்கு' என்று எலியின் மேல் கோபாலபுரம் ஓடினார். இருவருக்கும் டிவி சேனல் கிடைத்தது என்பது செய்தி. (இப்ப தான் தயாநிதி மாறன் இல்லையே, அதனால் இரண்டு போருக்கும் கிடைத்தது )

அன்புடன்,
முனீஸ்வரன்

0 Comments: