இன்போசிஸ் நிறுவனத் தலைவர் திரு நாராயண மூர்த்தி அவர்களுக்கு,
கும்புட்றேன் சாமி!.
இப்பெல்லாம் பதிவு எழுதினால பலருக்கு வயத்தகலக்குதுங் சாமி. சரி விஷயத்துக்கு வாரேன். உங்களுக்கு வெஜ்ஜர்ன் மீஜிக் புடிக்குமுன்னு முன்னால ஒரு தபா சொல்லியிருக்கீங்க. அதற்கு அர்த்தம் இப்போ தான் நமக்கு விளங்கிச்சு சாமி. வெஜ்ஜர்ன் மீஜிக் மட்டும் இல்ல வெஜ்ஜர்ன் சம்பந்த பட்ட அல்லாமே உங்களுக்கு பிடிக்குமுனு.
மூனு நாள் முன்னால நம்ப இந்தியாவோட மொத குடிமகன், அதான் அப்துல் கலாமு வந்திருந்தாரு.. குடியரசு தலைவரு கலந்துக்கற விழா ஆரம்பத்துலயும் முடிக்க சொல்லயும் நம்ம தேசிய கீதம் இசைக்குமாமில்ல. நான் இஸ்கூல்ல படிக்க சொல்ல கடைசீயா தேசிய கீதமுனு சொல்லுவாங்க. அல்லோரும் பேசாம எழுந்து நிப்போம். அத்த விடுங்க எங்க நைனா ஜனாதிபதி ஒரை ரேடியோவ்ல வந்தாலே கடேசியா தேசிய கீதம் வரும். அதுக்கும் எழுந்து நிக்க சொல்லுவாரு. இப்போ எல்லாம் "தேசிய கீதம், எழுந்து நில்லுங்க" என்னு மைக்கில கூவ வேண்டி ஆகிப்போச்சு. பழைய கதை எதுக்கு? குடியரசு தலைவர் விழால நீங்களுந்தேன் அந்த மரபை ஃபாலோ செஞ்சீங்க அதற்கு ரொம்ப டாங்க்ஸ். ஆனா நம்ம பத்திரிக்கைகாரங்க குசும்புதான் தெரியுமே, ஏன் பாடலைன்னு கேட்டத்துக்கு நீங்க இங்கிலிபீச்சுல இந்த மாதிரி சொல்லியிருக்கீங்களாம்.
"The original idea was to have five youngsters sing the National Anthem. Then I felt we had several foreigners and we did not want to put them in an embarassing position of them being silent and others singing it, so we decided on the instrumental version. This was fine because the National Anthem need not be sung always. The important thing was to show solidarity and our respect"
"அட, வாய்விட்டு பாடினாத்தான் என்ன தப்பூ?"ன்னு கோடிவீட்டு குப்பம்மா கழுதை கேக்கிறா.
"தே, அவரு படிச்சவரு, அவர் சொன்னா கரீட்டா தான் இருக்கு!"முன்னு நானும் சொல்லிப் பாத்தேன்.
ஆனா அந்த வாயாடி "சரி, இதே போல இவரு துரைநாட்டுக்கு போனா அவுங்க இந்த மாதிரி செய்யுவாங்களா ?"ன்னு குதர்க்கமா கேக்கிறா.
"நீ ரொம்ப படிக்கல புள்ள, இந்த மாதிரியெல்லாம் பேசகூடாது!"ன்னு சொன்னேன்.
குப்பமாவுக்கு கோபம் ரொம்ப வந்து "இந்தியாவோட மொத குடிமகனைக் காட்டிலும், அவருக்கு வந்திருந்த சில வெளிநாட்டு துரைகள் தான் முக்கியமா?"ன்னு ஒரே படபடப்பு.
"புள்ள நிதானமா இரு!"ன்னு நாந்தேன் உப்பு போட்டு மோர் கொடுத்தேன். மோர் குடிச்ச தெம்புல கழுதை இன்னொரு கேள்வி கேட்டா..
"சரி துரைமாரு இக்கிளையண்ட்ஸ் எல்லாம் நம்ம பசங்க பேரை கூப்பிடச் சொல்ல ரொம்ப சங்கடபட்றாங்கன்னு அவங்க பேரையெல்லாமும் tom, steveன்னு மாத்திட சொல்லப் போறாரு பெரியவரு, எல்லாம் சாமியை நேந்துகிட்டு வெச்ச குலசாமிப் பேரு.." ன்னு ஏளனம் செய்யறா.
"சரி புள்ள, செஞ்சாத்தான் என்ன? இது என்ன பெரிய குற்றமான்னு ?" கேட்டேன். அவ்ளோதான். உடனே அவளுக்கு ரொம்ப ரோஷம் வந்திட்டுது.
அவ புள்ளை ஒரு வக்கீலு, அதனால செல்புல இருந்த ஒரு பெரிய புத்தகத்தை எடுத்து இத்தைக் காண்பிக்கிறா..
"The Prevention of Insult to National Honour Act, 1971 - In the case of insult to the national Tricolour, the Act provides: "Whoever in any public place or in any other place within public view burns, mutilates, defaces, disfigures, destroys, tramples upon or otherwise shows disrespect to or brings into contempt (whether by words, either spoken or written, or by acts) the Indian National Flag or the Constitution of India or any part thereof, shall be punished with imprisonment for a term which may extend to three years, or with fine, or with both."
நானும், "சரி புள்ள, அதான் அவர் மாப்பு கேட்டாச்சே!"ன்னு சென்னேன்.
அதுக்கு அவ "மாப்பு, அது எந்த மொளிலயும் எனக்கும் புடிக்காத வார்த்தை"ன்னு பொங்கறா சாமி. ( போன தேர்தல்ல இந்த மூதேவி தேமுதிகவுக்கு தான் ஓட்டுப் போட்டுச்சு. அத்த ஊர் முழுக்க சொல்லிகிட்டும் திரிஞ்சுச்சு.)
நான் சிரிச்சேன்.
"என்ன சிரிக்கிற? எனக்கு அவ்வளவு இங்கிலிபீசி தெரியாது, அவரு சொல்லியிருக்கறதை பாரு!"ன்னு இன்னிக்கு வந்த நிவிஸ் பேப்பரை என் முன்னால நீட்டினா..
"We are a proud Indian company, with strong universal ethos of transparency, accountability and honesty. If the media statement has hurt anybody's sentiments, I deeply apologise,"
"பார்த்தியாய்யா, இப்ப கூட இவர் செஞ்சது தப்புன்னு இவருக்கு தெரியலையே. தப்பா நீங்க நினைச்சா மன்னிச்சுடுங்க!"ன்னில்ல சொல்றாரு.
"சரி, விடு புள்ள, விசயம் என்னன்னா, இவரை அடுத்த ஜனாதிபதிக்கு பதிவிக்கு சிபாரிசு செய்யப் போறாங்களாம்."
.
"அட போய்யா, இவரு ஜனாதிபதியானா, குடியரசு தினத்துல வர துரைமாருங்களுக்கு கஷ்டமா இருக்குமுன்னு தேசிய கீதத்தையே இவர் பாடாமல் இருந்துட போறாரு. அப்றம் வெளிநாட்டு காரவுங்களுக்கு அனுகுண்டு பிடிக்காதுன்னு என்று அதையும் செய்ய மாட்டாரு.. துரைமாருங்களுக்குப் பிடிக்காதுன்னு......".
"சரிங் சாமி, உங்களுக்கு நெறைய வேலையிருக்கும். ஆனால் கடைசியா குப்பம்மா "mentor" ன்னா குரு மாதிரியாம், இப்ப சொல்லு, அவரு நிச்சயம் நல்ல இந்திய குடிமகனுக்கு நல்ல குருவா?ன்னு கேட்கிறா ?"
பதிலை எதிர்பார்க்கும்,
இட்லிவடை
( ஒரு சராசரி இந்திய ஃஸாப்ட்வேர் குடிமகன் )












19 Comments:
எந்த ஊரிலும் தேசிய கீதம் வாய்விட்டுப் பாடாதே என்று சொல்ல முடியாது.
சுதந்திர தாகமே இல்லையோ என்னவோ?
இது கண்டிக்கப்படவேண்டியதே.. குப்பம்மாவின் கேள்விகள் நியாயமானது.
கலாம் எப்படி இதனை ஆட்சேபிக்காமல் இருந்தார் எனவும் வியப்பாக இறுக்கிறது.
மனதின் ஓசை கலாம் போன பிறகு நடந்த பத்திரிக்கை சந்திப்பு என்று நினைக்கிறேன். விழாவில் கலாம் அவர்கள் தேசிய கீதத்தை வாய்விட்ட்டு பாடினார் அதை வீடியோவில் பார்த்தேன்.
யோவ் எங்கயோ ஆரம்பிச்சு. எப்பிடியோ வந்து மாட்டேர் கரிக்கெட் டா சொல்லிட்டப்பு.
நாட்டுலெ, பதவி பேர் உள்ளவன் வச் சாது தான் சட்டமா போகுது.
ஆமா ஒண்ணு கேட்கணும் (சும்மா தான்)
//போன தேர்தல்ல இந்த மூதேவி தேமுதிகவுக்கு தான் ஓட்டுப் போட்டுச்சு.//
ஏன் இந்த மூதேவி, தேமுதிகவுக்கு ஓட்டுப் போட்டதுனாள் தானா?
தமாசு தமாசு ...
kevalamaana blog, ithu romba mukkiyamaa... what NM did..is correct. romba peeethikkaathammbba "kuppamamma" nee thaan romba english kaari maathiri pesura
ஹ்ம்ம்ம்... தவறுதான்.
ஆனால் இவர் எப்படி இப்படி சறுக்கினார்... என்று ஆச்சர்யமாக இருக்கிறது.
சமீபத்தில் எகானமி டைம்ஸ் ஏற்பாடு செய்த அசீம் பிரேம்ஜியுடனான சந்திப்பில், ஒரு புரட்சிகரமான கருத்தை எடுத்து வைத்திருந்தார். மென்பொருள் ஏற்றுமதிக்கு அளிக்கப் படும் வரி விலக்கை பற்றிய இவரது கருத்து ஒரு மென்பொருள் நிறுவனத்தின் முதலாளியாக அல்லாமல் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக அவர் சிந்திக்கிறார் என்பதற்கு சாண்று.
இங்கே முழு பேட்டி
டிஸ்கி: நான் அவருடைய நிறுவனத்தில் வேலை பார்ப்பவன் அல்ல :-))
திரு நாராயண மூர்த்தி அசிங்கமான பின்னூட்டங்கள் மற்றும் தேசிய கீதம் /தேசிய கொடி சம்பந்தமுள்ள ( அசிங்கமான ) பின்னூட்டங்கள் பிரசுரிக்க இலயாது.
அன்புடன்,
இட்லிவடை
உண்மையாவே இது மிகவும் கண்டிக்கதக்கதுங்க. ஒரு பெரிய ஆளே இப்படியெல்லாம் செஞ்சா என்னத்த சொல்ல. இது இப்பல்லாம் சகஜமாயிடுச்சுங்க. இது யாருக்குமே தப்பாவே தெரியமேட்டேங்குதுங்க. இத விட ஒரு நாள் பஸ்ல போகும் போது எதர்ச்சியா வெளிய பாத்தா ஒருத்தன் நம்ம தேசிய கொடிய தலைய மண்டாக்கு கட்டிக்கிட்டு போறான். அப்படியே ஒரு ஒத ஒதக்கலாம்னு இருந்துச்சு. ஆனா பஸ்லர்ந்து குதிச்சா எனக்கு வெள்ளை கோடி போத்தீருவாங்களே. அவவுங்களுக்கா புரியனுமுங்க.
narayan moorthy is at fault certainly no doubt. yday when i felt home sick i watched you tube's video caption of vande mataram and close to tears(FEEling very fussy). i could not help thinking inspite of politicians dividing us we can still unite and to that effect our national anthem is a strong point. narayana moorthy need not be our president.
At the end of the day he is just another businessman looking to take care of his clients. If you expect more from him its yours and media's fault, that is what he indirectly means.
This certainly is unacceptable! The "foreigner" excuse doesnt make any sense ..
Upon thinking a bit, I feel that an educated visitor (which I am sure the visitor was as he/she was visiting Infosys) would have felt honoured being in the place as a guest where everyone including the country's President and the chief of a well known corporation sing "their" national anthem aloud! On the other hand, such a visitor would have been surprised if a senior most citizen of a country didnt bother to sing his national anthem aloud! More surprising is the attitude/demeanor displayed aftermath while apologizing to the public media. Apologized or not, this slip and the cover-up attitude will drag his respect down significantly!
And who is recommending him for Presidency?
Who is more useful to the nation? Somebody who helped India in becoming a world leader in services, and provides jobs directly (& indirectly) to many thousands, but who would rather not sing the national anthem, or somebody who has nothing to show for their achievements, but sings national anthem loudly and proudly?
மெய்யாலுமே இது பெரிய தப்புங்க!
நாராயண மூர்த்தி இப்படியான அடிப்படைத் தவறு செய்யக்கூடாது!
இன்போசிஸில் வேலை செய்யும் ஃபாரினர்ஸுக்கு நம்ம தேசிய கீதம் இடைஞ்சல் எனும் தொனியில் அளிக்கும் பேட்டி "ரிமைண்ட்ஸ் த லெவெல் ஆஃப் ரெசிடியூவல் கலோனியல் திங்கிங்" இதற்கு நாரயணமூர்த்திகளும் விலக்கில்லை போலிருக்கிறது!
கணக்கற்ற முறையில் நாம் இதுமாதிரி பொறுப்பற்ற செயல்களுக்காக வெட்கப்பட்டாச்சு. இன்னொருவாட்டி வெட்கப்பட இந்தமுறை இன்னொரு சந்தர்ப்பம் உபயம் செய்திருக்கிறார் நாரயண மூர்த்தி! :-((
நான் ஒரு கமெண்டு போட்ட நியாபகம் வந்துச்சா?
சந்தோஷ், இட்லிவடையில் எனக்கு அசிங்கமான என்று தோன்று பின்னூட்டங்கள் இடம் பெறாது. செருப்பால அடி போன்ற சிம்பிள் திட்டுக்கள் கூட வராது.
உங்கள் பின்னூட்டதிலும் சில சொற்கள் அது போல வந்துள்ளதால் அதை பிரசுரிக்கவில்லை. எடிட் செய்யபட்ட பின்னூட்டம் கீழே.
//Who is more useful to the nation? Somebody who helped India in becoming a world leader in services, and provides jobs directly (& indirectly) to many thousands, but who would rather not sing the national anthem, or somebody who has nothing to show for their achievements, but sings national anthem loudly and proudly?//
ஏண்டா அல்லகை ஆனானி நாயே கேவலமா இல்ல உனக்கு இதை சொல்ல வேலை குடுத்துட்டா எதை வேணா செய்வியா? ********?அப்படி பாத்தா East India Company கூட தான் இவனுங்களை விட அதிகமா வேலை குடுத்தான் அவன்கிட்டயே அடிமை நாயா வேலை செய்ய வேண்டியது தானே சுதந்திரம் எதுக்கு உனக்கு. வேலை குடுக்குறானா அதனால அவனை ****** இருப்பானாம் இவன். சொந்த பெயரில் வந்து சொல்ல வேண்டியது தான் இந்த கருத்தை என் அம்முட்டு பயமா? கொழுப்பெடுத்து போயி பண்ண தப்பை ஒத்துக்க வக்கில்ல அந்த ஆளுக்கு இந்த லட்சணத்துல இவரை ஜனாதிபதியா வேற தேர்ந்து எடுக்கணுமாம். அப்படி எடுத்து இருந்தா நாட்டை மொத்தமா வித்து இருப்பாரு இவரு. சைனாவை பாத்து கத்துக்கோங்கடா.
//சந்தோஷ், இட்லிவடையில் எனக்கு அசிங்கமான என்று தோன்று பின்னூட்டங்கள் இடம் பெறாது. செருப்பால அடி போன்ற சிம்பிள் திட்டுக்கள் கூட வராது.//
சிரிங்கன்னா. பிரச்சனை நாட்டைப்பற்றியது அப்படிங்கிறதுல கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன் :)).. அதுவும் இல்லாம பண்ண தப்பை ஒரு லூசுப்பையன் justify செய்ததில் கொஞ்சம் aggravate ஆயிட்டேன் வேற ஒண்ணும் இல்ல.
சந்தோஷ் aka Santhosh , Thanks for your understanding.
நாராயணமூர்த்தி சொன்னது தவறான கருத்து. அதை அடைந்து எண்ணப் போக்கு இப்படி இருக்கலாம் என்று ஊகிக்கிறேன்:
ஒரு உலகளாவிய நிறுவனமாக வளர வேண்டுமானால் பல்வேறு நாட்டிலிருந்து வந்த ஊழியர்களும் சரிசமமாக பணி புரியும் சூழல் நிலவ வேண்டும். நாட்டின் குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளும் விழாவில் தேசீய கீதத்தைப் பாட ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் போது இந்தியர்கள் மட்டும்தான் அதில் பங்கு பெற முடியும் என்று மட்டுப்படுத்துவது மற்ற நாட்டினருக்கு ஒதுக்கமாகப் படலாம். அந்த சங்கடத்தைத் தவிர்க்க பதிவு செய்யப்பட்ட கீதத்தை இசைத்தோம்.
இது முற்றிலும் என்னுடைய கற்பனை. எப்படி இருந்தாலும், கருத்து வெளியான பிறகு அவரே அதில் இருந்து அபத்தத்தை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அத்தோடு விட்டு விட வேண்டிய ஒன்று இது. எப்படியோ வெறும் வாயை மென்றவர்களுக்கு அவல் கிடைத்திருக்கிறது.
அன்புடன்,
மா சிவகுமார்
vadai sir , narayana murthy is a 'ppappan' sir. please take care next time
Post a Comment