பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 22, 2007

ஸ்ரேயா தொப்புள் கட்
ரஜினிகாந்த்-ஸ்ரேயா சம்பந்தப்பட்ட `தொப்புள்' காட்சியில், ஒரு வெட்டு விழுந்தது. அந்த இடம் ஆபாசமாக இருப்பதாக கூறி, அந்த காட்சியை நீக்கும்படி கூறினார்கள்.

அதை பட குழுவினர் முதலில் ஏற்க மறுத்தார்கள். அந்த காட்சி நீண்ட கயிறு மூலம் அந்தரத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சி. இந்த காட்சியில் ரஜினி ஸ்ரேயாவின் தொப்புளை ரஜினி விரலால் வருடுவது போல காட்சி எடுக்கப்பட்டிருந்ததாம்.அதை நீக்கினால், பாடலின் தொடர்பு விட்டுப்போகும் என்று வாதாடினார்கள். ஆனால், தணிக்கை குழுவினர் பிடிவாதமாக இருந்ததால், அந்த `தொப்புள்' காட்சி நீக்கப்பட்டது.

ஆனால் அதே காட்சியை ஷங்கர் வேறு ஒரு கோணத்தில் படமாக்கி இருந்தார். `கேன்ஸ்' பட விழாவுக்கு சென்று இருக்கும் அவர், அங்கிருந்து தனது உதவியாளர்களிடம் பேசி, அந்த காட்சியை எச்சரிக்கையாக கையாளும்படி கேட்டுக்கொண்டார்.

9 Comments:

செல்வன் said...

யூ சர்டிப்பிகேட் கிடைக்கவேண்டுமானால் அந்த காட்சியை விலக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். நியாயமாகத்தான் படுகிறது.

IdlyVadai said...

கேப்டனுக்கு ஒரு நியாயம் சூப்பர் ஸ்டாருக்கு ஒரு நியாமா ?

செல்வன் said...

//கேப்டனுக்கு ஒரு நியாயம் சூப்பர் ஸ்டாருக்கு ஒரு நியாமா ? //

புரியவில்லை

அருண்மொழி said...

இட்லி வடையாரே,

தலைப்பில் ஒரு பிழை. ஸ்ரேயாவின் தொப்புள் கட் என்பது சரியல்ல. தொப்புளை ஜூப்பர் ஸ்டார் தடவுவது கட் என்பதே சரி.

ஸ்ரேயாவின் தொப்புளை close upல் காட்டுவதை தடுத்த ஜூப்பர் ஸ்டார் ஒழிக.

சந்தோஷ் aka Santhosh said...

ஹி ஹி நம்ம ஏரியாவுல இதை பத்தி நேற்றே போட்டாச்சு.

http://santhoshpakkangal.blogspot.com/

சேவியர் said...

தொப்புள் வெளியே தெரிய வேண்டாமே என்று சூப்பர்ஸ்டார் கை வெச்சு மறைச்சிருக்கார். அதை ஆபாசம்ன்னு சொல்லிட்டாங்க :)

இருந்தாலும் இந்த படத்துல இருக்கிறது மாதிரி தொப்புளை cut பண்ண மாட்டாங்கன்னு நினைக்கிறேன் !

IdlyVadai said...

சேவியர் நல்ல கமெண்ட் :-)

கொழுவி said...

//அந்த இடம் ஆபாசமாக இருப்பதாக கூறி, .//

எந்த இடம்..? தொப்புளா..?

krish said...

ellam sari, indha wallpaperla 'sreya'vku thoppula vettitingale, gnayama........??