தமிழக மீனவர்களை சுட்டது விடுதலைப்புலிகள் - டி.ஜி.பி. முகர்ஜி
விடுதலைப்புலிகள் செயல் அதிர்ச்சி அளிக்கிறது- சட்டசபையில் கருணாநிதி பேச்சு
கன்னியாகுமரி மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக்கொன்றது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் `கடல் புலிகள்' என்று தெரிய வந்து இருப்பதாக டி.ஜி.பி. முகர்ஜி நேற்று பரபரப்பான அறிக்கை வெளியிட்டார்.
இன்று சட்டசபையில் முதல்- அமைச்சர் கருணாநிதி:கடந்த 4-3-2007 அன்று கன்னியாகுமரியில் இருந்து 10 மீனவர்களும், தூத்துக்குடியில் இருந்து 1 மீனவரும், கேரளாவில் இருந்து 1 மீனவரும் ஆக 12 மீனவர்கள் மீன் பிடிக்க சென்று இன்றுவரை திரும்பவில்லை. அவர்களுக்கு உதவ வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் கேட்டுக் கொண்டனர்.
அதற்குகிணங்க 12 மீனவர்களின் குடும்பத்துக்கு மாதம் ரூ.1500 அரசு வழங்கி வருகிறது. காணாமல் போன 12 மீனவர்களையும் இலங்கையில் விடுதலைப்புலிகளின் கடல் புலிகள் ஒரு பிரிவினர் பிடித்து காவலில் வைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இதற்கு முன்பு ஒரு தடவை சட்டசபையில் பேசிய காங்கிரசார், "தீவிரவாதிகளை விடுதலைப்புலிகள்'' என்று சொன்னபோது உடனே நான் மறுத்து பேசினேன். அன்று கிடைத்த தகவலை வைத்து அவ்வாறு மறுத்தேன்.
ஆனால் இப்போது வந்துள்ள தகவல்களால் அது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. கடல் புலிகளின் சிறப்பு முகாமில் 12 மீனவர்களும் வைக்கப்பட்டுள்ளனர்.
29-3-2007 அன்று குமரி மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கும் கடல் புலிகள்தான் பொறுப்பு என்றும் தெரிய வந்துள்ளது. இந்திய கடல் பகுதியில் 11-4-07 அன்று மரியா என்ற படகும், அதில் இலங்கை மீனவர்கள் 6 பேரும் பிடிபட்டனர்.
அவர்களை பிடித்து விசாரித்தபோது இந்த தகவல்கள் முதல் கட்டமாக தெரிய வந்துள்ளது.
முன்பு இலங்கை ராணுவம்தான் இந்த சம்பவத்துக்கு காரணம் என்று கருதிக் கொண்டிருந்தோம். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, காணாமல் போன மீனவர்களை தேடிக்கண்டுபிடிக்க மத்திய அரசு மூலம் முயற்சி எடுக்கப்பட்டது.
மேலும் கடலோர பாதுகாப்பு படை வான்வெளி பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் தூத்துக்குடியில் கடலோர காவல் படை வசதிக்காக அங்குள்ள விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குமரி கடலோரத்தில் கடலோர காவல்படை அமைக்க ரூ.55 கோடி ஒதுக்கி, அதற்காக மத்திய அரசு ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் படையால்தான் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக நாம் கருதிக்கொண்டிருக்கும் நிலையில் விடுதலைப்புலிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது நம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்குள்ள புலிகளின் ஆதரவாளர்கள் இதனையும் ஒரு துன்பியல் நிகழ்ச்சி என்று சொல்வார்களோ?
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, April 28, 2007
தமிழக மீனவர்களை சுட்டது விடுதலைப்புலிகள் - டி.ஜி.பி. முகர்ஜி
Posted by IdlyVadai at 4/28/2007 07:22:00 PM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி

23 Comments:
இங்குள்ள புலிகளின் ஆதரவாளர்கள் இதனையும் ஒரு துன்பியல் நிகழ்ச்சி என்று சொல்வார்களோ?
They will deny.Then they will say
that Mukherjee (DGP)is a brahmin and as brahmins are against LTTE they are spreading such lies.DGP is a brahmin,Prnab Mukherjee is a brahmin, PM's security advisor
is a brahmin.So this is a brahmin
conspiracy to defame LTTE and support SriLanka.
புலிகள் செய்திருந்தால் வெறும் கண்டனத்துக்குரியது மட்டுமல்ல ,நம்பிக்கை துரோகமும் கூட.
இங்குள்ள புலிகளின் ஆதரவாளர்கள் இதனையும் ஒரு துன்பியல் நிகழ்ச்சி என்று சொல்வார்களோ?
;))))))))))))))
புலிகளுக்கும் தமிழக மீனவர்களுக்கும் சுமுக உறவு உள்ளது பல பேருக்கு தெரியாது போல. இலுப்பைக் கடவை மற்றும் மன்னார் பகுதி குளங்களில் அவ்வப்போது தமிழக மீனவர்கள் குளித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் உதவி கண்டிப்பாக புலிகளுக்கு தேவை. அவர்களை புலிகள் பகைத்து கொள்ளத் தேவையில்லை.
அது தவிர முதலில் 12 சிங்கள மீனவர்கள் ஆயுதங்களுடன் பிடிபட்டார்கள் என்றார்கள்.
பிறகு ஆயுதங்கள் அல்ல.. அது கடலில் தத்தளித்த 6 இலங்கை தமிழ் மீனவர்களை தமிழக மீனவர்கள் காப்பாற்றி வந்தனர் என்றீர்கள்.
இப்போ அந்த 6 மீனவர்களும் புலிகள் தான் கொன்றதாய் சொன்னதாய் சொல்லுகிறீர்கள்.
புலிகளுக்கு தமிழகத்தில் ஆதரவு எண்ட ஒன்றே உருவாகி விடக்கூடாது என எண்ணும் அதிகாரங்கள் என்னத்தை சொல்லும் என அறிய முடியாத அளவிற்கு அடி முட்டாள்கள் அல்ல நாங்கள் மற்றும் தமிழக மக்கள்.
வேண்டுமானால் நீங்கள் நம்புங்கள்.
கொசுறு செய்தி: தேவையற்ற விதத்தில் புலிகளைச் சீண்டும் இந்திய கடற்படையோ அல்லது எப்படையோ புலிகளால் தாக்கப்பட்டால் அதனை துன்பியல் சம்பவம் என்றுதான் கூறுவோம்
தமிழக காவல்துறைத் தலைவர் குற்றம் சாட்டுபவராகவும், அதேவேளையில் நீதிபதியாகவும் இருந்து தீர்ப்புச் சொல்பவராகவும் மாறியுள்ளார். இந்த அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது? எனக் கேள்வி எழுப்பி உள்ளார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்.
தமிழக காவல்துறைத் தலைவர் முகர்ஜி, தமிழக மீனவர்களைச் சுட்டது விடுதலைப் புலிகள் என்றும், காணமல் போன 12 மீனவர்கள் விடுதலைப் புலிகளின் காவலில் உள்ளனர் என்றும் நேற்று திடீரென வெளியிட்டுள்ள அறிக்கையை கண்டித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே பழ. நெடுமாறன் மேற்கண்டவாறு கேள்வியை எழுப்பி உள்ளார்.
பழ. நெடுமாறன் அவர்களது அறிக்கையின் முழு விபரமாவது:
தமிழக மீனவர்களைச் சுட்டது விடுதலைப் புலிகள் என்றும் காணமல் போன 12 மீனவர்கள் விடுதலைப் புலிகளின் காவலில் உள்ளனர் என்றும் தமிழக காவல்துறைத் தலைவர் முகர்ஜி திடீரென அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
குற்றம் சாட்டுவதும் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதும்தான் காவல்துறையின் வேலையாகும். குற்றச்சாட்டுக்கள் மெய்ப்பிக்கப்பட்டால் உரிய தண்டனை வழங்குவது நீதிமன்றத்தின் வேலையாகும். ஆனால் தமிழகக் காவல்துறைத் தலைவர் குற்றம் சாட்டுபவராகவும், அதேவேளையில் நீதிபதியாகவும் இருந்து தீர்ப்புச் சொல்பவராகவும் மாறியுள்ளார். இந்த அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது?
தமிழக மீனவர்களைத் தொடர்ந்து சிங்களக் கடற்படையினர் சுட்டுக்கொன்று வருகிறார்கள் என்பது உலகம் அறிந்த உண்மையாகும். குமரி மாவட்ட மீனவர்களை சுட்டுக்கொன்றவர்கள் சிங்களர்கள்தான் என்பதை உயிர்தப்பிப்பிழைத்த மீனவர்கள் அளித்த வாக்குமூலங்களிலும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டிகளிலும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்கள்.
ஏப்ரல் 12 ஆம் திகதியன்று இந்தியக் கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் படகில் வந்த 6 சிங்களவர்களை கடலோரக் காவல் படையினர் கைது செய்ததாகவும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்ச்சியில் இவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் தமிழகத்தின் அனைத்துப் பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏப்ரல் 13 ஆம் தேதியன்று இந்த 6 சிங்களவர்களும் விசாரணைக்காக கியூ பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்களென்று தமிழக அரசு வெளியிட்டுள்ள பத்திரிகைக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இப்போது திடீரென அந்த 6 பேரும் விடுதலைப் புலிகள் என்று காவல்துறைத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். எது உண்மை? எதையோ மூடிமறைக்க யாரையோ காப்பாற்ற காவல்துறைத் தலைவரைப் பயன்படுத்துவது அந்தப் பதவிக்கே இழுக்கைத் தேடித்தருவதாகும். குமரி மாவட்ட மீனவர்கள் தங்களைச் சுட்டது சிங்களவர்கள்தான் எனத் திட்டவட்டமாக அறிவித்து அதற்காகப் போராட்டங்களை நடத்திவரும் சூழலில் பிரச்சினையைத் திசை திருப்ப முயற்சி நடைபெறுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழ்நாட்டு மீனவர்கள் யாரையும் விடுதலைப் புலிகள் சுட்டதாகவோ, சிறைப்பிடித்ததாகவோ இதுவரை புகார்கள் எழுந்தது இல்லை. சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலைப் புலிகள் போராடி மீட்டு பத்திரமாக தமிழகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்களே தவிர, அவர்கள் ஒருபோதும் தீங்கிழைத்தது இல்லை.
தமிழக மீனவர்களே கூறாத ஒரு குற்றச்சாட்டை திடீரென காவல்துறைத் தலைவர் கூறுவது ஏன்?சிங்களக் கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்றத் திட்டத்திற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுவிட்டக் காரணத்தினால் இப்படியொரு பொய்யானச் செய்தியைப் பரப்பி கூட்டுரோந்து நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காக காவல்துறைத் தலைவர் இந்த அறிக்கை வெளியிட்டுப்பட்டிருப்பதாக நான் குற்றம் சாட்டுகிறேன்.
வான்புலிகளின் சாதனைகளைக் கண்டு உலகமே வியந்து பாராட்டும் இந்த கட்டத்தில் புலிகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் குற்றம்சாட்டி தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கை அழிப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது. இந்த முயற்சிக்கு காவல்துறைத் தலைவர் ஒத்துழைப்பது என்பது மிகத் தவறான முன் உதாரணமாகும். வரம்பு மீறி செயல்பட்டிருக்கும் காவல்துறைத் தலைவரை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
"elangai ranuvam thamiz meenavarkalai suttukondranar"-edhu oru pudhiya seidhi alla... anal, eppodhu oru pudhu vadivamum pudhiya mugamudiyudanum vandhulladhu...
kalam kalamaga, elangai ranuvathinaral, nam meenavargal palari nam ezhandhullom.. edhu anaivarum arindhadhe... eppodhu puligal mel endha veen pazhi poduvadharkku enna karanam endru puriyavillai...
english-l common sense endru oru varthai undu... adhai manidhargal pala nerangalil ubayogippadhillai... viduthalaipuligal, edharkkaga thamizhargalai kolla vendum... endha muzhu ulagathilum, ezhathamizhargalukku aduthadhaga avargalukku adharavalargal endral adhu thamizhargal dhan... thamizhargalukku, puligal mel ulla adharavai immi alavum ezhappadharkku puligal thayaraga erundhadhillai, erukkavum mattargal... arasiyalvadhigalin makkal dhisaithiruppum muyarchiyil idlevadayarum enaindhu konlla vendam...
கருனாநிதியை இத்தனை தூரம் தலையில் வைத்துகொண்டு ஆடிய பின்னர் அவரை திட்ட முடியாதோ ?
தமிழக மீனவர்களை சுட்டது விடுதலைப்புலிகள் - டி.ஜி.பி. முகர்ஜி
விடுதலைப்புலிகள் செயல் அதிர்ச்சி அளிக்கிறது- சட்டசபையில் கருணாநிதி பேச்சு
கன்னியாகுமரி மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக்கொன்றது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் `கடல் புலிகள்' என்று தெரிய வந்து இருப்பதாக டி.ஜி.பி. முகர்ஜி நேற்று பரபரப்பான அறிக்கை வெளியிட்டார்.
இன்று சட்டசபையில் முதல்- அமைச்சர் கருணாநிதி:
கடந்த 4-3-2007 அன்று கன்னியாகுமரியில் இருந்து 10 மீனவர்களும், தூத்துக்குடியில் இருந்து 1 மீனவரும், கேரளாவில் இருந்து 1 மீனவரும் ஆக 12 மீனவர்கள் மீன் பிடிக்க சென்று இன்றுவரை திரும்பவில்லை. அவர்களுக்கு உதவ வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் கேட்டுக் கொண்டனர்.
அதற்குகிணங்க 12 மீனவர்களின் குடும்பத்துக்கு மாதம் ரூ.1500 அரசு வழங்கி வருகிறது. காணாமல் போன 12 மீனவர்களையும் இலங்கையில் விடுதலைப்புலிகளின் கடல் புலிகள் ஒரு பிரிவினர் பிடித்து காவலில் வைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இதற்கு முன்பு ஒரு தடவை சட்டசபையில் பேசிய காங்கிரசார், "தீவிரவாதிகளை விடுதலைப்புலிகள்'' என்று சொன்னபோது உடனே நான் மறுத்து பேசினேன். அன்று கிடைத்த தகவலை வைத்து அவ்வாறு மறுத்தேன்.
ஆனால் இப்போது வந்துள்ள தகவல்களால் அது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. கடல் புலிகளின் சிறப்பு முகாமில் 12 மீனவர்களும் வைக்கப்பட்டுள்ளனர்.
29-3-2007 அன்று குமரி மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கும் கடல் புலிகள்தான் பொறுப்பு என்றும் தெரிய வந்துள்ளது. இந்திய கடல் பகுதியில் 11-4-07 அன்று மரியா என்ற படகும், அதில் இலங்கை மீனவர்கள் 6 பேரும் பிடிபட்டனர்.
அவர்களை பிடித்து விசாரித்தபோது இந்த தகவல்கள் முதல் கட்டமாக தெரிய வந்துள்ளது.
முன்பு இலங்கை ராணுவம்தான் இந்த சம்பவத்துக்கு காரணம் என்று கருதிக் கொண்டிருந்தோம். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, காணாமல் போன மீனவர்களை தேடிக்கண்டுபிடிக்க மத்திய அரசு மூலம் முயற்சி எடுக்கப்பட்டது.
மேலும் கடலோர பாதுகாப்பு படை வான்வெளி பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் தூத்துக்குடியில் கடலோர காவல் படை வசதிக்காக அங்குள்ள விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குமரி கடலோரத்தில் கடலோர காவல்படை அமைக்க ரூ.55 கோடி ஒதுக்கி, அதற்காக மத்திய அரசு ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் படையால்தான் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக நாம் கருதிக்கொண்டிருக்கும் நிலையில் விடுதலைப்புலிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது நம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பழ. நெடுமாறன் அவர்களது அறிக்கையின் முழு விபரமாவது:
தமிழக மீனவர்களைச் சுட்டது விடுதலைப் புலிகள் என்றும் காணமல் போன 12 மீனவர்கள் விடுதலைப் புலிகளின் காவலில் உள்ளனர் என்றும் தமிழக காவல்துறைத் தலைவர் முகர்ஜி திடீரென அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
குற்றம் சாட்டுவதும் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதும்தான் காவல்துறையின் வேலையாகும். குற்றச்சாட்டுக்கள் மெய்ப்பிக்கப்பட்டால் உரிய தண்டனை வழங்குவது நீதிமன்றத்தின் வேலையாகும். ஆனால் தமிழகக் காவல்துறைத் தலைவர் குற்றம் சாட்டுபவராகவும், அதேவேளையில் நீதிபதியாகவும் இருந்து தீர்ப்புச் சொல்பவராகவும் மாறியுள்ளார். இந்த அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது?
தமிழக மீனவர்களைத் தொடர்ந்து சிங்களக் கடற்படையினர் சுட்டுக்கொன்று வருகிறார்கள் என்பது உலகம் அறிந்த உண்மையாகும். குமரி மாவட்ட மீனவர்களை சுட்டுக்கொன்றவர்கள் சிங்களர்கள்தான் என்பதை உயிர்தப்பிப்பிழைத்த மீனவர்கள் அளித்த வாக்குமூலங்களிலும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டிகளிலும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்கள்.
ஏப்ரல் 12 ஆம் திகதியன்று இந்தியக் கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் படகில் வந்த 6 சிங்களவர்களை கடலோரக் காவல் படையினர் கைது செய்ததாகவும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்ச்சியில் இவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் தமிழகத்தின் அனைத்துப் பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏப்ரல் 13 ஆம் தேதியன்று இந்த 6 சிங்களவர்களும் விசாரணைக்காக கியூ பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்களென்று தமிழக அரசு வெளியிட்டுள்ள பத்திரிகைக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இப்போது திடீரென அந்த 6 பேரும் விடுதலைப் புலிகள் என்று காவல்துறைத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். எது உண்மை? எதையோ மூடிமறைக்க யாரையோ காப்பாற்ற காவல்துறைத் தலைவரைப் பயன்படுத்துவது அந்தப் பதவிக்கே இழுக்கைத் தேடித்தருவதாகும். குமரி மாவட்ட மீனவர்கள் தங்களைச் சுட்டது சிங்களவர்கள்தான் எனத் திட்டவட்டமாக அறிவித்து அதற்காகப் போராட்டங்களை நடத்திவரும் சூழலில் பிரச்சினையைத் திசை திருப்ப முயற்சி நடைபெறுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்
NEDUMARAN
பழ. நெடுமாறன் அவர்களது அறிக்கையின் முழு விபரமாவது:
தமிழக மீனவர்களைச் சுட்டது விடுதலைப் புலிகள் என்றும் காணமல் போன 12 மீனவர்கள் விடுதலைப் புலிகளின் காவலில் உள்ளனர் என்றும் தமிழக காவல்துறைத் தலைவர் முகர்ஜி திடீரென அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
குற்றம் சாட்டுவதும் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதும்தான் காவல்துறையின் வேலையாகும். குற்றச்சாட்டுக்கள் மெய்ப்பிக்கப்பட்டால் உரிய தண்டனை வழங்குவது நீதிமன்றத்தின் வேலையாகும். ஆனால் தமிழகக் காவல்துறைத் தலைவர் குற்றம் சாட்டுபவராகவும், அதேவேளையில் நீதிபதியாகவும் இருந்து தீர்ப்புச் சொல்பவராகவும் மாறியுள்ளார். இந்த அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது?
தமிழக மீனவர்களைத் தொடர்ந்து சிங்களக் கடற்படையினர் சுட்டுக்கொன்று வருகிறார்கள் என்பது உலகம் அறிந்த உண்மையாகும். குமரி மாவட்ட மீனவர்களை சுட்டுக்கொன்றவர்கள் சிங்களர்கள்தான் என்பதை உயிர்தப்பிப்பிழைத்த மீனவர்கள் அளித்த வாக்குமூலங்களிலும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டிகளிலும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்கள்.
ஏப்ரல் 12 ஆம் திகதியன்று இந்தியக் கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் படகில் வந்த 6 சிங்களவர்களை கடலோரக் காவல் படையினர் கைது செய்ததாகவும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்ச்சியில் இவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் தமிழகத்தின் அனைத்துப் பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏப்ரல் 13 ஆம் தேதியன்று இந்த 6 சிங்களவர்களும் விசாரணைக்காக கியூ பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்களென்று தமிழக அரசு வெளியிட்டுள்ள பத்திரிகைக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இப்போது திடீரென அந்த 6 பேரும் விடுதலைப் புலிகள் என்று காவல்துறைத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். எது உண்மை? எதையோ மூடிமறைக்க யாரையோ காப்பாற்ற காவல்துறைத் தலைவரைப் பயன்படுத்துவது அந்தப் பதவிக்கே இழுக்கைத் தேடித்தருவதாகும். குமரி மாவட்ட மீனவர்கள் தங்களைச் சுட்டது சிங்களவர்கள்தான் எனத் திட்டவட்டமாக அறிவித்து அதற்காகப் போராட்டங்களை நடத்திவரும் சூழலில் பிரச்சினையைத் திசை திருப்ப முயற்சி நடைபெறுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழக முதல்வருக்கு தடுமாற்றம் . இலங்கை அரசுடன் இந்திய அரசு கூட்டாக ரோந்து செல்ல வேண்டும். டில்லி சொல்கிறது கலஞர் பொய்பேசுகிறார். பாவம் மனிதன். முதலில் பிடிபட்டவர்கள் சிங்களவர் என்றார். இரு வாரங்களில் அவர்கள் எப்படி தமிழர்களாக மாறினார்கள்?
""இங்குள்ள புலிகளின் ஆதரவாளர்கள் இதனையும் ஒரு துன்பியல் நிகழ்ச்சி என்று சொல்வார்களோ?""
அதே..அதே... வெட்கம் மானம் இல்லாமல் என்பதையும் சேர்த்துக் கொள்ளவும் :(
Rubbish.. Tamil guys are not mad to believe this kind of wrong informations. It seems they try to direction the issue.
//கொசுறு செய்தி: தேவையற்ற விதத்தில் புலிகளைச் சீண்டும் இந்திய கடற்படையோ அல்லது எப்படையோ புலிகளால் தாக்கப்பட்டால் அதனை துன்பியல் சம்பவம் என்றுதான் கூறுவோம்//
தாக்கிப்பார்க்கட்டும், விடுதலைப்புலிகள் என்கிற இனமே இருந்ததற்கான அடையாளம் தெரியாமல் செய்யா இந்திய முப்படையும் தயார் நிலையில் உள்ளது.
வெளிநாடுகளில் அகதிகளாக இருக்கும் போதே இந்த இலங்கைத் தமிழர்கள் ஆடும் ஆட்டம் தாங்கமுடியவில்லை, உள்ளூரில் என்ன ஆட்டம் போட்டிருப்பார்கள். அதுதான் சிங்களவர்களால் ஓடி ஒடி மிதிக்கப்படுகிறார்கள்.
இவர்களின் மேல் தமிழன் என்கிற முறையில் கூட இரக்கம் காட்டக்கூடாது.
கருணாநிதி உண்மை பேசி பல வருடங்கள் ஆயிற்று.
*****
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
- மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
- பதிப்பு
நா.வித்தியானந்தன்
பாரதியார் பல்கலைக்கழக மாணவன்
ராஜீவைக்கொன்ற விடுதலைப்புலிகளை பலிவாங்க இதுதான் சரியான தருனம் இந்தியாவிற்கு. தமிழக மீனவர்கள் கடத்தல் மட்டும் கொலையைக் காரணம் காட்டி இலங்கை அனுமதியுடன் இந்திய விமான படைகள் வவுனியா காட்டில் உள்ள விடுதலைப்புலிகளின் நிலைகளை அழித்து, ராஜீவ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான பிரபாகரனை கைது செய்து இந்தியா கொண்டு வந்து தூக்கிலிடலாம்.
இட்லிவடை, இதுவரை பல ஆண்டுகளாக சிங்களப்படை மீனவர்களை சுட்டுவருகிறது. முன்னூருக்கும் மேற்பட்டவர்களை கொன்றிருக்கிறது. அது சிங்களப் படைதான் புலிகள் அல்ல என்று எல்லோருக்கும் தெரியும். அது குறித்தும், இந்தியா அதற்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்காதது குறித்தும், கண்டனம் கூட ஒழுங்காய் தெரிவிக்காதது குறித்தும் என்றைக்காவது எழுதியிருக்கிறீர்களா? ஒரு முகர்ஜி அறிக்கை விட்டவுடன், அதை மட்டும் எடுத்து போடுவதற்கு மனசாட்சி வேண்டாம், சூடு சொரணை எதாவது இருக்க வேண்டாமா?
தனது சுடுட்டு அணைவதுக்குள் புலிகலை அழித்துவிடுவோம் என்ற டிக்ஸித்தையும் பார்த்தவர்கள் நாம், இரண்டு வருடமாக இந்திய ராணுவம் ஈழத்தில் என்ன புடுங்கியது என்பதையும் பார்த்தவர்கள் நாம், இனி வர எண்னுமா என்பதே சந்தேகம் இதில் உங்கள் ஆசை கொஞ்சம் ஓவர்:-)
அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்
30.04.2007
தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கடலில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக வெளிவருகின்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
இவை தமிழ் மக்களுக்கும் அவர்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரான சக்திகளால் திட்டமிடப்பட்டு வெளிக்கொணரப்படும் கட்டுக்கதைகளே ஆகும்.
தமிழக மக்களுக்கும் எமது மக்களுக்கும் இடையிலான நல் உறவினைப் பிரித்து எமது மக்களைத் தனிமைப்படுத்தி அவர்களின் மீது மிகப்பெரும் மனிதப் பேரவலங்களை கட்டவிழ்த்து விட்டு இன அழிப்பொன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
அதன் ஒரு பகுதியாகவே தமிழக மீனவர்களை அவ்வப்போது கடலில் வைத்துச் சுட்டுக்கொன்று விட்டு அதற்கான பழியை தமிழ் மக்கள் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் சுமத்தி விடுகின்ற வழமை தொடர்ந்து வருகின்றது.
இப்படியான குற்றச்சாட்டுக்களை காரணமாக வைத்து இந்திய அரசுடன் ஒரு கூட்டு கடல் ரோந்து நடவடிக்கையை தொடங்குவதற்கும் அதன்மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை நசுக்கிவிடலாம் என்றும் சிறிலங்கா அரசு கனவு காண்கிறது.
அதற்காகவே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களை தொடர்ந்து நடாத்தி வருகின்றது. இதன் மூலம் தமிழக உறவுகளை எமது மக்களிடமிருந்து அன்னியப்படுத்தி தனது இனப்படுகொலை முயற்சிகளை அவர்களுக்கு மறைத்து அரசியல் இலாபம் சம்பாதிக்க நினைக்கின்றது.
எமது மக்களும் அமைப்பினரும் எப்போதும் தமிழக உறவுகளுடன் ஒரு நல்ல உறவினைப் பேணி வருகின்றனர். அவர்களை அச்சுறுத்துவதற்கோ, அவர்களின் உயிர்களுக்கு ஊறுவிளைவிப்பதற்கோ நாம் ஒருபோதும் முயற்சிக்கவில்லை.
பதிலாக பல ஆபத்துக்களில் இருந்தும், சிறிலங்கா அரசின் வன்முறைகளில் இருந்தும் பல சந்தர்ப்பங்களில் அவர்களை காப்பாற்றி பத்திரமாக கரை சேர்த்திருக்கின்றோம். தமிழகத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றோம்.
அப்படியிருந்தும் 300-க்கும் மேற்பட்ட தமிழக உறவுகள் சிங்களக் கடற்படையால் இதுவரையும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது மிகவும் மனவேதனைக்குரியதே.
அந்த விதத்திலே அண்மையில் இடம்பெற்ற வன்முறையும் திட்டமிடப்பட்டு சிங்கள இராணுவத்தினராலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. மேலும் அதற்கு விடுதலைப் புலிகள் தான் காரணம் என்ற பொய்யான பரப்புரையையும் அது முன்னெடுத்து வருகின்றது.
இவ் வன்முறையில் 12 தமிழக உறவுகள் காணாமற் போய்விட்டதாக கூறப்படுகின்றது. இவர்கள் குறித்த நிலவரங்களை அறிவதற்கு எமது கடற்படையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
எமது பிரதேசத்தில் இதுவரைக்கும் அப்படியானவர்கள் இருப்பது தொடர்பாக எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை.
ஆயினும் எமது பிராந்தியத் தலைவர்களுடன் இது தொடர்பாக தொடர்பு கொண்டிருக்கின்றோம். மீனவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் அவர்களை மீட்பதற்கான எந்த நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
தமிழக காவல்துறையினர் பேச்சு நடத்தவில்லை
தமிழகக் காவல்துறை இது தொடர்பாக எமது அமைப்புடன் தொடர்புகொண்டதாகவும், பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் வெளிவருகின்ற செய்திகள் யாவுமே உண்மைக்குப் புறம்பானவையாகும். இதுவரையில் தமிழகக் காவல்துறைக்கும் எமது அமைப்புக்குமிடையில் உத்தியோகபூர்வமான எந்தத் தொடர்புகளும் ஏற்படுத்தப்படவில்லை என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
தமிழக மக்கள் மீது சிறிலங்கா அரசு முன்னெடுத்து வருகின்ற நீண்ட கால வன்முறையின் பின் புலத்தினை தமிழக மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள்.
அத்துடன் எமது மக்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்திற்குமாக அவர்கள் குரல் கொடுத்தும் வருகிறார்கள். இத்தகைய பின்னணியில் இவ்வாறான வன்முறைகளையும் இதற்குக் காரணமானவர்களையும் தமிழக உறவுகள் உண்மையாகவே இனங்காணுவார்கள் என்றே நம்புகின்றோம்.
தொடர்ந்தும் இத்தகைய வன்முறைகள் இடம்பெறாது தடுப்பதற்கு எமது மக்களும், அமைப்பினரும் பூரண ஆதரவினை வழங்கிநிற்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
தமிழக மீனவர்களை விடுதலைப்புலிகள் கொலை செய்தோ அல்லது கடத்தியோ இருக்கமாட்டார்கள் என்று தமிழக மீன் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான பீட்டர் தாஸ் கூறியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி தமிழக மீனவர்கள் 5 பேர் கடற்பரப்பில் கொல்லப்பட்ட சம்பவத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிகள் பிரிவுக்கு சம்பந்தம் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தமிழக காவல்துறைத் தலைவர் டி. முகர்ஜி அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியும் தனது அதிர்ச்சியைத் தெரிவித்திருந்தார்.
இவை குறித்துக் கேட்கப்பட்டபோதே பீட்டர் தாஸ் இவ்வாறு பதிலளித்தார்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் மீதான அரசியல் அழுத்தம் அதிகரித்துவரும் சூழ்நிலையில், உலக அளவில் எந்தவொரு தமிழருக்கும் எதிராக விடுதலைப்புலிகள் இவ்வாறு எதிராகச் செயற்படமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை தமிழக மீனவர்களை விடுதலைப்புலிகளோ அல்லது இலங்கைத் தமிழர்களோ கொலை செய்திருக்க மாட்டார்கள் என்று இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
ஆயினும் ஒருவேளை விடுதலைப்புலிகளால் மீனவர்கள் கடத்தப்பட்டிருந்தால் அவர்களைப் பத்திரமாக மீட்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
BBC
டி ஜி பி முகர்ஜியும், தமிழக போலீசும் கைது செய்யும்போது அந்த விடுதலைபுலிகள் அமைதியாக கைதானார்கள். தமிழக போலீஸ் அடித்து விசாரித்தவுடன் உண்மையை பூராவும் கக்கி விட்டார்கள். இதை புலிகளை கோழைகள் என்று சொல்பவர்கள்கூட நம்ப மாட்டார்கள்.
விடுதலைப் புலிகள் தமிழர்களைக் கொல்ல எந்த முகாந்திரமும் இல்லை. தமிழக மீனவர்களுக்கு விடுதலைப் புலிகளும் விடுதலைப் புலிகளுக்குத் தமிழக மீனவர்களும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் சூழலிலேயே இருந்து வந்துள்ளனர். டி.ஜி.பி-யின் அறிக்கை முழுக்க முழுக்கக் கட்டுக்கதையாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம்.
குமரி மாவட்ட மீனவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப் பட்ட சம்பவத்திலும், 12 மீனவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்திலும் தமிழக போலீஸ் துறை தொடக்கத்தில் இருந்தே முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறி வருகிறது. இந்த பிரச்சினையில் ஆரம்பக் கட்ட தாக்குதல் சம்பவத்திற்கு சிங்கள கடற்படை காரணம் எனவும், விடுதலை புலிகளுக்கு தொடர்பு இல்லை எனவும் கூறியது.
ஆனால் இன்று விடுதலைப் புலிகள் மீனவர்களை கடத்தி வைத்திருப்பதாக தமிழக டி.ஜி.பி. கூறுகிறார். இது இட்டுக் கட்டப்பட்ட கட்டுக்கதை. உண்மை துளி அளவும் இல்லை. புலிகளை பொறுத்தமட்டில் ஆழ்கடலில் பல சந்தர்ப்பங்களில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக பராமரித்து தமிழகத்துக்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
தமிழக மீனவர்களுக்கு ஊறும், கேடும் புலிகள் செய்ய மாட்டார்கள். அதற்கு நேர்மாறாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருளும், உடமையும் தமிழக மீனவர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் சுடப்பட்ட சம்பவத்திலும் சரி, கடத்தப்பட்ட சம்பவத்திலும் சரி போலீஸ் டி.ஜி.பியின் அறிக்கை மூடுமந்திரமாக உள்ளது. இந்த பிரச்சினையில் போலீஸ் பதிவு செய்த சாட்சியங்களையும், வாக்குமூலங்களையும் ஏற்க இயலாது.
பொய் சாட்சிகளையும் வாக்கு மூலங்களையும் போலீஸ் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளது.
தமிழக மீனவர்களின் நலனில், பாதுகாப்பில் அதிக அக்கறையும், பொறுப்பும் ம.தி.மு.க.வுக்கு உண்டு. தமிழக மீனவர்களின் நலன் குறித்தும், ஆழ்கடலில் அவர்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளேன்.
பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கை நேரடியாக சந்தித்தும் இது தொடர்பாக கோரிக்கை அளித்தேன். குமரி மீனவர்களின் நலன்காப் பதில் மத்திய அரசுக்கு ஒரு பொறுப்பு உண்டு. ஆனால் இன்றைய சம்பவங்கள் ஒரு உள்நோக்கத்தோடு வஞ்சகமாக புலிகள் மீது வீண்பழிபோடும் கபட நாடகத்தை போலீஸ்துறை மூலம் தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.உண்மைஒருநாள் வெளிச்சத்திற்கு வரும். - வைகோ
Post a Comment