பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 25, 2007

'ஆப்பு' ரைசல்லப்பா

வ.வா.சங்கம் ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது, 'ஆப்பு'ரைசல் எழுதனும் என்று இலவசமாக கேட்டாரகள்.

இந்த கவிதை(?) 'ஆப்பு' ரைசல்லப்பா என்ற இலக்கண விதி படி எழுதியது. அதனால் நீங்க இதை

இரண்டு முறை படித்தால் கவிதை
படிக்காமல் விட்டால் மேதை

------- + ------ + ----------

மூவேந்தர் வளர்த்த சங்கத்திற்கு ஆனது இரண்டு மில்லியன் ஆண்டு
இன்று இரண்டு டஜன் சிங்கத்திற்கு ஆனது ஒரு முழு ஆண்டு

வந்தாரை வாழ்த்தி வாழ வைக்கும் தமிழகம்
படித்தாரை சிரித்து வாழ வைக்கும் வவாச(ங்)கம்

மனசுக்குள் சம்மணமிட்ட கைப்பிள்ளை இவர்
ரவுசுக்குள் சஞ்சலப்பட்ட பெண்பிள்ளை பலர்

கிட்டாருடன் சிங்கம் இவர்களின் லோகோ
சிங்கங்கள் பார்ப்பதோ போகோ

மொக்கை என்றாலும் வெக்கையைத் தணிக்கும்
சிக்கெனத் தென்றலாய் கிக் பல கொடுக்கும்

அ(ச்)சிங்கங்கள் உறுமுகின்றன வாருங்கள்
இ(ம்)சைகள் பிளிறுகின்றன கேளுங்கள்

கணினி முன்னே சிரிக்க வைப்பது இவர்களின் ஹாபி,
பின்னூட்டம் போட்டுக் கொல்லுவது (கொள்வது) இவர்களின் ஜோலி

உயிரை எடுக்கும் பதிவு
செந்திலும் கவுண்டரும் சென்சஸ் எடுக்கும் பதிவு

'வருத்த முற்றும்' கொடுத்தது தெரசாவின் சாதல்
'சந்தோஷ முற்றும்' கொடுத்தது மாமாவின் காதல்

ஒரு கூடை சன் நெட்வர்க்
ஒரு கூடை மூன் நெட்வர்க்
ஒன்றாகச் சேர்ந்தால்
சிவாஜிபடத்தின் FlashWork

கலாய்ப்பதோ இவர்களுக்கு காக்டெயில்
பின்னால் இருப்பதோ நீளமான டெயில்

ஃபிகரு இவர்களின் கரு
வடிவேலு இவர்களின் குரு

சிரியஸ் பதிவுகள் சிரிப்பாய் சிரிக்கும்
ஆனால் சங்கம் பதிவுகள் சிரிக்கவைக்கும்

இவர்கள் பதிவுகளைப்
படித்தால்
எண்ணத் தோன்றும்-
ஏண்டா பிறந்தோம்
யோசித்தால்
சொல்லத் தோன்றும்-
கலக்கிப்புட்டாங்கய்யா, கலக்கிப்புட்டாய்ங்க!

(இரண்டு வரி 'ஆப்பு' ரைசல்லப்பா)

அடுத்ததாக நண்பர் பினாத்தல் இந்த வெட்டி வேலையை செய்வார் :-)

16 Comments:

நாகை சிவா said...

எங்களுக்காக உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி ஆப்புரைசல் செய்ததுக்கு ரொம்ப நன்றி இட்லி வடையாரே!

ILA(a)இளா said...

இட்லிவடையா? வ.வா.ச'விக்காகவா? நன்றி நன்றி. உங்களுக்கு கவிதை எல்லாம் வருமா? டீசண்டான கவிதைங்கோ..

IdlyVadai said...

//டீசண்டான கவிதைங்கோ..// அவசரத்தில எழுதியதால் இருக்கலாம் ;-)

இராம் said...

//பின்னூட்டம் போட்டுக் கொல்லுவது (கொள்வது) இவர்களின் ஜோலி//

இ.வ,

'ஆப்பு' ரைசல்லப்பா.... ன்னு தலைப்பு வைச்சிட்டு சரியா தான் கவிஜ எழுதியிருக்கீங்க... :)

நாகை சிவா said...

//மனசுக்குள் சம்மணமிட்ட கைப்பிள்ளை இவர்
ரவுசுக்குள் சஞ்சலப்பட்ட பெண்பிள்ளை பலர்//

எங்க தல இதப்பத்தி எங்கிட்ட சொல்லவே இல்லையே!

//சிரியஸ் பதிவுகள் சிரிப்பாய் சிரிக்கும்
ஆனால் சங்கம் பதிவுகள் சிரிக்கவைக்கும்//

உள்குத்து இல்லாமல் இட்லிவடை பதிவா?

நாகை சிவா said...

//இவர்கள் பதிவுகளைப்
படித்தால்
எண்ணத் தோன்றும்-
ஏண்டா பிறந்தோம்//

இதில் உள்குத்து ஏதும் இல்லல....;-)

//யோசித்தால்
சொல்லத் தோன்றும்-
கலக்கிப்புட்டாங்கய்யா, கலக்கிப்புட்டாய்ங்க!//

தாங்களும் கலக்கிவீட்டீர்கள் ஐயா!

இலவசக்கொத்தனார் said...

இந்த பசங்க இம்புட்டு நல்லவங்களா? நம்ம கோரிக்கையை ஏற்று கவுஜ பாடினதுக்கு நன்றி வாத்தியாரே.

(நான் ஒருதடவைதான் எல்லா வரியையும் படிச்சேன். அதால தும்மல் வரலை!)

பொன்ஸ்~~Poorna said...

இட்லிவடை..
கவுஜயா? நீங்களா?!!!
மரத்துலேர்ந்து விழுந்ததுல எதுனா பிரச்சனையா? :)))

கவுஜ ரொம்ப நல்லா இருக்கு.. சூப்பர் ஆப்பு... தொடர்ந்து அவ்வப்போது முயற்சிக்கலாம் :) [கவுஜயத் தான், மரம் ஏறுவதை அல்ல ;) ]

IdlyVadai said...

இராம் நன்றி.

நாகை சிவா
//உள்குத்து இல்லாமல் இட்லிவடை பதிவா?//

எதை எழுதினாலும் எதாவது கண்டுபிடிக்கிறீங்க

//தாங்களும் கலக்கிவீட்டீர்கள் ஐயா!// நன்றி

//கவுஜயா? நீங்களா?!!!//
:-)
//மரத்துலேர்ந்து விழுந்ததுல எதுனா பிரச்சனையா? :)))//

கண்டுபிடிக்க லென்ஸ்
போட்டுதாக்க பொன்ஸ்

வல்லிசிம்ஹன் said...

மரத்துலேருந்து விழுந்ததுல கவிதை வந்து இருக்கும்.
அவசரத்தில எழுதின கவிதஇயா.....
நம்ப முடியலையே/

ரொம்ப நல்லா இருக்கே.

இலவசக்கொத்தனார் said...

//அ(ச்)சிங்கங்கள் உறுமுகின்றன வாருங்கள்
இ(ம்)சைகள் பிளிறுகின்றன கேளுங்கள்//

ஏம்பா புலி, இந்த வரிகளை விட்டுப்புட்டியே, உன்னோட உகு லிஸ்டில்.

IdlyVadai said...

//ரொம்ப நல்லா இருக்கே.// தாங்க்ஸ் அக்கா

இலவசம் நினைத்து நினைத்து உகுவை கண்டுபிடிக்கிறீங்க போல நடத்துங்க நடத்துங்க ..

Boston Bala said...

ரொம்ப நல்லா இருக்கு!

IdlyVadai said...

நன்றி பாபா!

உங்கள் நண்பன் said...

கவிஜ நன்றாக வந்துள்ளது, இட்லிவடையாரே! நம்ம பயகலப் பத்தி சூப்பரா எழுதி இரூக்கீங்க!

//கலாய்ப்பதோ இவர்களுக்கு காக்டெயில்
பின்னால் இருப்பதோ நீளமான டெயில்
ஃபிகரு இவர்களின் கரு
வடிவேலு இவர்களின் குரு
//
இது டா(ஆ)ப்பு!

//நீங்களா?!!!
மரத்துலேர்ந்து விழுந்ததுல எதுனா பிரச்சனையா? :)))//
பொன்ஸ் அக்கா, இட்லிவடையார் நம்முடன் உக்காந்து தானே இருந்தார், மரத்திலே இருந்தேன்னு அவரு சொன்னா நாம நம்ப்பிடுவதா?:))))


அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

super!!