பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 22, 2007

குடியரசு துணைத் தலைவர் - அன்பழகன்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் திமுக பொதுச்செயலாளரும் தமிழக நிதியமைச்சருமான அன்பழகன் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.


கடந்த மே மாதம் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சென்னை வந்தபோது குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக அவர்களிடம் திமுக தரப்பில் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பதாகவும் அதற்குப் பதிலாக குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தங்கள் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று திமுக கேட்டுக்கொண்டது.

இதன் அடிப்படையில் அடுத்து நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) வேட்பாளராக அன்பழகன் போட்டியிடுகிறார்.

84 வயதான அன்பழகன் இதற்கு முன் நான்கு முறை திமுக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். தற்போது நிதியமைச்சராக உள்ள இவர் ஆரம்பத்தில் திராவிடர் கழகத்தில் இருந்தவர். திமுக துவங்கப்பட்ட நாளில் அக்கட்சியில் இணைந்தார்.

8 Comments:

ஹரன்பிரசன்னா said...

பேரைக் கேட்டாலே சும்மா அதிருதே.. :(

. : beachsundal : . said...

கிளீஞ்சிது லம்பாடி லுங்கி

சொந்த தொகுதியில் 300 - 400 ஓட்டுக்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றவருக்கு துனை ஜனாதிபதி பதவி...

Anonymous said...

இனிமே டெல்லி மெடிக்கல் காலேஜு பொண்ணுங்க எல்லாம் ஜாக்கிரதையா இருக்கணும்னு சொல்லுங்க

ILA(a)இளா said...

//இனி இட்லிவடை பதிவு படிக்க விரும்புவோர் நேராக இங்கே வந்து பதிவு இருந்தால் படித்துக்கொள்ளுங்கள். இனி எந்த திரட்டிகளிலும் பதிவுகள் வராது. பிகு: இட்லிவடையில் செய்தி இல்லை என்றால் ஜெயா டிவி பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள் :-) உங்களுக்கு விருப்பம் இருந்தால் கீழே செய்தியோடை இருக்கு //
????????????????????????

ILA(a)இளா said...

Welcome back to ThamizManam!
அப்போ மிளகாய்கிறது நீங்க இல்லியா?

IdlyVadai said...

இளா, நான் எந்த திரட்டியிலும் இல்லை. யாராவது பிங் செய்துவிடுகிறார்கள். நான் தரட்டிகளுக்கு மடல் அனுப்பிவிட்டேன். இன்னும் என்னை எடுக்கவில்லை. அவ்வளவு தான்.

உண்மைத் தமிழன்(03027376146007401490) said...

அன்பழகனை கிண்டல் செய்து நம்ம துக்ளக் சோ சார் அருமையாக கார்ட்டூன் போட்டிருந்தார்!

Anonymous said...

இனி இட்லிவடை பதிவு படிக்க விரும்புவோர் நேராக இங்கே வந்து பதிவு இருந்தால் படித்துக்கொள்ளுங்கள். இனி எந்த திரட்டிகளிலும் பதிவுகள் வராது. பிகு: இட்லிவடையில் செய்தி இல்லை என்றால் ஜெயா டிவி பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள் :-) உங்களுக்கு விருப்பம் இருந்தால் கீழே செய்தியோடை இருக்கு

:-):-):-)