ஒரு நாள் பழைய நியூஸ். நேற்று மதுரையில் நடைபெற்ற பெரியாறு அணை மீட்பு குழுவின் கூட்டத்தில் ஒரே மேடையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வுடன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டது,திமுக தலைமையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது குறித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் திமுக தலைவரிடம் வலியுறுத்தி யிருப்பதாக கூறப்படுகிறது.
பிரச்சனையில் ஒன்று சேர்ந்த தலைவர்களை இட்லிவடை பாராட்டுகிறது. தமிழக அரசியலில் இது ஒரு நல்ல முன் உதாரணமாக இருக்கும் இன்று நம்பலாம்.
மதுரையில் பெரியாறு அணை மீட்பு குழுவினர் நடத்திய கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் ஒரே மேடையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதலில் இந்த கூட்டத்தில் அவர் கலந்து கொள்வதாக இல்லை என்றும், திடீரென்று அந்த முடிவை மாற்றி கொண்டு அவரே இதில் கலந்து கொண்டார் என்று கூறப்படுகிறது. உள்ளூர் கூட்டணி கட்சிகளுக்கு கூட அவர் இது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருபவரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிப்பவருமான வைகோ பங்கேற்கும் மேடையில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டது திமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மூத்த தலைவர்கள் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது. சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த பிறகு இது பற்றி விவாதித்து நடவடிக்கை எடுக்கலாம் என்று முதல்வர், அவர்களை சமாதானப் படுத்தியதாக கூறப்படுகிறது.
ராமதாஸ் பேச்சுஎன்னமோ நடக்குது, என்னமோ நடக்கப்போகிறது(வைகோவும், ராமதாசும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை சுட்டிக்காட்டி) என்று நீங்கள் நினைக்கலாம். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பழ.நெடுமாறன் என்னை அழைத்த போது நான் கட்டாயம் வருகிறேன் என்று கூறினேன். அப்போது நான் யார், யார்? மாநாட்டுக்கு வருகிறார்கள் என்று கேட்கவில்லை. அவரும் அதுபற்றி என்னிடம் எதுவும் கூறவில்லை. ராமதாஸ் யார்? என்று கேட்டால் முதலில் ஒரு விவசாயி.
அடுத்து ஒரு மருத்துவர். தற்போது நான் அந்த தொழிலை செய்யவில்லை. 3-வதாக பார்த்தால் ஒரு சமுதாய தொண்டன். 4-வது தான் அரசியல்வாதி. தற்போது இந்த மாநாட்டுக்கு விவசாயிகளின் உற்ற தோழனாக வந்துள்ளேன். அரசியலை தூரத்தில் வைத்து விட்டு இங்கு வந்துள்ளேன். பழ.நெடுமாறன் நம்மையெல்லாம் அணி சேர்த்து வருகிறார். வேறு அணிக்கு அல்ல. அப்படிப்பட்ட விஷயத்தை எல்லாம் அவர் செய்யமாட்டார். அவர் அப்படிப்பட்டவர் அல்ல.
பழ.நெடுமாறன் நம்மையெல்லாம் போராட்ட அணிக்கு ஒன்று சேர்த்து வருகிறார். அவர் தமிழர்களுக்காக, தமிழ் மொழிக்காக குரல் கொடுத்து வருகிற மாவீரன். எனவே இந்த நிகழ்ச்சிக்கு (வைகோவும், ராமதாசும் ஒன்றாக கலந்து கொண்டதை சுட்டிக்காட்டி) எந்த வண்ணமும் பூச வேண்டாம்.
முல்லை-பெரியாறு அணையில் கடந்த 26 ஆண்டுகளாக 136 அடி தண்ணீரே தேக்கப்படுகிறது. இதன் மூலம் தற்போது வரை நமக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு முல்லை, பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்தலாம் என்று உத்தரவிட்ட போது, கேரள அரசு அதை ஏற்க மறுத்து 3 சட்டங்களை இயற்றியது. கேரள அரசு 3 முறை அந்த உத்தரவு தொடர்பாக மனுக்கள் தாக்கல் செய்து சுப்ரீம் கோர்ட்டை அணுகிய போதும், தமிழ்நாடு தூங்கி கொண்டு இருந்தது என்பது தான் வேதனைக்குரிய விஷயம். முல்லை-பெரியாறு அணை பிரச்சினையை பொறுத்தமட்டும் கேரளாவில் ஒரே குரலில் பேசுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பல குரல்களில் பேசுகிறார்கள்.
போனது, போனதாக இருக்கட்டும். இனிமேல் இந்த பிரச்சினையில் கட்சிக்கு அப்பாற்பட்டு எல்லா தலைவர்களும் ஒன்றாக சேருவோம்.
நாளையே நல்ல ஒரு முடிவை எடுப்போம். முதல்-அமைச்சர் கருணாநிதியும் இதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். காவிரி, பாலாறு போன்றவற்றை இழக்காமல் இருக்க போராடுவோம். விவசாயிகள் நாட்டின் முதுகெலும்புகள். கடந்த 60 ஆண்டுகளாக விவசாயிகளின் முதுகெலும்புகள் முறிக்கப்பட்டது. அது தான் வரலாறு. விவசாயிகள் வாழ்வதா? சாவதா? என்று கேட்கிற நிலை மாற வேண்டும். இதற்காக உங்கள் பின்னால் (பழ.நெடுமாறனை பார்த்து) நாங்கள் வருவோம் என்று உறுதி அளிக்கிறேன்.
வைகோ பேச்சுஎத்தனையோ பிரச்சினைகளில் மத்திய அரசை மிரட்டிப் பணிய வைத்துள்ள முதல்வர் கருணாநிதி, ஏன் விவசாயிகளுக்காக மத்திய அரசை மிரட்டக் கூடாது. எதற்காக அவர் தயங்குகிறார்.
தமிழகத்தின் எதிர்காலம் இருண்டு போய் விடுமோ என்ற நிலையில் இந்த மாநாடு நடக்கிறது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு பிறப்பித்தால் அதை இல்லாமல் செய்ய ஒரு சட்டத்தைக் ெகாண்டு வருகிறது ேகரள அரசு.
நீர் மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று கூறி பிரதமரை நான்கு முைற சந்தித்துப் பேசுகிறார் கேரள முதல்வர் அச்சுதானந்தன். இது போதாதென்று புதிய அணை கட்டவும் அனுமதி கேட்டுள்ளார். புதிய அணை கட்ட அனுமதித்தால், நாட்டின் ஒருமைப்பாடு உடைவதை யாராலும் தடுக்க முடியாது.
தமிழர்கள் நாட்டின் விடுதலைக்காக ரத்தம் சிந்தியவர்கள். ஆனால் கேரள மக்களுக்கு இதுவரை ஒரு பிரச்சினயையும் கொடுத்ததில்லை. ஆனால் புதிய அணை கட்ட ேகரள அரசு முயற்சித்தால், தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு பால், காய்கறி, செங்கல் என ஒன்றும் போக முடியாது. அத்தனையும் நிறுத்தப்படும். அதை அனுமதிக்க மாட்ேடாம்.
இடுக்கி அணை உடையப் போகிறது என்று கூறி மக்களைப் பயமுறுத்த 5 லட்சம் சிடிக்களைத தயாரித்து புழக்கத்தில் விட்டார்கள். இதை விட தேச விரோத காரியம் என்ன இருக்க முடியும்
பிகு
சற்று தாமதமாக வந்த மேடைக்கு வந்த வைகோ, வி.ஐ.பி.,க்களை பார்த்து கும்பிட்டார். பதிலுக்கு அனைவரும் எழுந்து நின்று கும்பிட்டனர். ராமதாஸை பார்த்தும் கும்பிடு போட்டார் வைகோ. ஆனால், ராமதாஸ் எழுந்திருக்கவில்லை. அவர் அருகில் உட்காரும்படி வைகோவை பார்த்து பழ. நெடுமாறன் "சைகை' செய்தார். ஆனால், ராமதாஸ் அருகில் உட்காராமல் இரண்டு இருக்கைக்கு அடுத்து காலியாக இருந்த இருக்கையில் உட்கார்ந்தார்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, April 02, 2007
ஒரே மேடையில் ராமதாஸ், வைகோ
Posted by IdlyVadai at 4/02/2007 06:06:00 PM
Labels: அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










2 Comments:
தமிழக அரசியல் வானிலைக காட்டியான சமூக நீதிக்காவலர், வாழும் பெரியார், தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் ராமதாசு ஐயா அணி மாறிச்செல்லும் எண்ணத்தில் இருக்கிறார்.
ஜெயலலிதா ஜிப்மர் டீலுக்கு ஓகே சொல்லியதை வைகோ தெரிவித்திருந்தால் பெரிய மருந்து பெரிய கும்பிடாகப் போட்டு முகம்+அகம் மலர வரவேற்றிருப்பார்!
சமூகநீதிக்காவலருங்க எல்லாம் ஒரே மேடையில! தங்கள் நீ(நி)திக்காக!
In politics to-day's enemy may even dearest friend tommorrow and friend of to-day may even become a cut throat enemy tommorw, Onlly money and power is always friendly in politics.
suppamani
Post a Comment