பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 04, 2007

சச்சின் மனவருத்தம்

உலக கோப்பை தோல்விக்கு பின்னர் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் முதல்முறையாக பவுண்டரி அடித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், பயிற்சியாளர் கிரேக் சாப்பல் சீனியர் பிளேயர்களை குறைகூறியிருப்பது தனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும், உலக கோப்பை வெல்வதே தங்களது லட்சியமாக இருந்ததாகவும், தற்போது ஏற்பட்டுள்ள தோல்வி தனது 17 வருட அனுபவத்தில் மிகவும் சோகமான தருணமாக அமைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.தான் இந்திய அணிக்காக 17 வருடங்களாக ஆத்மார்த்தமாக விளையாடியுள்ளதாகவும் தனது கிரிக்கெட் பற்றை முதல் முறையாக பயிற்சியாளர் கேள்வி எழுப்பியிருப்பதாகவும் கூறினார். மேலும் மற்றொரு சீனியர் பிளேயர் குறிப்பிடுகையில் . பயிற்சியாளர் சாப்பல் உலக கோப்பையின் போது 3 - 4 நாடகள் யாரிடமும் பேசவில்லை எனவும், எந்த கருத்தையும் ஏற்க மறுத்ததாகவும், இப்படி ஒரு பயிற்சியாளர் இருந்தால் எப்படி சிறப்பாக விளையாட முடியும் என கூறியுள்ளார்.

5 Comments:

Anonymous said...

Everytime somebody makes a bad comment about Sachin Tendulkar or some other player they start saying that they have dedicated their lives to playing cricket for the country for 16 or 17 years etc. All of them play for the money that is being paid and nothing more than that.They are no different than a salaried worker.He does not claim that he has dedicated his life for the company he is working if someone complains about the bad job he has done

காளீஸ்வரன்.கரு said...

முதலில் நான் ஒன்றை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்...இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு அணியில் இருந்த ஒவ்வொருவர் மட்டுமல்ல பயிற்சியாளரும் காரணம்.ஆனால் சேப்பலின் இத்தகைய வாக்கியங்கள் அவரது தப்பித்துக் கொள்ளும் மனோபாவத்தினை வெளிச்சமிட்டு காட்டுகின்றன.இன்றைய சூழலில் இதுவரை பெரிய அளவில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்திராத சச்சினைக் கூட மனம் வருந்தி பேச வைத்தது மட்டுமே சேப்பலின் சாதனை எனலாம்.அதே சமயம் சச்சினை போன்ற ஒரு அற்புதமான துவக்க ஆட்டக்காரரை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் களமிறக்கி ஸ்திரத்தன்மையை குலைத்த பெருமையும் சேப்பலையே சேரும்.

Anonymous said...

Let Sachin do the batting with his bat rather than words. "I've given everything for 17 years" is pure whining. Let him have a honest look at himself since 2004.
If anybody needs help, get it here
Stats: The truth

It will be the greatest joke if he is made the captain and he accepts it without any shame.
He is not and never will be a leader. He demonstrated it very will in the past.

Do not try to hide behind emotions. The numbers are out there, and they are telling.

Anonymous said...

/// Let him have a honest look at himself since 2004.///
So you agreed he has given everything for 14 years..

தலைவர் said...

மூடிட்டு ஒழுங்கா ஆடியிருக்கனும், அப்பிடி இல்லைனா சாப்பல் ஒரு லூசுன்னு 6 மாசத்துக்கு முன்னாடியே சொல்லி இருக்கனும்... அதை உட்டுட்டு, எல்லாம் முடிஞ்ச பிண்ணாடி வாயில வடை சுடுரான்..