பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 26, 2007

ஐஸ்வர்யா பச்சன

ஐஸ்வர்யாராயின் பெயர் இப்போது மாறி விட்டது. அமிதாப்பச்சன் குடும்ப மருமகளாக மாறி விட்டதால் இனி அவர் ஐஸ்வர்யா பச்சன் என்றே அழைக்கப்படுவார். திருப்பதியில் முதல் ஆட்டோ கிராப்பில் கையெழுத்து போட்ட அவர் ஐஸ்வர்யா பச்சன் என்றே கையெழுத்து போட்டுள்ளார். ஐஸ்வர்யாராய் தொடர்ந்து நடிப்பார் என்று அமிதாப்பச்சன கூறினார்.

10 Comments:

ILA(a)இளா said...

நேத்து பிரியங்கா காந்தி, பிரியங்கா வதேரா ஆனாங்க, இன்னிக்கு இவிங்க.

//தொடர்ந்து ஐஸ்வர்யாராய் தொடர்ந்து நடிப்பார் என்று அமிதாப்பச்சன கூறினார்//
சொற்பிழையோ? பொருட்பிழையோ?

கடோத்கஜன் said...

கல்யாணப் பந்தியில என்னென்ன இருந்ததுன்னு ஒரு தகவல் சொன்னா, ஜொள்ளுவிட ஏதுவாயிருக்கும்!

IdlyVadai said...

கடேத்கஜன் லெமன் ரைஸ், தயிர் சாதம் என்று கேள்விபட்டேன் :-)

Sridhar Venkat said...

'அபிஷேக் ராய்' கூட நல்லாத்தான் இருக்கு. ஹ்ம்ம்ம்ம்...

உலகத்துக்கே அழகின்னாலும் உள்ளூர்ல... சரி நமக்கேன் வம்பு...

அந்த சாம்பார் வாளிய இப்படி நகட்டுங்க...

இலவசக்கொத்தனார் said...

ஏங்க ஸ்ரீதர்,

இட்லி வடைக்கு சாம்பார் நல்லா இருக்கும். உமக்கெதுக்கு? ;-)

கடோத்கஜன் பாடுனது கூட 'புளியோதரையும் சோறும் மிகப் பொருத்தமாய் சாம்பாரும்'ன்னுதான். (என்ன கண்ராவி காம்பினேஷனோ)ஆனா இங்க லெமன் ரைஸ் இல்ல சொல்லி இருக்காரு. அதுக்கு எதுக்கு சாம்பாரு.

அப்பாடா, மேட்டரில் பின்னூட்டம் எழுத ஒண்ணும் இல்லையேன்னு நினைச்சேன். சாம்பாரைச் சொன்ன வாய்க்கு சர்க்கரைதான் போடணும். (ஐயய்யோ, அடுத்த கண்ராவி காம்பினேஷன்.) :))

Anonymous said...

//பட்டை
( தமிழ்மணத்தில் தினுசு தினுசா கலர் பட்டையை பார்த்த பாதிப்பு )//

கலக்கிப்பூட்டீக இட்லி-வடை....மிக அருமையான நக்கல்....(வீபூதி) பட்டைப் பதிவுகளுக்கு அருமையான நாமம்..ஹிஹிஹி

கால்கரி சிவா said...

//'புளியோதரையும் சோறும் மிகப் பொருத்தமாய் சாம்பாரும்'ன்னுதான். (என்ன கண்ராவி காம்பினேஷனோ)//

அடப்பாவி சாப்பிடதில்லையா. புளியோதரை சம்பார் இல்லாமல் எனக்கு உள்ளே இறங்காது டிரையா இருக்கும்

இப்பதான் சாமி லெமன் ரைஸ்லே சாம்பாரை கரைச்சு சாப்பிட்டேன் அமிர்தம் ஐயா அமிர்தம்

அசைவ மேட்டருக்கு சால்னா மாதிரி சைவ மேட்டருக்கு சாம்பார். இட்லி-சாம்பார், வடை சாம்பார், தோசை சாம்பார், பொங்கல் சாம்பார், லெமன் ரைஸ் சாம்பார், புளிரைஸ் சாம்பார், வெறும் ரைஸ் சாம்பார், கர்ட் ரைஸ் சாம்பார் என எல்லாதிற்கும் பொருந்தி வருமய்யா ஓ குருப் ரத்தம் மாதிரி

குமரன் (Kumaran) said...

கொத்ஸ். நீங்க எல்லாத்தையும் கண்ராவி கண்ராவின்னு எழுதுனதைப் பாத்து என்ன இவரு கண்ராவி பிடிச்ச ஆளா இருக்காரு? புளியோதரையும் சாம்பாரும், எலுமிச்சைச்சாதமும் சாம்பாரும் எத்தனைப் பொருத்தம்ன்னு தெரியாத ஆளா இருக்காரேன்னு நெனைச்சேன். எங்க வீட்டம்மாவுக்கு புளியோதரை சாம்பார் பிடிக்கும்; நான் எலுமிச்சைசாதம் சாம்பார் என்றால் இரண்டு படி தின்பேன். சொல்லலாம்ன்னு வந்தேன். அதுக்குள்ள சிவா அண்ணா சொல்லிட்டாரு.

(ஆஹா. படாதவங்க கண்ணுல பட்டா இனிமே மாடு தின்னும் சௌராஷ்ட்ரன்னு சொல்லாம சாம்பார் குடிக்கும் சௌராஷ்ட்ரன்னு சொல்லுவாய்ங்களோ?)

கடோத்கஜன் said...

ஆஹா..புளியோதரையின் சோறுக்கு, சாம்பார் நல்லாயிருக்குமா? லெமன் ரைஸுக்கு நல்லாயிருக்கும், புளியோதரைக்குச் சாப்பிட்டதில்லையே..டிரை பண்ணிட வேண்டியதுதான்..சாப்பிட்டுட்டு வாரேன் வாத்தியாரே

கரைஞ்ச சாம்பார் said...

{இப்பதான் சாமி லெமன் ரைஸ்லே சாம்பாரை கரைச்சு சாப்பிட்டேன் அமிர்தம் ஐயா அமிர்தம்}

சாம்பாரையே கரைச்ச ஒரே ஆளு நீங்க தான் .. வாழ்த்துக்கள்!