"வீட்டுக் கதவை கள்ளச் சாவியால் திறந்து பிரோவில் இருந்த துட்டையும், கோணிப்பையில் இருந்த பப்பாளிப் பழத்தையும், சப்போட்டாப் பழத்தையும் திருடிய சுமார் இருபது வயதுடைய கில்லாடி ஆட்டோரிக்ஷாவில் தப்பி ஓடியபோது, தகவல் அறிந்து போலீஸ் ஏட்டு விரட்டி துப்பாகியால் சுட்டதில் தோட்டாக்கள் அவனைத் தீர்த்துக் கட்டின"
சாவி - போர்த்துகீசியம்
பிரோ - பிரெஞ்சு
துட்டு - டச்சு
கோணி - இந்தி
பாப்பாளி - மலாய்
சப்போட்டா - இசுப்பானியம்
கொய்யா - பிரேசிலியன்
சுமார் - பெர்சியன்
வயது - சமற்கிருதம்
கில்லாடி - மராத்தி
ஆட்டோ - கிரேக்கம்
ரிக்ஷா - சப்பானியம்
தகவல் - அரபி
போலீஸ் - இலத்தீன்
ஏட்டு - ஆங்கிலம்
துப்பாக்கி - துருக்கி
தோட்டா - உருது
ஆர்வமாக பங்கு கொண்ட எல்லோருக்கும் நன்றி. FloraiPuyalக்கு ஸ்பெஷல் நன்றி.
( கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய தமிழனா தமிங்கிலனா' என்ற நூலில் மேற்கண்ட மொழிக்கலப்பு சுட்டிக்காட்டப்படுள்ளது )
FloraiPuyal பின்னூட்ட தகவல் கீழே..
ஒரு சிறு விளக்கம்..
பபாயா என்பது மேற்கிந்திய மொழியான அரவகான் மொழிச்சொல். அதிலிருந்து ஸ்பானிய மொழிக்கும் பிற மொழிகளுக்கும் பரவியது.
பிளத்தல் என்ற பொருளுடைய PIE சொல் கி என்பதிலிருந்து இலத்தீனத்தின் clavis என்ற சொல்லும் பின் அதிலிருந்து போர்த்துகீசியத்தில் chave என்றும் பின் தமிழில் சாவி என்றும் ஆகியது. இந்த கி என்ற சொல்லைப் பார்க்கும் பொழுது தமிழின் கல், கில் ஆகிய வேர்ச்சொற்களுடன் பொருந்துவதால் தமிழ் மூலமாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.
தமிழில் புகர் என்னும் சொல் brown என்னும் பொருள்படும். மீண்டும் ஆய்வாளர்கள் PIE என்பதோடு நிறுத்தி விடுகின்றனர். பெரோஸ் என்னும் PIE சொல்லிலிருந்து கிளைத்த burra என்ற இலத்தீனச்சொல் ஃப்ரெஞ்சு மொழியில் bureau என்று வழங்குகிறது. dark brown cloth covering for a desk என்று வழங்கப்பட்டது பின் மேசைகளையும் மேசைகள் நிறைந்த அலுவகங்களையும் குறிக்க பொருள் நீட்சி பெற்றுள்ளது.
duit என்ற டட்சு மொழிச்சொல் பழைய நோர்ஸ் மொழியிலிருந்து வந்தது. எட்டில் ஒரு பங்கு பணம் என்ற பொருளிலிருந்து நீட்சி பெற்று coin என்ற பொருளில் இன்று டட்சு மொழியில் வழங்கப் படுகிறது. இதன் தொடக்கமும் ஆக்டோ என்ற கிரேக்க மொழிச் சொல்லும் அதிலிருந்து கிளைத்த huit என்ற ஃப்ரெஞ்சு சொல்லுமேயாகும். மீண்டும் PIE.
கோணி என்ற அளவைக்குறிக்கும் தமிழ்ச்சொல் goni என்று செங்கதத்திற்கும் பின் gunny என்று ஆங்கிலத்திற்கும் சென்று கடைசியில் gunny sac - கோணிப்பை என்று தமிழிற்கு திரும்புகிறது.
பண்டைய aztec மொழியில் tzapotl என்பது இனிய பழங்களைக் குறிக்கும் சொல். இதிலிருந்து வந்தது சபோட்டா என்ற சொல்.
சமர் என்ற பாரசீக சொல்லும் தமிழ் மூலமாக இருக்கலாம். ஏறக்குறைய ஒரே பொருளில் தான் வருகிறது. தெளிவாகத் தெரியவில்லை.
ஆட்டோ - இக்கிரேக்கச் சொல்லின் மூலம் தெரியவில்லை.
ரிக்ஷா என்ற சொல்லின் மூலம் சீனச் சொற்களான ரென் - மனிதன், லு - வலு, ச - வண்டி. சப்பானிய மொழியில் இச்சொற்கள் திரிந்து ரி கி ஷா என்று வழங்குகிறது. இச்சீனச் சொற்களின் பண்டைய பலுக்கல் நான் குறித்த தமிழ்ச்சொற்களைப் போன்றே இருக்கிறது.
தக்கல் என்ற அரபிச் சொல்லிலிருந்து வந்தது தகவல். இதற்கும் மூலம் தெரியவில்லை.
தமிழ், சங்கத புரம் கிரேக்கத்தில் politeia என்று குமுகத்தை வழங்க பயன்படுத்தப்பட்டது. பின்பு இலத்தீனத்திற்கும் ஃப்ரெஞ்சுக்கும் சென்றது. city என்றும் civil administration என்றும் பின் காவல்துறை என்றும் பொருள் நீள்கிறது.
head என்ற சொல்லின் மூலமும் PIE என்று கூறுகின்றனர். கபுத் என்னும் இச்சொல்லின் மூலம் தமிழின் கம் என்பதாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.
பக மற்றும் உறு என்ற தமிழ்ச்சொற்கள் வழமை போல் பயணித்து கடைசியில் fire, arms என்று மாறும். இதிலிருந்து கிளைத்தவை arme de feu, arma de foc மற்றும் tufek. இது துப்பாக்கி, துவாக்கி என்று நாவலந்தீவில் இன்று வழங்கப்படுகிறது.
தோட்டா மற்றும் கில்லாடி ஆகியவற்றுக்கும் மூலம் தெரியவில்லை.


நன்றி: தினமணி










12 Comments:
வயது, தகவல் தமிழ் அல்ல என்பது ஆச்சரியமா இருக்கு, அந்த வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தைகள் போட்டா நல்லா இருக்குமே
முடிந்தால் போடுங்க ப்ளீஸ் :)
இந்த வாக்கியத்தை யாராவது சுத்த தமிழ், மற்றும் சென்னை தமிழில் டிரை பண்ணி பின்னூட்டம் போடலாம். :-)
வணக்கம்பா, நீ வந்து நம்ம கைல இப்டி ஒரு கேள்வி கேக்க சொல்ல நம்மளால சும்மா குந்தினு கீற முடியுதா, அதான் கிளம்பிட்டேன். சரியா கீதான்னு ஒரு வார்த்தை பதில் சொல்லிடுப்பா.
வூட்ல கதவ டூப்ளிகேட் கீ போட்டு ஓப்பன் பண்ணி பீரோல இருந்த காசயும் அப்படியே சாக்கு பைல இருந்த பப்பாலி பயம், சப்போட்ட பயம் அல்லாத்தையும் லவட்டிக்கினு போன கிட்டதட்ட டொண்டி இயர்ஸான படா டகிலு வேலை செய்ற பார்ட்டி ஆட்டோல ஏறி அப்பீட் ஆக சொல்லோ, அந்த நூஸ் கேட்ட மாமா வந்து கன் எடுத்து ஷூட் பண்ண அந்த புல்லடுங்க அவுன காலி பண்ணிடுச்சுங்க.
கரெட்டாபா?
வீட்டுக் கதவை கள்ளத் திறவுகோல் கொண்டு திறந்து இலாச்சியில் இருந்த பணத்தையும் சாக்குப்பையில் இருந்த பப்பளி மற்றும் சப்போட்டா பழங்களை திருடிய இருபது அகவை இருக்கக்கூடிய அங்கிடுதத்தி (காமாட்டி, காலிப்பையன்) மூன்று சகட தானுந்து வாகனத்தில் தப்பி ஓடியபோது செய்தி அறிந்த முதன்மைக்காவலர் அவரை விரட்டி துவக்கு கொண்டு சுட்டதில் ரவைகள் (குண்டுகள்) அவனைத் தீர்த்துக் கட்டின.
பப்பாளி, சப்போட்ட போன்ற பழங்களுக்குத் தனித்தமிழ் சொற்கள் தெரியவில்லை. மற்றவைகளுக்கு எனக்குத் தெரிந்த சொற்களைப் பயன் படுத்தி இருக்கிறேன். செய்தது சரிதானா சொல் சொல் சொல் இ.வடையாரே.
"ஊட்டு கதுவ டுமீல் சாவி போட்டு தொறந்து பீரோல இர்ந்த துட்டையும், கோணீல இருந்த பப்பாளி பயத்தையும், சப்போட்டா பயத்தையும் லவட்டிக்கின டோமருக்கு இருவது வயசிருக்கும். அந்த டோமரு ஆட்டோரிச்சால அப்பீட்டு ஆனப்போ, ஏட்டையா துப்பாக்கிய தூக்கி சுட்டு ஸ்பாட்லேயே பய காலி"
இலாச்சி - x
அனானி,
இதைப் பாருங்க.
இலாச்சி (p. 86) [ ilācci ] , s. drawer in a cabinet or bureau, பீரோ அறை.
இ.கொத்தனாரே உங்கள் அருமையான மொழித்திறனை புகழ வார்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். சகல கலா வல்லவர்தான் போங்கள்!!!
பாப்பாளி - மலாய்
who say to u that பாப்பாளி from malay . im from malaysia i now malay very well than u.......... பாப்பாளி not form malay .
//தக்கல் என்ற அரபிச் சொல்லிலிருந்து வந்தது தகவல். இதற்கும் மூலம் தெரியவில்லை.//
இதற்கு மட்டும் நான் ஒரு தகவல் சொல்லிவிடுகிறேன்:
அரபியில் தஹவ்வல் என்றால் பரிமாற்றம் (Transfer) என்ற பொருளுண்டு. அதுதான் தமிழில் தகவல் - ஆகிவிட்டது.
//பப்பாளி, சப்போட்ட போன்ற பழங்களுக்குத் தனித்தமிழ் சொற்கள் தெரியவில்லை//
பெயர்ச்சொற்களையும் பெயர்த்தெழுத வேண்டியதில்லை. இட்லி, வடை ஆங்கிலத்திலும் idly vada தான்.
இகொ போட்டுட்டாரே அதுக்குள்ள...
அவரோடதையே சின்னதா மாற்றி...
//வீட்டுக் கதவை கள்ளத் திறவுகோல் கொண்டு திறந்து இலாச்சியில் இருந்த பணத்தையும் சாக்குப்பையில் இருந்த பப்பளி மற்றும் சப்போட்டா பழங்களை திருடிய இருபது அகவை இருக்கக்கூடிய அங்கிடுதத்தி (காமாட்டி, காலிப்பையன்) மூன்று சகட தானுந்து ஊர்தியில் தப்பி ஓடியபோது செய்தி அறிந்த தலைமைக்காவலர் அவரை விரட்டி துவக்கு கொண்டு சுட்டதில் ரவைகள் (குண்டுகள்) அவனைத் தீர்த்துக் கட்டின. //
ஏதோ எனக்கு தோணின சில...
Post a Comment