பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 05, 2007

குடி குடியை கெடுக்கும்

"இருபத்தி நாலு மணிநேரமும் போதையில் மிதக்கிறார், சட்டசபைக்கு வரும்போதும் குடிக்கிறார்" - விஜயகாந்த் பற்றி ஜெ.

"ஒரு கட்சியை துவக்கி நடத்துபவருக்கு தான் அதன் கஷ்டங்கள் தெரியும்; இடையில் குடிபுகுந்தவர்களுக்கு அதுபற்றி தெரியாது' - விஜயகாந்த்

"குடி உள்ளே புகுந்த காரணத்தால் வரலாறு தெரியாமல் உளறுகிறார்" - கலைஞர்

கேள்வி:- தி.மு.க.வை அழிப்பேன், சபதம் ஏற்கிறேன், இது சத்தியம் என்றெல்லாம் ஜெயலலிதா சவால் விட்டிருப்பது பற்றி?

கலைஞர் பதில்:- நேற்று கொஞ்சம் "அதிகமாகி'' விட்டது போலும். ஆம்; கோபம்.

+தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடை களை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் - ராமதாஸ் அறிக்கை

+இதே கொள்கையை வைத்துக்கொண்டு புதுச்சேரியில் பிரச்சாரம் செய்ய தயாரா ? - கலைஞர்

பழைய சினிமா பாடல் :
நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு!
சும்மா கும்முனு ஏறுது கிக்கு எனக்கு
( 'குடி' வேறு பாடல்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். ஒரு நூறு பாடல்கள் இருக்குமா ? )

(+ நினைவில் இருந்து எழுதியவை )

18 Comments:

Anonymous said...

ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு இந்த உலகமே சுத்துதடி பல ரவுண்டு

Anonymous said...

'Thanni thotti thedi vandha kannu kutti naan'

உண்மை said...

நாளை முதல் குடிக்கமாட்டேன், சத்தியமடி தங்கம் இன்னிக்கு ராத்ரிக்கு தூங்க வேனும் ..........

உண்மை said...

ஒரு கிண்ணத்தை ஏந்து கிரென் ஏன் ஏன் ஏன் .......

Anonymous said...

அடுத்து ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், கருனாநிதி மீது சாராய ஊழல், தயாநிதி மற்றும் கலாநிதி மீதி டீவி மற்றும் செய்தித்தாள் போர்வையில் பெண்களை வைத்து வியாபாரம் நடத்தியதாக வழக்குகளை எதிர்பார்க்கலாம்.

நாகு (Nagu) said...

ஒரு கோப்பையிலே என் 'குடி'யிருப்பு...

Anonymous said...

"கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மது அருந்தாமல் நான் விடமாட்டேன்".

புள்ளிராஜா

ஓகை said...

தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா
இல்லை நீதான் ஒரு மிருகம் ....

படம் - ஒளிவிளக்கு

கால்கரி சிவா said...

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு(பல) கோல மயில் என் துணையிருப்பு

Vino said...

hope when vijaykanth takes over power from these people..... things might change...to me he is best choice than other 2 for obvious reasons :-)

Anonymous said...

வர வர கருணாநிதியின் பேச்சும், அறிக்கைகளும் ஆபாசம், அருவருப்பு.

வயதாக ஆக இந்தாளுக்கு வக்கிரம் அதிகமாகிக்கொண்டே போகிறது.

ஈனத்தனமாக இவர் அறிக்கைகள் இவரின் கேடுகெட்ட அரசியலைத்தான் சொல்கின்றன.

"ஆண்மை இருந்தது, குழந்தைகள் உண்டு" என்கிறார். "உனக்கு குடும்பமா, குட்டியா" என்கிறார். "ஐம்பது வருடம் முன்பு கூப்பிட்டிருந்தால் நான் யாரென்று காட்டியிருப்பேன்" என்கிறார். "கொஞ்சம் அதிகமாகிவிட்டது - அதாவது, கோபம்" என்கிறார்.

இவர் தமிழ் அரசியலின் ஒரு கரும்புள்ளி. இக்கொடுமையை இன்னும் எத்தனை நாள் ஆண்டவன் நம்மிடம் விட்டுவைத்திருப்பானோ தெரியவில்லை!

Anonymous said...

ஊத்திக்க மாமா ஒரு ரவுண்டு, ஊறுகாயா நா இருப்பேன்...

(இந்த தத்துவப்பாடல் வந்த படம் தெரியலை)

Anonymous said...

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்

நவராத்திரியில் குடிகார சிவாஜி

Anonymous said...

இது வேர் உலகம் தனி உலகம் சச்சசா

இஸ்லாமிய செய்திகள் said...

காந்தி சிலைபக்கத்தில்
கள்ளுக்கடை,
மக்கள் போராடினார்கள்
அரசாங்கம் அகற்றியது
கள்ளுக்கடியை அல்ல
காந்தி சிலையை
என்ற நிலைதான் நாட்டில் நிலவுகிறது
"அவன் குடித்தான்
குடும்பம் தள்ளாடுகிறது"

Anonymous said...

குடிகாரன் பேச்சு விடிந்தாலே போச்சு

சொர்க்கம் மதுவிலே

தண்ணிய போட்ட சந்தோஷ்ம் பிறக்கும் தள்ளாடி நடந்தா உல்லாசம்

ஹரன்பிரசன்னா said...

01. குடிமகனே பெருங்குடிமகனே (வசந்த மாளிகை)
02. ஆண்டவனைப் பார்க்கணும் அவனுக்கு ஊத்தணும் (மக்கள் என் பக்கம்)
03. நாந்தாண்டா இப்போ தேவதாஸ் இத்தோட சேர்த்தா நாலு க்ளாஸ் (தனிக்காட்டு ராஜா)
04. ஒரு மூணு முடிச்சாலே முட்டாளா ஆனேன் (அம்மன் கோவில் கிழக்காலே)
05. ஆசையும் பாசமும் (குலேபகாவலி)
06. ஊத்தட்டுமே ஊத்தட்டுமா (ஜெய்ஹிந்த்)
07. வந்தனம் என் வந்தனம் (வாழ்வே மாயம்)
08. சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே (சட்டம் என் கையில்)
09. ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிக்கிட்டேன் (படிக்காதவன்)
10. ஒரு ஜீவந்தான் உன் பாடல்தான் (அன்புக்கு நான் அடிமை)
11. சம்போ சம்போ சிவசாமி சரணம் (இராணி தேனி)
12. ஏ தண்ணித்தொட்டி தேடி வந்த (சிந்து பைரவி)
13. உலகே மாயம் (தேவதாஸ்)
14. கையில காசு வாயில தோசை (அச்சமிலை அச்சமில்லை)
15. அடிச்சுத் துரத்துவேன் புடிச்சு நொறுக்குவேன் (கிளிப் பேச்சு கேட்க வா)
16. ஏழிசை கீதமே (ஒரு ரசிகன் ஒரு ரசிகை)

உட்கார்ந்து யோசித்தால் இன்னும் நிறைய எழுதலாம்.

Subramanian said...

காகித ஓடம் கடலலை மேலே--மறக்க முடியுமா--கருணாநிதி(இப்போதெல்லாம் பெயரைச் சொல்லாமல் கலைஞர் என்று கூப்பிடுகிறார்கள்.)
மைனர் லைஃப்பு ரொம்ப ஜாலி மானம் மணி ப்ர்ஸு ரெண்டும் காலி--தஞ்சை ராமையாதாஸ்
உடலுக்கு உயிர் காவல் --மணப்பந்தல்--கண்ணதாசன்
உன்னைக் கண் தேடுதே--தஞ்சை ராமையாதாஸ்--க.க.தெய்வம்
அடிக்கிற கைதான் அணைக்கும்-மருதகாசி--வண்ணக்கிளி
யாரடீ நீ மோகினீ--மருதகாசி--உத்தம புத்திரன்
முள்ளில் ரோஜா கை படாத ரோஜா கண்மணி சரோஜா--கண்ணதாசன்--கலைக்கோவில்