பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 03, 2007

சார்லி சாப்பிளின் ஆனார் சேப்பல்

இளம் வீரர்களின் வளர்ச்சியை தடுப்பதுடன், இந்திய சீனியர் வீரர்கள் மாபியா கும்பல் போல் செயல்படுகிறார்கள் என்று பயிற்சியாளர் சேப்பல் கூறியதாக, அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் மோசமான தோல்வி குறித்து வருகிற 6-ந்தேதி மற்றும் 7-ந்தேதி மும்பையில் நடைபெறும் இந்திய கிரிக்கெட் போர்டு செயற்குழு கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பலின் அறிக்கை மிக முக்கியமாக கருதப்படுகிறது. அவர் 6-ந்தேதி அன்று தனது அறிக்கையை தாக்கல் செய்கிறார். சேப்பல் தனது அறிக்கையில் பல விஷயங்களை குறிப்பிட திட்டமிட்டு இருக்கிறார். அவரது அறிக்கை எவ்வாறு இருக்கும் நாள்தோறும் பல்வேறு விதமான யூகங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

இந்த நிலையில் சேப்பலின் நெருங்கிய வட்டாரங்கள் கூறியதாக இப்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில்

* இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதற்கு சீனியர் வீரர்கள் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்.

* அவர்களது வளர்ச்சிக்கு தடையாக உள்ளனர். சீனியர் வீரர்கள் ஒரு `மாபியா' கும்பல் போல் செயல்படுகிறார்கள்.

* கேப்டன் டிராவிட்டுக்கும் அவர்கள் நெருக்கடி அளிக்கிறார்கள்

நீங்க என்ன நினைக்கிறீங்க சைடில ஓட்டு

3 Comments:

இலவசக்கொத்தனார் said...

அப்படியாவது அகார்க்கர் டீமை விட்டுப் போனா சரி. அவனைப் பார்த்தாலே கடுப்பா இருக்கு.

நெல்லை சிவா said...

ஒரு வித்தியாசத்திற்கு, வியர்டு பதிவு போடலாமே நீங்க, அழைப்பு விடுத்திருக்கிறேன், பார்க்க, இந்தப்பதிவுக்கான லிங்க்.

IdlyVadai said...

நெல்லை சிவா,
நன்றி. முடிந்தால் இந்த வாரம் டிரை பண்ணுகிறேன்.