பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 15, 2007

சிவாஜி - குற்றப்பத்திரிக்கை

சிவாஜி படத்தின் FIR போட தாமதமானதற்கு மன்னிக்கவும். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன் :-).

முதல் பஞ்ச் : டிரைலரில் இருந்த இம்பாக்ட் முழுபடத்தில் இல்லை.கதை: ரஜினி பட கதை.

ரஜினி: மேக்கபில் அழகாக இருக்கிறார், ஆனால் வயது தெரிகிறது. சண்டை காட்சிகளில் டூப் போடாமல் சண்டை எல்லாம் போடுகிறார் சபாஷ். மொட்டை தலை ரஜினி கலகல. ( சிவாஜி, எம்.ஜி.ஆர் வசனம் நல்லாவே இருந்தது) மொட்டைக்கு யூஸ் செய்த கத்தியை கொஞ்சம் அந்த காட்சிகளுக்கும் யூஸ் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நிச்சயம் ஒரு வாரத்தில் தியேட்டர் காரர்கள் செய்துவிடுவார்கள். பபிள் கம், காசை சுண்டி போடுகிறார் விதவிதமாக பிடிக்கிறார்.

ஸ்ரேயா: தமிழ்செல்வி என்று பெயர் வைத்துக்கொண்டு அக்மார்க் தமிழ் பெண்ணாக வருகிறார். தமிழ் பெண்கள் இவ்வளவு அழகா ? என்று அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறார் . எல்லா பாடல் கட்சிகளிலும் ஒரே மாதிரி அசைவுகளை தருகிறார். அழகாக இருப்பதால் இவரை பற்றி அதிகம் குறை சொல்ல மனசு இல்லை. பட்டிமன்ற புகழ் ராஜா இவருக்கு அப்பா. அப்பப்பா

சுமன்: வெள்ளை வேட்டி, சட்டையில் வரும் காட்சிகளில் ரஜினியுடன் மோதுகிறார். ரஜினியை பார்க்கும் போது எல்லாம் கண்ணாடியை கழட்டி போடுகிறார். பழைய ஸ்டைல் புது வில்லன். ராம்ராஜ் வேட்டி சட்டை விளம்பரத்துக்கு நிச்சயம் நல்ல தேர்வாக இருப்பார்.

சங்கர்: சங்கரிடம் சரக்கு தீர்ந்துவிட்டது.. Money Laundering பற்றி சொல்லியிருக்கிறார். ஆழமாக சொல்லியிருக்கலாம். நிறைய இடத்தில் சங்கர் படமா, ரஜினி படமா என்று குழம்பி போயிருக்கார் மனுஷன். கருப்பு பணத்தை எப்படி வெள்ளையாக மாற்றுவது என்று சொல்லி கொடுத்திருக்கிறார். கொஞ்சம் சொதப்பியிருந்தால், ரஜினி ரசிகர்களிடம் அடி வாங்கியிருப்பார். Just Missed.

சுஜாதா: சண்டை காட்சிகளில் கூட்டமாக வரும் அடியாட்களை பார்த்து "பன்றிகள் தான் கூட்டமா வரும், சிங்கம் தனியாகதான் வரும்" என்று ரஜினி படத்துக்கும் வசனம் எழுதியிருக்கிறார். ( இந்த பன்றிக்கும், பன்றிக்கு நன்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை )

விவேக்: ஸ்ரேயா, ரஜினி முதல் இரவு காட்சியை தவிர்த்து ரஜினி கூடவே எப்போதும் இருக்கிறார். பன்ச் டையலாக் இவர் தான் பேசுகிறார்.

பாடல்கள், இசை, கலை, மேக்கப்..எடிட்டிங்... : பாடல் காட்சிகள் எல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. பல்லேலக்கா அறிமுகப்பாடலில் சில காட்சிகளை பூனாவில் எடுத்திருக்கிறார்கள். :-). நயந்தாரா நல்லாவே ஆடியிருக்கிறார். தீ தீ ஜெக ஜோதி ஜோதி ஜோதி பாடல் நல்லா ஸ்பிடாக இருக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹ்மான், பஞ்சு இல்லாத காரணத்தால் சில காட்சிகளில் பாப்கார்னை எடுத்து காதில் அடைத்துக்கொண்டேன். கொடுத்த காசுக்கு மேக்கப் நன்றாக போட்டிருக்கிறார்கள். எடிட்டிங் இன்னும் வேலை இருக்கு(முதல் 30 நிமிடம், ரஜினியின் ஓப்பனிங் சீன் எல்லாம் .. என்ன ஆச்சு நாம ரஜினி படத்திற்கு ?). தோட்டா தரணி - சூப்பர் தரணி

பஞ்ச்: ஒவ்வொரு காட்சியையும் தனியாக பார்த்தால் அவுட்புட் இருக்கிறது, ஆனால் ஒன்றாக கோர்த்தால் ரஜினி பட இம்பாக்டும் இல்லை சங்கர் பட இம்பாக்டும் இல்லை. Cool!, நான் தியேட்டர் ஏசியை சொன்னேன்.

( சிவாஜி, எம்.ஜி.ஆர், கமல் போல ஒரு பாடல் காட்சியில் வரும் போது, தியேட்டரில் செம ரகளை )

[ இயக்கம் - 6/10
வசனம்: 7/10
திரைக்கதை: 6/10
கலை : 9/10
பாடல், இசை : 8/10
எடிட்டிங்: 6/10

மொத்தம்: 7]


22 Comments:

Abu-Ben-Adam said...

அப்ப படம் பாக்கலாமா? வேணாமா?

Arun said...

Good one..

boopathy said...

good description Mr.IdlyVadai. Can you give the rating for the movie?

நாகை சிவா said...

ஆக ரஜினி ரசிகர்களுக்கு அதிரும்....

ஈடன் கார்டன்ல இருக்குற மாதிரினு எல்லாரும் சொல்லுறாங்க.. சரி தானே...//அழகாக இருப்பதால் இவரை பற்றி அதிகம் குறை சொல்ல மனசு இல்லை. //

:-))))))))0

boopathy said...

hey, ur review is good, wheres the 60 crores invested? able to see that in the movie?

Shyam said...

Good Review.

ஹரன்பிரசன்னா said...

//திரட்டிகளிலிருந்து விலகல்
திரட்டிகளிலிருந்து விலகியது நல்ல முடிவு
தவறான முடிவு //

But I can see your postings getting collected in Thamizmanam and Thenkoodu.

IdlyVadai said...

ஹரண்பிரசன்னா - நானும் இப்போது தான் பாத்தேன். யாராவது தமிழ்மணத்தில் பிங் செய்திருப்பார்கள். அதே போல் தேன்கூடு, தமிழ்வெளி போன்ற திரட்டிகள் தானாக திரட்டுகிறது.

செல்வேந்திரன் said...

காலையில் படம் பார்த்து விட்டு வந்ததில் இருந்து ஒவ்வொருவரின் விமர்சனத்தையும் படித்து வருகிறேன். அதில் உங்களுடையது முதல் தரமாக இருக்கிறது. "பஞ்சுக்கு பதில் பாப்கார்ன்" புன்முறுவல் பூக்க வைத்தது. நல்ல விமர்சனம்.

மிக்க அன்புடன்
செல்வேந்திரன்

நாகை சிவா said...

7.1 + Rajini = 100 %

Analyzt said...

surface level review. i expected more depth.. may be u got buried in the noise and celeberations of the fans..

-bharath

உண்மை said...

cool :)

ப்ரியன் said...

/*இயக்கம் - 6/10
எடிட்டிங் - 8/10
வசனம்: 7/10
திரைக்கதை: 6/10
கலை : 9/10
பாடல், இசை : 8/10
எடிட்டிங்: 6/10*/

அது என்ன?

இரண்டாவது வரியில் எடிட்டிங் - 8/10

&

கடைசி வரியில் எடிட்டிங் - 6/10

Anonymous said...

எடிட்டங்குக்கு இரண்டு முறை மதிப்பெண் போட்டு இருக்கீங்க..

திரட்டிகள்ல சேர விண்ணப்பிச்ச மாதிரியே விலகவும் விண்ணப்பிக்கணும்..இல்லாட்டி, எப்படியாச்சும் அது பாட்டுக்கு வந்துக்கிட்டு தான் இருக்கும்

IdlyVadai said...

அனானி, ப்ரியன் நன்றி. திருத்திவிட்டேன்.

யோசிப்பவர் said...

//அழகாக இருப்பதால் இவரை பற்றி அதிகம் குறை சொல்ல மனசு இல்லை. //

கொஞ்சம் ஓவர் ஜொள்ளா இருக்கே!!;-)

//கதை: ரஜினி பட கதை.//
எனது நண்பர்கள் வேறுவிதமாக சொன்னார்களே? "இது ரஜினி படமல்ல. ஷங்கர் படம்" என்று!!!

யோசிப்பவர் said...

//எடிட்டிங் - 8/10
எடிட்டிங்: 6/10//

உங்களது நம்பகத்தன்மையை கேள்விக்குரியதாக்குகிறதே?!!!;-))

பி.கு: உண்மையிலேயே படம் பார்த்துவிட்டீர்களா?;-)))

IdlyVadai said...

யோசிப்பவர் அதான் சரி செய்துவிட்டேன். நிஜமாக படம் பார்த்தேன் அதுவும் ஸ்ரேயாவுடன்
:-)

யோசிப்பவர் said...

//அதுவும் ஸ்ரேயாவுடன்
//
அதனால்தான் இவ்வளவு ஜொள்ளா!!!;-)

Anonymous said...

மிக நல்ல முடிவு. எனது பாராட்டுக்கள். நான் திரட்டியில் இருந்து விலகியதைச் சொன்னேன்

அன்புடன்
ச.திருமலை

Anonymous said...

I've seen the movie yesterday. Excellent review comments..
In some places, Shankar is really getting confused...!!! As you said,
Sankaridam sarakku theernthuvittatu..

Anonymous said...

மிஸ்ஸிங்க யு எ லாட் இன் தமிழ்மணம். இப்ப திரட்டி ரொம்ப டிரையா இருக்கு, படிக்க விருப்பமில்லை.