பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 13, 2007

சட்டம் ஏவ ஜெயதே

கமலஹாசன் அறிக்கை

யாகவாராயினும், `சத்திய மேவ ஜெயதே' எனும் கூற்றுக்கு குந்தகம் விளையும் நிலை வரும்போது `சட்டம் ஏவ ஜெயதே' எனும் புது மொழியை நம்ப வேண்டி வருகிறது. அவ்வாறே நம்பி உண்மை அடிபடாமலிருக்க சட்டத்திடம் உதவி கேட்டேன். சட்டம் என்னையும், தன்னையும் காத்து நின்றது.

மனசாட்சிக்கு பணிந்து வாழும் கலைஞர்களை வாழ்த்த உள்ள கூட்டத்திற்கு மத்தியில் வீழ்த்தவும் நினைக்கும் ஒரு சிறுபான்மைக் கூட்டம் இருப்பது என் மனதை உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது. அதுவும் திரை உலகத்தை சார்ந்த சில பழைய நண்பர்களே இந்த அவதூறு வழக்கிற்குப் பின்னால் இருந்திருக்கக் கூடும் என்ற என் சந்தேகம் வலுத்தது. சந்தேகம் மெய்ப்படும் சில ஆதாரங்களும் கிடைத்துள்ளது.

முக்கியமாக தசாவதாரம் தயாரிப்பாளர்களிடம் சில மாதங்களுக்கு முன் ஒரு திரை எழுத்தாளர் வந்து `உங்களுக்கு எதிரா கேஸ் குடுத்தானே பையன், அவன் நம்ம ஆளுதான் கேசை வாபஸ் வாங்கச் சொல்லி சமரசம் செஞ்சி வைக்கனும்னா நம்ம கிட்ட சொல்லுங்க நம்ம சாதிக்காரப்பையன்தான்' என்று சொன்னதாய் ஆஸ்கார் ரவிச்சந்திரன் என்னிடமும், கே.எஸ்.ரவிக்குமாரிடமும் சொன்னதும் நான் அதிர்ந்து போனேன்.

நல்ல வேளையாக அத்தகைய கட்டப்பஞ்சாயத்தில் எல்லாம் சம்மந்தப்படாமல் சட்டப்படி எங்கள் தரப்பு உண்மையை நாங்கள் காத்துக் கொள்ள முடிவெடுத்தது எங்கள் புத்திசாலித்தனம் மட்டும் அல்ல நேர்மையும் கூட.

சட்டத்தின் உதவியுடன் உண்மைவென்றே தீரும் என் பதற்கு இன்னும் ஓர் உதாரணம் காட்டிய நீதிமன்றத்திற்கும், நீதிபதிக்கும் எங்கள் வணக்கங்கள். சட்டம் தன் வேலையைச் செய்யும் நல்ல தீர்ப்பளிக்கும்.

நன்றி : மாலைமலர்

5 Comments:

Anonymous said...

சரியான உள்குத்து பதிவு, கட்டப் பஞ்சாயத்து செய்வது கிரிமினல் குற்றம் என்று கமல் வாயால சொல்லுறீங்க

பழூர் கார்த்தி said...

திரையுலகில் இன்னும் நிறைய திரைமறைவு மிரட்டல்கள் இருக்கின்றன என்பதையே இது உணர்த்துகிறது..

<<>>

படம் எப்ப வெளிவருகின்றது என்று சொல்லுங்களே, இட்லிவடை??

<<>>

அதுசரி, வலை முகப்பில் ஒரு வேலைக்காரி ஜோக் போட்டு பாஸ்டன் பாலா சந்தோஷம்தானா என்று கேட்ருக்கீங்களே, என்னன்னு கொஞ்சம் சொல்லுங்களேன் :-))

அமுக சட்டப் பிரிவு said...

ரொம்ப நன்றி இட்லிவடை.. எல்லார் மனதிலும் இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறீர்கள். குற்றவாளிகளின் குடும்பங்களைப் பற்றி யோசிப்பது தப்பு. தன் வீட்டிலேயே வயதுவந்த பெண்ணை வைத்துக் கொண்டு காமக்கதை எழுதும் அப்பனைப் பற்றி அந்தப் பெண்ணும் இன்னும் உலகமும் தெரிந்து கொள்வதே சரி.. இதைத் தான் நாங்களும் சொல்லி வருகிறோம். ஒருவழியாக எங்கள் பிரிவி நடவடிக்கை எடுக்க உங்களைப் போன்றோர் மூலம் ஒரு வழி பிறந்திருக்கிறது.

சட்டம் மட்டுமே ஜெயிக்கும். சட்டம் கூடிய சீக்கிரம் தன் கடமையைச் செய்யும். இன்னும் யார் யார் பெயர் எல்லாம் அப்போது வெளியே வருகிறதென்பதை எல்லாருமே பார்ப்போம்....

Anonymous said...

//மனசாட்சிக்கு பணிந்து வாழும் கலைஞர்களை வாழ்த்த உள்ள கூட்டத்திற்கு மத்தியில் வீழ்த்தவும் நினைக்கும் ஒரு சிறுபான்மைக் கூட்டம் இருப்பது என் மனதை உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.
//

கமல், இது கலிகாலம்! உன்மை ஒருனால் வென்ரெ தீரும். "சதியம் மெவ ஜயதெ!"

சுப்பு.

Anonymous said...

http://www.dinamalar.com/2007april15/general_ind8.asp

தமிழக பகுதி கால்வாயையும் முடித்து கொடுக்க சாய்பாபா உறுதி சென்னை மக்களுக்கு புத்தாண்டு பரிசு!

புட்டபர்த்தி : தெலுங்கு கங்கை திட்டத்தில் தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட் முதல் பூண்டி வரையிலான 29 கி.மீ., கால்வாய் அமைத்துக் கொடுக்க சாய்பாபா உறுதி கொடுத்துள்ளார்.புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், நேற்று நடந்த தமிழ் வருட பிறப்பு விழாவில் சாய்பாபா பேசினார். அப்போது, இத்தகவலை தெரிவித்தார்.